ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 1

சென்ற ஞாயிற்றுக் கிழமை அத்தி கோயில் அருகேயுள்ள கருப்பசாமி கோயிலுக்கு சென்றோம் .இப்படி அடிக்கடி சதுரகிரியைச் சுற்றியுள்ள காடுகளில் நாங்கள் மூலிகைத் தேடலில் சுற்றுவது வழக்கம்.பல நூறு முறைகளுக்கு மேல் சதுரகிரிக்கு மேலுள்ள காடுகளில் அலைந்து திரிந்துள்ளோம்.வாசகர்கள் பார்க்க சில அனுபவங்களை கீழே பகிர்ந்துள்ளோம்.

இந்த இடம் மிக அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளது.இங்கு யானைகள், காட்டுப் பன்றி ,  மான்கள் ,  காட்டுக் கோழி , மற்றும் அனகோண்டா போன்ற மலைப் பாம்புகள் ( வக்கணத்தி என்று இங்கு அழைக்கப்படுகிறது ) அதிகம் உலவும் இடம் . கருப்பசாமி கோவில் படங்களும் அங்கு மேய வந்த காட்டுப் பன்றியுடைய படங்களும் இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

கருப்பசாமி கோயில் அமைந்துள்ள காடு

கருப்பசாமி கோயில் 

 

 

 

 

 

 

கருப்பசாமி கோயில் அருகே மேயும் காட்டுப் பன்றிகள்

 

 

 

 

 

 

காட்டுப் பன்றிகள் நம்மைப் பார்த்து ஓடவும் செய்யலாம் எதிர்த்து வந்து தாக்கவும் செய்யலாம் எனவே அவற்றுக்கு தொந்தரவு இல்லாமல் கருப்பசாமி கோயில் வேலிக்கருகில் மறைந்திருந்து எடுத்த படங்களே மேலே உள்ளவை.

இந்தக் கருப்பசாமி கோவிலுக்கருகில் குத்துக்கல் பாறை என்ற ஒன்று இருக்கிறது அதன் அருகில் மலையில் இருந்து மூலிகைகளில் நனைந்து ஓடி வரும் நீரில் குளிப்பது இந்தக் கோடையில் மிக ஆனந்தமானதல்லவா????

குத்துக்கல் பாறை

பதிவு பெரிதாகப் போவதால் இதன் பாகம் இரண்டை அடுத்த ஒரிரு நாட்களில் பதிவிடுகிறேன்.

மற்றவை ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 2 ல் காண்க.