ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 4
இந்தப் பதிவைப் படிக்கும் முன்னர் ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 3 ஐ படித்துவிட்டுத் தொடர்ந்தால் நன்கு புரியும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த சளியான மலத்தை உடனுக்குடன் நீக்கவும் , சேர விடாமல் தடுக்கவும் ஜல நேத்தி உதவுகிறது.நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரில் கல்லுப்பை கரைத்து ,வடிகட்டி தெளிய வைத்து இறுத்து வைத்துக் கொள்ள வேண்டும் . இந்தக் கரைசல் நன்றாக ஆறிய பின்னர் அதை மூக்குக் குவளையில் ஊற்றி ஒளிப்படக் காட்சியில் காட்டி இருப்பதைப் போல தலையைச் சாய்த்தபடி மூக்கின் ஒரு துளையில் ஊற்றி அடுத்த மூக்கின் துளையில் வரும்படி செய்ய வேண்டும் .
இப்படிச் செய்ய மூக்கில் நுழைந்த தூசு தும்புகள் , மூக்கு , சைனஸ் , பாரா சைனஸ் பள்ளங்களில்உள்ளே உறைந்திருக்கும் சளி வெளியேற்றப்பட்டு மூச்சு தங்கு தடையில்லாமல் சென்று வரும்.இதன் விளைவாக நுரையீரல் என்ற துருத்தி வெகு நாள் வேலைப்பளு இல்லாமல் இயங்கும். இட கலா ,பிங்கலா நாடிகள் சுத்தமாகும்.
மேலும் இந்த சைனஸ் மற்றும் பாரா சைனஸ் காற்றறை பள்ளங்கள் நம் தலை மண்டையோட்டில் இருப்பது நம் தலை அதிகம் சுமையாகாமல் காப்பதற்காகவேயாகும் . இந்த காற்றறைகள் சளியால் நிறைந்தால் தலை கனமாகி கழுத்து எலும்புகள் அதிக சுமைக்காளாகும் .
விளைவு கழுத்தெலும்புத் தேய்வு ,கழுத்து நரம்பு இசிவு , எனவே கழுத்தெலும்புத் தேய்வுக்கு தலையில் ஏறும் சளி முக்கிய காரணம். இதன் காரணமாக காதில் உள்ள நம் சமநிலைக்கு காரணமான எலும்புகளும் பாதிப்படையும் போது தலைச் சுற்றல் ஏற்படும் . இதற்கு கழுத்தில் பட்டை மாட்டிக் கொள்வதாலும்,அதிகமான எடையை போட்டு கழுத்து எலும்பை இழுப்பதாலும் ( TRACTION ) ஒரு பயனும் இல்லை.மாறாக கழுத்து எலும்புகளின் தடையில்லாத இயக்கம் பாதிக்கப்படும்.
நான் அக்கு பஞ்சர் கற்றுக் கொள்ளும் போது வெர்ட்டிகோ என்றால் உடனே அனைவரும் வேகமாக குறிப்பெடுப்பார்கள்.அந்த வெர்ட்டிகோ வேறொன்றும் இல்லை தலைச்சுற்றல் என்பதுதான்.இது எளிதில் தீரும் இந்த ஜலநேத்தியினால்.
எனது நண்பர் திரு பாலு என்பவர் , தனது பையனை என்னிடம் பையனை அழைத்து வந்தார் . அவனுக்கு காது கேட்கவில்லை என்று மருத்துவரிடம் சென்றேன் . சளி அதிகரித்து தொண்டை சதை அழற்சியாகி அடினாய்டு வரை அந்த அழற்சி பரவிவிட்டது .கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்துதான் தீர வேண்டும் என்று கூறியிருக்கிறார். அறுவை சிகிச்சையால் பையனுக்கு வேறு சில பாதிப்புக்கள் நேரலாம் என்றும் கூறியவுடன் அவருக்கு மிக வருத்தம்.
என்னிடம் பையனை அழைத்து வந்தார். அவருக்கு கண்களில் கண்ணீர் . இந்த வயதிலேயே ( வயது 7 )இவனுக்கு அறுவை சிகிச்சையுடன் பல பாதிப்புக்களும் நேரும் என்று கூறுகிறார்களே என்று வருந்தினார்.நான் கவலைப்படாதீர்கள் என்று கூறி இந்த ஜல நேத்தியை சொல்லிக் கொடுத்து செய்யச் சொன்னேன்.
முதல் இரண்டு நாட்களில் எந்த வித்தியாசமும் இல்லை.மூன்றாவது நாள் காலையில் ஒரு துண்டு நிறைய சளி வெளியே வந்துள்ளது.மீண்டும் ஐந்தாவது நாள் மீண்டும் ஒரு துண்டு நிறையும் அளவு சளி வந்தது.பையனுக்கு காதும் நன்றாகக் கேட்க ஆரம்பித்ததுடன் பையனுக்குள்ள அனைத்துப் பிரச்சினைகளும் சரி ஆனது . அந்தப் பையன் என்னிடம் முதன்முதலில் கேட்ட கேள்வி இனிமேல் நான் ஐஸ் கிறீம் சாப்பிடலாமா ? நான் கூறியது `இந்த ஜல நேத்தியை செய்து கொண்டு என்ன வேண்டுமாலும் சாப்பிடலாம் `என்று கூறினேன்.
அவ்வளவு உயர்ந்த இந்த ஜல நேத்தியை செய்து வர , உப்பின் சக்தியால் நெற்றிக்கண்ணின் முன்னால் உள்ள ஏழு திரைகளும் உருகி ஞானக்கண் திறக்கும் . அவ்வளவு சிறப்பான ஜல நேத்தியை ஒளிப்படக் காட்சியைக் காணுங்கள்.
[tube]http://www.youtube.com/watch?v=lhqC5HZPmNc[/tube]
மேலும் இந்த ஐம்மலம் நீக்குதல் எப்படி என்று அடுத்த ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 5 ல் பார்க்கலாம்.
Congradulations!!!!!! Good video demo. I need this Jalanethi instrument where i want to buy or any other type of bottle used for Jalanethi. It is use full for all peoples. Keep on write good things. We are always waiting for your post in your website………..
OMNAMASIVAYA…………………
அன்பு மிக்க திரு வெற்றி செல்வன்அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இந்த மூக்குக் குவளை மதுரை காந்தி மியூசியத்தில் கிடைக்கிறது.எல்லா இயற்கை நல வாழ்வு மையங்களிலும் கிடைக்கும்.நான் இந்த வாரம் உடனே பதில் தருவதில் தாமதம் நேரலாம்.பொறுத்துக் கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Chair jaĺaneerthi vidìeo vendim thank you
அன்புள்ள திரு Sivam அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் அய்யா,
கட்டுரை மிகப்பயனுள்ளதாக இருந்தது. ஒளிப்படத்தை, டவுன்லோட் செய்யும் வகையில் கொடுத்திருந்தால், மிகவும் பலனளிக்கும்.
எனக்கு வயது நாற்பதுக்கும் மேல் ஆகிறது.
புகை பிடிக்கும் வழக்கமும் காரணமாக நெஞ்சில் நிறைய சளி சேர்ந்து அவதிப்படுகிறேன்.
இதற்கு தாங்க ஏதாவது உபாயம் சொல்ல முடியுமா?
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.
அன்பு மிக்க திரு சீனிவாசன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
ஒளிப்படத்தை யூ டியுப் டௌன்லோடர் (YOU TUBE DOWN LOADER) என்ற மென்பொருளைப் பயன்படுத்தி எந்த யூ டியுப் ஒளிப்படத்தையும் டவுன்லோட் செய்யலாம்.எனது யூ டியுப் ஒளிப்படத்தையும் டவுன்லோட் செய்யலாம். தயவு செய்து புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள் . புகையிலை சித்தர்கள் நாடி சுத்திக்காகவும்,கஞ்சா என்ற யோசனா வல்லி சித்தர்கள் மன ஒருமைக்காகவும் உபயோகப்படுத்த படைக்கப்பட்டுள்ளது .அதை பழக்கத்திற்காகவும் ,போதைக்காகவும் உபயோகித்தால் புகையிலை இது போல சளியை அதிகரித்து உயிரைக் கவரும். கஞ்சா மதியை மயக்கும்.பைத்தியம் ஆக்கும்.எனவே அதைத் தவிர்க்க வல்லாரைத் திப்பிலி தயாரித்து எப்போதெல்லாம் புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ அப்போது சுவைத்து வாருங்கள்.200 மி லி வல்லாரைச் சாற்றில் திப்பிலியை 50 கிராம் போட்டு வெயிலில் வைத்து சாறு சுண்டிய பின் இந்த நோக்கத்திற்காக உபயோகிக்க சளியும் குறைந்து நீங்கள் ஆரோக்கியமாக மாறலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
அய்யா தாங்கள் ஆற்றி வரும் இந்த சேவை என்றென்றும் தொடர தாங்கள் வணங்கி வழிபடும் சித்தர்களும், முனிவர்களும், தெய்வங்களும் அருள்புரியட்டும்.
தாங்களும் தங்கள் குடும்பமும் இறையருளால் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும்.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி
புல்லுக்கும் புசியுமாம் ஆங்கே தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
வல்லாரையை மிக்சியில் போட்டு அரைத்து சாறு எடுக்கலாமா அல்லது வேறு ஏதாவது பக்குவம் உள்ளதா?
தயாரிப்பு சரியாக வர வேண்டும் என்ற ஆவலில் கேட்கிறேன்.
அன்புடன்,
சீனிவாசன்.
அன்பு மிக்க திரு சீனிவாசன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்ஸியில் போட்டால் வல்லாரை வெந்துவிடும் .அப்படி வெந்து போனால் அதனால் பயன் குறைவு.எனவே உரலில் இட்டு தண்ணீர் விடாமல் இடித்து சாறெடுத்து.பின் உபயோகிக்கவும்.மதுரை ஞாயிற்றுக் கிழமை மூலிகைச் சந்தையில் வல்லாரை வேண்டுமளவு வாங்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
தாங்கள் ஆற்றி வரும் இந்த சேவை என்றென்றும் தொடர தாங்கள் வணங்கி வழிபடும் சித்தர்களும், முனிவர்களும், தெய்வங்களும் அருள்புரியட்டும்.
தாங்களும் தங்கள் குடும்பமும் இறையருளால் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும்.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி
புல்லுக்கும் புசியுமாம் ஆங்கே தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
வல்லாரையை மிக்சியில் போட்டு அரைத்து சாறு எடுக்கலாமா அல்லது வேறு ஏதாவது பக்குவம் உள்ளதா?
தயாரிப்பு சரியாக வர வேண்டும் என்ற ஆவலில் கேட்கிறேன்.
மேலும், இதை நாட்டு மருந்து தயாரிப்பில் அனுபவம் இல்லாத நான் தயாரிப்பதை விடவும், அனுபவமுள்ள நாட்டு வைத்தியர் ஒருவர் தயாரித்தால் நல்லது என்றும் நினைக்கிறேன். எனில், இது தயாரிக்க கூடிய மருத்துவர் யாராவது தங்களுக்கு தெரிந்தால், தாங்கள் பரிந்துரைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். இது பற்றியும் தங்களின் கருத்தை தெரிவிக்கவும்.
அன்புடன்,
சீனிவாசன்.
அன்பு மிக்க திரு சீனிவாசன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
முதன்முதலில் மருந்து தயாரிக்க ஆரம்பிக்கும் போது நாம் உங்களைவிட மோசமான அனுபவத்துடன்தான் ஆரம்பித்தோம் .இப்போது இந்த அளவு மருந்துகளில் பரிச்சயம் உள்ள??? அளவுக்கு வந்துள்ளோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் அய்யா
மிகவும் பயனுள்ள தகவல் .உங்கள் இந்த சேவை பணி தொடர என் வாழ்த்துக்கள் .
அன்பு மிக்க திரு கண்ணன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இறைவன் திருவருளால் இந்தப் திருப்பணி தொடரட்டும்!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ளம் கொண்ட சாமி அவர்களுக்கு என் உளம்கனிந்த வணக்கங்கள்,
தங்களின் பதிவுகளை கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக படித்து வருகிறேன், தங்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இயலாமைக்கு மன்னிக்கவும்.
பச்சை சிங்கம்,[துருசு], கருங்குறுவை அரிசி, சுத்தகங்கை,திராட்சை ரசம் மிக அற்புதமான தகவல்கள் நன்றி ஐயா!
உடலின் அமிலத்தன்மை நம்மை அழிக்கிறது,காரத்தன்மை நம்மை நோய்களின் சிதைவிலிருந்து காக்கிறது,[ கற்பமருந்துகள்], செம்பில் களிம்பை போக்குவது முன்று மலங்களையும் நீக்கி உயர்த்தும், இவை குறித்து பல காலமாக என் மனதில் சந்தேகத்துடன் நோக்கிய இக்கருத்துகளை தாங்கள் சுட்டிகாட்டியவை தெளிவு படுத்தியது .
கற்பத்தையும், குருவையும் சுட்டிக்காட்டி அடுத்ததாக ஞான மார்கத்திற்கு வந்து விட்டீர்கள் மிகச்சரியான வழிநடத்துதல், எனக்கு இது குறித்து ஒரு சந்தேகம் கற்பமுண்டு முக்தி அடைதல் என்றும், உடலை ஒரு பொருட்டாக கருதாது இறை வழிபாட்டின் மூலம் முக்தி அடைதல் என்று இரண்டு மார்க்கம் உண்டா? இரண்டும் ஒரே வகையான உயர்ந்த நிலைகள்தானா? தயவு செய்து விளக்கவும்.
நன்றி ஐயா,
அன்புடன்,
மரு. ப .த. அறிவொளி.
அன்பு மிக்க திரு பி.டீ.அறிவொளி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
பிறவிப் பிணியறுக்க பிறந்தால் இறக்காமல் இருக்கலாம்,இது சித்தர்கள் வழி,உடலோடு சித்தி அடைதல் இது மேன்மையானது . இறந்தால் மீண்டும் பிறக்காமல் இருப்பது இது ஆன்மீக அருளாளர்கள் பலர் அடைந்த வழி.இந்த வழியில் இறந்தால் மீண்டும் பிறவா நிலையை அடைந்தோமா?அடைந்திருக்கிறோமா?அடைவோமா????என்பது நமக்கு உடலுடன் நம் உயிர் இணைந்திருக்கும்போதே தெரிந்தால் அதுவும் சிறப்பான நிலையே !!!!!! மாறாக நான் கடைத்தேறுவேனா மாட்டேனா என்பது எனக்குத் தெரியவில்லை என்றால் அது கேவல நிலையல்லவா??? எனவே எந்த வழி உங்களுக்குச் சரி என்று படுகிறதோ அந்த வழியை நாடி அந்த வழியில் ஒரு நல்ல??? குருவைத் தேடி உங்கள் ஆன்மீக பயணத்தை தொடங்குங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள அய்யா,
இந்த தளம் உங்களுக்கு தேவையான தகவல்காலி தெரிவித்தாலும் தெரிவிக்கலாம்.
http://www.paranjothi.org
அன்புடன்,
சீனுவாசன்.
அன்புள்ள அய்யா ,
////வல்லாரைத் திப்பிலி தயாரித்து எப்போதெல்லாம் புகை பிடிக்க வேண்டும்
என்ற எண்ணம் வருகிறதோ அப்போது சுவைத்து வாருங்கள்//////
இது புகை பழக்கத்தை மறக்கச்செயுமா ஐயா?
மேலும் மது பழக்கத்திற்கு விடைகொடுக்கவும் ஒரு மருந்து சொன்னால்
பலருக்கும் திருந்த வாய்பாக இருக்கும்.
அன்புடன் சின்னா
அன்புள்ள திரு சின்னா அவர்களே!!!
தங்களின் கருத்துரைக்கு நன்றி,
இந்த வல்லாரைத் திப்பிலி புகைப்பதை மறக்கச் செய்வது மட்டுமல்ல ,புகைப்பதால் வரும் கேடுகளையும் நீக்குவதோடு ,உடலில் உள்ள இரத்தத்தில் புகையிலையால் நிறைந்துள்ள கேடான புகையிலைச் சத்துக்களை(TAR ) நீக்குவதோடு நுரையீரல் மற்றும் இரத்தத்தையும் சுத்திகரிக்கிறது.இந்த ஒளிப்படக்காட்சியைக்காணுங்கள்.ஒரு முடிவுக்கு வாருங்கள்.
http://youtu.be/-DbFBu_I_lA
கொக்கோ கோலா , பெப்ஸி ஆகிய குளிர் பானங்களைக் குடித்தால் என்ன நிகழும் என்று பாருங்கள்.
http://youtu.be/wSxNNCHPsa8
உடலை மீண்டும் உறுதியாக்கும் உணவுகள் பற்றி.
http://www.squidoo.com/cleanse-your-lungs-with-these-foods
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள அய்யா ,
1)////200 மி லி வல்லாரைச் சாற்றில் //// என்று கூறியுள்ளீர்கள். பத்து வல்லாரை இல்லை கிடைப்பதே மிகவும் அரிதாக உள்ளது.௨௦௦ மி லி எப்படி எடுக்கலாம். பொதுவாக சாறு எடுப்பது எப்படி அய்யா ?(இலைகளை சுத்தம் செய்து தண்ணீர் கலந்து அரைத்து வடிகட்டனுமா அல்லது வேறு முறை உள்ளதா.இது எனது நீண்ட நாள் சந்தேஹம்.
2)திப்பிலி என்பது அரிசி திப்பிலி தானே அய்யா ?
அன்புடன் சின்னா
அன்புள்ள திரு சின்னா அவர்களே!!!
தங்களின் கருத்துரைக்கு நன்றி,
மிக்ஸியில் போட்டால் வல்லாரை வெந்துவிடும் .அப்படி வெந்து போனால் அதனால் பயன் குறைவு.எனவே உரலில் இட்டு தண்ணீர் விடாமல் இடித்து சாறெடுத்து.பின் உபயோகிக்கவும்.மதுரை ஞாயிற்றுக் கிழமை மூலிகைச் சந்தையில் வல்லாரை வேண்டுமளவு வாங்கலாம்.திப்பிலி என்றால் அரிசித் திப்பிலிதான்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சகோதரரே,
வணக்கம். ஜலநேத்தியில் நீரின் அளவு மற்றும் உப்பின் அளவு எவ்வளவு இருக்கவேண்டும் என்று தெரியபடுத்துங்கள் சகோதரரே.பதிவு மிகவும் அற்புதம்.தங்கள் பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி
மணிகண்டன்-கோவை
அன்புள்ள திரு மணிகண்டன் அவர்களே!!!
தங்களின் கருத்துரைக்கு நன்றி,
ஜல நேத்திக்கு கடல் தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி அப்படியே உபயோகப்படுத்தினால் நல்லது . கடல் தண்ணீர் கிடைக்காத இடங்களில் ஜல நேத்திக்கு அபூரித ( மேலும் உப்பைக் கரைத்தால் கரையாமல் அடியில் தங்கும் )கல் உப்புக் கரைசலை உபயோகப்படுத்தினால் நன்று. உப்பு கடல் தண்ணீர் ஆவியானதால் கிடைப்பது.எனவே உப்பைக் கரைத்துக் கிடைக்கும் கரைசல் கடல் தண்ணீருக்குச் சமமானதால் இப்படி உபயோகிக்கிறோம்.அபூரிதக் கரைசல் மூக்கில் விடும்போது எரிச்சல் அதிகம் இருந்தால் (அது நல்லதுதான் மூக்கில் ஏதேனும் புண் இருந்தால் ஆற்றும் , பின் மண்டையில் சுள்ளென்னும் உணர்வு வரும்) அதை சிறிது நீர்த்துப் போகச் செய்து உபயோகிக்கவும்.மூக்கில் தண்ணீர் ஊற்றியவுடன் எனக்கு வந்தது போல் தண்ணீர் உடனே வராது.ஏனெனில் உங்கள் மூக்கில் உள்ள சளி ,அழுக்கு போன்றவை சிறிது சிறிதாக வெளியேறிய பின்னர்தான் இது போல உடனடியாக உப்புத் தண்ணீர் வெளியேறும் . மேலும் இது போல செய்யும் போது மூக்கை அதி வேகமாகச் சிந்தாதீர்கள்.அப்படிச் செய்தால் உப்புத் தண்ணீர் காதின் உட் பகுதி வழியாக வந்து ,காதடைப்பு ,காதில் சில கர் முர்ரென்ற சத்தங்களை உண்டாக்கும் .அப்படி நேர்ந்தால் ஒன்றும் பயப்பட வேண்டாம் . அதுவே சரியாகிவிடும் . காதில் வலி வந்தால் மட்டும் அந்தக் காதில் வெளிப்பகுதி வழியாக இதே அபூரித உப்புக் கரைசலை ஊற்ற சரியாகிவிடும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா வணக்கம்,
நல்ல தகவல். எனது மகனுக்கு வயது 7. அடிக்கடி சளி தொல்லை. சமையலில் அனுதினம் திரிகடுகு செர்த்துகொள்வோம். சில சமயங்களில் சளி பிடித்த நேரத்தில் சித்தரத்தை கஷாயம் கொடுப்பேன்.சளி நின்றபாடில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள முறையை முயற்சி செய்யல்லாம். மூக்குக் குவளை எனக்கு கிடைக்காது.
நன்றி.
அன்புள்ள திரு பரமசிவம் அவர்களே!!!
தங்களின் கருத்துரைக்கு நன்றி,
ஏலாதிச் சூரணம் கொடுங்கள்.அதீதச் சளியாக இருந்தால் உப்புடன் சேர்த்துக் கசக்கி எடுத்த குப்பை மேனிச் சாற்றை நான்கு அல்லது ஐந்து சொட்டு கொடுங்கள்.மலேசியாவில் குப்பை மேனி கிடைக்குமா என்று தெரியவில்லை.இல்லையெனில் நமது நண்பர் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் சளிக்கான மருந்துகள் பல உள்ளன .ஏதேனும் ஒன்றை பயன் படுத்திப் பாருங்கள். பயன் கிடைக்கும் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா
உங்கள் தகவல் ஆச்சரியமாக உள்ளது . அடுத்த பதிவிருக்கு மிக ஆவலாக காத்து இருக்கிறேன் .ஐயா உங்களுக்கு தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பி உள்ளேன் . ஆனால் எந்த பதிலும் தங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை .தங்களுக்கு வேலை பளு இல்லாத நேரத்தில் மெயில் அனுப்புமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
அன்பு மிக்க திரு முத்துக் குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
உங்கள் மெயில் வந்தது.படித்துப் பார்த்தோம்.இரு வழிகளில் எந்த வழி உங்களுக்கு பிடித்து இருக்கிறதோ அந்த வழியைத் தேர்ந்து செல்லுங்கள்.யாம் சொல்லும் வழி உங்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்ற ஐயம் எனக்கு. ஏனென்றால் ஏற்கெனவே நாம் ஒரு மின்னஞ்சலில் சில விடயங்களைக் கூறியுள்ளேன். மேலும் உடல் என்றாலே நோய் அணுகக் கூடியதே . நோயில்லாத மனிதனே இல்லை.பிணி , மூப்பு , சாக்காடு என்பது எல்லா உயிர்களுக்கும் உண்டு .அதை வென்று வாழ்வதே சித்தர்களின் கலை, வழி , நெறி.தொடர்பில் இருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா அனைத்து வழிமுறை களையும் சொன்னால் அதில் எது எனக்கு ஈசியாக உள்ளதோ அதை follow பண்ணுகிறேன்
அன்பு மிக்க திரு முத்துக் குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
தொந்தம் கோடி துறை கோடி என்பார்கள்.அத்தனை கோடி வழிமுறைகளும் தெரிவதெப்போது!!!!பின் கடைத் தேறுவது எப்போது.தெரியும் ஒன்றே ஒன்றாயினும்,அந்த ஒன்றைப் பற்றி கடைத்தேற வழி பாருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா தாங்கள் எந்த வழி முறையினையும் எனக்கு சொல்ல வில்லையே !
அன்பு மிக்க திரு முத்துக் குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நாம் சொல்லி ஏதுமில்லை.உங்களின் ஆன்மாவின் தேடல்,உங்களைக் கொண்டு சேர்க்கும். நீங்கள் மதுரைக்குப் போக எண்ணி சென்று கொண்டிருக்கும் போது ,உங்களுக்கு கன்னியா குமரிக்கு செல்ல வழி சொன்னால் அது எப்படி உதவாதோ,அது போலத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை எதுவானாலும் அது உங்களை இறைவனிடம் கொண்டு சேர்க்கும்.
பட்டினத்தார் திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் ///வல்லான் ஒருவன் கைமுயன்றெ றியினும் , வாளா ஒருவன் மாட்டா எறியினும் ///என்பார்.அதாவது பஸ்தி குஸ்தியெல்லாம் போடத் தெரிந்த ஒரு பயில்வான் தன் கை பலத்தையெல்லாம் திரட்டி ஒரு கல்லை எறிந்தாலும் , நடக்கவே உடல் பலமில்லாத ஒரு பலகீனன் ஒரு சிறு கல்லை எடுக்க மாட்டாமல் எடுத்து தொப்பென்று போட்டாலும் இரண்டும் தரைக்கு வருவது போல/// எல்லா உயிர்களும் இறைவனிடத்தில் சென்று சேர்வது திண்ணம்.என்ன காலத்தால் கொஞ்சம் முன்னால் அல்லது பின்னால் இருக்கலாம் என்கிறார்.இன்னும் சொல்கிறார் ///ஐந்தீ வளர்த்து அருகருந்தி/// நாற்புறமும் நெருப்பை வளர்த்து மேலே ஒரு நெருப்பான சூரியன் தகிக்க அருகுகளையும் சருகுகளையும் சாப்பிட்டு, ஒற்றைக் காலில் இறைவனை நோக்கித் தவமிருந்தாலும்,இறைவனை நாட ஒன்றுமே செய்யாமல் இல்லறக் கடமைகளை மட்டும் செய்பவனுக்கும் இறைவன் ஒரே மாதிரி அருள் புரிகிறானாம்.எனில் வழி முறை ஏதேனும் தேவையா????? யோசியுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள அய்யா
மது பழக்கத்திற்கு விடைகொடுக்கவும் ஒரு மருந்து சொன்னால்
பலருக்கும் திருந்த வாய்பாக இருக்கும்.
அன்புடன் சின்னா
அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
அதற்கும் வல்லாரைத் திப்பிலி மருந்தை உபயோகிக்கலாம்.எந்த லாகிரியாக இருந்தாலும் சரி.பித்தத்தை தூக்கும்.பித்தத்தை தணித்தால் அது மேற்கொண்டு அந்தப்பழக்கத்தை மறக்க வைக்கும்.இவ்வளவுதான் இதில் விடயம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
சித்தர்கள் யார்?
பதினெண்சித்தர்கள் என்று இன்று நாட்டு வழக்கில் கூறப்படும் பட்டியலைச் சேர்ந்தவர்கள் உண்மையில் 48 வகைச் சித்தர்கள் ஆவார்கள். இவர்கள் பதினெண்சித்தர்கள் அல்ல! அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
மூலப் பதினெண்சித்தர்கள் என்பவர்கள் இந்த மண்ணுலகத்திற்கு வேற்று அண்டங்களிலிருந்து இந்த உலகம் தோன்றிய காலத்தே வந்தவர்கள். அவர்கள் இந்த மண்ணுலக உயிரினங்களிலேயே உயர்ந்த மணீசரைப் பண்படுத்தி மனதை யுடைய மனிதர்களாக்கினார்கள். இதற்கு அவர்கள் பயன்படுத்திய மொழி இந்தப் பதினெண்சித்தர்களின் தாய்மொழியான தமிழ்மொழி. அதனாலேயே தமிழ்மொழி “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே மூத்த மொழி” என்று குறிப்பிடப் படுகின்றது.
இந்த மூலப் பதினெண்சித்தர்கள் மண்ணுலக மனிதர்களோடு உறவு பூண்டு நேரடி வாரிசுகளை உண்டாக்கினார்கள். “பதினெண்சித்தர்களின் வழிவந்தவர்களே பதினெண் வேளிர்கள்” என்றொரு முன்னோர் வாக்கு இதனையே குறிக்கின்றது. இந்த வாரிசுகள் வழிவந்தவர்கள் காலப் போக்கில் அருளுலகப் பயிற்சி முயற்சிகளில் தேர்ச்சி பெற்று சித்தர்கள் நிலையை அடைந்திடுகின்றனர். அப்படி சித்தர் நிலையை அடைந்தவர்கள் 48 வகைச் சித்தர்களில் ஒருவராக அருளுலகத்தாரால் ஏற்றுக் கொள்ளப் பட்டனர்.
பதினெண்சித்தர் பீடாதிபதிகள் நிகழ்த்தும் ஏட்டுலகப் புரட்சியும், நாட்டுலகப் புரட்சியும்:
பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிடும் பொழுதுதான் 48 வகைச் சித்தர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்பக் கூறப்படும் கருத்துக்களையும் ஒருமுகப் படுத்தித் திருத்திப் பதினெண் சித்தர்களின் அண்டபேரண்டங்களை ஆளும் இந்துமதத்தின் மெய்யான, முறையான, முழுமையான வடிவமைப்புக்கள் உருவாக்கப்படும். எனவே, பதினெண் சித்தர் பீடாதிபதிகள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய காலத்தில் உள்ள குறைகளுக்கும், முறைகேடுகளுக்கும், தவறுகளுக்கும், பிழைகளுக்கும், தேய்வுகளுக்கும், ஓய்வுகளுக்கும், திரிபுகளுக்கும், முறிவுகளுக்கும்…. உரிய பரிகாரங்களைச் செய்வதற்காகவே மீண்டும் குருபாரம்பரியமும், இலக்கிய பாரம்பரியமும், அரச பாரம்பரியமும், கருவாக்கியம், கருவாசகம், குருவாக்கியம், குருவாசகம், தருவாக்கியம், தருவாசகம், திருவாக்கியம், திருவாசகம், அருள்வாக்கியம், அருள்வாசகம், மருள் வாக்கியம், மருள் வாசகம்…. முதலிய பல வகைப்பட்ட இலக்கியங்களைப் படைத்து ஏட்டுலகப் புரட்சியைச் செய்கின்றனர்.
பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தங்கள் தங்கள் காலத்து மக்களுடைய அறிவு, ஆர்வம், ஆற்றல், உழுவலன்பு, உண்மை ஊக்கம், நம்பிக்கை, பத்தி, முயற்சி நிலை, பயிற்சி நிலை, …. முதலியவைகளுக்கேற்ப மக்களிடையே பலரைத் தேர்ந்தெடுத்து இட்டும், தொட்டும், சுட்டியும், அருள் வழங்கி சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், விருப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள், பதிலிகள், மகன்கள், மகள்கள், குருவழி வாரிசுகள், உரிமைச் சுற்றங்கள் …. எனப்படும் அருளுலக வாரிசுகளை உருவாக்கி நாட்டு நடப்பில் நாட்டுலகப் புரட்சியை செய்கிறார்கள்.
பதினெண் சித்தர்களின் நாட்டுலகப் புரட்சியைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், புரியாதவர்கள், நாத்திகர்கள், மதமறுப்பாளர்கள், மத வெறுப்பாளர்கள்… முதலியோர் பதினெண்சித்தர்கள் தோற்றுவித்ததுதான் இந்துமதம் என்ற பேருண்மையைத் தெரிந்து கொள்ள முடியாதவர்களாகவே ஆகி விடுகிறார்கள். எனவேதான், அவர்கள் பதினெண் சித்தர்களின் உண்மையான இந்துமதத்திற்குள் 48 வகைச் சித்தர்களின் கருத்துக்களை மோத விட்டு குழம்பித் தவிப்பார்கள். இந்த நிலையே இப்போது நம் நாட்டில் நிலவுகின்றத http://www..gurudevar.org/ ஐயா இந்த வலைதளம் பர்தேர்களா?
அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
பார்த்தேன்.
///சித்தர்களின் மரபுப்படி ‘இலைக் குலுங்கா நடுச் சாமத்தில்’ (நடுநிசியே உயிர்ப்புப் பூசைக்குரியது – குருவாக்கு), ‘அனைத்தும் உறங்கும் நள்ளிரவில்’ ‘அருவ, அருவுருவ ஆட்சிக்குரிய நடு யாமத்தில்தான்’ செய்யப்பட வேண்டும்’ என்ற சித்தர் நெறி, சட்டம், ஒழுங்கு, மரபு, பூசாவிதி, படி, கட்டளை, ஆணை, அருளுரை, அறிவுரை.///
எமது மச்ச முனிவரின் சித்த ஞான சபையிலும் உபதேசம் இரவில் 12 மணியளவில்தான் கொடுக்கப்படுகிறது .எனவே அந்த வலைத் தளத்தில் யாம் பார்த்த விடயங்கள் சிலவே!!! அவை சரியாகவே உள்ளன.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நன்றி ஐயா,வெறும் களிமண் உருண்டையாக உஙகளிடம் வருகிறேன்,என்னை எல்லொருக்கும் பயனுள்ள ஒரு பாண்டமாகச் செய்யுங்கள்
அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இறைவன் விரும்பினால் எல்லாம் நடக்கும்.விதி முறைகளை உண்டாக்கிய இறைவனே அவைகளைத் தவிர்ப்பான்.திருத்துவான். மீறுவான்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
yanakkum vertigo pirachanai ullathu. intha jalanenthiyai yethanai naatkal seiyavendum yenru koorungal iyya..
அன்புள்ள திரு யுவராஜ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். முடியாது.இனிமேல் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதிலளிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம்.இனி ஆங்கிலத்தில் கருத்துரை எழுதினால் வெளியிட மாட்டோம் என மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழில் எழுதாதற்கு காரணமாக சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.ஜல நேத்தி என்பது தினம் ஒரு முறை கொடுக்க வேண்டிய விடயம்.சித்த மருத்துவம் என்பது ஒரு மருத்துவ முறை அல்ல.அது ஒரு வாழ்க்கை முறை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா வணக்கம்…
தங்கள் வலைப்பூவை பார்த்த நாள் முதல் தினமும் படித்து வருகிறேன்…. அருமை அருமை அய்யா… தங்களின் விளக்கங்கள் மட்டுமல்லாது, மற்ற பெரியோர்களையும், தங்களுக்கு குருவானவர்களையும் மக்கள் அறியச் செய்துள்ளீர்கள்… சிலருக்கு மட்டுமே இந்த பெருமனம் வாய்க்கும்….
நன்றி அய்யா…
சிறப்பான சேவை தொடரவேண்டுகிறோம்…
இப்படிக்கு
ர.குணவதி
அன்புள்ள திரு ர.குணவதி அவர்களே,
இனி வரும் காலங்களில் இது தொடரும் என்று தோன்றவில்லை.இறை எம்மை ஆண்டு வருவதை உணர்கிறோம். இது வரை எந்த நோயாளிக்கும் , மருந்துகளுக்கும் நாம் பணம் வாங்கியதில்லை .மனம் ஒன்றிலும் ஒட்டாத நிலை ஏற்பட்ட பின்னர், மூன்று நாட்களுக்கு முன்னர் எமது வேலையை ராஜினாமா செய்துவிட்டு போகும் மன நிலைக்கு நாம் வந்து, ராஜினாமா கடிதத்தை கொடுத்தும் விட்டோம்.எமது குழந்தைகளும் மனைவியும் கேடுக்கொண்டதற்கிணங்க எமது துறைத் தலைவர் அந்த ராஜினாமாக் கடிதத்தை திருப்பிக் கொடுத்தார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.எம் செயலாவது யாதொன்றும் இல்லை.அதனாலேயே பதிவுகள் ஏதும் எழுதும் மன நிலையும் எமக்கு வாய்க்கவில்லை , என்பதை எவ்வித உணர்வுமின்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா வணக்கம்…
இதுவரை தாங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையே அளப்பறியது…. இதையெல்லாம் மக்கள்
கடைப்பிடித்தாலே அவர்கள் கடையேறிவிடுவார்கள். எல்லாம் அவன் செயல்…
தங்களின் உள்ளமும் உடலும் என்றென்றும் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல ஈசன் தங்களுக்கு நிச்சயம் துணையாய் இருப்பார்…
அவனன்றி ஓர் அணுவும் அசையாது….
தங்களை எமக்கு காட்டிய இறைக்கு நன்றி…
என்றும் தங்கள் குடும்பத்தாரின் நலனையும், தங்களின் நலனையும் நாடும் பற்றுள்ள ….
ர.குணவதி
அன்புள்ள திரு ர.குணவதி அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்