ஒரு மஹா மூலிகை ( மார்ச்சால மூலி) பாகம் 1

மார்ச்சால மூலி என்றே இப்போது குறிப்பிடுகிறேன்.இதன் சாதாரண வழக்குப் பெயரை அடுத்த கட்டுரை ஒரு மஹா மூலிகை ( மார்ச்சால மூலி) பாகம் 2 ல் குறிப்பிடுகிறேன்.

சாதாரணமாக பல் வலி என்றால் அவஸ்தையும் தொல்லையும் கஷ்டமும் சாதாரணமாக அனைவருக்கும் வந்திருக்கும் .அப்படி நம்மை கஷ்டப்படுத்தும் கிருமிகளும் பல்லில் உள்ள புழுக்களும் கன்னத்து சதையில் உள்ள வியர்வைத் துவாரங்கள் , மற்றும் ரோமத் துவாரங்கள் வழியே வெளியே வந்து விழும் என்றால் இது எப்பேர்ப்பட்ட மூலிகையாக இருக்கும் என்று தெரிகிறதல்லவா.

இதை பொட்டாக வைத்துச் செல்வதனால் காரியசித்தியாகும் . சாதாரண செய்வினை பில்லி சூனியக் கோளாறுகள் இருந்தால் நிவர்த்தியாகும் , இனியும் வராது  தவிர்க்கப்படுகின்றன.

இதே மையினால் செல்வ வசியமான லட்சுமி வசியம் மற்றும் சரஸ்வதி , பார்வதி உள்ள  சிவலோகம் , விஷ்ணு லோகம் , பிரம்ம லோகம் , இந்திராதி தேவர்கள் உள்ள தேவலோகம்  முதலான சகல லோகங்களும் வசியமாகும்.

இதில் விலை உயர்ந்த பல மூலிகைகளின் , பட்டைகளின் , விதைகள் , வெண்கொழுஞ்சி , தொட்டாற்சுருங்கி , குத்துக்கல் தாமரை , ஏறழிஞ்சில் விதை (இந்த),நல்ல நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமை மாலை பூஜை செய்து எடுக்கப்பட்ட சங்கம் வேர், வண்ணான் அவுரி  ( நீலி ), நத்தைச் சூரி, கதிர் நாயுருவி, தொட்டால் வாடி , ஆடையொட்டி , ஒட்டுப்புல் , யானை  வணங்கி , பூனை வணங்கி , வெண் தாமரை, செந்தாமரை , ரோஜா இன்னும் பல மூலிகைகளை பசுவின் நெய் மற்றும் பச்சைக்கற்பூரம் மற்றும் இவற்றால் எரிக்கும் போதே மந்திர உச்சாடனங்களுடன் எரித்து எடுத்து , சுருமாக்கல்  (நீலாஞ்சனக்கல்) , விளக்கெண்ணெய்  , புனுகு , ஜவ்வாது , அத்தர் , ரோஜாத் தீ நீர் ( பன்னீர்) , IMPCOPS குங்குமாதி லேபம் ஆகியவற்றால் அரைத்து எடுத்து செய்த மையே அது.

அந்த  மையை எரித்து எடுக்கும் போது எடுத்த  ஒளிப்படக் காட்சியை கீழே உள்ள இணைப்பைப் பார்த்து  அறிந்து கொள்ளுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=b8lMGljQS9s[/tube]

அந்த  மையை எரித்து எடுக்கும் போது எடுத்த  படக் காட்சியில் ஒவ்வொரு மூலிகையை எரிக்கும் போதும் அதற்கான தேவதைகள் ஒளி உருவத்தில் தோன்றுவதையும் கீழே உள்ள படங்களைப் பார்த்து  அறிந்து கொள்ளுங்கள்.

எரியும் நெருப்பில் அரபு எழுத்துக்கள் போல நெருப்பு தெரிவதைப் பாருங்கள்.

எரியும் நெருப்பிற்கு மேல் மேலும் வெளிச்சம் தெரிவதைக் காணுங்கள் எமது சட்டையில் அது பிரதிபலிப்பதை காணுங்கள்

எரியும் நெருப்பில் மனித வடிவம் தெரிவதையும் அதற்கு மேல் தனியாக ஒரு துண்டு நெருப்பு தனியாக நிற்பதையும்  காணுங்கள் 

எரியும் நெருப்பில் எழுத்துக்கள் தெரிவதையும் அதற்கு மேல், மேலும் வெளிச்சம் பெரும் ஜோதியாக தெரிவதைக் காணுங்கள்  எமது சட்டையில் அது பிரதிபலிப்பதை காணுங்கள்

அந்த  மூலிகையின் மகத்துவத்தை கீழே உள்ள ஒளிப்படக் காட்சியைப் பார்த்து  அறிந்து கொள்ளுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=Njc82K6AP4Q[/tube]

ஒரு மஹா மூலிகை ( மார்ச்சால மூலி) பாகம் 2 ல் தொடர்கிறேன்.