கொரோனா வைரஸ் தடுப்பு முறைகளும் குணப்படுத்துதலும் பாகம் 1
கொரோனா வைரஸ் தடுப்பு முறைகளும் குணப்படுத்துதலும்
நமது வலைத்தளத்தில் பல நாட்களாக பதிவு எதையும் வெளியிடவில்லை. எனது அமைதியான கால கட்டம் முப்பு குரு ஆராய்ச்சியில் சென்றது.. முப்பு குரு ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற பின் மீண்டும் கட்டுரைகள் எழுதலாம் என்று இருந்தேன்.ஆனால் அது தற்போது கொரோனா வைரஸ் பற்றி கட்டுரை எழுதவும் தடுப்பு முறைகளும் குணப்படுத்துதலும் பற்றி எழுதவும் மக்களை அச்சத்தில் இருந்து மீட்கவும் இந்த சந்தர்ப்பத்தில் அவசியமாகிறது.எனவே இந்த கட்டுரை. கொரோனா வைரஸ் தடுப்புக்காக அளிக்கப்பட்ட விடுமுறை இப்போது இந்தக் கட்டுரை எழுத உபயோகம் ஆகிறது.
தனிமைப்படுத்துதல் என்பதும்,கிருமி நாசினிகள் தெளிப்பதும் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை தடுக்காது என்பதை உலக சுகாதார நிறுவனமும் தெளிவாக அறிவித்துள்ளது.நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக் கொள்வதும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகள், அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதும், காற்றினை தூய்மைப்படுத்தும் முறைகளை கடைப்பிடிப்பதும், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக் கொள்ள சளியை குறைக்கும் மிக நல்ல மூலிகைகளைப் போட்டு ஆவி பிடிப்பது ஆகியவை மட்டுமே இந்த கொரோனா வைரஸ் பரவலையும், வந்த நோயை குணப்படுத்தும் முயற்சியில் வெற்றியும் அளிக்கும்.
முதலில் இந்த கொரோனா வைரஸ் இப்போது ஏன் பரவுகிறது என்று பார்ப்போம்.நமது வலைத் தளத்தில் ஏற்கெனவே வெளியான கடுக்காய்ப் பிரபாவ போதினி பாகம் 5 ல் குறிப்பிட்ட விஷயத்தை அடிப்படையாகக் கொண்டமுக்கிய விஷயமே இது. http://machamuni.blogspot.com/search/label/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?updated-max=2011-05-09T22:59:00%2B05:30&max-results=20&start=4&by-date=false
ஜனவரி மத்திம பாகத்திலிருந்து மார்ச்சு மத்திம பாகம் வரை கபமதிகரிப்பது சுபாவம். அதேபோல் மார்ச்சு மாத மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரையில் கபமானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுப் போவது சுபாவம்.எனவேதான் கபத்தினை அதிகரிப்பதின் மூலம் பரவும் கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதோடு எந்த அல்லோபதி மருந்துக்கும் கட்டுப்படாமல் உயிரையும் எடுக்கிறது..
கடுக்காய் பிரபாவ போதினியில் குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்டது போல் சாப்பிட்டு வர வேண்டும். இது பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.ஜனவரி மத்திம பாகத்திலிருந்து மார்ச்சு மத்திம பாகம் வரை கடுக்காயை அரிசித்திப்பிலிச் சூரணத்துடன் மிஸ்ரமித்து (கலந்து) உட்கொள்ள காரணமாவது, அக்காலங்களில் கபமதிகரிப்பது சுபாவமாகையால், அவ்விதம் அது அதிகரிக்காமலிருப்பதற்காகவேயாம்.
மார்ச்சு மாத மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரையில் கபமானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுப் போவது சுபாவமாகையால் அதனைக் கிரமப்படுத்த தேனிற் குழைத்து அல்லது அதைப் போன்றவவைகளுடன் மிஸ்ரமித்துச்(கலந்து) சாப்பிடவேண்டும்.
எனவே ஜனவரி மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரையில் மேற்கண்டது போல் கடுக்காயை சாப்பிட்டு வருவதோடு,இது போன்ற கப ரோகத்தினால் விழையும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளை உபயோகப்படுத்துவதையும் இங்கே பார்க்கலாம்..
இதிலிருந்து ஒரு முக்கிய விஷயத்தை இங்கே விளங்கிக் கொள்ளுங்கள்.இயற்கை வைத்துள்ள நியதியின்படி வாத பித்த கபம் அதிகரிக்கும் காலமும்,அது செயல்படும் விதமும் புரியாததால்தான் நாம் கிருமிகளைப் பார்த்து பயப்படுகிறோம். ஜனவரி மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரை கபசம்பந்தமான நோய்கள் வேறு வேறு பெயரில் பல வருடங்களாக வந்து கொண்டே இருக்கின்றன.எடுத்துக்காட்டாக எபோலா, சார்ஸ், மெர்ஸ், கோவிட் 19 வந்துள்ளது.[Middle East respiratory syndrome coronavirus (MERS-CoV) Ebola virus disease , Severe Acute Respiratory Syndrome (SARS) }
இயற்கைக்கு முன்னால் எல்லா உயிர்களும் சமமே!!!உணவுச் சங்கிலியில் மனிதன் உயர் நிலையில் வைத்து அவன் எல்லாவற்றையும் சாப்பிடும் உரிமையை நாமே ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்.ஆனால் இயற்கை கொடுக்கும் எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் எல்லா உயிர்களையும் தின்று தீர்ப்பானேயானால் இயற்கை மனிதனைத் தின்ன (கொல்ல) ஒரு உயிரினத்தைப் படைக்கும்.அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.ஒரு கிருமியை ஜெயித்தால் இன்னொரு கிருமி என இயற்கை நம் மீது நடத்தும் தர்ம யுத்தமே இது போன்ற கொள்ளை நோய்கள்.எனவே அசைவ உணவுகளைத் தவிர்த்திடுங்கள், உயிர்க் கொலை புரியாது இருங்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பு முறைகளும் குணப்படுத்துதலும் இன்றே வெளியாகும் பாகம் 2 ல் தொடரும்