அற்புத மூலிகைகளின் செயல்பாட்டு வகைகள் – பாகம் 4
சித்த வைத்தியத்தில் பல அற்புத மூலிகைகள் உள்ளன.அவற்றின் செயல்பாடுகளை வைத்து பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.அந்த வகைகளின் பெயர்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கீழே விவரிக்கிறேன்.இவற்றை வைத்துத்தான் இன்ன மூலிகை இன்ன வியாதியை குணமாக்கும் என்று தெரிந்து தெளியலாம்.
தாது ஷீணரோதி:- சரீர தாதுக்களை அழுகிப் போக வொட்டாமல் தடுக்கிற மருந்து.
நமது சரீரத்தில் சப்த தாதுக்கள் என்று உண்டு.அந்த தாதுக்கள் ரத்தம் , சதை , எலும்பு , எலும்பு மஞ்சை , நரம்பு , விந்து , நிணநீர் . இந்த தாதுக்கள் உடலில் நன்றாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும். இந்த தாதுக்கள் கெட்டு அழுகிப் போவதே வியாதிகள் . தாதுக்களை நஷ்டமடைய விடக்கூடாது .எனவேதான் விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்று கூறும் வழக்கு வந்தது. சப்த தாதுக்கள் கெட்ட நிலையே மேகம் . மது மேகம் என்பதும் (சர்க்கரை வியாதி என்னும் SUGAR COMPLIANT , DIABETICS MYELITIS ) மேகங்கள் 21 க்குள் ஒன்றே .
வானத்தில் மேகம் எப்படி ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் வானம் எங்கும் அலைகிறதோ அது போல உடலின் பல பாகங்களில் உள்ள உறுப்புகளில் குறைபாட்டையோ , வலியையோ , பாதிப்பையோ ஏற்படுத்தும் . தாதுக்கள் ஷீணப்படுவதை தடுத்தால் இந்த மேகத்தையும் மேகத்தால் விளையும் வெட்டையையும் தடுக்கலாம். வெட்டை முற்றினால் கட்டை ( வேறென்ன பிணம்தான் ).
கை கால்கள் நகராமல் தடுப்பதும் இந்த வெட்டைதான் . போகம் அதிகரிப்பதால் விந்து சக்தி நஷ்டப்படுவதால் வெட்டை சூடு அதிகரிப்பதால் வரும் வியாதிகளை ARTHRITIDES , என்றும் OSTEOPOROSIS , என்றும் OSTEOARTHRITIDES என்றும் , அலோபதி வைத்தியத்தில் அழைக்கப்படுகிறது . ஒரே காரணத்தால் உருவாகும் வியாதிகளை பல பெயரிட்டு அழைக்கிறது . அலோபதி வைத்தியத்தில் அடிப்படையையே அணுகாமல் மேம்போக்காக அறிகுறிகளை மட்டுமே பார்த்து வைத்தியம் பார்ப்பதால் உள்ளுறுப்புக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ,சாப்பிட்ட மருந்துகளால்தான் இந்த பாதிப்புக்கள் வந்தது என்பதே அறியாமல் அதற்கு அலோபதி வைத்தியம் பார்த்து ( மருந்து என்ற பெயரில் விஷங்களைச் சாப்பிட்டு ) வைத்தியம் பார்த்து மேலும் உடல் உள்ளுறுப்புக்கள் ( ORGANS ) சேதமாகி முடிவில் இறந்தே போகிறார்கள்.
எனவே வெட்டையை வரவொட்டாமல் தடுக்க இந்த தாதுக்களை நஷ்டமாகாமல் காக்க, கீழ்க்கண்ட தாது ஷீணரோதிகளான, இந்தப் பொருட்கள் சாலச் சிறந்தது.
அபயன் கடுக்காய் , அரோகிணிக்கடுக்காய் , உதிர மரத்தின் வேர் , கள்ளி மரப் பட்டை , கோடக சாலை , சிறு துத்தி , சிறு தேட் கொடுக்கு , சீமைத் தக்காளிப் பழம் , நாய்க் கடுகு , பூநிலம் , நெய்ச் சட்டிக் கீரை , பிசின் பட்டை , புங்கின் நெய் , புங்கின் விதை , வட்டக் கிலு கிலுப்பை , வாழைப் பிஞ்சு , கருங்காலி , ஏழிலைப் பாலை , தண்ணீர் விட்டான் கிழங்கு , செம்முள்ளி , இலவ மரப்பட்டை , புன்னை விதை , சரக் கொன்றை மரப்பட்டை , சீந்திற் கொடி , மஞ்சள் , நெல்லி வற்றல் , அதி மதுரம் , நீர் முள்ளி , சிறு குறிஞ்சான் , கடுகு ரோகணி , மலை வேம்பு , தொட்டாற் சுருங்கி , வெள்ளல்லி , கொம்புப் பாகல் , சித்திர மூலம் , மஞ்சிஷ்டி , மதன காமப் பூ , கடுக்காய் , சிறு நெருங்சில் , பேய்ப் புடல் , காட்டாத்திப் பூ , சர்க்கரை , கரு வாகைப் பட்டை , வெட்சிச் செடி ஆகியன.
Guruji,
Saptha thathukkalyaum palappaduthum edhavadhu oru moolikai anubava muraiai therivikka vendukeran.
Anbudan,
Vanavil
அன்பு மிக்க திரு வானவில் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நான் இந்தப் பதிவில் சொல்லும் அனைத்து மூலிகைகளும் சப்த தாதுக்களையும் பலப்படுத்தும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சகோதரரே,
வணக்கம். இயற்கை மருத்துவமுறைக்கு ஈடு இணை ஏது? தாங்கள் கூறிய மூலிகைகள் நம்மைச்சுற்றியே இருந்தாலும் பலவற்றை எங்களால் அடையாளம் காணமுடியவில்லை. பதிவில் மூலிகை படங்களும் இணைத்தால் பலரும் பயனடைவார்களே! முததோடங்களும் நீக்கக்கூடிய மூலிகைகளைப்பற்றியும்
அவற்றை உண்ணக்கூடிய முறைகளையும் பற்றி அறிந்துகொள்ள பதிவுகளை எதிர்நோக்கி ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
நன்றி
மணிகண்டன்-கோவை
அன்பு மிக்க திரு மணி கண்டன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
சித்த மருத்துவ மூலிகைகளை என்னால் முடிந்த அளவு எளிமையாக விளக்க முயற்சி செய்கிறேன்.படம் எடுக்கக் கூட என்னிடம் ஒரு நல்ல புகைப்படக் கருவி (காமிரா) கூட இல்லை.இரவல் புகைப்படக் கருவிகளால்தான் என் வலைத் தளத்தில் வெளி வரும் படங்களும், ஒளிப்படக் காட்சிகளும் வெளியிட்டு வருகிறேன். ஒரு புகைப்படக் கருவி வாங்க இறைவன் கருணை புரியட்டும்.அது வரை என்னால் இயன்றதை செய்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
வணக்கம்.பதிவு அருமை.
தொடர்ந்து பார்த்து வருகிறேன்
நற்பவி. என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Guruji,
மிக நன்று
emgobi@gmail.com
Anbudan,
Vanavil
+அய்யா, தாங்கள் இவ்வளவு எளிமையான வாழ்க்கை வாழ்கிறீர்களா?தாங்களுக்கு பொருள ஈட்டுவதில் விருப்பம் இல்லையா ? நான் எப்போது உங்களை போல் ஆவது?சிததர்கள் அருள் புரிய வேண்டும்
அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் ஒன்றுமில்லாமல்தான் வெறும் கையோடுதான் போகப் போகிறோம்.எனில் சம்பாதிப்பது என்பதை பொருளின் பின்னால் ஓடிக்கொண்டே இருப்பதாகத்தான் கருதுகிறேன். எமனை வென்றான்தன் வீரமே வீரம்,சாகாமல் இருக்கக் கற்பதே கல்வி , மற்றைய செயல்கள் எல்லாம் வீணே!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மிக மிக உண்மையான கருத்து.என் மனநிலையும் அவ்வாரே உள்ளது.மனம் எப்பொதும் ஏதொ ஒரு வெறுமை.இன்னும் மக்களுக்கு,பிணியாலர்களுக்கு ஏதாவது செயய வேண்டும்.மரணமில்லா பெருவாழ்வு வாழ வழி காட்டுங்கள்
அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
அதற்குத்தானே இந்தப் பாடு.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
என்னை உஙகளிடமும்,சித்தர் பெருமக்களிடமும் ஒப்படைத்து விட்டேன்
அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
சித்தர்களின் கருணை எல்லோரையும் சாகாக் கல்வி கற்க வைத்து இகபர சுகம் காட்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் அய்யா
////ஒரு புகைப்படக் கருவி வாங்க இறைவன் கருணை புரியட்டும்////
விரைவில் அருமையான ஒரு புகைப்படக் கருவி தங்களுக்கு கிடைக்க இறைவனை நாங்களும் வேண்டுகிறோம்.தங்கள் பணி மற்றும் அர்பணிப்புக்கு நன்றி
அன்புள்ள திரு சின்னா அவர்களே!!!
தங்களின் கருத்துரைக்கு நன்றி,
எல்லாம் இறை சித்தத்தின் படி நடக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
அபயன் கடுக்காய் தற்போது எங்கு கிடைக்கிறது ஐயா ?
என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இதற்கு ஒருவாறு பதில் இருந்தாலும் .இது பரிபாஷையின் பாற்பட்டது. இதன் பொருள் வேறு.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
அகில் மரப்பட்டையின் பயன்கள் என்ன சாமிஜி.மேலும் அதை வீட்டில் தூபம் ோடலாமா? வெண் கடுகு,மருதாணி(இலை/காய்)போன்றவற்றையும்
தூபம் போடலாமா?வேறு எந்த மூலிகை தூளை போட்டால் என்ன நன்மை
உள்ளது என்று தெரியபடுத்துங்க சாமிஜி .
என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நில வேம்புப் பொடியை வெண் குங்கிலியப் பொடியுடன் தூபம் போட சகல கண்ணேறூ, செய்வினை , ஏவல் பில்லி சூனியம் அனைத்தும் நீங்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
அகில் மரப்பட்டை லட்சுமி வசியம்.இத்துடன் சந்தனத்தூள் , பால் சாம்பிராணி அல்லது சிங்கப்பூர் சாம்பிராணி வாங்கிச் சேர்த்துக் கொண்டு புகை போட்டு வர நன்று.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
கருந்தாமரை ,செந்திராய் என்பவை உள்ளதா சாமிஜி
இவை எங்கே கிடைக்கும்.
நற்பவி என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
உள்ளது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இவையெல்லாம் சித்தர்களின் பரிபாஷை வெளிப்படையாக சொல்ல இயலாத , நிலையில் உள்ளேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
வெள்ளெருக்கு செடியில் விநாயகர் செய்வதற்கு கிழங்கு நல்லதா அல்லது வேர் நல்லதா.மந்திரம் சொல்லாமல் சாதாரணமாகவும் செடியை எடுத்து உபயோகபடுத்தினால் பலன் உண்டா என்பது எனக்கு நீண்ட நாள் சந்தேகம்.விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
நற்பவி என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
சாப நிவர்த்தி செய்யாமல் எடுத்தால் எந்த மூலிகையும் பலன் தராது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
திருகுகள்ளி மரத்தின் தண்டில் செதுக்கி ரசத்தை விட்டு அடைத்து 48 நாள் கழித்து பார்த்தால்,காட்டியிருக்கும் என்று ஒருவர் கூறினார் மரம் பட்டு விடாதா.இதே போல வெள்ளெருக்கிலும் செய்யலாமா.
இந்த கேள்வியை பொதுவில் கேட்க எனக்கு தயக்கம் உள்ளது.
இதை படித்துவிட்டு அளித்து விடுங்கள்
இதனை பதிலாக ssetex@gmail.com கு அனுப்பினாலும் சரி சாமிஜி
நற்பவி என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
திருகுகள்ளி மரம் பட்டுவிடாது.இதே போல வெள்ளெருக்கிலும் செய்யலாம்.ஆனால் வெள்ளெருக்கு மரம் பட்டு விடும். ரசம் கட்டி மணியாகும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
1).வெள்ளெருக்கு செடியில் விநாயகர் செய்வதற்கு கிழங்கு நல்லதா
அல்லது வேர் நல்லதா சாமிஜி
2) பொதுவான சாப நிவர்த்தி மந்திரம் இதற்கு போதுமானதா அல்லது
வெள்எருக்குக்கு என தனியாக மந்திரம் உள்ளதா என்று தெரிவியுங்கள்.
நற்பவி ,என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மந்திரம் என்பதே மனதின் திறமே . சிதறும் மனத்தின் திறத்தை உயர்த்தாமல் மந்திர சித்தி என்பதே இல்லை.எனில் மந்திரம் எதற்கு . “கற்றுணைப் பூட்டிக் கடலுள் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே “என்று திருநாவுக்கரசர் சொல்லிக் கடலில் வீழும் போது கல் மிதக்கிறது .எனில் நீங்கள் கல்லைக் கட்டிக்கொண்டு “கற்றுணைப் பூட்டிக் கடலுள் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே“என்று சொல்லி வீழ்ந்தால் மந்திரம் சித்தியாகி இருந்தால் கல்லுடன் நீங்களும் மிதக்க வேண்டும். சாத்தியமா என்று பாருங்கள் ??? இறைவனை அறியாமல் இறை விதிகள் வசப்படாது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
மலைகளில் வளரும் அபூர்வ மரங்கள்,மூலிகை செடிகளை
(கூடுமானவரை அனைத்தையும் )கீழே வளர்க்க இயலுமா?
அல்லது அவை சமதளத்தில் வளராதா சாமிஜி.
சில செடிகள் ,உதாரணமாக கருந்துளசி,சிரியாநங்கை,பெரியாநங்கை, ,நாகபடகற்றாளை போன்றவை மலைகளில் மட்டுமே முன்னர்
இருந்து இருக்கலாம்.தற்போது நம் முன்னோர்கள் தயவால் எல்லா
இடங்களிலும் வளர்க்கப்படுகிறது.அதே போல் மற்றவகைகளையும்
வளர்க்க சாத்தியம் உள்ளதா?வளருமா என்ற என் நீண்டநாள்
சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நற்பவி ,என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மலைகளில் வளரும் அபூர்வ மரங்கள்,மூலிகை செடிகளில் சிலவற்றை கீழே வளர்க்கலாம். பல மூலிகைகள் அந்தக் குளிர்ச்சியில்தான் வளருகின்றன.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
சுழுமுனை,நெற்றிக்கண்,பிடரிகண்,ஆறு ஆதாரங்கள்,சாயபுருஷ தரிசனம்,
அஷ்டகர்மம் ஆகியவற்றின் விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் மற்றும்
ஒளிப்பட காட்சிகள் கிடைத்தால் அனுமதி இருந்தால் வெளியிடுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நற்பவி ,என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
ஏதேது , வரிசை பெரிதாக இருக்கிறது . சமயம் வரும்போது அவ்வப்போது விளக்கம் அளிக்கப்படும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஏதேது , வரிசை பெரிதாக இருக்கிறது . சமயம் வரும்போது அவ்வப்போது விளக்கம் அளிக்கப்படும்.
அன்பு மிக்க திரு மது அவர்களே,
மதுவே நீங்கள் ஹரியின் மறு அவதாரமா என்ன??? கேள்விகள் ஒத்திருக்கிறதே என்ன??? ஐ பி முகவரி வேறாக இருக்கிறது .ஆனாலும் நீ அவனா என்ற கேள்விக்கு இடம் இருக்கக் கூடாது????
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அண்ணன் அவர்களுக்கு,
என் நீண்ட நாள் சந்தேகம், இவ்வாறு இங்கு இதை இடலாமா என்று தெரியவில்லை,
இருப்பினும் தவறான விளக்கங்களை என்னுள் இருந்து நீக்கிக் கொள்வதற்காக…
இவர்களைப் பற்றி நான் பேச விரும்பாவிடினும், இந்த அலோபதியினர் சமூக மக்கள் அனைவரையும் வழிகேட்டில் தான் தள்ளுகின்றனர். இந்த விஷயம் பற்றி நானும் எனது நண்பர்(அலோபதியினர் கூற்றையே பிரதிபலித்தார் ) ஒருவரும் பேசும் போது வாக்குவாதம் வந்தது. திருமணம் ஆனவர்களோ இல்லையோ அவர்களாக விந்தை வெளியேற்றுவது உடலுக்கு நல்லதல்ல என்பது என் வாதம்(நான் கேள்விப்பட்டது), ஆனால் மனைவியுடன் கூடும் போது வெளியேறும் விந்து குறித்து பிரச்சனை இல்லை யென்றேன். நண்பர் சொன்னார், இல்லறத்தின் போது வெளிப்படும் விந்து , தனிப்பட்ட முறையில் வந்தால் என்ன (எல்லாமே வெளியேற்றம் தானே என்கிறார், மேலும் தானாக ஒரு நாள் தூக்கத்தில் வெளிப்படத்தானே போகிறது என்கிறார் ), எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
பின்னர் தங்கள் பதிவுகளை பார்க்க நேர்ந்தது.,
//எனவேதான் விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்று கூறும் வழக்கு வந்தது.//
பிறிதொரு பதிவில் ..//பெண் மேல் கவர்ச்சியை உண்டாக்குகிறது. அதனால் காமம் மேலோங்கி விந்து வீணாகி வீணில் இறந்து போகிறோம். //
மற்றொரு பதிவில் ..//மாதம் இரு முறை உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்.( இருபத்தோரு நாட்களுக்கு மேல் சேர்த்து வைக்கப்பட்ட விந்து நோய் உண்டாக்கும்.//
உங்கள் பதிவுகளின் கூற்றில் இருந்து , எனது சிற்றறிவிற்கு சில விஷயங்கள் விளங்கவில்லை. விந்து நம்மை விட்டு நீங்குவது நன்மையா அல்லது உடலுக்கு கேடா , தயை கூர்ந்து விளக்கவும்.(அது என் நண்பரிடம் கொண்ட வாதத்தில் ஏற்ப்பட்ட சந்தேஹங்களை கண்டிப்பாக நீக்கும் .)
தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
தங்களன்புள்ள,
ஸஹதுல்லாஹ்
அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
விந்து உற்பத்தி ஸ்தானத்தில் நிறுத்தாமல் என்ன செய்தும் பயன் இல்லை.இறங்கி விந்துப் பைக்கு வந்துவிட்டால் வெளியேறியே , அல்லது வெளியேற்றியே ஆக வேண்டும்.மேலும் விபரம் அறிய உங்கள் பிடரி நரம்பின் பக்கமாக இருக்கும் இறையை உணருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அண்ணன் அவர்களுக்கு,
மட்டற்ற நன்றிகள் ….
முதலில் எனக்கு விந்துநாதத்திற்கும் இறை வெளிப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கவில்லை. பின்னர் தேடியபோது,
” ஆதியாய்வந்த வரும்பொரு ளேதடி சிங்கி அது
சோதியி லாதி சொரூபா யெழுந்தது சிங்கா. ”
என்ற ஞானப்பாடல் மூலம் பெற்றுக் கொண்டேன்.
தங்களன்புள்ள,
ஸஹதுல்லாஹ்
அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நாத விந்து கலாதி நமோ! நம!!!!
வேத மந்திர சொரூபா நமோ! நம!!!!
நாதத்திற்கும் விந்திற்கும்தான் முதல் வணக்கம். நாமெல்லோரும் நாத விந்தின் சொரூபங்களே!!!நாதம் விந்தில்லை என்றால் நாமேது ,உலக இயக்கம் ஏது.அதனால்தான் அதற்கு முதல் வணக்கம் பின்தான் வேத மந்திர சொரூபனான இறைவனுக்கே வணக்கம்.அருணகிரி நாதர் பாடல்.படித்துப் பாருங்கள் .அல்லது குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களைப் படியுங்கள் தெளிவடைவீர்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அண்ணன் அவர்களுக்கு,
மட்டற்ற நன்றிகள்….
நிச்சயம் பார்க்கிறேன் ….
தங்களன்புள்ள,
ஸஹதுல்லாஹ்
அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear Sir,
when body gets heat up, inner side of (yoni ) gets reddish and itching starts and in few days it goes off then again it repeats after 20 days or later. Also some more thing in my body.
writing in tamil / english please…
– veeriam miga kuraivaga ulladhu.
– pain in Kudhi kaal & padham + Kaal kudaichal
– Udal thalarvu
– Vindhu seekiram veliyerugiradhu,
– light pain in left virai (once in 20days)
– Straight line (with out any color )in nails
– Urine comes with smell but color is normal.
SIr Kindly help. Want live in a way of Sidharkhal. I don’t have smoking and drinking habit.
Thanks in advance.
அன்பு மிக்க திரு விராஜ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
இவை அனைத்துக்கும் சேர்த்து சதுரகிரி ஹெர்பல்ஸ் ன் தாது விருத்தி லேகியம் சரி செய்யும்.நீங்கள் சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணனிடம் தொடர்பு கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear SIr,
Thank you very much.
I have my marriage in March.
Before that can i come to some good position.
Thanks in advance…
அன்பு மிக்க திரு விராஜ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
நலம் பெறுக இனிதே வாழ்க!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அண்ணன் அவர்களுக்கு,
என்னவென்று தெரியவில்லை. நண்பர் விராஜ் அவர்களின் கருத்தையும் தங்களின் பதிலுரையையும் படித்ததும் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் …
இறைவனின் பரிபூரணமான பேரருள் என்றும் தங்களுக்கு நிலைத்திட வாழ்த்துக்கள்….
தங்களன்புள்ள,
ஸஹதுல்லாஹ்
அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
இறையருள் பூரணமாக நிலைப்பது, விட்ட குறை தொட்ட குறையாலன்றி வேறில்லை.எனக்குக் கொடுக்கப்பட்ட எல்லைகள் சிலரின் எண்ணங்களால் குறுக்கப்பட்டு வருகின்றது.இந்த நிலை இன்னும் ஆறே மாதங்களில் தீர்மானிக்கப்பட்டுவிடும் .எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!!!! என்ற எமது எல்லைகளும் வரையறுக்கப்பட்டுவிடும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear Azagappan Ayya,
I want to have personal telephone discussion with you.
kindly support me please….
Note : Already discussed with Mr.Kannan and he is sending me medicine today.
அன்பு மிக்க திரு விராஜ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்களிடம் கூறியுள்ளேன்.அவர் தங்களுக்கு எமது அலைபேசி எண்ணைத் தருவார் .எம் அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Anbhana Ayya, (Tamil editor not available in office. forgive me please)
Yennudan ungal ponnana nerathai pagirdhadhukku mikka nandri.
Seekkiram gunamaga ungal aasigal veendum.
Ungal sevai yendrum thodara en vazthukkal.
Ungalai adi seekkiram sandhikka virumbugiren.
Sithar vazhi virumbum,
viraj
அன்பு மிக்க திரு விராஜ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்