காப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள் தொடர்ச்சி…

இந்த பதிவுகள் எல்லாம் எனக்குள் தோன்றிய கேள்விகளின் பதில்களே.வாத வைத்தியத்திற்கும்,வாதம் வகை 80 ற்கும் (கை கால் மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கும்,பக்க வாதத்திற்கும்,கை கால் செயல்படாமல் இருக்கும் நிலைகளுக்கும்) சித்த வைத்தியர்கள்,சிறுநீர் பெருக்கிகளையும் (DIURETICS), பெருமலம் போக்கிகளையும் (PURGATIVES) ஏன் கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.

அப்படி இருந்த போது அக்கு பஞ்சரில் இதற்கான கேள்விகளையும் அதற்கான விடையையும் கொடுத்தார்கள் எனது அக்கு பஞ்சர் குருநாதர்கள் ஆன நெல்லிக்குப்பம் திருDr M.N.சங்கர் , சேலம் ஷண்முகா மருத்துவமனையில் பணிபுரியும் திரு Dr ஜோசப்பால் , திரு Drஆன்டன்ஜெயசூர்யா(LATE) (CHAIRMAN MEDICINA ALTERNATIVA), ஆகியோர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.அவர்களுக்கு இந்த இடுகையை சமர்ப்பணமாக்குகிறேன்.
அக்கு பஞ்சரில் என்னை முனைவர் பட்டம் பெறச் செய்ததோடு மட்டுமில்லாமல் எனக்கு எல்லா அக்கு பஞ்சரின் அதி நுட்பங்களைக் கற்பித்தவர்கள் இவர்களே!அக்கு பஞ்சரில் என் கட்டுரையில் வித்துவத்துவம் ஏதேனும் தென்பட்டதென்றால் இவர்களே காரணம்.


காப்பி, டீயால் பித்தம் அதிகரிப்பது மட்டுமல்ல,காப்பியிலும்டீயிலும் காஃபீன் என்ற நஞ்சு உள்ளதுகுடித்த எட்டு மணி நேரத்திற்கு மேல் இது ரத்தத்தில் இருந்து தன் கெடுதல் பணியை தொடர்ந்து நடத்துகிறது.
காப்பிக் கரைகள் நமது ஆடைகளில் பட்டாலே பல முறை துவைத்தாலும் போவதில்லை.அவ்வளவு தூரம் கரையை ஏற்படுத்தும் இவற்றை பல ஆண்டுகளாக குடித்து வரும் நம் குடல்களில் எவ்வளவு கறை படியும். யோசித்துப் பாருங்கள்.
சென்ற பதிவின் இடுகையின் திரு தோட்டக்காரன் அவர்களின் பதிலில் குறிப்பிட்டுள்ள விஷயத்தை இங்கே மிக விரிவாகத் தருகிறேன்.டீயில் கிரீன் டீ என்ற ஒன்று உண்டு.அது டீயின் கொழுந்து இலைகளை அப்படியே பறித்து நொதிப்பிற்கு உட்படுத்தாமல்,மிதமாக சூடாக்கப்பட்டு நொதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு நிழலில் உலர்த்தி தயாரிக்கப்படுகிறது. இதனால் அதில் உள்ள ‘பாலி பீனால்கள்‘ சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது.இவை கேன்சரையே தடுக்கும், குணப்படுத்தும் வல்லமை உள்ளவை.
சைனாவில் தங்கள் குருமார்களுக்கு சீடர்கள் கொடுக்கும் குரு தட்சிணையே,இந்த டீதான்இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட இலைத்தேயிலையில் தயாரிக்கப்பட்டு எலுமிச்சம்பழச்சாறு சேர்க்கப்பட்டு இனிப்பு கலக்காமல் பரிமாறப்படுகிறது,என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த டீ மல்லிகை மணத்துடன் இருக்கும்.இந்த டீ கேன்சரைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்(ANTI OXIDENTS) களை உள்ளடக்கியது.
நமக்கு டீ என்ற பெயரில் டீ இலைத் தூசிகள்தான்(DUST TEA)வழங்கப்படுகிறது, தனியாக செயற்கை மணம்,திடம்,நிறம் ஊட்டப்பட்டு வருகின்றன.இதில் போலிகள் வேறு.பல டீக்கடைகளில் பழைய டீத்தூளை வாங்கிச் சென்று மீண்டும் மேற்கண்ட மூன்றும் ஊட்டப்பட்டு புத்துணர்வுடன் திரும்பி வருகின்றன, நமக்கு புத்துணர்வூட்ட!குப்பையில் போட வேண்டியதை எல்லாம் வேளை தவறாமல் குடித்து வருகிறோம்.
மேலும் நம் உடலில் உள்ள அனைத்து எலும்புகளும் சுண்ணாம்பை (CALCIUM)அடிப்படையாக கொண்டது.இதுதான் நம் உடலைத் தூக்கி நிறுத்துகிறது. இந்த எலும்புச் சட்டகத்தை அரிப்புக்கு உள்ளாகாமல் காக்கவே நம்து இரத்தம் காரத்தன்மையோடு(BASE NATURE)உள்ளதாக இறைவனால் வைக்கப்பட்டுள்ளது.அதன் காரத்தன்மை மாறி அமிலத்தன்மைக்கு(ACID NATURE)மாறினால் எலும்புகள்ஆங்காங்கே அரிக்கப்படும்,குறிப்பாக மூட்டுகளில் இந்த சேதம் அதிகம் இருக்கும்.
இதில் உடலின் இரத்தத்தை காரத்தன்மையில் இருந்து அமிலத் தன்மைக்கு மாற்றும் முக்கிய மூன்று காரணிகளைப் பார்ப்போம்.
(A) குளிர் பானங்கள்
(B) நன்றாக மென்று உமிழ் நீரோடு கலந்து தின்னாமல் அப்படியே விழுங்குவது 
(C) வேகங்கள் ஐந்தனுள் ஒன்றான சிறுநீரை அடக்குவதால் ஏற்படுவது
இந்தக் காரணிகள் எப்படி இந்தப் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. அவற்றை விளைவுகளை எப்படி மாற்றுவது,அல்லது தடுப்பது என்று பார்ப்போம் 

(A)முதலில் குளிர் பானங்களுக்கு வருவோம்.இவை பொதுவாகவே கரிய மில வாயுவை பானங்களில் கரைத்தே குளிர் பானங்கள் உருவாக்கப்படுகின்றன. கரியமில வாயு(CARBAN DI OXIDE )தண்ணீரில் கரைந்தால் அமிலமாகவே மாறுகிறது (CARBOLIC ACID).  இவைகளை அருந்துவதால் நம் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.
அதன் தொடர்ச்சியாக வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பால் வயிற்றின் இரைப்பை,குடல் இவற்றில் புண் உண்டாகி,அதன் பின் இரத்தத்தில் அமிலத் தன்மை உயர்கிறது.
(B)மேலும் நாம் உண்ணும்போது சீரணம் நம் கைகளில் ஆரம்பித்து வாயில் நடைபெற்று வயிற்றில் முடிவடைகிறது என்பார்கள்.
இதையே நம் ஆன்றோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு என்பார்கள்.
வாயில் காரத்தன்மை என்ற {சுண்ணாம்புச் சத்தை (CALCIUM)} அடிப்படையாகக் கொண்ட வாணி என்றழைக்கப்படும் எச்சில் என்ற உமிழ்நீர் உள்ளது.
நாம் உண்ணும் உணவினை நன்றாக மென்று அரைத்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டால்,அது வயிற்றில் போய் உணவு வயிற்றில் இரைப்பையில் உள்ள அமிலங்களால்(HYDRO CHLORIC ACID) கரைக்கப்பட்டு சீரணம் ஆன பின் உமிழ்நீரில் உள்ள காரத்தன்மை{சுண்ணாம்புச் சத்தை( CALCIUM) அடிப்படையாகக்
கொண்டது அமிலத்துடன் வினைபுரிந்து அதை சமநிலைப்படுத்துகிறது.

இப்படி இல்லாமல் அப்படியே உணவை விழுங்கும்போது உணவுடன் உமிழ்நீருடன் கலக்காததால் வயிற்றில் இரைப்பையில் உணவு சீரணமான பின்,சீரணத்துக்குப் பின் எஞ்சி இருக்கும் அமிலம் உமிழ் நீர் அதை நிலைப் படுத்த இல்லாததால் குடலின் சுவர்களை அரிப்பதோடுநெஞ்செரிச்சல் (HEART BURNING) போன்றவைகளை உண்டாக்கிஇரத்தத்தின் அமிலத்தன்மையையும் உயர வைக்கின்றன.
(C)மூன்றாவதாக இங்கு நான் குறிப்பிடுவது நம் உடலில் வேகங்கள் ஐந்து. இவை 96 உடற் தத்துவங்களில் அடங்கும்.அவை வேகமாக வெளியேற முயற்சிக்கும்போது அடக்குவதனால் வரும் விளைவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
1)இருமல்
2)தும்மல்
3)விந்து வெளியேறுதல்,நாதம் வெளியேறுதல்
4)மூத்திரம் வெளியேறுதல்
5)மலம் வெளியேறுதல்
இதில் நான்காவது வேகமான மூத்திரத்தை அடக்குவதால் உண்டாகும் விளைவுகளைப் பற்றி மட்டும் பார்ப்போம்.வேகமாக வெளியேற முயற்சிக்கும் மூத்திரத்தை அடக்குவதால்,சிறுநீரகம் தனது கழிவுகளை வெளியேற்றும் பணியின் மூலம் வெளியேற்றி தேக்க இடம் இன்றி சிறு நீர்ப்பை நிறைந்து இருப்பதால்அது தன் வேலையான கழிவு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.உடனே நமது உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலம் (URIC ACID&ETC) போன்றவற்றின் அளவு உயர்கிறது.
நமது சிறுநீரகம் நம் இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையை குறிப்பாக யூரிக் அமிலம் (URIC ACID&ETC) போன்ற உடலுக்கு தீங்குபயப்பவற்றை  நீக்கிகாரத்தன்மையை நிலை நாட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.இதைப் பற்றி ஏற்கெனவே முன்னொரு பதிவில் விளக்கமாக எழுதிவிட்டேன்.
யூரிக் அமிலம் (URIC ACID&ETC) போன்றவற்றின் அளவு உயர்வதன் விளைவாகஇந்த அமிலங்கள் மூட்டுகளில் உள்ள இரத்த நாளங்கள் நெளிந்து வளைந்து செல்லுவதால் அங்கேயே படிந்துவிடுகின்றன. பின்பு அந்த மூட்டுக்களை அரிக்க ஆரம்பிக்கின்றன.இதனால் மூட்டுக்கள் தேய்ந்துவிடுகின்றன. அதனால் மூட்டுக்களில் வலி ஏற்படுகின்றது.
எனவேதான் ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கக் கூடாது என்ற வழக்குச் சொல் வந்தது.
மூட்டுகள் என்பவை தேய்ந்து போக கதவின் கீல்கள் அல்ல.அவற்றைத் தேய்மானம் செய்யும் காரணிகளை நீக்கினாலே,உடல் தன்னைச் சரி செய்து கொள்ளும் தன்மை வாய்ந்தது,மூட்டுத் தேய்மானம் என்பதே இல்லாமல் போய்விடும்.மேலும் தக்காளியில் அதிக யூரிக் அமிலம் (URIC ACID&ETC) இருப்பதாலேயேமூட்டு வலி உள்ளவர்கள் அதை சாப்பிடுவதிலிருந்து தவிர்க்கும்படி வைத்தியர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதையே ஆங்கில வைத்தியத்தில் மூட்டுத் தேய்மானம் என்று கூறி மூட்டுகளில் போய் வைத்தியம் பார்ப்பதும்.வோவிரான் ஜெல்,மற்றும் வோவிரான் ஊசி மருந்துகள் பொடுவதால்,சிறுநீரகத்தின் பழைய பாக்கியிருக்கும் வேலையோடு புதியதாக இந்த மருந்தின் தொல்லையைச் சமாளிக்கும்அதிக வேலைப் பளுவின் காரணமாக சிறுநீரகம் பழுதடைகிறது.நோய் மேலும்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது.
வைத்தியன் காரணம் புரிந்து வைத்தியம் செய்தாலே குணம் கிடைப்பது தாமதம் ஆகும்.காரணமே புரியாமல் வைத்தியம் பார்த்தால் என்ன ஆகும்.
காரணமே புரியாமல் வைத்தியம் புரிவதையே ஆங்கில வைத்தியம் செய்கிறது.
சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல இடம் அதிகம் எடுத்தால் படிப்பவர்க்கு சலிப்பு தட்டும் எனவே,இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பாருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்