மச்சமுனி மூலிகையகம் (பாகம் 16 ) மச்சமுனி மூலிகை கூந்தல் தைலம்

மச்சமுனி மூலிகை கூந்தல் தைலம்

hair

நம் முன்னோர்கள் கண்ணுக்கு அதிக முக்கியத்துவத்தை எப்போதும் கொடுத்து வந்ததுள்ளார்கள் . கண்ணோ பொன்னோ என்பார்கள் .ஐம்பொறிகளில் கண்ணுக்குள்ள முக்கியத்துவம் அதிகம்.காது குத்துவதும் கண்ணுக்கு சக்தியளிக்கவேயாகும்.காதில் தோடணிய குத்தும் இடம் கண்ணுக்கு சிகிச்சை அளிக்க என்றுள்ள  புள்ளியாகும்.

auriculo theraphy 1auriculo theraphy  2auriculo theraphy  3கரிசலாங்கண்ணிக்கும் , பொன்னாங்கண்ணிக்கும்  ,வாங்கி உபயோகிக்க சோழர்கள்  ஆட்சிக்காலத்தில் கண்ணிக்காணம் என்று  வரி விதித்து உள்ளார்கள் . அதையும் நம் தென்னாட்டார் வரியாக செலுத்திய பின்னர் உபயோகித்து உள்ளார்கள்.நமக்கு தற்போது அவை வரியில்லாமல் இலவசமாக நமக்குக் கிடைத்தாலும் நாம் உபயோகிக்க தயாராக இல்லை.

இது குறித்து ஏற்கெனவே நாம் எழுதியுள்ள பதிவுகளையும் பாருங்கள் .

http://machamuni.blogspot.in/2010/09/blog-post_06.html

http://machamuni.blogspot.in/2010/10/blog-post_17.html

கண்ணுக்கு கரிசலாங்கண்ணி , பொன்னாங்கண்ணி ,இவைகளின் சாறுகள் சேர்ந்த எண்ணெய்களை தலையில் தேய்த்து வருவதால் தலை சூடு குறைவதால், விளைவாக  கண்ணில் சூடு குறைவதால்   கண் புகைச்சலில்லாமல்  , கண்ணெரிச்சலில்லாமல் ,  கண்ணில் சூடு குறைவதால்  கண்களின் செயல்பாடு நன்றாக இருக்கும்.கண்ணிளுள்ள குறைபாடுகள் களையப்படுகின்றன . கிட்டப் பார்வை , தூரப்பார்வை போன்ற குறைபாடுகள் களையப்படுகின்றன. கண்களுக்கு தேவையான அத்தியாவசிய உயிச் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதன் குளிர்ச்சி வெட்டைச்  சூட்டையும் தணிக்கும். இதனால் கைகால் வலிகளும்  தணிக்கப்படுகிறது.

கரிசலாங்கண்ணி(கரசனாங்கண்ணி )

குரற்கம்மல் காமாலை குட்டமோடு சோபை

யுரற்பாண்டு பன்னோ பொழியு – நிரற்சொன்ன

மெய்யாந் தகரையொத்த மீளி யண்ணு நற்புலத்துக்

கையாந் தகரையொத்தக் கால்

( பதார்த்த குண விளக்கம் )

குணம்:-கையாந்தகரையால் தொண்டைக்கம்மல் , காமாலை , குட்டம் , வீக்கம், பாண்டு , தந்த ரோகம் இவை போம் . தேகத்திற்கு  பொற்சாயலும்  , யாளிககுச் சமமான பலம் உண்டாகும் என்க .

செய்கை:-கையாந்தகரை பித்தகாரி, மலகாரி

உபயோகிக்கும் முறை:- கையாந்தகரை என்ற கரிசனாங் கண்ணி இலையை சிறிது மிளகுடன் கூட்டியரைத்து தினம் இரு வேளை சுண்டைக்காய் பிரமாணம் சாப்பிட்டு வருக.

அல்லது அவ்வுருண்டைகளை ஒரு கோப்பையில் போட்டு மூழ்க தென் விட்டு தினம் ரவியில் (சூரிய ஒளியில் ) வைத்துக் கொண்டு வேண்டும் போது வேளைக்கு ஒரு உருண்டை வீதம் சாப்பிட்டு வருக!இவற்றால் மஞ்சள் காமாலை , பாண்டு ( இரத்தக் குறைவால் உடல் வெளுத்து ஈரல் வீக்கமடைந்து காணும் நிலை ) , சோபை  (உடலில் தேவையில்லாது ஏற்படும் வீக்கத்தால் ஏற்படும் தோல் பளபளப்பு ) தீரும் .

கரிசனாங் கண்ணி இலையை சிறிது மிளகுடன் கூட்டியரைத்து ஒரு சுண்டைக்காய்  பிரமாணம் உள்ள கற்கத்தை மோரில் கலக்கிச் சாப்பிடலாம் .

அல்லது கரிசனாங் கண்ணி இலையை அரைத்து பிழிந்தெடுத்த சாற்றில்  ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி விதம் மோரில்லாகிலும் பாலிலாகிலும் கலக்கிச் சாப்பிடலாம் . இதனால் முற்கூறப்பட்ட ரோகங்கள் தீரும் இதனை  தைலத்தில் கூட்டிச் செய்வதுமுண்டு .

கரிசனாங் கண்ணித் தைலம்

கரிசனாங் கண்ணிச்சாறு ,  நல்லெண்ணெய் வகைக்குபடிஒன்று ,குமரிச்சாறு  ( சோற்றுக் கற்றாளைச்சாறு ) நெல்லிக்காய்ச் சாறு வகைக்குப்படி காலாக இத்திரவங்களை தைல பாத்திரத்தில் விட்டு அதில் கஸ்தூரி மஞ்சள் ,  ஜாதிக்காய் வகைக்கு பலம் ( 35  கிராம் ) ஒன்றாக தட்டைஅம்மியில் இட்டுபசுவின் பால் விட்டு வெண்ணெய் போல்அரைத்துப் போட்டு கலக்கி பதமுற காய்ச்சி வடித்து சீசாவில் அடைத்து பத்து – பதினைந்து தினத்துக்கு கேழ்வரகு அல்லது நெல் முதலிய தானியத்துள் வைத்தெடுத்து ( இதை தானிய புடம் என்பார்கள் ,இதைப் போலவே கோயில் விக்கிரகங்களையும் சக்தி ஏற்ற தானியத்துள் வைத்தெடுப்பார்கள் ) வாரத்திற்கு ஒரு முறை ஸ்நானம் செய்து வர கண்நோய்  , தலைவலி ,  செவி நோய் (காது நோய்கள் )  பித்த கிறு கிறுப்பு , தேக வெப்பு , பீனிசம் ,  முதலிய  ரோகங்கள் போகும் .

மேற்படி கரிசனாங் கண்ணித் தைலத்தைவிடசிறப்பானது மச்சமுனி மூலிகை கூந்தல் தைலம் .

மச்சமுனி மூலிகை கூந்தல் தைலத்தை தலைக்கு தேய்ப்பதன் விளைவாக தலை முடியின் கீழாக உள்ள  மயிர்க்கால்களில் உள்ள மயிர்ப் பிடிமானமான பொருட்கள் ( மெழுகு போன்ற பொருள் , மற்றும் எண்ணெய்ப் பொருட்கள் ) காயாமல் வைத்திருப்பதால் , முடிகள் நல்ல பிடிமானமாக இருப்பதால்  முடி உதிர்தல் குறைந்து முடி செழிப்பாக வளர்கிறது.

_mini

மச்சமுனி மூலிகை கூந்தல் தைலத்தில் வெள்ளைக் கரிசலாங்கண்ணிச் சாறு , பொற்றலைக்கையான் என்ற மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு, சிவப்பு பொன்னாங்கண்ணிச் சாறு , பச்சைப் பொன்னாங்கண்ணிச் சாறு , ஆவாரம்பூச் சாறு , செம்பருத்திச் சாறு , சோற்றுக்கற்றாழை,அவுரி, நெல்லி, வெந்தயம், பசும்பால்,கடுக்காய், தான்றிக்காய், கறிவேப்பிலை, கீழ்க்காய்நெல்லிச் சாறு (கீழாநெல்லி என்றும் கீவாநெல்லி என்றும் அழைக்கப்படுகிறது ) போன்றவைகளும் இன்னும் பல மூலிகைச் சாறுகளும் கலந்து மணல் பருவத்தில் காய்ச்சி எடுக்கப்படுகிறது .கீழாநெல்லி குறித்து ஏற்கெனவே நாம் எழுதியுள்ள பதிவையும் பாருங்கள் .

ஒரு மஹா மூலிகை ( கீழாநெல்லி )

சோற்றுக்கற்றாழை குறித்து ஏற்கெனவே நாம் எழுதியுள்ள பதிவையும் பாருங்கள் .

https://machamuni.com/?p=2314

https://machamuni.com/?p=2359

இதனால் அதீத உஷ்ணத்தினால் உண்டாகும் மஞ்சள் காமாலையை வரவிடாமல் காக்கப்படுவதோடு , சீரண சக்தியும் நல்ல நிலையில் காக்கப்படுவதோடு மேக நோய்களும் ( மது மேகம் , கரு மேகம் , வெண் மேகம் , செம்மேகம் போன்ற வியாதிகளும் , தோல் வியாதிகளும் வராமல்  காக்கிறது ) உஷ்ணரீதியான நோய்களும் வராமல் காக்கப்படுகிற து .

இந்த மச்சமுனி மூலிகை கூந்தல் தைலத்துக்கு  நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953