ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 2
மேற்படி கருப்பசாமி கோவில் காட்டில் உள்ள மகா மூலிகையான நத்தைச் சூரியைப் பற்றி இப்போது பார்ப்போம். இதை குழி மீட்டான் மூலிகை என்றழைக்கப்படுகிறது.அதாவது பிணமாகிக் குழியில் விழுந்தவனையும் மீட்டெடுக்கும் என்பதால் இந்தப் பெயர். நத்தைச் சூரி எண்ணெய் வர்ம பாதிப்புகளில் இருந்து உடலைவிட்டு உயிர் பிரியாமல் மீட்பதாலும் இதற்கு இந்தப் பெயர்.
மஹா மூலிகை நத்தைச் சூரி
எனது சீடர்களில் ஒருவரான திரு நரசிம்மன்,கோவை கையில் நத்தைச் சூரியுடன்
நத்தைச் சூரி விதையை புறாவும் , காடையும் , கவுதாரியும் , குருவியும் இதை சாப்பிடுவதால் அவற்றுக்கு போக சக்தி மிக அதிகமாக இருக்கிறது.உடலை மிக அதிகமாக இறுக்கும்.உடல் இரும்பு போல ஆகும்.ஒரு மண்டலம் இச்சா பத்தியத்துடன் இருக்க அதிக பலமுண்டாகும்.விந்தை ஸ்தம்பனம் செய்ய உதவும்.இதனால் நூறு பெண்கள் வந்தாலும் இந்திரிய ஸ்கலிதம் ( விந்து நஷ்டம் ) இல்லாமல் , நூறு பெண்களையும் திருப்தி செய்யலாம். ஏனெனில் விந்து ஞானத்துக்கு மிக முக்கியம்.
இதன் சக்தியை விளக்க ஒரு சிறிய பரிசோதனை செய்து அதை படமாக எடுத்து இங்கே போட்டுள்ளேன்.என்னிடம் இந்த அளவு சக்தியுள்ள ஐ போனில் உள்ள காமிராதான் இருக்கிறது.எனவே படத்தில் இந்த அளவுதான் தெளிவாக எடுக்க முடிந்தது. ஒரு ஒளிக்காட்சி எடுக்க அந்தக் காட்டில் எங்களிடம் வேறு வசதிகள் இல்லை.
நத்தைச் சூரி வேரை வாயில் போட்டு மென்று கொண்டு சாறை நன்றாக மென்று விழுங்கிய பின் கண்ணில் மண்ணைப் போட்டால் கண் உறுத்தாது.கண் அறுகாது . நத்தைச் சூரியினால் கண் பலம் பெற்று விடுவதனால் இந்தளவு இதன் சக்தி வெளிப்படுகிறது . கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.சாதாரணமாக சிறு தூசி விழுந்தாலே கண்கள் உறுத்தும் . ஆனால் இங்கோ??????!!!!!!!!
சாதாரணமாகக் கண்கள்
நத்தைச் சூரி வேரை வாயில் போட்டு மென்று கொண்டு கண்ணில் மண்ணைப் போட்டால் உறுத்தாமல் கண்ணீர் கொட்டாமல் எப்போதும் போல பார்த்துக் கொண்டிருக்கலாம்.கண்ணிற்கு அவ்வளவு வல்லமை அளிக்கும். நோக்கு வர்மம் மற்றவரின் மேல் பிரயோகம் செய்ய கண்ணிற்கு பலம் அளிக்கும் மஹா மூலிகை.இது மட்டுமல்லாமல் மந்திரப் பிரயோகங்களிலும், இதை காலற்ற , உடலற்ற , தலையற்ற நாட்களைத் தவிர்த்து மற்ற முழு நாளில் தூப தீப எலுமிச்சம் பழம் பலி கொடுத்து சாப நிவர்த்தி செய்து எடுத்து இதன் வேரை தாயத்தில் அடைத்து இடுப்பில் அணிய சகல லோக வசியம் , ஞான வசியம் , லட்சுமி வசியம் , சரஸ்வதி வசியம் , பார்வதி தேவி வசியம் சித்திக்கும் என்று மூலிகை ஜால ரத்தினம் கூறுகிறது.
நத்தைச் சூரி வேரை வாயில் போட்டு மென்று கொண்டு கண்ணில் மண் போடுதல்
கண்ணில் மண் போட்ட பின்
கண்ணில் மண் போட்ட பின் திறந்த கண்களில் கண்ணீர் இல்லை
கண்ணில் மண் போட்ட பின் திறந்த கண்களில் கண்ணீர் இல்லை மண் வெளியே வருவதும் கண்ணின் கருமணியில் மண் துகள்கள் இருந்தும் கண் கூசாமல் கண் திறந்திருக்கும் நிலை
பதிவு பெரிதாகப் போவதால் இதன் பாகம் மூன்றை அடுத்த ஒரிரு நாட்களில் பதிவிடுகிறேன்.
மற்றவை ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 3 ல் காண்க.
Ayya,
Eagerly waiting for the pakam-3. Stunned to see the effect of the herb!!!
Karthick
Mumbai
அன்பு மிக்க திரு கார்த்திக் அவர்களே,
பதிவிட்ட மூன்று நிமிடத்திற்குள்
கருத்துரையிட்டுவிட்டீர்களே!!!! மிக்க நன்றி!!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
பதிவு அருமை ஜி
உங்கள் கண்களில் எதோ ஒரு
பவர் தெரிகிறது
அன்பு மிக்க திரு ஷெரீப் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!மூலிகைப் பயன்களை இன்னும் வெளிப்படுத்த கடவுள் அருள் புரியட்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
சாமி ஜி
கண் பார்வை குறை
உள்ளவர்கள் இந்த மூலிகையை
எப்படி பயன் படுத்தினால்
மீண்டும் பார்வை கிடைக்கும்
அன்பு மிக்க திரு ஷெரீப் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!இந்த மூலிகைப் பயன்களைப் பற்றி இன்னும் விடயங்கள் உள்ளன அவற்றில் இதன் பயன்கள் விவரிக்கப்படும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Ayyo enanga ithu. Bayama iruku. Intha mooligaiyinal veru ethavthu payan irukiratha?
அன்பு மிக்க திரு சாந்தி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!இந்த மூலிகைப் பயன்களைப் பற்றி இன்னும் பல விடயங்கள் உள்ளன.இன்னும் குறைந்தது இரு பாகங்கள் எழுதும் அளவிற்கு விடயங்கள் உள்ளன.அவற்றில் இதன் பயன்கள் விவரிக்கப்படும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
சுவாமி ஜி அவர்களே,
நான் புதிய வாசகன். ஐயா விந்து வெளி ஆகும் நேரத்தை அதிகரிக்க இந்த மூலிகையை எவாறு பயன் படுத்தி கொள்வது?
அன்பு மிக்க திரு சரவணன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!தொடர்ந்து பாகம் 4 வெளியாகவிருக்கிறது.அதில் அது பற்றிய விவரம் வெளியிடப்பட இருக்கிறது.மூலிகைப் பயன்களை இன்னும் வெளிப்படுத்த கடவுள் அருள் புரியட்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,
நத்தைச் சூரி மூலிகை இருக்கும் இடத்தில் நத்தை சென்றால் அது வெடித்து செதறி விடும் என்பது உண்மையா…?
இந்த தகவலை நான் என் பாட்டி சொல்லி கேட்டு இருக்கிறான்.
என் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுகிறேன்.
சரவணன் .ச
புனேவில் இர்ருந்து
அன்பு மிக்க திரு சரவணன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
ஆம். நத்தைச் சூரி செடிக்கருகில் நத்தை ஓடுகள் பல இருக்கும்.அதை வைத்தே அந்த மூலிகையை அடையாளம் காணலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Ayya
Arumaiyaana pahivu.Kovai Thiru Narasimanin cell number kodukka mudiyuma
அன்பு மிக்க திரு அரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!நரசிம்மன் அலைபேசி எண் 9865542320.தயவு செய்து அவரிடம் என் அலைபேசி எண்ணைக் கேட்காதீர்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,
தங்கள் பணி எல்லோர்க்கும் பயனாய் அமையட்டும் . பாகம் இரண்டில்
காலற்ற , உடலற்ற , தலையற்ற நாட்களைத் தவிர்த்து என்று
பதிவு செய்து உள்ளீர்கள் . அப்படி என்றால் என்ன. ?
அன்பு மிக்க திரு தயாளன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!
காலற்ற நாட்கள்
( 1 ) கார்த்திகை ( 2 ) உத்திரம் ( 3 ) உத்திராடம்
உடலற்ற நாட்கள்
( 1 ) மிருகசீரிடம் ( 2 ) சித்திரை ( 3 ) அவிட்டம்
தலையற்ற நாட்கள்
( 1 ) புனர்பூசம் ( 2 ) விசாகம் ( 3 ) பூரட்டாதி
மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கண்ட நாட்களாக பஞ்சாங்கம் குறிக்கிறது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ari says:
May 26, 2012 at 11:42 am
Ayya
Arumaiyaana pahivu.Kovai Thiru Narasimanin cell number kodukka mudiyuma
Reply
machamuni says:
May 26, 2012 at 7:04 pm
அன்பு மிக்க திரு அரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!நரசிம்மன் அலைபேசி எண் 9865542320.தயவு செய்து அவரிடம் என் அலைபேசி எண்ணைக் கேட்காதீர்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear sir,
who is narasimman? siddha Dr?
அன்பு மிக்க திரு நரேன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! நரசிம்மன் ஒரு சித்த வித்தை தேடும் நபர்.பல குருமார்களிடம் சித்த மருத்துவம் சித்தர்கள் விடயங்களைக் கற்று வருகிறார்.என்னிடமும் கற்றுக் கொள்கிறார் .அவருக்கு எனக்குத் தெரிந்ததை அவருக்கு பயன்படுபவற்றைக் கற்றுக் கொடுக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
dear sir iam very interested in all thinks
go head more
thank you for your good heart & release
thank you
K selvarajan
Arakkonam
அன்பு மிக்க திரு கே செல்வராஜன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!இன்னும் நிறைய ஒளிப்படக் காட்சிகளும் மூலிகைகளின் செயல்பாட்டு விளக்கங்களும் பதிவில் தொடர்ந்து வரும் அடிக்கடி வருகை புரியுங்கள்.இரகசியமென்று வைத்துத்தான் பல மூலிகை விடயங்கள் அழிந்து விட்டன.இனியும் இது தொடர வேண்டாம்.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Anbulla sagodharare,
Vanakkam. Nan thangaludaya pudhiya vasagan. En veetil kanini illayendralum neram kidaikum podhellam enadhu aluvalahathileye thangaludaya padhivugalai parvai idukindren. Ungaludaya muyarchi vetri pera adiyenadhu valthukkal. Siththarhal, avarhaladhu valkai murai, Ariviyal sarntha maruthuva arivu, kala kanakkeedu, Mooligai gnanam appappa innum eththanai eththanayo. Mudindhavarai ivaihalai meetu paror vazha vazhi seiyya vendukiren. Inivarum padhivuhalukkaga kathirukkiren.
Nandri
MANIKANDAN-KOVAI
அன்பு மிக்க திரு மணிகண்டன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!தங்களின் மனம் போல நடக்கட்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear sri.Samiallaggapan ji,
ur mooligai thodarbana chidigal areapookizham,ellamoolgaigalaium addan photo uddan pootal megavum pyanulladaga irrukkum. ungaluku moovi or still camera photo eddukka thevaipatal neengal chennai or suburban irrundal nan vandu udavakudum,thevaipatal theerivikavum.Neengal indaarumaiyana mooligai cheedigalai thottil vallarthu oru kankatchi chennai il vaithal pallaruku udavum.
Ennaku agya grudan kizhanghum,kalthamarai kizhangum megga cheriya thundu vendum moodinthan en villasathirku annupavum. nan 66 vayathudya illangen ennakku irrandu moottugallilum valli irrupathal ennal moonai poondru (5000 adi parvathamalai erri ullaen)mallai erravendum (mookiyamaga chathuragiri,koollimalai, agthiyar malli sivagiri etc),atharkuriya mooligai photo uddan theerivikkavum Kovai arugil ulla velliangiri/kollimalaiyil oru veda kizhangu kiddaipathagaum addai uttkoongal moottu valli arrave neengum enru pallavarundangalku moon padithulan addai patri kooravum.Vazhga ungal mooligai arratchium makkal pinni therpum valrga
sivanamam sivathondum.Thiruchitrambalm.
Ing.R.Gopalakrishnan,BE,MS(Fr),Shivaannugraha,184/34,PammalMain Road,Pammal,Chennai 600075 044-22484215/9445683123, email:rgtbepammal@yahoo.co.in.
nan ippudu chyum vellai siddilmaddyntha sivalaya thirupani,chandanam arraikum m/c, electrical panchavadyam purely for temple use.
அன்புள்ள திரு கோபாலகிருஷ்ணன் அவர்களே!!!
தங்களின் கருத்துரைக்கு நன்றி,
நான் மருந்துகள் செய்து சந்தைப்படுத்துபவன் அல்ல.நமது நண்பர் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் உங்கள் வியாதிக்கான மருந்துகள் பல உள்ளன .ஏதேனும் ஒன்றை பயன் படுத்திப் பாருங்கள். பயன் கிடைக்கும் .அவரது முகவரி மற்றும் அலை பேசி எண்கள் கீழே கொடுத்துள்ளேன்.
திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அலைபேசி எண்கள்
+919894912594
+919943205566
அவரது முகவரி:-
பெ.கண்ணன்.
சதுரகிரி ஹெர்பல்ஸ்,
2/147,மங்கம்மாள் கோவில் தெரு,
கான்சாபுரம்,(P-O)
திரு வில்லிபுத்தூர் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் பதிவுகள் நன்றாக உள்ளது.
நத்தைச் சூரி கீழ் கொடுக்கப்பட்ட முகவரியில் வேறுமாதிரி உள்ளதே விளக்கவும்.
http://www.grannytherapy.com/tam/2011/10/{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}A4{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}BE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}8D{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AA{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}8D{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AA{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}BE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}B2{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}8D-{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AA{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}86{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}B0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}81{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}95-8/{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}A8{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}A4{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}8D{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}A4{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}88-{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}9A{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}82{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}B0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}BF-5/
அன்புள்ள திரு லியோ சரவணன் அவர்களே!!!
தங்களின் கருத்துரைக்கு நன்றி,
நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் பாட்டி வைத்தியம்,நத்தைச்சூரி பால்சுரக்க என்று மட்டுமே உள்ளது .நத்தைச் சூரி காய கல்ப மூலிகை.இது பல விடயங்களுக்கு உபயோகம் ஆகும் .அதில் ஒன்றாக இந்த உபயோகம் இருக்கலாம்.மற்றபடி முழுவதும் தெரிந்தால் மேலும் விளக்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நீங்கள் பதில் அளித்ததற்கு மிக மிக நன்றி…. நான் கோவையில் இருகிறன் எனக்கு நத்தைச்சூரி கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா???………
அன்புள்ள திரு லியோ சரவணன் அவர்களே!!!
தங்களின் கருத்துரைக்கு நன்றி,
சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணனை நாடினால் நத்தைச்சூரி கிடைக்கும்.அவரது அலைபேசி போன்றவை என் தளத்தில் பல தடவை கொடுத்துவிட்டேன்.அதனால் தேவை இல்லை என்று தவிர்க்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
vanakkam ayya,nan ariya mooligaikalai valarkka aasai padukiren thayavu seithu mooligai chedigal matrum vidhaikal engu kidaikku
nathai soori irukkum idangkkalukku naam kaiyil nathai edthu senral nathai vedikkumame athu unmaiy pls
அன்பு மிக்க திரு சிம்பு மதி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இந்தக் கேள்விகளுக்காக அணுக வேண்டிய நபர் திரு சதுர கிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களைத்தான்!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
thanks for sharing sir.we also using the name ‘thaaara” or “vaathu” for this nathai soori in our kumari district.i think its having the power to open the locks also.
again thanking u for ur efforts.
அன்பு மிக்க பொறியாளர் திரு ஃபிஷல் கான் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இதை குமரி மாவட்டத்தில் இப்படி அழைக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் குதிரைக் கொழுஞ்சி செடி என்றழைக்கிறார்கள் .அந்தந்த மாவட்ட வழக்குப் பெயரிலோ உபயோகப் பெயரிலோ மூலிகைகள் அழைக்கப்படுவதால் சித்த மருத்துவத்தைக் கையாள்வதில் சில குழப்பங்கள் உண்டு .அதற்காகத்தான் மூலிகைகளை படத்துடனும் காணொளிக்காட்சிகளுடனும் பதிவிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
intha mooligai tharpothu valakadu peyar yethum unda,
அன்பு மிக்க திரு அரசன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
அரியலூர், பெரம்பலூர், சேலம் , நாமக்கல் பகுதிகளில் நத்தைச் சூரிக்குப் பெயர் குதிரைக் கொழுஞ்சி என்றழைக்கிறார்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
sir, plz your mobile no send me sir
அன்பு மிக்க திரு பிரபு அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
எமது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு வாருங்கள் .சரியான முகாந்தரத்துடன் அலைபேசி எண்ணைக் கேட்டால் தொடர்பில் வருவோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
sir enaku nathai soori palavithangalil padam ullathu enaku sariyana nathai soori padathai tharumaru kettu kolkiren
அன்புள்ள திரு மணி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
நத்தைச் சூரியின் படங்கள் தற்போது எம்மிடம் இல்லை.சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணனிடம் உள்ளது. அவர்களிடம் இது பற்றி அவரது மின்னஞ்சலுக்கு கேளுங்கள்.அவரிடம் படங்கள் உள்ளன .அவர் பதிலளிப்பார்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
இந்த நத்தை சூரி மூலிகையை எப்படி உபயோகித்து பயனடைவது?
அன்புள்ள திரு டேனியல் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
நத்தைச் சூரி மூலிகையின் பலன்களை ஏற்கெனவேதான் ஐந்து பாகங்களாக எழுதியுள்ளோமே .கீழ்க்கண்ட இணைப்புக்களின் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.
http://machamuni.com/?p=833
http://machamuni.com/?p=793
http://machamuni.com/?p=782
http://machamuni.com/?p=741
http://machamuni.com/?p=727
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
இந்த மூலிகை எங்கள் ஊரில் உள்ளது ஆனால் நத்தை சாகவும் இல்லை நத்தை உடையவும் இல்லை. நத்தை பிடித்து விட்டாலூம் ஒன்றும் ஆகவில்லை. நீங்கள் காண்பிக்கும் இந்த ஜாலம் கோபுரம் தாங்கி, நாயுரிவி, குண்டுமணி இலை இதில் ஏதேணும் ஒன்றை வாயில் அடக்கி கொண்டால் செய்து விடும்
அன்புள்ள திரு வராக ஜோதிடர் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி ,
இதற்கு என்ன பலன்கள் என்பதே எமது விளக்கம்.நத்தைச் சூரியில் எமக்குத் தெரிந்த ஐந்து வகைக்கு, குறையாமல் இருக்கிறது .ஒரே ஒரு வகை செடியை மட்டும் பார்த்துவிட்டு , உங்கள் முடிவு இப்படி என்றால் எமக்கு ஒன்றும் இல்லை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நண்பர்களே
“பதார்த்த குண சிந்தாமணி ” என்னும் அரிய நூலை பதிவிறக்கம் செய்ய கிழே காணும் வலை தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ..
http://search.4shared.com/postDownload/9bTF3ctD/padartha-guna-chintamani.html
அன்புடன்,
டாக்டர் சுந்தர் ..
அன்புள்ள திரு டாக்டர் சுந்தர்…. அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
தேவைப்படுபவர்கள் இந்த இணைப்பை பயன்படுத்தி இந்த நூலை பதிவிறக்கம் செய்து பயனுறுங்கள் . ஆனாலும் ஒரு சித்த மருத்துவரின் துணையோடு இக வாழ்க்கையில் பயன்படுத்துங்கள் . நலம் பிறக்கும் . வாழ்க எம்மான் இவ்வையத்து நாட்டிலெல்லாம் நலமுடனும் , வளமுடனும் .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா. என் வாழ்வில் சித்த மருத்துவத்தை இதுவரை நம்பியதில்லை, ஆனால் உங்கள் பதிவுகளை பார்த்த பிறகு முழுவதுமாக நம்பி விட்டேன். மேலும் சித்த மருத்துவத்தை பற்றியிம் கலைகளை பற்றியிம் அறிய ஆவலாக உள்ளேன்.
மிக மிக நன்றி ஐயா.
அன்புள்ள திரு மோகன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
சித்த மருத்துவம் என்பது மருத்துவமல்ல . அது ஒரு வாழ்வியல் . அது மட்டுமல்ல மரணம் என்பதும் ஒரு நோய் என்பதும் அதையும் குணமாக்கலாம் என்று விவரிப்பதும் சித்த மருத்துவம்தான் .அதை நாம் ஆராய்ச்சி செய்து ஓரளவு அதில் தேறியிருப்பதுவும் இறை அருள்தாம் .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dr swami alagapanku vanakkam.
naththai surin maruthuva kunathai parthu veyanthen
ethai patri naan “AGATHIYAR MUNIVAR” ezhuthuya olai suvadiyoul maruthuvathil irunthu kelvi pattu irukkiren naththai suriyun uruvan theriyamal irunthen eppozhuthu therinthathu atharkku nanri ennakku ethai patri theriya ungalin mugavari (address) thevai (or) mobile number thevai ennudaiya commend parthu ennudai ya Email ID ku ungaludaiya Address mobile number anuppavum.
அன்புள்ள திரு kumaresan அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
உங்களுக்கு பதில் கொடுத்துவிட்டோம் .ஆனால் அது போலியான முகவரி என்று திரும்பிவிட்டது.
http://www.kumaresan1891@gmail.com
எனவே இனி இது போன்ற போலியான நபர்களுக்கு பதில் கொடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளேன் . இவை எனது நேரத்தை அதிகமாக வீணடிக்கின்றன. தினமும் இருபது நபர்களுக்கு பதில் அளித்துள்ளேன் . இன்றும் இருபது நபர்களுக்கு பதில் அளித்துள்ளேன்.இப்படியே எனது நேரம் வீணானால் எப்படி கட்டுரை எழுத இயலும் .இது போன்ற போலி நபர்கள் எம்மிடம் வர வேண்டாம்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Could u pl let me know whom I should contact for buying MUDAVATTUKAL KIZHANGU mooligai which is avl in Koolimalai used as soup for curing knee joint pains (acute). Pl advise. RG
அன்புள்ள திரு Ing.R.Gopalakrishnan,BE,MS(Fr) அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
முதலில் தமிழில் எழுதுங்கள்.பொதுவாக தமிழில் எழுதாதவர்கள் மேல் எமக்கு மரியாதை ஏற்படுவதில்லை. கீழுள்ள இணைப்பைக் காணுங்கள் .
http://machamuni.com/?p=2715
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ayya ungal cell no vanum ungaledam nerya therandu kulavandum
அன்புள்ள திரு லட்சுமி காந்தன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
முதலில் தமிழில் எழுதுங்கள்.பொதுவாக தமிழில் எழுதாதவர்கள் மேல் எமக்கு மரியாதை ஏற்படுவதில்லை.காரணமின்றி (எமக்குச் சரி என்று தோன்றினாலன்றி ) அலைபேசி எண்ணை தருவதில்லை.மன்னிக்கவும் .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Hi sir I need nathai sori where I can get in salem
அன்புள்ள திரு சிவா அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
இது போன்ற வலைத் தளத்தில் தேடினால் கிடைக்கக் கூடிய விடயங்களுக்காக எம்மிடம் கருத்துரையில் கேள்விகளில் வராதீர்கள் .இது எம் பொன்னான நேரத்தை வீணடிக்கும் என்பதை மறவாதீர்கள். உங்களுக்குத் தேவை என்றால் நீங்கள் அல்லவா முயற்சிக்க வேண்டும். அதுவும் சேலத்திலேயே வேண்டும் என்கிறீர்கள் .நத்தை சூரி விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் . ஆனால் அதை உங்களால் சாமானியமாக சூரணமாக்க ( பொடியாக்க முடியாது ) . பொடியாக வெண்டும் என்றால் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணனை தொடர்பு கொள்ளுங்கள் . செடியாக வேண்டும் என்றாலும் அவரையே கேளுங்கள். அதற்கும் அலைபேசி எண்ணை எம்மிடம் கேட்காதீர்கள் . எம் வலைத் தளத்தில் தேடிப் பார்த்து தொடர்பு கொள்ளுங்கள் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,
எனக்கு மொட ஆட்டங்கால் பற்றிய தகவல் மற்றும் படங்கள் அனுப்பி வைக்க முடியுமா?
அன்புள்ள திரு நாகராஜ் ஜெ அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
முன்னரே இது பற்றி நாம் எழுதி இருக்கும் கட்டுரையை கவனித்துப் படிக்கவில்லையா?அனைத்து வலைத்தள அன்பர்களுக்கும் ஒரு வேண்டு கோள் !!! அனைத்து கட்டுரைகளும் படித்துவிட்டு கேள்வி கேளுங்கள் . இணைப்பு இதோ கீழே!
http://machamuni.com/?p=2715
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear sir,
My father is in illness of stroke leftside. Whether this herb will be a medicine for him. Is it available as herbal or oil to me.
Please reply to my mail about it sir.
And am looking for moda aattangizhangu pictures and it’s treatment please tell me more about it sir.
அன்புள்ள திரு நாகராஜ் ஜெ அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
முன்னரே இது பற்றி நாம் எழுதி இருக்கும் கட்டுரையை கவனித்துப் படிக்கவில்லையா?அனைத்து வலைத்தள அன்பர்களுக்கும் ஒரு வேண்டு கோள் !!! இத்துடன் மச்ச முனி மூட்டு வலித் தைலம் வெளிப் பிரயோகமாக உப்யொகிக்க குணம் கிடைக்கும்.அனைத்து கட்டுரைகளும் படித்துவிட்டு கேள்வி கேளுங்கள் . இணைப்பு இதோ கீழே!
http://machamuni.com/?p=2715
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear ayya ,
Vanakkam ayya , en Peru Arun , nan coimbatore il vasikiren. Enaku moola POUTHRAM rombo naala iruku ayya , athuku yenna teervu. Yenna vythiyam better , help panungae ayya . Nandri
அன்புள்ள திரு அருண் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
உங்களுக்குள்ள பிரச்சினைகளை திரு அமீர் சுல்தானிடம் வினவுங்கள்!அவர் தீர்வு தருவார்.
திரு அமீர் சுல்தான் அவர்கள் ,தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,
மச்சமுனி மூலிகையகம்( MACHAMUNI HERBALS )
S.S.I NO: 330021189121
எண்.1/17,5வது தெரு, நாராயணசாமி தோட்டம், சின்னகொடுங்கையூர், சென்னை-118.
Cell: 9597239953
மின் அஞ்சல் முகவரி.
machamunimooligaiyagam@gmail.com
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம் உடலில் வெள்ளை நிறம் பரவி வருகிறது. ஏதாவது வீட்டு வைத்தியம் செய்தால் அந்த இடத்தில் மறைந்து மீண்டும் வேறு இடத்தில் வருகிறது. இதற்க்கு ஏதாவது நிரந்தர தீர்வு உள்ளதா. தயவு செய்து தெரிய படுத்தவும். அதிமதுரம் பயனளிக்கும் என்று படித்தேன் அதுவே போதுமானதா அல்லது வேறு ஏதாவது நல்ல மூலிகை இருக்கிறதா. கடந்த பத்து பதினைந்து வருடங்களாக இருந்து வருகிறது. சில காலம் இல்லாமல் இருந்தது மீன் சாப்பிட்டதும் மீண்டும் வந்து விட்டது. இப்போது பத்து வருடங்களாக எந்த அசைவ உணவும் சாப்பிடுவதில்லை. ஏதாவது நிரந்தர தீர்வு உள்ளதா. எனக்கு வயது 50.
நன்றி
விஜெய்
அன்புள்ள திரு விஜெய் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
லூக்கோடெர்மா என்ற வெண்புள்ளி நோய்க்கு சித்த வைத்தியத்தில் மிக நல்ல தீர்வு உள்ளது.இது மெலனின் என்ற நிறமிச் சத்து குறைவதால் ஏற்படும் ஒரு சத்துக் குறைபாடே தவிர வேறில்லை.கீழுள்ள இணைப்பைப் பாருங்கள் . அதில் ஒரு மருந்து கூறப்பட்டுள்ளது .அதையும் கடைப்பிடிக்கலாம்.வெள்ளைச் சீனியை அறவே தவிருங்கள்.
http://machamuni.com/?p=2204
மேலும் ஹோமியோபதி மருத்துவத்தில் சீபியா (SEPIA- Q) என்ற மருந்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.SEPIA என்பது கணவாய் மீன். இந்த மீன் தன்னை எதிரிகள் துரத்தி வரும் போது கருப்பான ஒரு திரவத்தைத் துப்பி விடும்,இந்தத் திரவத்தால் அந்த இடத்தில் உள்ள தண்ணீர் இருட்டாகி , கணவாய் மீனைத் துரத்தி வரும், எதிரிக்கு கண் தெரியாமல் திணறி அந்த இடத்தைவிட்டு ஓடிவிடும். கணவாய் மீன் துப்பும் திரவம்தான் மெலனின் .இதை நம் உடல் நம் தோலுக்குத் தகுந்த நிறத்துக்கு கொடுக்கும் அளவிற்குக் கூட உற்பத்தி செய்ய இயலாமல் தவிக்கும் போது , கணவாய் மீன் தன்னைக் காத்துக் கொள்ள துப்பும் அளவிற்கு உற்பத்தி செய்யும் அளவிற்கு வல்லமை உள்ளதாக இருக்கிறது. எனவே அதை ஹோமியோபதியில் மருந்தாக்கி வைத்துள்ளார்கள் .இதைப் பயன்படுத்தலாம்.அல்லது அசைவப் பிரியராய் இருந்தால் கணவாய் மீனைச் சாப்பிட்டு வரலாம் .
சைவ உணவாளியாய் இருந்தால் கிரந்தி நாயகம் என்ற செடியை எடுத்து அம்மியில் வைத்து அரைத்து வெள்ளாட்டுப் பாலில் 48 நாட்கள் உண்ண இது அறவே தீரும்.இந்த மருந்து சாப்பிடும் நாட்களில் , பாசிப் பருப்பும் சோறும் உப்பில்லாமல் சாப்பிட்டு வர வேண்டும் .உப்பில்லாக் கஞ்சியும் சாப்பிடலாம்.லூக்கோடெர்மா என்ற வெண்புள்ளி நோய் தீரும்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear,
This is the good one definetely i will try this one
Ayya , thangalin pathivugal mighavum payanullathaga Irukkirathu.nandrigal
ஐயா வணக்கம்
மஹா மூலிகை நத்தைச் சூரிக்கு சாப நிவர்த்தி செய்ய வழி சொல்லுங்கள்
என்றென்றும் நன்றியுடன்,
ஆனந்தன்
அன்புள்ள ஐயா,
எனது மனைவிக்கு அடிக்கடி ஏப்பம் வந்து கொண்ட இருக்கிறது. இந்த பிரச்சனை 2 வார காலமாக உள்ளது. ஏப்பம் வந்தவுடன் பசித்தும் சாப்பிட முடியவில்லை. இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால் இந்த பிரச்சனை உடன் வந்து விடுகிறது. அல்சா்ஆரம்பம் என்று ஒரு சில மருத்துவா் கூற அதற்கு வைத்தியம் பாா்த்துக் கொண்டு இருக்கிறேன். இதற்கு ஒரு தீா்வு கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புள்ள திரு Arulraj.A அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
உங்கள் மனைவிக்கு வந்துள்ள பிரச்சினை சீரணக் குறைபாட்டுப் பிரச்சினை. இதுதான் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாய் உள்ளது .இதுதான் பின்னாளில் சர்க்கரை நோயாகவும் உருவெடுக்கிறது . எனவே இதை சாதாரண அஜீரணக் கோளாறுப் பிரச்சினையாக எண்ணாமல் கீழ்க் கண்ட தீர்வுகளை உடனடியாக கடைப்பிடிக்க முயற்சிக்கவும்.
1) சித்த மருந்துக் கடைகளில் அஷ்ட சூரணம் என்ற மருந்து கிடைக்கும் . அதை வாங்கி நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவிற்கு முன் முதல் கவளம் சாப்பாட்டுடன் பிசைந்து சாப்பிடவும்.அது சிற்றுண்டியாக இருந்தாலும் சரி.
2) சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிடச் சொல்லுங்கள். சாப்பிடு முன்னர் அரை மணி நேரமும் , சப்பிட்ட பின் அரை மணி நேரமும் சாப்பிடும் போதும் தண்ணீர் குடிக்கக் கூடாது .சப்பிட்ட அரை மணி நேரம் கழித்து சூடான வெந்நீர் அருந்துங்கள் .இது உங்கள் சீரண சக்தியை மேம்பட செய்யும்.
3) அவசர அவசரமாக சாப்பாட்டை சாப்பிடாமல், வாயில் வைத்து அரைத்து கூழாக்கி நன்றாக மென்று சாப்பிடவும் . இப்படி சாப்பிட்டால் சாப்பாடு விக்காது . தண்ணீர் தேவையிராது . இப்படி சாப்பிடும் போது உணவு எச்சிலில் உள்ள சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து காரத்தன்மை நிலையை அடைந்துவிடுவதால் மேற்கண்ட பிரச்சினை வராது.
4) இனிப்பு என்று நீங்கள் குறிப்பிடுவது சீனி (அஸ்கா) என்ற வெள்ளை சர்க்கரை சேர்ந்த இனிப்புக்கள் என்றே கருதுகிறேன். இவை அனைத்தையும் அறவே தவிர்த்துவிடுங்கள் . இவற்றுக்கு பதிலாக கருப்பட்டி , நாட்டுச் சர்க்கரை , வெல்லம் சேர்த்து சாப்பிடுங்கள்.
5) பேக்கரியில் இருக்கும் அத்தனை உணவுகளும் மைதாவில் செய்யப்பட்டவை .அவற்றைத் தொடவே தொடவே தொடாதீர்கள் .மைதாவில் சர்க்கரை நோயை வரவழைக்கும் இரசாயனம் உள்ளது .
6)குளித்து முக்கால் மணி நேரம் சாப்பிடாதீர்கள் . சாப்பிட்டு விட்டால் இரண்டரை மணி நேரத்துக்கு குளிக்காதீர்கள்.
7) மாதத்திற்கு இரண்டு முறையோ அல்லது அதற்கு அதிகமான நாட்களிலோ விரதம் இருங்கள் . தந்தை இல்லாதவர்கள் அமாவாசை விரதம் இருப்பார்கள் ,ஏனெனில் அமாவாசை அன்று உடல் காரணகாரனான சந்திரனின் கிரணங்கள் பூமியில் விழாததால் ஜீரண சக்தி குறைந்துவிடும். இது வரை அப்பா இருந்ததால் உடல் நலக் குறைவானால் நம்மைப் பார்த்துக் கொள்வார்கள் .இப்போதுதான் தந்தை இல்லையே எனவே அமாவாசை விரதம் நம்மைப் பார்த்துக் கொள்ளும்.இது போல் திங்கள் கிழமை இருக்கும் விரதம் சோம வார விரதம் என்பார்கள் . சோமன் என்றால் சந்திரன் என்று பொருள் . இதற்கும் மேற்கண்ட பலன் உண்டு.இது போலவே இரத்த காரணகாரனான செவ்வாயன்று இருக்கும் விரதம் இரத்தத்தை சுத்தி செய்யும். இது போலவே நாதத்திற்கும் , விந்திற்கும் காரணகாரர்கள் ஆன வியாழன் அன்று இருக்கும் குரு வார விரதமும் , வெள்ளிக் கிழமை இருக்கும் சுக்கிர வார விரதமும் ஆண்மைக் குறைவு , பெண்மைக்குறைவு , குழந்தைப் பேரின்மை ஆகிவற்றைத் தீர்க்கும்.விதிகளின் அதி சக்தி வாய்ந்த சனியின் கிழமையில் உள்ள சனிக்கிழமையன்று, இருக்கும் சனி வார விரதம் கெடு பலன்களில் இருந்து நம்மைக் காக்கும்.
8) மேற்கண்ட விரதங்களில் ஒன்றிரண்டை கடைப்பிடித்தால் போதும் . வயிற்றின் சீரண சக்தி மீட்டெடுக்கப்படும். விரதம் என்றால் காலையில் சிற்றுண்டி , மதியம் சாப்பாடு , இரவு சிற்றுண்டி என்பதல்ல , இதைத்தான் நாம் தினமும் செய்கிறோமே!! விரதத்தன்று காலையில் வெறும் வயிற்றோடு இருக்க வேண்டும். பால் காப்பி டீ போன்றவை விரத நாட்களில் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் தவிர்க்க வேண்டியவை.மதிய உணவு கைக்குத்தலரிசி(பச்சரிசி) சோறுடன் முதலில் பருப்பு நெய்யுடன் வாழை இலையில் சாப்பிடத் துவங்கி , சாம்பார் , வத்தக் குழம்பு ,மிளகு ரசம் அல்லது கொள்ளு ரசம் அல்லது முடக்கத்தான் ரசம் அல்லது முசுமுசுக்கை ரசம் சாப்பாடு சாப்பிட்டு பின் ஏதாவது ஒரு நாட்டுச் சர்க்கரையிலோ அல்லது வெல்லத்திலோ அல்லது கருப்பட்டியில் செய்த பாசிப்பருப்புப் பாயாசம் சப்பிட்ட பின்னர் கடைசியில் வெண்ணெய் எடுத்த மோரில் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும் அன்று மாலை ஆறு மணிக்கு முன்னர் ஏதாவது ஒரு பழம் (வாழைப் பழம் அல்லது மாதுளம் பழம் சிறந்தது ) சாப்பிட்டு அத்துடன் ஏதும் சாப்பிடாமல் விட்டு விடலாம்.சாதத்தை நன்கு பிசைந்து சாப்பிட வேண்டும். சீரணம் கையில் இருந்து தொடங்கி வாயின் வழியாக வயிற்றில் முடிகிறது என்பார்கள். நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு என்பார்கள் .
9) ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு சாப்பிட வேண்டும் (வருடத்திற்கு இரு முறை என்பார்கள் ).அதற்கு ஆங்கில மருந்துகளை {( purgatives ) மலமிளக்கிகளை } பயன் படுத்தாதீர்கள் .அவை உங்கள் குடல் இயக்கத்தை பாழாக்கும் . பால சஞ்சீவி என்னும் இம்ப்காப்ஸ் தயாரிப்பு சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். அவை சிறு குழந்தைகளுக்கே கொடுக்கக் கூடியவை . அவற்றில் ஒன்று சிறு குழந்தைகளுக்கும் , இரண்டு முதல் நான்கு மாத்திரை வரை பெரியவர்களுக்கும் கொடுக்கலாம்.
10) வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்து தலை முழுகலாம்.அதற்கான விதி முறைகள் நமது வலைத் தள கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்.
http://machamuni.com/?p=4070
11) இத்துடன் மச்ச முனி மூலிகையகத்தில் திரு அமீர் சுல்தான் அவர்களிடம் குடல் புண்ணாற்றி என்ற மருந்து கிடைக்கும் அதையும் வாங்கி உபயோகித்து பலன் பெறவும்.
இவைகளெல்லாம் நோயணுகா விதிகளில் சொல்லப்பட்டிருப்பவை . இவற்றை யாவரும் கடைப்பிடிக்கலாம்.நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
respectsd ayya
Nathai churiyai patri ungal vilakam kodi rubai koduthalum kidaikathu nandri