ஒரு சிறந்த ரசவாதி( பாகம் 3 )

நான் ஆரம்ப காலகட்டங்களில் வலைப்பூவில் எழுதிய பதிவுகளில் ,இந்த முப்பூ குருவைப் பற்றி எழுதியிருந்தேன்.அதில் இருந்து படித்து யாராவது இந்தப் பதிவில், ஏற்கெனவே நான் எழுதியது இதுதானா என்று யாராவது கேட்பார்களா என்று எதிர் பார்த்தேன் .ஒருவரும் எழுதவில்லை.அந்தப் பதிவின் இணைப்பு இதோ.

http://machamuni.blogspot.in/2010/08/blog-post_25.html

அந்தப்பதிவில் குறிப்பிட்டிருந்த எனது தாத்தாவின் கையெழுத்துப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்ட பாடல் இதோ!!!

அந்தப்பதிவைப் படித்துவிட்டு வந்தால், இனிமேல் சிறிது புரியும் என்று நினைக்கிறேன் .எனென்றால் இது வரை வெகு சிலரே இது என்ன என்று லேசாகப் புரிந்து கேட்டார்கள். இதை என்னவென்று சொல்வது,எல்லா நோய்களையும் போக்கும் அற்புத மருந்து என்று வேண்டுமானால் இப்போதைக்குப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்த துறையில் நம் நாட்டில் இருந்து பிரிட்டிஷ்காரர்களாலும் பிரெஞ்சுக்காரர்களாலும் கொண்டு போன ஓலைச் சுவடிகளை வைத்து பல்கலைக் கழகமே நடத்தி வருகிறார்கள். பாராசெல்ஸ் போன்ற வெளி நாட்டுச் சித்தர்களும் இதை மறை பொருளாகச் சொல்லி வருகிறார்கள். இதை மறை பொருளாகச் சொல்வதால்தான் வேதங்களுக்கு மறை என்று பெயர்.இந்தத் தளத்தைப் பாருங்கள்.
http://www.levity.com

நானும் இந்த விடயத்தை அளவோடுதான் வெளியிடுகிறேன். பல்லாண்டுகள் இதைத் தேடி காடு மேடெல்லாம் அலைந்து திரிந்துள்ளோம்.  சித்தர்களின் பரி பாஷை புரியாமல் அல்லாடி இருக்கிறோம். பல தவறான செய்முறைகளைச் செய்து பார்த்து தோல்வி அடைந்திருக்கிறோம். இதை வெளியிடுவதன் மூலம் பல நோயாளிகள் பயன் பெறுவார்கள். பலர் தவறான ஆட்களிடம் சிக்கிச் சீரழிய மாட்டார்கள். ஆங்கில மருத்துவம் என்பது ஒரு வியாதிக்கும் மருந்தில்லாமலும், பல வியாதிகளைக் குணப்படுத்துவதாக பறை சாற்றுகிறது. இதை நான் இந்த பதிவிலேயே ஆதார பூர்வமாக வெளியிட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட உயர்ந்த நோக்கங்களுக்காகவே இது வெளியிடப்படுகிறது.

அகார,உகார ,மகார ,சிகாரம் நம்முள்ளும் உள்ளது பரத்திலும் உள்ளது.அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உள்ளது. பரத்தில் உள்ளதை பரம ரகசியத்தை அறிவது கடினம். நமக்கு உள்ளே உள்ளதை உணர்ந்தாலும் அது பரத்தில் உள்ளதைக் காட்டினால்தான் , அதை நமக்குள்ளே உண்டால் காயம் சித்தியாகும். நமக்குள் உள்ள அகார,உகார ,மகார ,சிகாரத்தை உபதேசிப்பதே எமது மச்ச முனிவரின் சித்த ஞான சபை .

பரத்தில் உள்ள அகார,உகார ,மகார ,சிகாரத்தைப் பற்றி வெளியிடுவதே இந்தக் கட்டுரை.மேலும் வெறும் கையில் ரசத்தை,சூட்சும சவுக்காரத்தை ( முப்பூ குரு ) வைத்து குழைத்து ரசத்தை மடியச் செய்து ,மீண்டும் அதே மடிந்த ரசத்தை வெறும் ஸ்பூனில் சாதாரண கேஸ் அடுப்பில் , 10 நிமிடங்களில் செய்த அற்புதமான ரசச் சுண்ணம்.உடனே நாங்கள் அதைச் சாப்பிட்டோம். இவை அத்தனையும் ஒளிப்படக் காட்சியாக.

[tube]http://www.youtube.com/watch?v=WJ5xluh6Z_M[/tube]

இந்த ரசச் சுண்ணத்தை தாமிரத் தகட்டுக்கு பூசி புடமிட வெள்ளியாகும். இந்த ரச வாத விடயங்களைக் கூறுவது நீங்கள் சாதாரண பொருள்களுக்கு ஆசைப்பட அல்ல. ரச வாதத்திற்கு ஆசைப் பட்டால் அதன் பலன் கேடானது.அதை மேலும் விவரிக்க விரும்பவில்லை.ஒரு தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்ற வல்ல ஒரு பொருள் ( அதாவது தாமிரத்திலுள்ள களிம்பை அகற்றி அதை வெள்ளி ஆக்குவது போல) , நமது உடலில் உள்ள களிம்பை அகற்றி நம் உடலை நோயிலிருந்தும் விடுவித்து,நோயற்ற அற்புத அழியாத தேகத்தை கொடுக்கும்.

எனவே அக ஞானம் மட்டுமே தேவை என்று எண்ணி சும்மா இருக்காதீர்கள். விரைந்து செயல்படுங்கள்.அண்ட பகிரண்டங்களைப் பற்றிய புற ஞானமும் தேவை.ஒரு இளநீர் தேவை என்றால், நானே மரத்தை நட்டு நானே பயிர் செய்து நானே மரம் ஏறி நானே பறித்துச் சாப்பிடுவேன் என்றால் தடுப்பவர் யாருமில்லை.காலம் அதற்கு இடம் தருமா? என்றும் யோசியுங்கள்.விடயங்களைத் தெரிந்து தெளிந்து செய்து சாப்பிட எத்தனை பிறவிகள் ஆகுமோ???எனவே இது எப்படி? ஏன்? என்ன ? என்பன போன்ற கேள்விகளை விட்டு விட்டு கடைத்தேற வழி காணுங்கள்.