ஒளியுடல்
வள்ளலாரின் திருவடி போற்றி இந்தப் பதிவை எழுதுகிறோம்.பலர் ஞானம் பெறுவதிலும் , கற்பங்கள் சாப்பிடுவதிலும் உங்கள் அனுபவங்களை விவரியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தப் பதிவு வெளியிடப்படுகிறது . எனவே இதை வேறு விதக் கண்ணோட்டத்துடன் (நீங்கள் இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டீர்களா ? என்று ) எம்மைப் பார்த்து கேள்விகள் கேட்க வேண்டாம் ?? எனக் கேட்டுக் கொள்கிறோம்.
நாம் உம்மிலும் மிகச் சிறியவனினிலும் மிகச் சிறியவனே???எம்மை இந்த அளவில் வைத்த இறைவனுக்கே நன்றிகள் அனைத்தும்.இந்த நிலையை அடைந்ததனால் மனம் மிக வெறுமை அடைந்து வருகிறது . இனி எவ்வளவு காலம் எம்மால் உங்களுடன் இந்த வலைத் தளத் தொடர்பிலும் , உலகத் தொடர்பிலும் இருக்க இயலும் என்பதும் தெரியவில்லை???
மச்ச முனிவரின் சித்த ஞான சபையின் உபதேசத்தை 21 வயதில் பெற்று , அதைக் கடைப்பிடித்து வந்ததன் மூலமும் , எம் குருநாதர் அருள்மிகு தவத்திரு பார்த்த சாரதி அவர்களின் அருளாசியாலும் சில விடயங்களை அடைந்ததன் மூலமும்,அந்த வழியைக் கடைப் பிடித்துக் கொண்டே பல கற்பங்களை உண்டதாலும் ,பல ஞானிகள் யோகிகள் , சித்தர்களின் நல்லாசியாலும் நமது உடல் பக்குவப்பட்டு வருகிறது.அதன் விளைவால் எமது உடல் ஒளி ஊடுருவும் தன்மை பெறுவதால் உடலின் நிழல் , தன் கருமையை குறைத்து வருகிறது.
அதாவது ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் செய்ய வேண்டும் என்பார்கள் . ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்தான் இருக்கிறது.அதாவது உயிர் உடலை விட்டுப் போகும்போதே , ஆகாயக் கூறு பழுதுபட்டுச் சென்று விடுகிடுறது.அடுத்து வாசித்துக் கொண்டிருக்கும் காற்று உடலைவிட்டு ஓடிவிடுகிறது .காற்றில்லாவிட்டால் நெருப்பேது .நெருப்பும் அணைந்தேவிடுகிறது. ஆக பழுதுள்ள மூன்று பூதங்களும் ஓடிவிட பழுதில்லாத இரண்டு பூதங்களும் ( மண்ணும் , நீரும் ) பிணமாகக் கிடக்கின்றன.
ஒளியை மறைக்கக் கூடியவை இந்த மண்ணும் நீரும்தான்.ஆகாயமோ , காற்றோ, நெருப்போ ஒளியை மறைப்பதில்லை.ஆகாயம்தான் இயற்கையி அதிகமாக இருந்து இந்த உலகம் முதலான அனைத்து பூதங்களையும் தாங்குகின்றது.அதே சமயத்தில் கனமில்லாததாகவும் , வலிமையானதாகவும் இருக்கின்றது.அந்த ஆகாயக் கூற்றை உடலில் அதிகரித்தால் உடல் ஒளி ஊடுருவக் கூடியதாகிறது.உடல் அழியாத தன்மையையும் அடைகிறது.
கீழுள்ள படங்களில் இருந்து இதனை தெளிவாக காணலாம்.எமது நிழல் எமது நண்பரின் நிழலைவிட கருமை குறைந்து காணப்படுவதைக் காணலாம்.
மேலும் கீழுள்ள காணொளிக் காட்சியையும் காணுங்கள்.
வள்ளலார் முழு ஒளியுடல் பெற்றதால் அவர் உடல் ஒளி ஊடுருவும் தன்மை பெற்றதால் அவருக்கு நிழல் விழுவதும் இல்லை. அவர் உடலின் மறு பக்கம் உள்ளவை தெரியும் என்பதால் அவர் உடல் முழுவதும் வெள்ளுடையை சுற்றிக் கொண்டு நடமாடினார்.அவர் நிலையை அடைய எத்தனை பிறவிகள் தேவைப்படுமோ ??? எத்தனை பிறவிகள் தவமியற்ற வேண்டுமோ ???யாமறியோம் பராபரமே???
மின்சார ஒளியில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் மேலே உள்ளது , சூரிய ஒளியில் எடுக்கப்பட்ட காட்சிகளை விரைவில் நம் தளத்தில் வெளியிடுகிறோம்.
ஐயா, இந்த கேள்வியை கேட்பதற்காக தயை கூர்ந்து மன்னிக்கவும். உங்களை தவிர யாரேனுக்கும் பதில் தெரியுமா என்பதில் எனக்கு நம்ம்பிக்கை இல்லை.
1. வள்ளலாரின் குரு யார்? தணிகைமணி வள்ளல் என்பவரா? அல்லது இறைவனே குருவாக வந்தானா?
2. வள்ளலார் ஒளி உடம்பு அடைந்தார் என சொல்கிறார்கள். வள்ளலாரும் அவர் பாடல்களில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவரை எரித்து விட்டதாகவும் சொல்கிறார்களே (மெய்வழி சாலை, சம காலத்து தண்டாயுத பாணி சுவாமி). எங்கே இருந்து இந்த கருத்து ஆரம்பித்தது?உண்மையில் நடந்தது என்ன? மச்சமுனி ஞான சபை என்ன சொல்கிறது?
3. தெய்வம் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
தங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி ஐயா.
அன்புள்ள திரு தனபால் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இந்த கேள்விக்கு பதில் சொல்லலாமா?வேண்டாமா?என்று பல நாள் யோசித்த பின்னரே இந்த கேள்விகளுக்கு பதில் சொல்கிறோம்.வள்ளலார் மட்டுமல்ல அனைத்து மக்களுக்குமே இறைவனே குருவாக வந்து ஞானத்தை மொழிகிறான்.ஒளி உடம்படைந்த ஒருவரின் உடலை அழிப்பதென்பது இயலாத காரியம் ஏனெனில் அந்த உடலில் நெருப்பால் எரிக்க ஏதும் இருக்காது.அந்த உடலில் மண் பூதமே இருக்காது.தெய்வம் என்ற வார்த்தைக்கு மட்டுமல்ல மேலும் பல வார்த்தைகளுக்கு பொருள் தெரிய ஏற்கெனவே எமது வலைப்பூவில் வெளியிட்டுள்ள கீழ்க்கண்ட பதிவைப் பாருங்கள்.
http://machamuni.blogspot.in/2010/12/11.html
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஆன்மீக அன்பர்களே,
ஞானம் பெற இந்த வலை தளத்தை பார்க்கவும். அனைவரும் வள்ளல் பெருமான் போல் ஒளி உடல் பெறுவதற்கு, ஞானம் பெறுவதற்கு இந்த தாளம் வழி காட்டும்.
வாழ்க வள்ளல் பெருமானார் புகழ். ஓங்குக எங்கும் சன்மார்கம்.
நன்றி
வள்ளல் அடிமை,
ராஜேஷ் கண்ணா.
மன்னிக்கவும் தளத்தை பதிவு செய்ய மறந்து விட்டேன். http://www.vallalyaar.com
ஐயா வணக்கம்.
உங்க கையில் அணிந்து இருக்கும் பிரசெலேட் பற்றி தெரிவிக்கவும்???
நன்றி,
அன்புள்ள திரு கலியுக ராவணன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
அது ஜொதி விருட்ச மணியாலான கையணிமாலை ( பிரசெலேட் ) .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
தங்களுக்கு இந்த நிலை அடைவதற்கு தங்கள் விடாமுயற்சி மற்றும் குரு ஆசீர்வாதம் தான் காரணமாக இருக்கும். தங்களின் போன்றொரின் தொடர்புக்கு உண்மையில் நாங்கள் தான் புண்ணியம் செய்துள்ளொம். மேலும் தாங்கள் உயர்ந்த நிலை அடைந்தாலும் எங்களுக்கு ஆன்மிக வழிகாட்டியாக விளங்குமாறு தங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம்.
அன்புள்ள திரு ஹேமந்த் குமார் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இறையாற்றல் எப்படி எண்ணி உள்ளதோ,வழி நடத்துகிறதோ அப்படியே ஆகட்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா எத்தனை பிறவிகள் என்பது பற்றி கவலை இல்லை.வள்ளலார் பெற்ற பேறு அவரின் சூட்சும வழி காட்டல் பெற்றால் இப்பிறவியிலேயே சித்தி அடைந்து விடலாம். நம் ஆன்மாவுக்கு அந்த வல்லமை உண்டு.இறைவனின் ஒரு பொறியே நாம். எங்களை போன்ற மனிதர்களுக்கு கிட்டாத ஒரு பேறு உங்களுக்கு கிட்டியுள்ளது. இறைவன் மற்றும் அருளாளர்கள் தொடர்பு உங்களுக்கு உள்ளதால் நீங்கள் ஒளியுடல் விரைவில் பெற்றுவிடுவீர்கள் என நினைக்கிறேன்.ஏறாத நிலைக்கு ஏற்றிவைத்து இறைவன் அருள்புரிவானாக. நன்றி.
.
அன்புள்ள திரு மணவாளன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இறையருள் கூட்டுவிக்கட்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி!
நான் வீட்டிலேயே சொந்த உபயோகத்திற்காக, தேன் நெல்லிக்காய் செய்யும் முயற்சியில் உள்ளேன். நெல்லிக்காயை ஆவியில் வேக வைத்தோ/பச்சையாகவோ சிறு துண்டுகளாக நறுக்கி, முதலில் ஒரு பாத்திரத்தில் தேனில் ஊற வைத்து, நெல்லிச்சாறு இறங்கி தேன் தண்ணீர் போலாகும்போது, வேறு ஒரு பாத்திரத்தில் புது தேன் ஊற்றி மறுபடி ஊற வைத்தேன். சில நாளில் நெல்லிகாயிலிருந்து மிச்ச மீதி நீரும் வெளியேற, மறுபடி தேன் மாற்றினேன். இந்த முறையில், ஒரு கிலோ நெல்லிக்காய்க்கு, மூன்று லிட்டர் தேன் செலவாகிறது.
மேலும், நெல்லிக்காயிலிருந்து வடிந்த நீர், தேனுடன் சேரும்போது, விரைவில் புளித்து, கள் வாடை வீசுகிறது. இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து குடித்தால், லேசான போதை உணர முடிகிறது. இது உடல் நலத்திற்கு கேடானதா? மேலும், இவாறு கிடைக்கும் சாறு அளவும், தேனிற்கான செலவும் அதிகமாக இருப்பதால், நிறைய நெல்லிகாயை இந்த முறையில் பதப்படுத்த முடிவதில்லை.
செல்வு குறைவான, தேன் அதிகம் செல்வாகாத தேன் நெல்லிகாய் தயாரிக்கும் முறை பற்றி தயவு செய்து தெரிவியுங்கள்.
அன்புடன்,
சி.சீனிவாசன்.
அன்புள்ள திரு சி.சீனிவாசன். அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
தேன் நெல்லிக்காய் செய்ய நெல்லிக்காயை ஆவியில் வேக வைத்தோ/பச்சையாகவோ சிறு துண்டுகளாக நறுக்கி, முதலில் ஈரம் போக நிழற்காய்ச்சலாய் காய வைத்த பின் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தேனில் ஊற வைத்து, தேன் இறங்கி உள்ளே செல்லும் போது , பாத்திரத்தின் வாயை ஒரு துணியை கட்டி வெயிலில் தினமும் வைத்து எடுக்க தண்ணீர் சத்தெல்லாம் போய் அழகான கெட்டியான தேன் நெல்லிக்காய் கிடைக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மிக்க நன்றி சாமிஜி.
நெல்லிக்காயை நன்றாக வேக வைத்து, சிறு துண்டுகளாக்கி, நிழல் காய்ச்சலாக ஒரு நாளும், ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மீது ஒரு தட்டால் மூடி, வெய்யிலில் ஒரு நாளும் வைக்க, அதன் நீர் முக்கால்வாசி போய்விட்டது. (சூரிய ஒளி நேரடியாக படவில்லை).
நெல்லிக்காய் வத்தல் பதத்தில் வந்துவிட்டது. இதை தேனில் ஊற வைத்துள்ளேன்.
நெல்லிக்காயிலிருந்து நீர் வரவில்லை.
ஆகவே வெய்யில் வைக்க வேண்டாமென்று நினைக்கிறேன். இது சரிதான சாமிஜி?
அன்புடன்,
சி.சீனிவாசன்
அன்புள்ள திரு சி.சீனிவாசன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி
நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து வெய்யில் வைக்க கெட்டுப் போகாமல் நெடுநாள் இருக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி,
தாங்கள் அறிவுறுத்திய முறையில் தேன் நெல்லிக்காய் செய்ததில் தேன் சிறிதும் வீணாகவில்லை.
மிக்க நன்றி.
அன்புடன்,
சி.சீனிவாசன்.
அன்புள்ள திரு சி.சீனிவாசன். அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி ,
மிக நல்லது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள ஐயா வணக்கம் உங்களின் தன்னலமில்லாத சேவை என்றும் தொடர மிகவும் விரும்பிக்கிறோம்
இப்படிக்கு என்றும் அன்புடன்
ஜெ .செந்தில்குமார்
லண்டன்
அன்புள்ள திரு ஜெ .செந்தில்குமார் லண்டன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் அய்யா எனது மகளுக்கு 5 வயதாகிறது . அவளுக்கு அடிகடி சளி பிடித்து கொள்கிறது. அபோது தொண்டை இல் டான்சிலிடிஸ் வீங்கி விடுகிறது. அவள் மிகவும் குறைவாகத்தான் சாப்பிடுகிறாள். மேலும் வயிறு வலிகிறது என்கிறாள். மலம் கெட்டியாக போகிறாள். தற்போது “tonsilit ” – homeopathy tablet தருகிறோம். இந்த தொந்தரவு குறைய ஒரு வழி சொல்லுங்கள் அய்யா ..
தொந்தரவுக்கு மன்னிக்கவும், நன்றி அய்யா…
அன்புள்ள திரு அன்பு அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
ஹோமியோபதி மருந்து கொடுக்கலாம்.இட்டிலி தோசை போன்ற புளிக்க வைத்த பலகாரங்களையும் , பேக்கரிக் கடை பொருட்களையும் தவிருங்கள் .வீட்டில் அறவே தக்காளியை தவிருங்கள். குழந்தைக்கு மாதமிரு முறை மலையப்பசாமி வைத்தியசாலை பால சஞ்சீவி மாத்திரை – 1 மாத்திரை ,கஸ்தூரி மாத்திரை – 1 மாத்திரை , கோரோசனை மாத்திரை – 1 மாத்திரை கொடுத்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.தினமும் ஏலாதிச் சூரணம் சப்பிச் சாப்பிட கொடுத்து வாருங்கள் , நலம் கிடைக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
//குழந்தைக்கு மாதமிரு முறை மலையப்பசாமி வைத்தியசாலை பால சஞ்சீவி மாத்திரை – 1 மாத்திரை ,கஸ்தூரி மாத்திரை – 1 மாத்திரை , கோரோசனை மாத்திரை – 1 மாத்திரை கொடுத்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் //
அய்யா
இந்த மாத்திரை வாங்க ஆர்டர் கொடுத்து விட்டேன்.
இந்த மூன்று மாத்திரைகளையும் ஒரே நாள் தரவேண்டுமா ? இடைவெளி விட்டு தரவண்டுமா என்று சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்…ஏலாதிச் சூரணம் காலை தரவேண்டுமா அல்லது மாலை தரவேண்டுமா என்று கூறினால் நன்றாக இருக்கும்…
மிகவும் நன்றி அய்யா !!!
அன்புள்ள திரு அன்பு அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
மேலே குறிப்பிட்டுள்ள மருந்துகளின் பயன்பாடுகள் அந்த மருந்துகளின் உடனேயே வைக்கப்பட்டுள்ள சீட்டுக்களில் தரப்பட்டிருக்கும்.கீழ்க்கண்ட இணைப்புக்களையும் பாருங்கள்.
http://machamuni.blogspot.in/2011/08/41.html
http://machamuni.blogspot.in/2011/07/39.html
ஏலாதிச் சூரணத்தை ஒரு உப்புக் கரண்டியில் பாதி அளவு எடுத்து இரு வேளைகள் (காலை, மாலை) சுவைத்துச் சாப்பிடச் சொல்லுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா காணொளியில் தங்கள் நண்பர் சுவருக்கு அண்மையாகவும் தாங்கள் சற்று தூரமாகவும் இருப்பதால் நிழல் கருமை குறைந்து உள்ளதோ? அத்தோடு ஒளி உடல் கிடைப்பதற்கும் இறை உணர்தலான மானுட பிறவியின் நோக்கிற்குமான தொடர்பை நேரமிருந்தால் தயை கூர்ந்து விளக்கவும் ?
அன்புள்ள திரு கந்தன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இப்படிக் கேட்பீர்கள் என்பதனால்தான் அருகருகே கையை வைத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறோம். இரண்டாவது கேள்விக்கான பதில் மிகப்பெரியது அதற்கான பதிலை எழுதி அதிலும் இது போன்ற சந்தேகங்கள் எழாமல் இருக்குமானால் , தனியே இன்னும் இது பற்றி பதிவு வெளியிட இறை அருட்கருணையால் எண்ணம் எழுந்தால் பார்க்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
அருமையான தகவல்., பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
இப்படிக்கு
உண்மையுள்ள
ம. சரவணன்
அன்புள்ள திரு ம சரவணன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
எம் ஆசான் சித்தரையா
வணக்கம் ஐயா.சிறிது காலம் இணைப்பில் வராமலிருந்தமைக்கு வருந்துகிறோம்.விரைவில் தாங்களை நேரில் காணும் இறையனுமதிக்காய் இறைஞ்சுகிறோம்.மச்ச மாமுனியின் வழி வந்த சித்தரின் ,தற்போதைய ஒளியுடல் பதிவு, தங்களின் உலக தொடர்பு குறித்த சூசக அறிவிப்பாகவும் உணர முடிகிறது.தங்களின் வழிகாட்டுதலுக்காய் காத்திருக்கும் மாணாக்கருள் யாம் கடைக்கோடியிலாவது இடம் பெறவேண்டுமென்பதே எம் அவா.
தங்கள் உண்மையுள்ள
மு.பைசல் கான்
அன்புள்ள திரு மு.பைசல் கான் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இறையாற்றல் எப்படி எண்ணி உள்ளதோ,வழி நடத்துகிறதோ அப்படியே ஆகட்டும்.நாம் எல்லோருமே இறையாற்றல் முன்னர் பொம்மைகள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
“காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.’
அய்யா … இதனை உட்கொள்ளும் வழிமுறை குறித்து தயவு செய்து விளக்குங்கள் .
நன்றியுடன்
கோபால்
அன்புள்ள திரு கோபால் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
எமது வலைத் தளத்தில் ஏற்கெனவே வெளியாகியுள்ள கீழ்க்கண்ட பதிவுகளைப் பாருங்கள்.புரியும்.
http://machamuni.blogspot.in/2011/03/6-4.html
http://machamuni.blogspot.in/2011/02/6-2.html
http://machamuni.blogspot.in/2011/01/9.html
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஆசான் அவர்களுக்கு
வணக்கம்.எம் இரு பின்னூட்டங்களும் பதியப்பெற வில்லை.ஐயா யாம் ஏதாவது தவறிழைத்து விட்டேனா.எம்மை மன்னித்துக் கொள்ள வேண்டுகிறேன்.
தங்கள் பேரன்பு மட்டும் வேண்டியவனாய்
எளியவன் மு.பைசல் கான்
அன்புள்ள திரு மு.பைசல் கான் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
எம்மால் 10 நாட்களுக்கு மேல் எம்மால் கணிணியின் அருகிலேயே உட்கார இயலவில்லை . எனவேதான் பதிலளிக்க தாமதம்.
தவறாக எண்ண வேண்டாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி,
சமையலில் பயன்படும் உப்பு,புளி,மிளகாய் மூன்றையும் பதப்படுத்தி பயன்படுத்துவது பற்றி ‘உயர் ஞான தீபம்’ இதழில் வந்த பகுதி இது.
1.உப்பு: சாதாரண கல்லுப்பை, ஒரு கிலோவுக்கு ஐந்து பிடி கருவேப்பிலை சேர்த்து மண் சட்டியில் உப்பு வெடிக்கும் வரை வறுத்து, புடைத்து பயன்படுத்த வேண்டும்.
2.புளி: ” காட்டுப்புலி கண்டவுடன் கொல்லும். வீட்டுப்புளி விரட்டி கொல்லும்” என்பது பழமொழி.
ஒரு கிலோ புளிக்கு 50 மி.லி. விளக்கெண்ணை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கையில் விளக்கெண்ணை தேய்த்துக்கொண்டு புளி முழுவதும் படும்படி நன்கு கலக்க வேண்டும். சிறு வடை போல் தட்டி, இதை வெய்யிலில் குறைந்தது மூன்று மணி நேரம் காய வைத்து எடுக்க வேண்டும். பின்ன்னர் சிறு உருண்டைகளாக்கி ஒரு இரும்புக்கம்பியில் கோர்த்து நெருப்பில் சுட்டு எடுக்க வேண்டும். இவ்வாறு சுட்ட புளி உடலைக் காக்கும் மருந்தாக பயன்படுகிறது,
3.மிளகாய்: அரிசி கழுவிய தண்ணீரில் மிளகாயை குறைந்தது மூன்று மணி நேரம் ஊற வைத்து, வெய்யிலில் காயவைத்து எடுக்க வேண்டும். ஒரு இரும்புக் கம்பியில் கோர்த்து நெருப்பில் சுட்டு எடுக்க வேண்டும். இதை தூளாக்கி அல்லது அப்படியே பயன்படுத்தலாம்.
மேற்கூறிய முறைகளில் பதப்படுத்தப்பட்ட இம்மூன்று பொருட்களும் உடலைக் காக்கும் அரு மருந்தாகும்.
அன்புள்ள திரு சி.சீனிவாசன். அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி ,
மிக நல்லது.மேற்கண்ட வேலைகளுக்குப் பதில் தீங்கற்ற மாற்றுப் பொருட்களை உபயோகிக்கலாமே.
1)கல்லுப்புக்குப் பதில் இந்துப்பை உபயோகிக்கலாம்.இதனால் கல்லுப்பில் உள்ள அயோடின் ஆபத்தும் சேர்ந்து நீங்கிவிடும்.
2) புளிக்குப் பதில் குடம்புளி உபயோகிக்கலாமே???உடலின் துர் நீரையும் நீக்கும் .அத்துடன் பருத்த உடலில் உள்ள துர் நீரையும் நீக்கி உஅடலையும் மெலிய வைக்கும்.
3)மிளகாய் என்பது மிளகு உப்யோகித்துக் கொண்டிருக்கும் நம்மை ஏமாற்றி அதற்கு பதில் வெளி நாட்டினர் கொண்டு வந்த சிலி பெப்பர் என்றழைக்கப்பட்ட (இதுவே சில்லியானது) மிளகாயை நம் தலையில் கட்டினர் . நம்மிடம் உள்ள மிளகை அவர்கள் கைப்பற்றினர். இப்போது நாம் செய்ய வேண்டியது மிளகாயைவிட்டு விட்டு மிளகை நம் உணவில் உபயோகிப்பதுவே!!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
இனியவரே,
வணக்கம். உங்கள் புகைப்படங்களில் இருந்து ஒளியுடல் பெறுதல் சாத்தியம் என உறுதியாகிறது. என்ன கற்பங்கள் சாப்பிட வேண்டும்? எங்கு கிடைக்கும்.?
வேறு என்ன தொடர் பயிற்சி செய்ய வேண்டும்? சற்று விவரிக்கவும். நான் பயிற்சி செய்ய விரும்புகிறேன்.
நன்றி
அன்புள்ள திரு எம் குகன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
அவை எளிதானவை அல்ல .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்