மச்ச முனி மூலிகையகம்(பாகம் 6) விரண சஞ்சீவித் தைலம் ( பொடுகுத் தைலம் )
விரண சஞ்சீவினித் தைலம்
(வெளிப்பிரயோகத்திற்காக)
( பொடுகுத் தைலம் )
இரசம்
கந்தகம்
கந்தகம்
மயில்துத்தம்
வெண்குங்கிலியம்
கருஞ்சீரகம்
சேராங்கொட்டை
நீரடிமுத்து
புங்கன் வேர்ப்பட்டை
வெள்ளை கரிசாலைச் சாறு
வெட்டுக்காயப்பூண்டு
கிரந்திநாயகம்
சிறுகண்பீளை
நேத்திரப்பூண்டு விழுது
நேத்திரப்பூண்டை அத்தாற் பொருத்தி என்றும் சொல்வார்கள் .அதாவது அறுத்து மீண்டும் பொருத்தினால் பொருந்தும். எனவே இந்தப் பெயர் . இதை கண் கோளாறுகள் 96 க்கும் நல்லெண்ணெயில் போட்டு பத்து நாட்கள் சூரிய புடத்தில் வைத்து வடிகட்டி நேத்திரப் பூண்டுத் தைலம் தயாரித்து கண்களில் நேரடியாக பிரயோகம் செய்யலாம்.இந்த காணொளிக் காட்சியில் அத்தாற் பொருத்தியின் செயல் பாட்டைக் காணுங்கள்.
[tube]http://www.youtube.com/watch?v=KRXkz9aT5Gc [/tube]]
பொடுதலைச்சாறு
சிறுசெருப்படைச்சாறு.
குப்பைமேனிச்சாறு
வேப்பெண்ணெய்
தேங்காயெண்ணெய்
தீரும் நோய்கள்: அனைத்து வகைப் புண்களும் சர்க்கரை வியாதியால் ஏற்படும் புண்கள் ( GANGRENE ) முதல் அனைத்துப் புண்களும் ஆறும்.சொறி சிரங்கால் வரும் புண்களையும் ஆற்றும்.இதில் பாஷாணச் சரக்குகள் சேர்வதால் , இதை சிறு குழந்தகள் நடமாடும் இடத்தில் வைக்கக் கூடாது. நீங்களும் கவனமாகக் கையாளுங்கள் .மிகக் கடுமையான ஆறாத புண்கள் கூட ஆறும்.
பால்வினை நோய்களான ஆண்குறி மற்றும் பெண் குறிகளிலுண்டாகும் புண்களை மிக நன்றாக ஆற்றி அங்குள்ள கிருமிகளைக் கொல்வதில் இந்த விரண சஞ்சீவித் தைலம் அற்புதமானது .
பொடுகுக்கு இந்தத் தைலத்தை 15 மி லி எடுத்து 100 மி லி தேங்காயெண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற விட்டு சிகைக்காய் தேய்த்து குளித்து வர பொடுகு தீரும்.
இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி
திரு அமீர் சுல்தான்.
மின்னஞ்சல் :-
machamunimooligaiyagam@gmail.com
அலைபேசி எண் :- 9597239953
தங்களின் வலைப்பூவை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பின்னூட்டத்தில் தாங்கள் மற்றவர்க்கு கூறும் tips யை நானும் பின்பற்றி பலனடைந்துள்ளேன். நான் கட்டுமான துறையில் வேலை செய்து வருகிறேன். இரவு முழுக்க கண்விழித்து கடினமான வேலைகள் செய்ய வேண்டியிருப்பதால் பகலில் சரியாக சாப்பிட முடிவதில்லை. சிறிது சாப்பிட்டாலும் வயிறு உப்பி விடுகிறது. சாப்பிட்ட பிறகுதான் மலஜலம் கழிக்க முடிகிறது. என்னைப்போன்ற இரவு பணியாளர்கள் உடலை பாதுகாக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன.
நன்றி ஐயா.
அன்புள்ள திரு சரவணன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இது ஒரு பதிவாக பதில் எழுத வேண்டிய கேள்வி.விரைவில் வெளியிட முயற்சி செய்கிறோம்.
பரவாயில்லை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம்.
யோகா பிராணயமம் தியானத்தில் ஈடுபடும் புதியவர்களுக்கு உங்களது ஆலோசனை வேண்டும்.
நான் கடந்த சில மாதங்களாக யோகா முச்சு பயிற்சி செய்துவந்தேன். எனது உடல் சூட்டு உடம்பு. பயிற்சி சில நாட்கள் செய்வேன். பின் எதாவது தடை வரும். பின் சில நாட்கள் கழித்து மீண்டும் பயிற்சி செய்வேன்.
இதன் இடையே எனக்கு உஷ்ண சம்பந்தமான சில தொந்தரவுகள் உண்டாயின . வயிறு எரிச்சல் / நெஞ்செரிச்சல் வாய்வு தொந்தரவு. மலச்சிக்கல் முதலான தொந்தரவுகள் உண்டாயின.
நானும் அதற்காக மருத்துவம் பார்த்து வந்தேன். (முதலில் ஆங்கில மருத்துவம்/ பின், homeopathy . தங்களது தளத்தை பார்வை இட்டபின் தங்களிடமும். ஆலோசனை கேட்டு, அஷ்ட சூரணம் சாப்பிட்டேன்.
தற்போது என் உடல் தொந்தரவு தொடர்ததால் எங்கள் ஊரில் உள்ள பாரம்பரிய சித்தா வைத்தியரிடம் சென்று பார்த்த போது , அவர் என்னை பரிசோதித்து விட்டு , எனது பழக்க வழக்கங்களை கேட்டறிந்து. முதலில் உடல் உஷ்ணம் குறைய பிராணயமம் செய்வதை சில வாரங்கள் நிறுத்துமாறும்.
சில மூலிகைகளை கொடுத்து / மருந்து சாப்பிட்டு, உடலை நல்ல நிலைக்கு கொண்டுவந்த பிறகு யோகா பிராணயமம் பயிற்சி செய்து கொள்ளலாம் என்றார்.
{ நான் யோகா கற்று கொண்ட ( ஈஷா யோகா , ஜென் யோகா) இடங்களில் எல்லாம், பயிற்சியை தொடர்து செய்தால் உடல் நன்றாக இருக்கும் , ஆரோக்யமாக இருக்கும் என்று சொன்னதால் அதை செய்து வந்தேன். இப்பொது தான் எனது தவறு புரிகிறது. ..}
அகவே அய்யா யோகா பிராணயமம் தியானத்தில் ஈடுபடும் புதியவர்களுக்கு உங்களது ஆலோசனை உடல் சூடானால் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி ஐயா.
அன்புள்ள திரு அன்பு அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
நிறையப் பேர்கள் செய்யும் தவறே இதுதான். சித்த மருத்துவம் என்பது ஒரு வாழ்க்கை முறை . இந்த வாழ்க்கை முறையில் ஒரு அங்கமே யோகாவும்,அவை சார்ந்த நெறிமுறைகளும் .உடலை வேகப்படுத்தும் போது, மூச்சுக்கள் குறையும், உள்ளே செல்லும் காற்று குறையும் போது உடல் உஷ்ணம் அதிகரிக்கும் . அப்படி உடல் உஷ்ணம் அதிகரிப்பதை தவிர்க்க எண்ணெய்க் குளியல் , எனிமா , தவுத்தி , சீதலீ பிரணாயாமா , ஜல நேத்தி போன்ற பல விடயங்களை சேர்த்துத்தான் செய்து வர வேண்டும் . இவற்றில் யோகாவை மட்டும் செய்து வந்தால் இது போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரிடும்.தலைக்கு பொன்னாங்கண்ணித் தைலம் , கரிசலாங்கண்ணித் தைலம் போன்றவற்றைக் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால் , தலையில் ஏற்படும் சூட்டைத் தணித்துக் கொள்ள வேண்டும்.இன்னும் பல விடயங்களை அவ்வப்போது ஏற்படும் உடலியல் பிரச்சினைகளுக்கு ஏற்ப தீர்த்துக் கொள்ள வேண்டும்.அதாவது ஒரு முழு யோகியாக மாற வேண்டும் என்றால் ஒரு முழுமையான வைத்தியர் துணை இருந்தால் மட்டுமே , அல்லது ஒரு முழுமையான வைத்தியரால் மட்டுமே முடியும் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மிக்க நன்றி அய்யா
ஐயா வணக்கம்!
நான் கனகதுர்கா. தங்களிடம் தனிப்பட்ட முறையிலான சில கேள்விகள் கேட்க விழைகிறேன். தங்களின் மின்னஞ்சல் முகவரியையும் தொடர்புக்கான வழியையும் தெரியபடுத்த வேண்டுகிறேன்.
அன்புள்ள திரு கனக துர்க்கா அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
பொதுவாக நாம் காரணமின்றி அலைபேசி எண்ணைத் தருவதில்லை. நீங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு காரணத்தை விளக்கியதால் உங்களுக்கு அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது .தொடர்பு கொள்ளவும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் ஐயா எனது தாயாருக்கு கழுத்து எலும்பு தேய்மானம் உள்ளது இதற்கு ஏதும் மருந்து உள்ளதா? எங்கு கிடைக்கும்.
அன்புள்ள திரு இராதா அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
கழுத்தெலும்புத் தேய்வுக்கு தக்காளியை அறவே உணவில் தவிருங்கள்.மேலும் ஷீரபலாத் தைல மாத்திரை -101 முறை ஆவர்த்தித்தது , ஒவ்வோர் வேளை உணவிற்கு முன்னர் இரு மாத்திரைகள் வெந்நீருடன் அருந்தவும். மயனத் தைலம் (இம்ப்காப்ஸ்) தயாரிப்பை வாங்கி காலை மாலை இரு வேளையும் (அது தேன் மெழுகில் செய்யப்பட்டதால் சற்றுக் கெட்டியாக இருக்கும் ) இலேசாக சூடாக்கி அது இளகியிருக்கும் பருவத்தில் கழுத்தில் தடவி பிடித்துவிட்டு இளஞ்சூடான பச்சைத் தண்ணீர் கலக்காத வெந்நீர் (ஒரு வெந்நீர் என்பார்கள்)விட்டு வர குணம் கிடைக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்