ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 4

இந்தப் பதிவைப் படிக்கும் முன்னர் ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 3 ஐ படித்துவிட்டுத் தொடர்ந்தால் நன்கு புரியும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த சளியான மலத்தை உடனுக்குடன் நீக்கவும் , சேர விடாமல் தடுக்கவும் ஜல நேத்தி உதவுகிறது.நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரில் கல்லுப்பை கரைத்து ,வடிகட்டி தெளிய வைத்து இறுத்து வைத்துக் கொள்ள வேண்டும் . இந்தக் கரைசல் நன்றாக ஆறிய பின்னர் அதை மூக்குக் குவளையில் ஊற்றி ஒளிப்படக் காட்சியில் காட்டி  இருப்பதைப் போல தலையைச் சாய்த்தபடி மூக்கின் ஒரு துளையில் ஊற்றி  அடுத்த மூக்கின் துளையில் வரும்படி செய்ய வேண்டும் .

இப்படிச் செய்ய மூக்கில் நுழைந்த தூசு தும்புகள் , மூக்கு , சைனஸ் , பாரா சைனஸ் பள்ளங்களில்உள்ளே  உறைந்திருக்கும் சளி வெளியேற்றப்பட்டு மூச்சு தங்கு தடையில்லாமல் சென்று வரும்.இதன் விளைவாக நுரையீரல் என்ற துருத்தி வெகு நாள் வேலைப்பளு இல்லாமல் இயங்கும். இட கலா ,பிங்கலா நாடிகள் சுத்தமாகும்.

மேலும் இந்த சைனஸ் மற்றும் பாரா சைனஸ் காற்றறை பள்ளங்கள் நம் தலை மண்டையோட்டில் இருப்பது நம் தலை அதிகம் சுமையாகாமல் காப்பதற்காகவேயாகும் . இந்த காற்றறைகள் சளியால் நிறைந்தால் தலை கனமாகி கழுத்து எலும்புகள் அதிக சுமைக்காளாகும் .

விளைவு கழுத்தெலும்புத் தேய்வு ,கழுத்து நரம்பு இசிவு , எனவே கழுத்தெலும்புத் தேய்வுக்கு தலையில் ஏறும் சளி முக்கிய காரணம். இதன் காரணமாக  காதில் உள்ள நம் சமநிலைக்கு காரணமான எலும்புகளும் பாதிப்படையும் போது தலைச் சுற்றல் ஏற்படும் . இதற்கு கழுத்தில் பட்டை மாட்டிக் கொள்வதாலும்,அதிகமான எடையை போட்டு கழுத்து எலும்பை இழுப்பதாலும்  ( TRACTION ) ஒரு பயனும் இல்லை.மாறாக கழுத்து எலும்புகளின் தடையில்லாத இயக்கம் பாதிக்கப்படும்.

நான் அக்கு பஞ்சர் கற்றுக் கொள்ளும் போது வெர்ட்டிகோ என்றால் உடனே அனைவரும் வேகமாக குறிப்பெடுப்பார்கள்.அந்த வெர்ட்டிகோ வேறொன்றும் இல்லை தலைச்சுற்றல் என்பதுதான்.இது எளிதில் தீரும் இந்த ஜலநேத்தியினால்.

எனது நண்பர் திரு பாலு என்பவர் ,  தனது பையனை என்னிடம் பையனை அழைத்து வந்தார் . அவனுக்கு காது கேட்கவில்லை என்று மருத்துவரிடம் சென்றேன் . சளி அதிகரித்து தொண்டை சதை  அழற்சியாகி அடினாய்டு வரை அந்த அழற்சி பரவிவிட்டது .கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்துதான் தீர வேண்டும் என்று கூறியிருக்கிறார். அறுவை சிகிச்சையால் பையனுக்கு வேறு சில பாதிப்புக்கள் நேரலாம் என்றும் கூறியவுடன் அவருக்கு மிக வருத்தம்.

என்னிடம் பையனை அழைத்து வந்தார். அவருக்கு கண்களில் கண்ணீர் . இந்த வயதிலேயே  ( வயது 7 )இவனுக்கு அறுவை சிகிச்சையுடன் பல பாதிப்புக்களும் நேரும் என்று கூறுகிறார்களே என்று வருந்தினார்.நான் கவலைப்படாதீர்கள்  என்று கூறி இந்த ஜல நேத்தியை சொல்லிக் கொடுத்து செய்யச் சொன்னேன்.

முதல் இரண்டு நாட்களில் எந்த வித்தியாசமும் இல்லை.மூன்றாவது நாள் காலையில் ஒரு துண்டு நிறைய சளி வெளியே வந்துள்ளது.மீண்டும் ஐந்தாவது நாள் மீண்டும் ஒரு துண்டு நிறையும் அளவு சளி வந்தது.பையனுக்கு காதும் நன்றாகக்  கேட்க ஆரம்பித்ததுடன் பையனுக்குள்ள அனைத்துப் பிரச்சினைகளும் சரி ஆனது . அந்தப் பையன் என்னிடம் முதன்முதலில் கேட்ட கேள்வி இனிமேல் நான் ஐஸ் கிறீம் சாப்பிடலாமா ? நான் கூறியது `இந்த ஜல நேத்தியை செய்து கொண்டு என்ன வேண்டுமாலும் சாப்பிடலாம் `என்று  கூறினேன்.

அவ்வளவு உயர்ந்த இந்த ஜல நேத்தியை செய்து வர , உப்பின் சக்தியால் நெற்றிக்கண்ணின் முன்னால் உள்ள ஏழு திரைகளும் உருகி ஞானக்கண் திறக்கும் . அவ்வளவு சிறப்பான ஜல நேத்தியை ஒளிப்படக் காட்சியைக் காணுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=lhqC5HZPmNc[/tube]

மேலும் இந்த ஐம்மலம்  நீக்குதல் எப்படி என்று அடுத்த ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 5 ல் பார்க்கலாம்.