ஒரு சிறந்த ரசவாதி( பாகம் 4 )

எமது குருநாதர் சிவ ரசத்தையும் சக்தி ரசத்தையும் சேர்க்க ,ரசத்தை சூட்சும சீனத்தைக்  ( பொதுவாக படிகாரத்தைத்தான் சீனம் என்று ரச சித்தர்கள் குறிப்பிடுவார்கள்.ஆனால் இது படிகாரமல்ல ) கொண்டு ரசத்தை கடுங்காரச் சுண்ணமாக்குகிறார். அந்தச் சுண்ணத்தை சுத்த கங்கையைக் கொண்டு உண்ணக் கூடிய வகையில் திராவகமாக்குகிறார்.

பொதுவாக பாதரசமானது சாதாரண வெப்ப நிலைக்கே விரிவடையும். பின் ஆவியாகி புகையாகும்.இதனாலேயே தங்க ஆசாரிகள்.பாதரசத்தை அவர்கள் வைத்திருக்கும், தங்கம் காய்ச்சி உருக்கிய குகையுடன் வைத்து அரைத்து கழுவிவிடுவார்கள். மண் போன பின் ரசமும் தங்கமும் சேர்ந்த கலவை மீதமாகும்.அந்த கலவையை சூடாக்கினால் பாதரசம் ஆவியாகும் .பின் மீதமுள்ள தங்கம் கிடைக்கும்.

ஆனால் ஆவியாகும் ரசம் சுவாசிக்கப்பட்டால் , நுரையீரலைக் கெடுக்கும், உடலில் சேர்ந்தால் சிறுநீரகம் ,கல்லீரல் , மண்ணீரல் முதலிய ராஜ கருவிகளுக்கு  கடும் பாதிப்பை உண்டாக்கும்.ஆனால் மிக உயர்ந்த சூட்சும சீனத்துடன் ( முப்பூ குரு) சேரும்போது புலி ஆட்டைக் கவ்வுவது போல சூட்சும சீனம் பாதரசத்தை ( சாதாரணமாக ஆவியாகும்  பாதரசம் விஷத் தன்மையில் புலி  போன்றது. ) ஆனால் இந்தச் சூட்சும சீனத்தின் முன் ஆடாக மண்டியிடுகிறது. ஒளிப்படக்காட்சியை பாருங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=ghzM-I59yg0[/tube]

அந்தத் திராவகத்தின் படம்

அந்தத் திராவகத்தை உண்டதனால் உடலில் உள்ள அதிகத் தண்ணீர் வறட்டப்பட்டு உடல் இறுகும்.அந்தத் தேகத்தை இன்னும் சில நாட்களில் படத்தில் காணலாம்.

இந்த கட்டுரையை மீண்டும் சில புகைப்படம் முதலான சில விடயங்களுடன் விரிவாக்கம் செய்திருக்கிறேன். படித்துப் பயன் பெறுங்கள்.