ஒரு பழம் பெரும் புத்தகம்(திரு மோஹனராஜ் அவர்களின் பதிப்புக்கள் (பாகம் 1)
இன்று விஜய ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது.நமது மச்ச முனி வலைத் தளத்து அன்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்று ஒரு முக்கிய பதிவுத் தொடர் ஆரம்பம் ஆகின்றது.முக்கிய பல ஏட்டுச் சுவடிகளும்.பல பழைய முக்கிய கையெழுத்துப் பிரதி நூல்களும் நம் தமிழ் நாட்டின் சித்தர் அளித்த சொத்துக்கள்.நாம் அந்தப் புத்தகங்கள் பல கிடைக்காமல் அலைந்துள்ளோம். அப்படிப்பட்ட நூல்களை உங்களுக்கு கிடைக்க ஒரு அரிய வாய்ப்பை இந்த தொடர் உங்களுக்கு வழங்குகிறது.
இவை நம் நாட்டின் ரகசிய அரிய பொக்கிஷங்களான , வர்மம் , எலும்பு முறிவுகள், சிறு குழந்தைகளுக்கான வைத்தியம் போன்ற நம் பழந்தமிழர் நுண்கலைகள் பற்றிய புத்தகங்கள்.எனவே வாசக அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.
இந்தப் புத்தகங்களை பல பாரம்பரிய சித்த வைத்தியக் குடும்பங்களிடம் திரு மோகன ராஜ் அவர்கள் பாரம்பரிய செல்வக்கால் வாங்கி புத்தகங்களாக்கி உள்ளார்.இவர் ஒரு பழைமையான சித்த மருத்துவ பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் . மற்றவர்கள் பார்க்க கேட்டாலே தராத ஏட்டுப் பிரதிகளை திரு மோகன ராஜ் அவர்கள் ஒரு பெரும் சித்த மருத்துவ பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் ஆதலால் இவரிடம் அப்படிப்பட்ட அரிய ஏட்டுப் பிரதிகளை கொடுத்து உதவியதால் இப்படிப்பட்ட அரிய நூல்கள் வெளியாகியுள்ளன.
திரு மோகன ராஜ் அவர்கள் சொந்தமாக ஒரு சித்த மருத்துவக் கல்லூரியும் நடத்தி வருகிறார்.மிக அருமையான மனிதர்.பலருக்கு உதவும் பண்பாளர்.இந்த நூல்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற தாகம் கொண்டவர்.
இதே கீழே ஒரு நூல் பிரதியும் அதன் பாடல்களும்.அதன் ஏட்டுப் பிரதியின் பக்கங்களும் கொடுத்துள்ளோம்.இந்த நூலை வாங்கிப் படித்துப் பார்த்து பலன் பெறுமாறு அன்புடன் உங்கள் முன் வைக்கிறோம்.
வர்ம ஒடிவு முறிவு சர சூத்திரம் -1200
திரு மோகன ராஜ் அவர்களின் முகவரியும் அலை பேசி எண்ணும் கீழே கொடுத்துள்ளோம்.புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்புபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்கள் முன் வைக்கிறோம்.
Dr. T. MOHANARAJ
MUNCHIRAI, PUDUKKADAI P.O. 629171
KANYAKUMARI DISTRICT. TAMILNADU
Cell No : 09442364659
இந்த முக்கிய பழம் பெரும் புத்தகங்கள் பற்றிய பதிவுத் தொடர் இனி ஒரு பழம் பெரும் புத்தகம் (திரு மோஹனராஜ் அவர்களின் பதிப்புக்கள் (பாகம் 2) ல் தொடரும்.
அன்புள்ள அய்யா,
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தாம்பூலம் போடுவது குறித்து விளக்கி வீடியோ பதிவு வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
வசிய மருந்துகள், அவற்றின் பாதிப்புகள், எடுக்கும் முறைகள், எடுப்பவர்கள் பற்றிய உண்மைகள் என மேலும் பல விசயங்களுடன் நல்ல பதிவை தரும்படி வேண்டுகிறேன்.
மச்சமுனி வலை உலக வாசகர்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டு நிறைவான இனிய ஆண்டாய் அமையட்டும்.
நன்றி.
அன்புள்ள திரு கே ஆனந்தன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் பதிவுகள் எல்லாம் மூன்று மாதத்துக்கு முந்தியவை.நீங்கள் கேட்ட பதிவு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளிவரும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள திரு கே ஆனந்தன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் பதிவுகள் எல்லாம் மூன்று மாதத்துக்கு முந்தியவை.நீங்கள் கேட்ட பதிவு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளிவரும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள அய்யா,
என்னைப் போன்றவர்கள் தமிழ் பாட்டுகளை படித்து பொருள் உணரும் சக்தி அற்றவர்கள். என்னைப் போன்றவர்களும் பயன் பெற நீங்கள் பாடலை விளக்கி கூறினால் பயன் பெறுவோம்.
அன்புள்ள திரு கே ஆனந்தன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
தமிழ் பயின்றால்தான் நம் முன்னோர் சொத்துக்களை புரிந்து கொள்ள முடியும்.நேரம் இருந்தால் நாம் எம்மால் முடிந்த வரை விளக்கம் அளிக்க முயலுகிறோம்.செய்யுள் உரை விளக்கத்துடன் கூடிய நூல்களும் உள்ளன.தொடரை கவனியுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,கடந்த மாதம் கன்யாகுமரியில் நடந்த வர்ம பயிற்சியில் கர்நாடக நண்பர்கள் 5 பேர்களுடன் கலந்து கொண்டேன்.மிகவும் அருமையான வர்ம புத்தகங்கள் திரு.மோகன்ராஜ் அவர்களிடம் வாங்கிவந்தேன்.என் பகுதியில் விரைவில் அவர்களை கொண்டு வர்ம பயிற்சி நடத்த உள்ளேன்.தங்கள் ஆசி வேண்டும்
அன்புள்ள திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
நல்லது .செய்யுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Thank you…
Wish you happy Tamil new year…
அன்புள்ள திரு சுந்தரராஜன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கு தமிழில் வாழ்த்து சொல்ல முடியவில்லையா???ஐயா இது மிகக் கொடுமை.இருப்பினும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நான் தங்கள் நுண்ட நாள் வாசகன்். ஐயா என் வலப்பக்க கால் ெபா்உவிரல் ோ
ஓா் ஆண்டாக வலி; எாிச்சல் உள்ளதஉ. நல்ல ஆேலாசைன தரவஉம் நன்றி!.
அன்புள்ள திரு சாதிக் பாட்சா அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள், உங்களிடம் நாம் நேரிடையாகவே பேசிவிட்டதால்.விரிவான பதில் தேவையில்லை என்றாலும் இந்த அறிகுறிகள் வரப்போகும் சர்க்கரை நோயின் அறி குறிகள்.முதலிலே சுதாரித்துக் கொண்டால் வரவே விடாமல் ஆக்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நம் மச்சமுனி வலைப்பதிவை வாசிக்கும் வாசகர்கள் எல்லோருக்கும் என் பணிவான வேண்டுகோள். ஒரு வலைப்பதிவை எப்படி வாசகர்களுக்கு அருமையாக கொண்டுசெல்லவேண்டும் என்பதை நம் மச்சமுனி வலைப்பதிவை பார்த்தால் நன்றாக புரியும். சில வலைப்பக்கங்கள் எல்லோருடைய கருத்துக்களையும் வெளியிடுவது இல்லை.அவர்கள் சொன்ன கருத்தால் முடியாத,தீராத பிரச்னைகள் தீர்த்தன என்று வருகின்ற கருத்துக்கள் மட்டுமே வெளியிடப்படும். மற்ற கருத்துக்கள் வெளிவராது. சில வலைப்பக்கங்கள் என்ன கருத்து எழுதினாலும் வெளிவரும்,ஆனால் கேள்வி கேட்டுள்ளவற்றிற்கு பதில் இருக்காது.நம் வலைப்பதிவு மட்டுமே எல்லோருடைய கருத்துகளும் அவற்றிற்கு விளக்கமான பதிலுடன் வருகின்றது. இதை எல்லோரும் பின்பற்றினால் வலைப்பக்கம் மிகவும் ஆக்கபூர்வமாக இருக்கும்.மிக அருமையான முயற்சி.அறிவு பசியை தீர்ப்பதால் வள்ளலாரின் வாரிசுகளுடன் நம் அய்யாவையும் ஒப்பிடலாம். நம் வலைப்பதிவின் சேவைக்கு மிக்க நன்றி.
அன்புள்ள திரு கே ஆனந்தன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
பிற வலைத்தளங்களுடம் நம் வலைத் தளத்தை ஒப்பிட வேண்டாம் ஒவ்வொரு வலைத் தளத்திற்கும் ஏதாவது ஒரு சிறப்பில்லாமல் வாசகர்கள் இருக்க முடியாது.பதில் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரவர் சுதந்திரம். எனவே அது பற்றியும் நாம் சொல்ல வேண்டியதில்லை.மொத்தத்தில் நாமிருக்கும்படி நாமிருப்போம்.அவரவர் இருக்கும்படி அவரவர் இருக்கட்டும்.அனைவரும் ஒரே மாதிரி இருந்துவிட்டால் உலக இயக்கம் எப்படி நடக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
உங்கள் தமிழ் மருத்துவ ஆலோசனைகள் மேலும் மேலும் தொடர வாழ்த்துகள்
நன்றீ உடன்
ராஜா பாதமுத்து
மதுரை
அன்புள்ள திரு ராஜா பாதமுத்து அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா தங்கள் பதிவுகள் மிகவும் அருமை . நான் ஒரு சித்தர்கள் அடிமை . அவர்களது படைப்புகளை ஆராய்ச்சி செய்து மக்களுக்கு பயன்படுமாறு செய்ய வேண்டும் என்று நினைகிறேன் ஆனால் அந்த பணியை தாங்கள் அருமையாக செய்கிறீகள் . உங்களுக்கு சித்தர் அருள் நிறைந்திருக்கட்டும் . எனக்கு ஒரு சந்தேகம் மின்சார தைலத்தை மூட்டு வலிக்கும் போதுதான் தடவ வேண்டுமா ? நிரந்தரமாக் குணமாக வழியுண்டா ? மின்சார தைலம் என்பது pain killeraa? தங்களது செல் பேசி எண் கிடைக்குமா? என் முகவரி arlionamu1@gmail.com
மிகவும் நன்றி ஐயா தங்கள் பணி தொடரட்டும் .
அன்புள்ள திரு ஆர் டி அமுதன் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மூட்டு வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மூட்டு வலித் தைலத்தை தடவலாம்.அதில் உள்ள மருந்துப் பொருட்கள் மூட்டு வலியை உண்டாக்கும் காரணிகளைப் போக்கும்.இதனுடன் ஷீர பலாத் தைல மாத்திரையை சாப்பிடும் படி அந்தப் பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறோமே??? கவனிக்கவில்லையா???
மின்சார தைலம் என்பது pain killeraa?
வலி கொல்லுதல் என்பதே அல்லோபதி வைத்தியத்தில் சும்மா!!!! சொல்லப்படும் வார்த்தை.உண்மையில் வலி கொல்லுதல் என்பதே பொய்.வலியை மூளைக்கு உணர்த்தும் நரம்புகளின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைத்து மூளை வலியை உணர விடாமல் செய்வதே!!!வலி என்பது நமக்கு இறைவன் அளித்துள்ள வரப்பிரசாதம். அந்த வரப்பிரசாதத்தை தொலைப்பது என்பது மிகப் பெரும் கொடுமை.காலில் முள் குத்தினால் வலி தெரிய வேண்டும்.அப்படித் தெரிந்தால்தான் வலியை உண்டாக்கிய காரணி(முள்) எது கண்ணால் பார்த்து அதை நீக்கும் காரியத்தில்(முள்ளை எடுத்தல்) உடல் ஈடுபடுகிறது .எடுத்துக்காட்டாக சர்க்கரை நோய்க்காரர்களுக்கு காலில் உணர்ச்சி இருக்காது.முள்ளோ கல்லோ இடித்தாலோ காயம் உண்டாக்கினாலோ ,வலி தெரியாது . விளைவு கால் புண் அதிகமாகி அழுகி காலையே எடுக்க வேண்டிய சூழல் உண்டாகலாம் .இப்போது புரிகிறதா???வலி கொல்லுத்ல் என்பது உங்கள் உணர்வைக் கொன்று அதன் மூலம் தற்காலிகமாக ஒரு சர்க்கரை நோயாளி போல மாற்றுவதுதான்.இதனால் உங்கள் உயிராற்றல் அழிந்து நோய்கள் உடலில் பெருகி உடலே அழியலாம்.ஆனால் சித்த மருந்துகள் அப்படி அல்ல. வலிக்கான காரணிகளை நீக்குவதால் வலியையே (அங்கு தேங்கி இருக்கும் கழிவுகளை நீக்குவதோடு அந்தக் கழிவுகளால் உண்டான பாதிப்பால் மூட்டுக்களில் காய்ந்து போன உயவுத் தன்மையை புதுப்பிக்கின்றது ) அடியோடு உடலிலிருந்து நீக்குதலே சித்த மருந்துகள் செய்யும் பணி.எனவே சித்த மருந்துகளுக்கு இந்தக் கேள்வி இங்கு பொருந்தாது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மிகவும் நன்றி ஐயா . கட்டி கற்பூரம் என்பது நாம் பயன்படுத்தும் சூடம் தானே ஐயா . உங்கள் செல் பேசி எண் கிடைத்தால் எனக்கு இருக்கும் பல சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ஐயா , நன்றி.
அன்புடன்
இரா.தே.அமுதன்
அன்புள்ள திரு இரா.தே.அமுதன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
ஆம்.கட்டிக் கற்பூரத்தை அழுத்திக் கிடைப்பதே அழுத்தப்பட்ட சூடம்.(pressed camphor).
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
என்றும் இளமையுடனும் வாழச் உதவும் காய கற்ப மூலிகைகள் பற்றி சொல்லுங்களேன்
அன்புள்ள திரு கபில் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.அதுதான் அவ்வப்போது வெளிவரும் பதிவுகளில் ஒரு சில காய கற்ப மூலிகைகளைக் கூறி வருகிறேனே!!!!வெண் துத்தி, ஜோதி விருட்சம், அழுகண்ணி , தொழுகண்ணி எனப் பலவற்றை அவ்வப்போது இது வரை சொல்லி வந்துள்ளேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கர்னாடக அழைத்து வந்து எல்லா இடங்களையும் காண்பிக்க வேண்டும்.பெங்களூர் தமிழ் சங்கத்தில் உங்கள் பேச்சு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அன்புள்ள திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
நல்லது .அந்த அளவிற்கு எமக்கு நேரம் கிடைக்குமா என்பதுதாம் சந்தேகம்.இருந்தாலும் முயற்சிக்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய அய்யா..
இன்றைய சமூகத்தை மிகப்பெரும் சீர்கேட்டிற்க்குள்ளாக்கும் மதுப்பழக்கத்தை அடியோடு நிறுத்த, குடிப்பவருக்குத் தெரிந்தும் மற்றும் தெரியாமலும் கொடுத்து குணப்படுத்தும் மருந்துகள் ஏதாவது இருப்பின் அது குறித்து தாங்கள் அறிமுகப்படுத்தினால் எத்தனையோ குடும்பங்கள் பெரும் பயனடையும்.
அன்புள்ள திரு ரவி அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
குடியை மறக்கடிக்க மருந்துகள் உள்ளன.விரைவில் ஒரு பதிவில் இது சம்பந்தமாக கட்டுரைகள் வெளிவரும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா வணக்கம்,
எனக்கு கடந்த 2 வருடகளாக dust அலர்ஜி உள்ளது. சளி வருவது இல்லை. சளி போல் நீர் வருகிறது. கடந்த சில நாட்களாக தும்மல் 30 வரை வருகிறது. நெல்லி காய் பொடி அந்தி, சந்தி இரு நேரங்களிலும் சாப்பிடுகிறேன்.
பலன் கிடக்கிறது. இருந்தும் அதிக்கமாய் வருகிறது குறைகிறது. ஏதானும் வலி சொல்லுகங்கள்
நன்றி
ம.சரவணன்
அன்புள்ள திரு சரவணன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
உங்களுக்கு நுரையீரலில் செயல்பாட்டுக் குறைபாடு உள்ளது.இதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் சைலிசியா-200(SILICIA – 200 ) மருந்தை ஒரு ட்ராங்ம் அளவு உருண்டை வடிவ மாத்திரைகளாக வாங்கி காலையில் வெறும் வயிற்றில் இரு மாத்திரைகளை சப்பி சாப்பிட்டு வாருங்கள்.ஒரு மாதத்திற்குள் குணம் கிடைக்கும்.சித்த மருத்துவத்தில் ஏலாதிச் சூரணம் என்ற மருந்தை வாங்கி காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு உப்புக் கரண்டி அளவு சப்பிச் சாப்ப்ட்டு வர குணம் கிடைக்கும்.பீனசத் தைலம் அல்லது சிரோபார நிவாரணித் தைலம் என்ற எண்ணெயை வாரத்தில் இரு நாட்கள் காலையில் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பின் சீயக்காய் தேய்த்து குளிக்க நலம் கிடைக்கும்.மூக்கில் அணு தைலம் ஓரிரண்டு சொட்டுக்கள் விட்டு வர நலம் கிடைக்கும்.இதைவிட ஜல நேத்தி செய்து வர மருந்துகள் ஏதும் இல்லாமலேயே நலம் கிடைக்கும்.இணைப்பை பார்வையிடுங்கள்.
http://machamuni.com/?p=1067
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி மிக விரைவில் ஜல நேத்தி செய்கிறேன்.
அய்யா உங்களிடம் எனக்கு பிடித்த விஷயம்…… யாராக இருந்தாலும் எந்த கேள்வியாக இருந்தாலும் சிரமம் பார்க்காமல் பதில் தருவது தான்……………. எனக்கு தெரிந்த வரையில் யாரும் இப்படி பதில் தந்தது இல்லை அய்யா… இதற்கே தனி மனோபாவமும், பொறுமையும், நான் சரியான இடத்திற்குத்தான் வந்து இருக்கிறேன்..
நன்றி
ம .சரவணன்
அன்புள்ள திரு ம.சரவணன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
விதி வழி மாந்தர்.நல்லூழ் இருந்தால் நம் வலைத்தளம் கண்ணில் படும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய அய்யா வணக்கம் ,
என் மனைவிக்கு 35 வயதாகிறது 5 வருடங்களுக்கு முன்னாள் பிரசவ சமயத்தில் ( முதல் நாளே மருதுவமனைஇல் சேர்த்து விட்டோம். ஆனால் இரவு 11 மணி அளவில் தானாக குழந்தை கர்ப்ப பையில் இருந்து தலை வெளிய வர ஆரம்பித்தது , (டெலிவரி பார்க்கும் ஆங்கில மருத்துவர் வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்ததால்) செவிலியர்கள் அதை தடுத்து அழுத்தி பிடித்து கொண்டனராம் . இதனால் பிறப்பு உறுப்பு சிறிது சதை கிழிந்து விட்டதாம் . ஆங்கில மருத்துவர் டெலிவரிக்கு பின் தையல் போடும் போது அசன வாய் அருகில் சேர்த்து தையல் போட்டு விட்டதால் என் மனைவிக்கு மலம் வந்தால் அடக்க முடிவதில்லை. தானாக வெளி வந்து விடுகிறது. தற்போது ஏதாவது வெளி ஊர் செல்வதென்றால் இதை நினைத்து வர பயபடுகிறார்.
motion control கிடைக்க என்ன செய்யலாம் என்று தயவு செய்து வழி கூறுங்கள் அய்யா ?
நன்றி.
அன்புள்ள திரு அன்பு அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எனது அலை பேசி எண் அனுப்பப்பட்டுள்ளது.உங்களிடம் பேசிய பின் மருத்துவம் கூறுகிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்