அக்கு பஞ்சர் அறிவோமா ? பாகம் ( 13 )நாடிப் பரிசோதனை பாகம் ( 1 )

naadi

சித்த மருத்துவத்தில் காலையில் வாதம் ( வாயுக்கள் இயக்கம்,காற்று , வளி , வாசி ) கடும்பகல் பித்தம் ( தேயு , நெருப்பு அல்லது சூடு )மாலையில் சிலேற்பனம் ( நீர் , அப்பு , கபம் அல்லது குளிர்ச்சி) என்றுதான் நாடிகள் இயங்க வேண்டும்.இவை முறை பிறழ்ந்து இயங்கினாலோ அதிகமாகவோ , அல்லது குறைவாகவோ இயங்கினால்.அது நோயாகும்.

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்

வளி முதலாவெண்ணிய மூன்று.

ஆனால் அக்கு பஞ்சரில் ஐந்து பஞ்ச பூதங்களைக் கொண்டு , பன்னிரண்டு உறுப்புக்களைப் பிரித்து அவைகளின் நாடிகளைக் கொண்டு நோயறிதல் செய்கின்றனர். 3 நாடிகள் மேலோட்டமாகவும், அழுத்திப் பார்த்து 3 நாடிகளும் ஆக 6 நாடிகள்  ஒரு கைக்கு வீதம் இரண்டு கைக்கு 12 நாடிகள் பார்க்கின்றனர்.கீழே உள்ள படத்தில் இதை தெளிவாக கொடுத்துள்ளோம்.

nadip parisothanai 2

nadip parisothanai 1

முதலில் நம் பூமி நெருப்பாக இருந்தது . பின் குளிர்ந்து நிலமானது , அதிலிருந்து வாயுக்கள் (உலோகங்கள் ) உற்பத்தி ஆயின, வாயுக்கள் மழை பொழிந்து நீர் உற்பத்தி ஆனது . நீர் மரத்தை உற்பத்தி செய்தது . மரம் மீண்டும் நெருப்பை உற்பத்தி செய்தது.இது உற்பத்திச் சுற்று.

creative destructive cycle

five  elements description

five element description nadip parisothanai 3

destructive cycle 1

 

நெருப்பு காற்றை உண்ணும்( நெருப்பு எரியும் போது காற்றிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும்) , காற்று மரத்தை சாய்க்கும் , அல்லது இந்த பூதத்தை  (காற்றை )உலோகம் என்றும் சொல்வார்கள் .அப்படி எடுத்துக் கொண்டால் நெருப்பு உலோகத்தை உருக்கும் , உலோகம் மரத்தை பிளக்கும் ( கோடரி ) , மரம் தன் வேர்களால் நிலத்தைப் பிளந்து நிலத்தை உறிஞ்சி வளரும் , நிலம் நீரை உறிஞ்சும் ,  நீர்  நெருப்பை அணைக்கும்.இது அழிக்கும் சுற்று.

தாய் தன் மகனை வளர்க்கும் , ஆனால் தாத்தா தன் மகனைக் காப்பாற்ற பேரனை அழிக்கும்.அதாவது ஆக்கும் சுற்றில் ஒவ்வோர் பூதமும் இன்னோர் பூதத்தை உற்பத்தி செய்வதால் அதை அம்மா மகன் சட்டம் ( MOTHER SON LAW ) என்றும் , ஒவ்வோர் பூதமும் அது உற்பத்தி செய்த பூதம் உற்பத்தி செய்வதை அழிப்பதன் மூலம் தன் மகனைக் காப்பாற்றும் வேலை நடப்பதால் இதை தாத்தா பேரன் சட்டம் ( GRAND FATHER GRAND SON LAW )என்றும் அழைக்கிறார்கள்.

இதே போல உறுப்புக்களின் உச்ச கட்ட சக்தி எவ்வெப்போது அதிகமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் அந்த உறுப்புக்கள் தம்மிடம் ஏற்பட்டுள்ள குறைபாட்டை போக்க முயற்சிக்கும்.இந்த முயற்சியில் ஏற்படும் போராட்டமே அந்தந்த உறுப்புக்களில் நோயாக வெளிப்படுகிறது.

இந்த அக்கு பஞ்சரில் உள்ள தத்துவங்கள் அனைத்தும் சித்த மருத்துவ விடயங்களை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன.சித்த மருத்துவத்தில் காலையில் வாதம் ( வாத நாடி , வாயுக்கள் இயக்கம்,காற்று , வளி , வாசி ) அதாவது காற்று இயங்குகிறது.அதாவது காலையில் வாத நாடி இயங்கும் நேரத்தில் காற்று உறுப்புக்களான நுரையீரலும் (காலை 3 மணி முதல் 5 மணி வரை இதுவே பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகிறது,மேலும் நுரையீரல் இயங்கும் இந்த நேரமே மூச்சுப் பயிற்சியான பிரணாயாமம் செய்ய ஏற்றது ) , பெருங்குடல் (  காலை 5 மணி முதல் 7 மணி வரை) சக்தியோட்டத்தில் உச்சம் பெறுகின்றது.

human clock

மதிய நேரம் சித்த மருத்துவத்தில் பித்த நாடி ( தேயு , நெருப்பு அல்லது சூடு ) இயங்கும் நேரம் . இந்த பித்த நாடி நேரத்தில் நெருப்பு உறுப்பான இதயம்  மதியம் 11 மணி முதல் 1 மணி வரை சக்தியோட்டத்தில் உச்சம் பெறுகின்றது. இந்த வேளையில்தான் அதிமான இதயத் தாக்கு வரும்.ஏனெனில் அந்த நேரம் இதயம் தன்னிடம் உள்ள நோயை சரி செய்ய முயற்சி எடுக்கும். எனவே இதய நோயாளிகள் இந்த நேரத்தில் இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காமல் இருந்தால் நலம் . அடுத்து   நெருப்பு உறுப்பான சிறு குடல்  மதியம் 1 மணி முதல் 3 மணி வரை சக்தியோட்டத்தில் உச்சம் பெறுகின்றது.இந்த நேரத்தில் ஒருவருக்கு தூக்கம் அதிகம் வருகிறது என்றால் சிறுகுடல் சக்தி நாளம் சக்திக் குறைவில் உள்ளதென்று பொருள்.

மாலை நேரம் சித்த மருத்துவத்தில் சிலேத்தும நாடி ( நீர் , அப்பு , கபம் அல்லது குளிர்ச்சி) ஓடும் . இந்த சிலேத்தும நாடி நேரத்தில் நீர் உறுப்புக்களான சிறு நீர்ப்பை  மாலை 3 மணி முதல் 5 மணி வரையும்  ,  மாலை 5 மணி முதல் 7 மணி வரை சிறுநீரகமும் சக்தியோட்டத்தில் உச்சம் பெறுகின்றது. அக்கு பஞ்சர் தத்துவமும் சித்த மருத்துவ தத்துவமும் ஒன்றே எனபது  புரிகிறதா??? இங்கிருந்து சீனாவிற்குச் சென்ற  நமது தத்துவங்கள் அவர்களால் போற்றிப் பாதுகாத்து வைக்கப்படுகிறது.ஆனால் நம்மால் நமது சித்த மருத்துவம் மதிக்கவாவது படுகிறதா ??? இதற்கு அரசும் ஒரு காரணம் ?? நம் மக்களும் காரணம் ??? இன்றே விழிப்புணர்வு பெற்று நம் நாட்டு மருத்துவத்தை பயன்படுத்தி பயனுறுங்கள்.

பதிவு பெரியதாய்ப் போவதால் அக்கு பஞ்சர் அறிவோமா ? பாகம் ( 13 )நாடிப் பரிசோதனை பாகம் ( 2 ) சந்திக்கலாம்.