மச்ச முனி மூலிகையகம்(பாகம் 7) சிறுநீரக சீரமைப்பு சூரணம்
சிறுநீரகசீரமைப்புசூரணம்
(KIDNEY RETRIEVAL)
சிறுநீரகசீரமைப்புசூரணத்தில் கலந்துள்ள பொருட்கள் கீழுள்ளவைகள
-
பேராமுட்டி வேர்
-
மூக்கிரட்டை
- சிறுபீளை
- நெருஞ்சில்
- மாவிலங்கப்பட்டை
- சிலாசத்து
- நண்டுக்கல்
- படிகார பற்பம்
- கல்நார் பற்பம்
- திரிபலா சூரணம்
சிறுநீரக பிரச்சினைகளான, சிறுநீரக கற்கள்,
நீர்கடுப்பு, நீரெரிச்சல்,சிறு நீரக செயலிளப்பு
சிறு நீரகம் சுருங்கிப் போதல்
போன்றவைகளுக்கும் இச்சூரணம் நல்ல
நிவாரணத்தைத் தரும். அது மட்டுமல்ல
சிறு நீரகம் பார்த்துக் கொள்ளும் உடலின்
உள்ளுறுப்புக்களான எலும்பையும் ,
எலும்பின் மச்சையையும் சரிசெய்யும்.
கழுத்தெலும்புத் தேய்வு , கால் முட்டித்
தேய்வு போன்றவைகளையும் உடலில் துர்
() குதிகாலிலும் , முழங்கால்
மூட்டுகளிலும் , இடுப்பு , கழுத்தெலும்பு
போன்ற இடங்களில் நீர்த் தேக்கம்
அதிகரிக்கும் சூழ்நிலையால் உண்டாகும்
வலியையும் நீக்கும்.
இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி
திரு அமீர் சுல்தான்.
மின்னஞ்சல் :-
machamunimooligaiyagam@gmail.com
அலைபேசி எண் :- 9597239953
ஐயா வணக்கம்,
என் நண்பர் ஒருவர் Polycystic kidney disease (PKD) என்னும் நோயால் அவதி படுகிறார்.
கடந்த மாதம் நோய் தாக்கம் அதிகமாகி கால்,கைகளில் புண் வந்து அது தோல் நோய் என்று தவறாக புரிந்து ,,,,ஒரு வழி படுத்தி ஆபரேஷன் பண்ணும நிலைக்கு விட்டுடிச்சு..
டாக்டர் ஒரு ஆண்டு/ஆறு மாதத்துக்குள் கிட்னி ட்ரான்ஸ்பிளான்ட் மற்றும்படி அட்வைஸ் கொடுத்து உள்ளார்கள்.
இதற்கு என்ன தீர்வு ஐயா.?
நன்றி.
அன்புள்ள திரு கலியுக ராவணன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இறைவன் படைத்த எந்த உறுப்புமே பழுதாகும் படி படைக்கப்படுவதில்லை .மக்கள் வாழ்க்கையில் அவரவர்கள் பழைய சிறு நீரகம் பழுதாகக் காரணமே அவர்கள் பழக்க வழக்கங்களே காரணம்.மீண்டும் ஒரு சிறு நீரகத்தைப் பொறுத்தினாலும் , அதுவும் எவ்வளவு நாள் பலன் தரும். இதற்கு பழைய சிறு நீரகத்தையே சரி செய்யலாமே!
இதற்கு சிறு நீரக சீரமைப்புச் சூரணமே பலன் தரும்.
இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி
திரு அமீர் சுல்தான்.
மின்னஞ்சல் :-
machamunimooligaiyagam@gmail.com
அலைபேசி எண் :- 9597239953
ஐயா வணக்கம்.
மிக்க நன்றி
என்பது வயது உடைய வயதானவர்கள் (டியாபெட்ஸ்) மூத்திரம் அடக்க முடியாமல் டாய்லெட் போகும் முன்பே அடக்க முடியாமல் உடன் போகறதுக்கு என்ன காரணம்???இவங்கள வெளிய கொண்டு போகறதுக்கு ரொம்போ கஷ்டமா இருக்கு?
அதற்கும் இந்த சூரணம் யூஸ் பண்ணலாமா??
அன்புள்ள திரு கலியுக ராவணன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
இந்தச் சூரணத்தைத் தாராளமாக உபயோகிக்கலாம். பெரியவர்கள் ஆண்களாக இருந்தால் புரஸ்த கோளம் வீக்கமடைவதாலும் சிறு நீர்ப்பையின் சிறுநீர் தாங்கும் திறன் குறைவதாலும்தான் இது நிகழ்கிறது .இந்த நிலையை இந்தச் சூரணம் மீட்டு சரி செய்யும். இனப்பெருக்க மற்றும் சிறு நீர் மண்டலத்தை சிறு நீரகமே பார்த்துக் கொள்கிறது . எனவே சிறு நீரகத்தை சரி செய்தால் இவை அனைத்துமே சரியாகும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்!!!
அன்புள்ள திரு கலியுக ராவணன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா வணக்கம்,
தங்களின் ஒவ்வொரு பதிவும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
சேவை பாராட்டுக்குரியது…..
இப்படிக்கு
ர.குணவதி
அன்புள்ள திரு ர.குணவதி அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய ஐயா,
என் தந்தைக்கு 61 வயது. அவர் வலது தோள் பட்டையில் 8 வருடங்களாக கருப்பு மரு
இரண்டு கடலை பருப்பு அளவில் உள்ளது. தற்போது ஒரு குழந்தை அதை பிய்தததால் சிறிது பெரியதாகி உள்ளது. மருத்துவர் அதை ஸர்ஜரீ செய்து அகற்றி பையாப்ஸீ அனுப்ப வேண்டும் என்று சொல்லி உள்ளார். 20 வருடமாக BP மாத்திரை சாப்பிடுகிறார். 3 மாதங்களாக மருதம் பட்டை, நத்தை சூரி சாப்பிடுகிறார். அவருக்கு கால் edema பயணத்தின் போது உள்ளது. வலையில் மரு குணமாக வேப்எண்ணை உள்ளுக்கும், வெளிப்பூச்சாகவும்
,சுண்ணாம்பு,மஞ்சள்,கற்றாழை தடவினால் பழுத்து விழும் என்று போட்டு இருந்தது. விரைவில் குணம் தெரிய மருந்து கூறுங்கள். மிக்க நன்றி,
தாரணி.
அன்புள்ள திரு தாரணி அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
அம்மான் பச்சரிசி என்ற மூலிகையில் பாலை மருவும் உடலும் சேரும் இடத்தில் போட்டு வர அது உதிரும். மேலும் மருக்கள் வராமல் இருக்க நக்ஸ் வாமிகா – 30 என்ற ஹோமியோ மருந்து மாத்திரைகளை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நன்று.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மிக்க நன்றி அய்யா.
Dear Sir,
I follow your website past 3 months,
My Mother affected with sugar for 12 years, Now she is in Diabetic Neuro problem. Sugar level is 180-260 taking regular English / Homio medicine , Till she is in Leg sweling / Hand Sweling. two days back we take a Sugar test the result is 184/200. she is in initial stage of Renal Failure . so Kindly send me the medicine details.
Saran
9566181919
chennai-58
அன்புள்ள திரு சரண் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி ,
உங்கள் தாயாருக்கு , மது மேகச் சிறப்புச் சூரணம் திரு அமீர் சுல்த்தான் அவர்களிடம் கிடைக்கும் . இது சற்று விலை அதிகம், அப்ரேக பற்பம் 30 புடமும் , அப்ரேக பற்பம் 100 புடமும் கலக்கப்பட்டது . அதை இரு மாதங்கள் உபயோகித்த பின்னர் சாதாரண மது மேகச் சூரணத்தை உபயோகியுங்கள் .மது மேகத்தால் சப்த தாதுக்களும் நசிந்து போயிருக்கும்.அந்த சப்த தாதுக்களும் பலம் பெற்றால்தான் உடல் நலம் பெற்று, நலம் விளையும் . நல்ல பலன் கிடைக்கும்.இதை இன்சுலின் ஊசி மருந்து உபயோகிப்பவர்களும் பயன்படுத்தி நல்ல பலன் பெறலாம் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear Dr.
My mother aged 72 is suffering from BP & Sugar for which she is under medication which in turn affects the performance of the kidney now.
Presently is is suffering from high level of blood urea and sr creatinine level 3.4..
I would be glad to know whether she can take the sooranam ?… will it affect the alopathic medicine ..? shrink kidney will develop into normal and perform better…?
I need your guidance
MMMathi, Mumbai.
9172164260
அன்புள்ள திரு எம் மதியழகன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி ,
மிக நல்லது. உங்களுக்கு எமது அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு அனுப்பப்பட்டு நீங்கள் எம்முடன் பேசிவிட்டதால் இதற்கு பதில் அவசியமில்லாமல் போய்விட்டது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா வணக்கம்,எனக்கு 44வயதாகிறது.17வயதிலேயே (RHEUMATIC ARTHRITICS &ANKYLOSING SPONDYLITIS) வந்துவிட்டது.அன்றிலிருந்து நான் ஆங்கில மருத்துவம் பார்த்தேன்.[voveron50mg] [celestone] என்ற மாத்திரையை 15 வருடமாக சாப்பிட்டு வந்தேன்.அதன் விளைவாக சொட்டுசொட்டாக சிறு நீர் வந்துகொண்டே இருக்கிறது.விதைப்பையில் சிறு சிறு கொப்புளங்கள் இருக்கிறது.எனவே இதற்கு சிறு நீரக சீரமைப்பு சூரணம் சாப்பிடலாமா ? இதற்கு [முடக்கு வாதம்]+ ஸ்பாண்டிலைடிஸுக்கும் சாப்பிடலாமா? நல்ல பதில் கூறுங்கள்
அன்புள்ள திரு கண்ணன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
///[voveron50mg] [celestone] என்ற மாத்திரையை 15 வருடமாக சாப்பிட்டு வந்தேன்.///தவறான பாதையில் வெகு காலம் பயனித்துள்ளீர்கள் . சிறுநீரகத்தை பதினேழு வயதிலிருந்து நாற்பத்து நான்கு வயது வரை இருபத்து ஏழு வருடங்கள் கெடுத்து வந்துள்ளீர்கள் .சிறு நீரக மண்டல முழுவதையும் இந்த மருந்துகள் கெடுத்து வந்திருக்கும் . இயற்கையாக உங்கள் உடல் சிறு நீரக மண்டலம் கெட்டுப் போனதால்தான் (RHEUMATIC ARTHRITICS &ANKYLOSING SPONDYLITIS) மூட்டு வலிகள் ஏற்படுகின்றன .ஏனெனில் சிறு நீரகம் வெளியேற்றும் யூரிக் அமிலம்தான் நமது சுண்ணாம்பால் ஆக்கப்பட்ட இந்த எலும்பானால் ஆன சட்டகத்தை அரித்து சிதைத்து வருகிறது. ஆனால் இந்தச் சட்டகம்தான் உடலைத் தூக்கி நிறுத்துவது. ஆனால் நீங்கள் இந்தச் சட்டகத்தை மேலும் , மேலும் சிதைத்து வருவதை பல்லாண்டாக செய்து வந்துள்ளீர்கள் . ஆனாலும் இதற்கு சிறு நீரக சீரமைப்பு சூரணம் நல்ல பலன் தரும் .உடனே அல்ல .குறைந்தது இரண்டு வருடங்களாவது சாப்பிட்டால்தான் பலன் தெரியும் .உங்கள் பிரச்சினைகளுக்கும் தீர்வு இவைதான் .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம், எனது மகனுக்கு வயது 28. 6மாதம் முன்பு இருபுறமும் சிறுநீரக கற்கள் இருந்தது. அதில் வலது புறம் உள்ள கல் சிறுநீரக குழாயுடன் ஒட்டி இருந்தது. ஆகவே அறுவை கிகிச்சை செய்யப்பட்டது. மீண்டும் 3 மாதம் கழித்து அதே கற்கல் மீண்டும் அறுவை கிகிச்சை செய்யப்பட்டது மீண்டும் 15 மாதம் கழித்து அதே கற்கல் மீண்டும் அறுவை கிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள். அவர்கள் செய்த அறுவை கிகிச்சை தவறினால் வலதுபுறம் செயல் திறன் மிக குறைவாக உள்ளது. தாங்கள் எனக்கு ஒரு நல்ல வழி காட்டவும்.
அன்புள்ள திரு K.A.தியாகராஜன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
உங்கள் மகனுக்கு சிகிச்சை அளிக்கும் முன்னர் கீழ்க்கண்ட எமது கட்டுரைகளை படித்துவிட்டு மீண்டும் கேள்விகள் கேளுங்கள் .
http://machamuni.blogspot.in/2011/02/11.html
http://machamuni.blogspot.in/2011/01/1.html
http://machamuni.blogspot.in/2011/08/blog-post_20.html
http://machamuni.blogspot.in/2011/12/50-1.html
உள்ளுக்கு மச்சமுனி சிறுநீரக சிரமைப்புச் சூரணம் காலையிலும் , மாலையிலும் சாப்பிட்டு வர நலம் பிறக்கும் .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்