கொரோனா வைரஸ் தடுப்பு முறைகளும் குணப்படுத்துதலும் பாகம் 2
புலால் மறுத்தல்;-
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.
புலால் மறுத்தலையும், உயிர்க் கொலை புரியாமல் இருப்பதையும் தனது கொள்கையாகக் கொண்ட புத்த மதத்தை கொள்கையாகக் கொண்ட சீனர்கள், எங்கிருந்து இவ்வளவு புலாலை உண்ணும் பழக்கம் வந்ததோ தெரியவில்லை.விளைவு சீனர்கள் கிருமிகளின் உற்பத்திக் கூடமாகி தற்போது எலிகளில் இருந்து பரவும் ஹன்ட்டா(Hantavirus) அடுத்த வைரஸ் ஆக நம்மை மிரட்ட வருகிறது.
இதெல்லாம் இருக்கட்டும். கொரோனா மருந்துகள் பற்றி பார்ப்போம்.முதலில் உணவுகளைப் பற்றி பார்ப்போம்.உணவுகள் என்று பார்க்கும் போது முளைக்கட்டிய பயறுகள் மற்றும் தானியங்களை உணவாகக் கொண்டால், நமது வான்காந்த சக்தியை அதிகரிப்பதோடு நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.நாம் முன்பு எழுதிய கட்டுரையில் நீரோட்டம் பார்க்க கவடு எனது கையில் சுற்ற நமது வான்காந்த சக்தி அதிகரிக்க முளைக்கட்டிய பாசிப்பயிறு (சிறுபயிறு) சாப்பிட்டு எமது கையில் நீரோட்டம் பார்க்கும் சக்தியை அடைந்தோம்.இதை இங்கே குறிப்பிடுவதில் பெரு மகிழ்வு எய்துகிறேன்..
இஞ்சிச் சாறு தேன் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்து வெந்நீரில் காலை வெறும் வயிற்றிலசுவைத்துப் பருக பொதுவாகவே மிக நல்லது.
ஆர்சனிக் ஆல்பம்-30 என்ற ஹோமியோபதி மருந்தை காலை வெறும் வயிற்றில் மூன்று முதல் நான்கு நாட்கள் மூன்று முதல் நான்கு உருண்டைகள் வீதம் (globules) சப்பி சாப்பிட வேண்டும்.மீண்டும் அடுத்த மாதம் ஒரு முறை இதே போல் கடைப்பிடிக்க கொரோனா தடுப்பு மருந்தாக அமையும்.இது கொரோனா வரும் முன்னர் சாப்பிட வேண்டிய மருந்தாக ஆயுஷ் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.வந்த பின்பும் தினம் காலை வெறும் வயிற்றில் மூன்று முதல் நான்கு உருண்டைகள் சுவைத்துச் சாப்பிட மிகவும் நல்ல௹ஊ.
கபசுரக் குடிநீர், வாதசுரக் குடிநீர், நில வேம்புக்குடிநீர் ஆகிய மருந்துகள் மூன்றையும் சேர்த்து தடுப்பு மருந்தாகவும், கொரோனா வந்த பிறகு நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படும்.. இவற்றில் குச்சி குச்சியாக இருக்கும்.இவற்றில் ஒவ்வொன்றிலும் சிறிய அளவு (அரை ஐஸ்க்ரீம் ஸ்பூன் அளவு)எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் தண்ணீராக சுருங்கும் அளவு சுட வைத்து சிறிது கருப்பட்டி சேர்த்து , தடுப்பு மருந்தாக 50மிலி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். நோய் வந்த பின் மூன்று வேளையும் இந்த கஷாயத்தில் மிளகு மற்றும் ஓமம் சேர்த்து சாப்பிட மிக நன்மை செய்யும்.
மேலும் கடும் காய்ச்சல் , உடல் வலி தலை பாரம் மூக்கு ஒழுகுதல் இவற்றுக்கு கீழ்க்கண்ட காணொளிக் காட்சியில் கண்டவாறு ஆவி பிடிக்க அனைத்து நோய்களும் , வலுத்த காற்றில் பஞ்சு போல் பறக்கும்.நாம் மழையில் நனைந்ததனால் சளியின் தாக்கம் அதிகமாகி காய்ச்சல் ஏற்பட்ட போது அதற்காக எடுத்துக் கொண்ட சாதாரண சிகிச்சை இது . இது மிகச் சக்தி வாய்ந்த பலனைத் தர வல்லது . சல்பூட்டமால் பஃப் அடித்துக் கொண்டிருக்கும் ஆஸ்த்துமா நோயாளிகளுக்கும் இது சுகம் தர வல்லது .
ஆவி பிடித்தல்:- முதலில் ஆவி பிடித்தலுக்கு தண்ணீரை மூடிக் கொதிக்க வைக்கும் போது அதில் நொச்சி இலை , குப்பை மேனி , வேப்பிலை ,தும்பை , துளசி , எலுமிச்சை இலை , யூகலிப்டஸ் இலை , இவைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கும் போது மஞ்சள் தூள் சேர்த்து இறக்கி , நாம் நன்றாக போர்வையால் உடல் முழுவதும் மூடிக் கொண்டு அந்தப் பானையில் கீழ்க் கண்டவாறு செங்கற்களை சூடாக்கி அவற்றை ஒவ்வொன்றாக சீரான இடை வெளியில் போட்டு ஆவி பிடிக்க வேண்டும்.அவ்வாறு பிடிக்க உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி , தலையில் உள்ள நீர்க் கோவையும் நீங்கி உடல் நலம் பெறும்.
ஜல நேத்தி:-இதன் பின் எஞ்சியிருக்கும் தலையில் கோர்த்திருக்கும் சளியையும் , நீரையும் நீக்க இந்த ஜல நேத்தி மூலம் தீர்க்கலாம்.
பிறகும் தலையில் நீரேற்றம் தெரிந்தால் நீர்க் கோவை மாத்திரையை வெந்நீரில் கெட்டியாக கரைத்து நெற்றியிலும் பொட்டுப் பகுதியிலும் பற்றிட சிரசில் நீர்க்கோவை மறைந்து தலைவலி , மூக்கடைப்பு , மூச்சு விடாமல் சிரமம் , இரைப்பு , இருமல் , ஈசனோபிலியா , ஆஸ்துமா போன்றவை தீரும்.
சாம்பிராணிப் புகை போடுதல்:-வீட்டில் மழைக்காலங்களில் கிருமிகள் தாக்கா வண்ணம் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக நம் பழந்தமிழர் கையாண்ட சாம்பிராணிப் புகை போடுதல். புகை போட சிங்கப்பூர் சாம்பிராணி அல்லது சதுரகிரி மலையில் கிடைக்கும் சாம்பிராணி மரப் பிசின் ஆகியவற்றை உபயோகிக்கலாம். இதனைப் புகை போடும் போது இத்துடன் மஞ்சள் தூள் சேர்த்துப் புகை போட குளிர்கால கிருமித் தொற்று மற்றும் நோய்களிடம் இருந்து தப்பலாம்.
இத்துடன் பேய் மிரட்டி ( இது பேயை மிரட்டுவதால் பேய் மிரட்டி என்றும் பேயை விரட்டுவதால் பேய் விரட்டுவதால் பேய் விரட்டி என்றும் அழைக்கப்படுகிறது . இதை பற்றி தனி பதிவு எழுதி இருக்கிறோம் . ) மற்றும் நில வேம்பு என்றழைக்கப்படும் பெரியா நங்கை சூரணம் (இம்ப்காப்ஸ் தயாரிப்பில் நன்னாரி வெட்டி வேர் , விலாமிச்சை வேர் இன்னும் பல மூலிகைகள் கலந்தது )கடையில் இம்ப்காப்ஸ் தயாரிப்பில் கிடைக்கிறது . இவற்றை கலந்து புகை போட ஏவல் , பில்லி சூனியம் , பேய் பிசாசுத் தொல்லை , காரணமற்ற பயம் போன்றவை தீயினிற் தூசாய் எரிந்து போகும் . சித்தர்கள் பாதம் போற்றி எல்லோரும் நலமுடன் வாழ்வோம்.
இது போக தாளிசாதி சூரணம், ஏலாதிச் சூரணம்,, திரிகடுகுச் சூரணம், போன்றவற்றை நோயின் கப தீவீரம் அறிந்து கொடுக்க வேண்டும்.நோய் வெகு தீவீரமாக இருந்தால்.பவள பற்பம்(ஸ்பெஷல்), கஸ்தூரி கருப்பு அகஸ்தியர் ரசாயனத்தில் கொடுக்கலாம்.
இன்னொரு முக்கிய விஷயம்ஜனவரி மத்திம பாகத்திலிருந்து மார்ச்சு மத்திம பாகம் வரை கபமதிகரிப்பது சுபாவம். அதேபோல் மார்ச்சு மாத மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரையில் கபமானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுப் போவது சுபாவம்.எனவேதான் கபத்தினை அதிகரிப்பதின் மூலமும் கபம் கெட்டுப் போவதினாலும் பரவும் கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதோடு நம் எந்த அல்லோபதி மருந்துக்கும் கட்டுப்படாமல் உயிரையும் எடுக்கிறது.அதனால் இது நமது தமிழகத்தைப் பொருத்த வரை இந்த கொரோனா மே 15 ம் தேதிக்கு மேல்(கபம் கெட்டுப் போவதினால் உள்ள குற்றம் நீங்குவதால்) சக்தியிழந்து தனது செயல்பாட்டை நிறுத்திவிடும்.இது ஜோதிட கணிப்பு அல்ல,இயற்கை செயல்பாட்டின் கணிப்பு.
அது மட்டுமல்ல சித்திரை பின்னேழும்(பின்னேழு தினங்களும்) வைகாசி முன்னேழும்(முன்னேழு தினங்களும்) அக்கினி நட்சத்திரத்தினால் சூரியன் உச்சத்திற்கு செல்வதால்(சூரியன் மகர ரேகையில் உச்சத்தில் சஞ்சரிப்பதால்) சூரியனின் சக்தியினால் பித்தக் கதிப்பு தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் எழுவதால்,அது முதல் கொரோனா தன் சக்தியிழந்து காணாமல் போய்விடும்.
தருணத்தின்கேற்ற கட்டுரை. கடுக்காயின் பயன்பாட்டை பொதுவாக பேசுபவர்கள் மத்தியில் குறிப்பான காலகட்டத்தில் எதனோடு எதனால் பயன்படுத்த வேண்டும் என்பதை துல்லியமாக விளக்கியது தங்களது ஞானத்தின் ஆழத்தை காட்டுகிறது. மேலும் இதுபோன்ற படைப்புகளை அதிகமாக எதிர்பார்க்கின்றோம். மச்சமுனி மீண்டும் விஸ்வரூபம் எடுக்க கொரோனா உதவும் என நம்புகின்றேன்.
அன்புள்ள திரு ஶ்ரீதர் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஓம்
வான்காந்த ஈர்ப்பு
தங்கள் பதிவால் பரமானந்தம்
மிக அருமையான விடயம் ஐயா,
மாசடையாத இயற்கை மனித மன மாசான எண்ணங்களால் தோன்றும் மாயை.!
தகாத செயல்களுக்கு விதியின் அச்சு பிசகாத விளைவுகள்.!
தூய எண்ணங்கள் தூய செயல்கள் தர்ம நெறி கொள்கையோடு…
உணவை உண்டிடில் உணவே மருந்து!
சுவாசித்திடில் வான்காந்த ஈர்ப்பே செய்யும் நச்சு நீக்கி
அன்புள்ள திரு புலிப்பாணி சித்தர் அடிமை அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி.மிக ந்ல்ல புரிதலோடு கூடிய விளக்கம்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வாசகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தங்களின் கட்டுரை தக்க சமயத்தில் வெளியானதில் மிக்க மகிழ்ச்சி ஐயா… பல நாட்கள் கழித்து மச்சமுனி வலைத்தளத்தில் தங்களின் கட்டுரை படிப்பதில் பேரானந்தம். இயற்கையை புரிந்து கொண்டு அதனோடு இணைந்து மக்கள் பயணிக்க வேண்டும் என்பதனை தங்கள் கட்டுரை எடுத்துரைக்கிறது. கடுக்காயின் பயன்கள் சொல்லில் அடங்காதவை…. பயன்படுத்தியவர்களுக்கு தெரியும்… மக்களுக்கு ஆறுதலான மற்றும் தைரியத்தை கொடுக்கும் பதிவு மிக்க நன்றி ஐயா….
தங்கள் மருத்துவத்தை பின்பற்றும் ஒரு வாசகி…
ர. குணவதி
அன்புள்ள திருமதி ர. குணவதி அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி.பல நாட்கள் கழித்துத்தான் நமது வலைத் தளத்தை பலர் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது புரிகிறது.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு பதிவு
அன்புள்ள திரு ராகவேந்திரன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி.பல நாட்கள் கழித்துத்தான் நமது வலைத் தளத்தை பலர் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது புரிகிறது.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள திரு ராகவேந்திரன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நல்லதொரு பதிவு
அன்புள்ள திரு ராகவேந்திரன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அருமை.
அன்புள்ள திருமதி கலைச் செல்வி அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம்.
நீண்ட நாட்களின் பின் உங்கள் பதிவை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. சரியான தருணத்தில் மக்களின் இன்னல்களை போக்கவும் கவலையை நீக்கி மனத்திற்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டு இப் பதிவு மிகவும் பொருத்தமானதாகவும் வரவேற்கப்படக் கூடியதுமானதாக இருக்கிறது. தங்களுக்கு எனது நன்றியை மனப்பூர்வமாக தெரிவிக்கிறேன்.
எனது பெயர் தியாகலிங்கம். லண்டனில் இருந்து பதிவிடுகிறேன். உங்களை எட்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் எனது மனைவியுடன் சந்தித்துள்ளேன். திரு. அமீர் சுல்தான் அவர்களிடம் தொடர்பு கொண்டு தற்போதும் நீங்கள் அறிவுறுத்திய மருந்துகளை பெற்று வருகிறேன் என்பதில் மகிழ்ந்து எனது வணக்கத்தையும் தெரிவிப்பது கடமையாகும்.
வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
தியாகலிங்கம்
அன்புள்ள திரு தியாகலிங்கம் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
சிறந்த தற்பொழுது தேவையான பதிவு, தொடர வேண்டுகிரேன்,மிக்க நன்றீ,
அன்புள்ள திரு ராஜா அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
பசியறிந்து பாலுட்டும் தாயை போல தக்க சமயத்தில் தேவையான பதிவு நன்றி ஐயா
அன்புள்ள திரு கமுதி நாகா அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி ,வணக்கம்
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் பதிவுகளை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.தொடர்ந்து தங்களின் பதிவுகளை காண ஆவலோடு இருக்கும் அன்பன் ஹரி,S
அன்புள்ள திரு ஹரி என்ற ஶ்ரீநிவாசன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்