கை பிடி விளையாட்டு ( வர்மத்தின் உட்பிரிவு )

எச்சரிக்கை :-இதில் உள்ள விடயங்கள் எல்லாம் மிகத் தரம் வாய்ந்த வர்ம மருத்துவரால் மட்டுமே செய்யப்பட வேண்டும். மாறாக விளையாட்டுக்கோ, செய்து பார்ப்போம் என்ற வீண் செயலிலோ ஈடுபட்டால் விளையும் விளையும் உயிர்ச் சேதத்துக்கோ உடல் சேதத்துக்கோ நாம் பொறுப்பேற்க முடியாது என்று எச்சரிக்கிறோம்.

கைபிடி விளையாட்டு என்றால் கையை பிடித்து விளையாடும் விளையாட்டல்ல. இது கையை ஒடிப்பது காலை ஒடிப்பது போன்ற விடயங்களைக் கற்றுக் கொடுக்கும் வர்மத்தின் உட்பிரிவு இது . நாமோ வைத்தியர் நமக்கெதற்கு இந்த ஒடிப்பதும் உயிர்களை துன்பப் படுத்துவதும் ??? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 

கைபிடி விளையாட்டு மூட்டுக்களை கழற்றும் விதத்தைப் போதிப்பது .இந்த விதத்தில் முறுக்கேற்றி மூட்டைக் கழற்றினால் மீண்டும் அதற்கு எதிர் திசையில் மூட்டை தளர்வாக கொண்டு சென்று சேர்த்தால் சேர்ந்துவிடும்.அவ்வளவுதான். மூட்டுக்கள் எப்படி சேர்த்து ஆக்கப்பட்டிருக்கின்றன என்பன போன்ற விடயங்களையும் ,அவற்றில் நரம்புகள் எப்படி வேலை செய்கின்றன என்பதையும் போதிப்பதே இந்த கைபிடி விளையாட்டு.

இது தெரியாததால்தான் சிலர் மூட்டுக்களை வகையாக சரி செய்யத் தெரியாமல் அப்படியே வெறும் கட்டுக்களை மட்டும் போட்டு அனுப்பிவிடுவார்கள் .ஆனால் மூட்டுக்கள் மடக்க நீட்ட முடியாமல் வாழ்நாள் பூராவும் அவதிப்படுவார்கள் .

இது சித்தர்களின் கலை .இதைத்தான் வெளிநாட்டார்கள் நம்மிடம் இருந்து கற்றுக் கொண்டு மீண்டும் நமக்கே கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் கராத்தே , குங் பூ போன்றவற்றிற்கெல்லாம் தாத்தா இது தான்.

கீழே உள்ள காணொளிக் காட்சியில் கையில் ஒரு முறுக்கை ஏற்றும் விதமும் , அதில்  எதிராளி பிடிபடும் விதமும் அதில் இருந்து விடுபடும் விதமும் விளக்கியுள்ளேன் .தயவு செய்து சரியான ஆசான் இல்லாமல் யாரிடமும் பரீட்சை செய்து பார்த்துவிடாதீர்கள் .

அதற்காகத்தான் முதலிலேயே எச்சரிக்கை செய்து இருக்கிறேன். பிடியில் இருந்து விடுபடும் போது பிடியில் இருக்கும் நபர் சுற்றலை மாற்றி சுற்றினால் அவரது  கை ஒடிந்துவிடும் .எனவே கவனம் தேவை.

 

[tube]http://www.youtube.com/watch?v=o_O47p1loTQ[/tube]

[tube]http://www.youtube.com/watch?v=HGAoX2HJaXA[/tube]

வேறொரு முக்கிய சித்தர்கள் விடயத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கிறோம்.