பழம் பெரும் நூல் ( மணிக்கடை நூல் ) அரிய நூல்

மணிக்கடை நூல்

சித்த வைத்திய முறையில் நோய் அறிதல் என்பதில் பல வகைகள் உள்ளன. அவை கண் குறி , முகக் குறி , நீர்க்குறி , கண் குறி , நகக் குறி , நாடி நிதானம் ( கை நாடிப் பரி சோதனை ) , எண்ணெய்ப் பரீட்சை போன்ற பல விதங்கள் உள்ளன . அவற்றில் மிக எளிமையான பரீட்சை முறையான   மணிக்கடைப் பரீட்சை என்பதை இப்போது பார்ப்போம்.

மணிக்கடைக்கு மேல் நான்குவிரல் தள்ளிக் கைச்சுற்றளவை கயிற்றினால் அளந்து  கண்ட நீளம் அவரவர் கையினால் பத்து விரற்கடைக்கு மேல்  சிறிதளவு இருந்தாலும் போதும்,  ஆரோக்கியமான உடல் என்று பொருள்.

இந்த ஒளிப்படக் காட்சியைப் பார்த்து அதைப் போல அளந்து கொண்டு பின் இந்த நூலில் சொல்லி இருக்கிற அளவுப்படி தெரிந்து கொண்டு அந்த அறிகுறிகள் உடலில் உள்ளதா ? என்று பார்த்து தெரிந்து , தெளிந்து கொள்ளுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=u1DKwZhkgAc[/tube]

பத்து விரற்கடையிருந்தால் உடல் வெதும்பி , வாயுவினால் நெஞ்சு வலி , கையிற் குத்தும் , உளையும் , வயிற்றில் வாயுத் திரட்சியுங் குன்மமும் உண்டாகும்.

ஒன்பதே முக்காலுக்கு அரையாப்பு , பிளவை , மறட்சி , இருமலுண்டாகும்.

ஒன்பதரைக்கு உடல் வெதும்பி வீங்கும் , சூடுண்டாகும் , விழி காந்தும் ,  உட்சுரம் , மேகம் உண்டாகும் (மது மேகமும் இவற்றில் ஒன்று – சர்க்கரை வியாதி ) , அன்னத்தை தள்ளும் ( அன்னத் துவேஷம் – சாப்பாட்டைப் பார்க்கவும் பிடிக்காது , சாப்பிடவும் பிடிக்காது )

ஒன்பதே காலுக்கு விழி காந்தும் , நீர் கடுத்து சிறுத்திறங்கும் ,  நித்திரை வராது , பீனிசம்  ( மூக்கு , சைனஸ் , பாரா சைனஸ் பள்ளங்களில் சளி உண்டாகி மூச்சு விடத் திணறும்  நிலை )உண்டாகும்.

ஒன்பதுக்கு செவி மந்தமாயுங் கண் புகைச்சலாய் இருக்கும் . குறுக்கில் வாயு இறங்கி வலிக்கும் , துடையும் அயறும் , நடக்க ஒட்டாது .

எட்டே முக்காலுக்கு உடல் காயும் , சில விஷத்தால் குஷ்டம் போல் உண்டாகும் , மூல வாயுவினால் வயிறு பொருமும் , கண் காசமும் ( கண் பார்வையில் பசபசப்பும் , கண் மங்குதலும்  ) பீனிசமும் உண்டாகும் .

எட்டரைக்கு தேக வெதுப்பு , வெட்டை , கிரந்தி , குட்டம் , சொறி , குடல் வாதம் , தாது நஷ்டம் உண்டாகும் .

எட்டே காலுக்கு உடல் பொருத்துகளில் வலித்து உளையும் , தலை வறட்சி , தலைவலி , பீனிசம் , வியர்வை , விஷத்தினால் இளைப்பிருமலும் உண்டாகும் .

எட்டுக்கு மேக காங்கை ( உடல் மேகம் அதிகரித்ததனால் எரிச்சல் உண்டாதல் ) , வயிற்றில் மந்தம் , பொருமல் , வாயுத்திரட்சி உண்டாகும் . அன்னத்தை வெறுக்கும் . சுகமிராது . வேற்றுடற் படும்  ( வேறு உடம்பு போல் காட்டும் ).

ஏழே முக்காலுக்கு மூலம் எழும்பி கைகால் காந்தும் , தலையிடிக்கும் , மதத்திருக்கும் , இரண்டு வருடத்தில் , கண்ட மாலை உண்டாகும் , நாட்கள் செல்லச் செல்ல நாசியில் இருந்து இரத்தம் வரும் .

ஏழரைக்கு எலும்புருக்கி , மேகம் , வயிற்றுப் பொருமல் , கண் எரிவு , ஆறு நாளில் உடம்பிற் காந்தல் கால் கை சந்துளைவு ( கால் கை மூட்டுக்களில் வலி ) விப்புருதி உண்டாகும் .

ஏழே காலுக்கு இடுப்பில் வாயுக் குத்து , பிடிப்பு , வலி சிரசில் பித்தம் , கண் வலி , பாண்டு , சோகை , கைகால் காந்தல் , அதிக நித்திரை உண்டாகும் .

ஏழுக்கு பித்தம் சிரசில் ஏறும் , வாயிலிருந்து  இரத்தம் விழும் , ஷயம் ( T.B ) , கால் கை காந்தல் , சிலந்திப் புண் உண்டாகும் , உஷ்ணம் மிகும் , பலம் தீயும் ( பலக் குறைவுண்டாகும் ) .

ஆறே முக்காலுக்கு அண்ட வாயு ( குடல் பிதுக்கம் , விரை வீக்கம் , புட்டம் வீங்கல் ஆகியன இதில் அடங்கும் ) , கண் வலி , மயக்கம் , மூன்று வருடத்தில் நீரடைப்பு , கல்லடைப்பு , கை கால் காந்தல் , வலி உளைவு , முகத்தில் வியர்வை உண்டாகும் .

ஆறரைக்கு உடல் வெதுப்பு , குத்தல் , தாகம் , அன்னத் துவேஷம் , சூடு , வாதமுண்டாகும் .

ஆறே காலுக்கு மூலக்கிராணி , புளித்த ஏப்பம் , சத்தி , துடை வாழை உண்டாகும். அரை சோறு போற் கழியும் .

ஆறுக்கு இளைப்பும் , நெஞ்சிற் கபம் உண்டாய் , இருபது நாளில் மரணம் .

ஐந்தே முக்கால் முதல் நான்கு விரற்கடை வரை தேகத்தில் கண்ட பிணிகள் அதிகமாகி ஜீவன் பிரியும்.

பொதுவாக சித்த மருத்துவத்தில் நோயாளரை தைரியம் ஊட்டவே இது போன்ற அறிகுறிகளை உபயோகிப்போம். மிக அதிகமாக இந்த அளவுகள் குறைந்து இருந்தால் அது பற்றி பரீட்சியுங்கள் .மற்றபடி நூலில் குறிப்பிட்டுள்ளவாறு உடலில் எந்தக் குறி குணங்களும் இல்லை என்றால் கவலை கொள்ளத் தேவையில்லை.

மேலும் ஒரு முக்கிய விடயம் பயமே வியாதியை அதிகரிக்கும் . தைரியம் வியாதியை தொலைக்கும் . நமது பீனியல் சுரப்பி சுரப்பு நீரைச் சுரந்து கொண்டிருந்தால் நோய் கிடையாது , மரணமும் கிடையாது . நமது பீனியல் சுரப்பியான ஞானச் சுரப்பி அச்சம் இல்லாதிருந்தால் சுரக்கும் . என்றைக்கு நமக்கு உயிரைப் பற்றிய அச்சம் , நோயைப் பற்றிய பயம்   வருகிறதோ அன்று முதல் நமது பீனியல் சுரப்பி சுரப்பு நீரைச் சுரக்காது.

எனவே உயிர் போய்விடுமோ என்பது  பற்றி அச்சப்படாதீர்கள். நோய் அதிகரித்துவிடுமோ என்று அச்சப்படாதீர்கள். நமது சித்தர்கள் கண்ட மருத்துவமே 4448 நோய்களையும் போக்குவதோடு , மரணமும் ஒரு நோய் , அதையும் போக்கலாம் என்று கூறுகிறது .சாகாக் கலை என்னும் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ வழி சொல்லும் ஒரே மருத்துவம் சித்த மருத்துவம் . எனவே  அச்சம் தவிர்க!!!