ஒரு சிறந்த ரசவாதி ( பாகம் 2 )

சென்ற பதிவில் எழுதியிருந்த பச்சை சிங்கமே “பச்சை மாமலை போல் மேனி ” என்று வைணவர்களாலும் ,  “ஆங்காரி என்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி ஆகியே ஐவரை பெற்றிட்டு ரீங்காரத்துள்ளே இனிதிருந்தாளே!!”என்று திரு மூலரும், கிறித்துவர்களால் கிறிஸ்துமஸ் மரம் என்றும் , முகமதிய சகோதரர்களால் கொடியில் பச்சையாக வைக்கப்பட்டும் மறை பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாகவே அகாரம் , உகாரம் , மகாரம் , சிகாரம் என்பவை தோற்றமாகின்றன . அது மட்டுமல்ல இவை உடலின் உள்ளே சேர்ந்திடில் உடல் அழியாத் தேகமாகும்.இந்த வித்தை ”வகார வித்தை”  என்றும் அழைக்கப்படுகிறது.

///அன்புள்ள சாமிஜி பதிவினை படித்ததும் மிகவும் ஆச்சர்யமும் பெருமிதமும் அடைந்தேன் . ஐங்கோலக்கரு என்பது சித்தவேதியியலில் மிகவும் சிறப்பானது . இதனை சித்தர்கள் சிறப்பாக கூறி இருக்கிறார்கள். இந்த சித்தவேதியியலில் எங்களுக்கு ஒரு குருவை காட்டிய நீங்களே எங்கள் (தொட்டு காட்டிய )குரு..அரிய அற்புதமான பதிவு . இந்த மறைபொருள் விளக்கங்களை திறந்து வெளியிடுவோர் இன்று யாரும் இல்லை . மேலும் இது போன்ற வேதியியல் விளக்கங்களை தர வேண்டுமாய் என் போன்ற ஆர்வமுள்ள மாணவர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.

காடி,பழச்சாறு,கருங்குறுவை அரிசி பற்றியும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். 

என்றும் அன்புடன் ஹரி///

இப்போது மேலே உள்ள அன்பர் ஹரி கேட்டிருந்த கருங்குறுவை அரிசி பற்றியும் காடி பற்றியும் தெளிவுபடுத்த இருக்கிறேன்.

இந்த காடி செய்யும் பக்குவம் முழுக்க ஆணே செய்ய வேண்டும் . பெண் வாடையே ஆகாது.

நான் என்னுடைய அனுபவத்தைக் கூறுகிறேன். கருங்குறுவை அரிசி என்பது திருச்சி காந்தி சந்தையில் முனியாப்பிள்ளை கடையில் கிடைக்கும். அதை வாங்கிக் கொண்டு வந்து ஒரு மண் பானையில் சமைத்து, மறு பானையில் மாற்றி தண்ணீ ர் ஊற்றி வெயிலில் வைக்க வேண்டும் . மறுநாள் மாலையில் வேறு ஒரு புது மண்பானையில் மாற்றி நன்கு கலக்கி கிண்டிவிட வேண்டும் .பிறகு வெயிலில் வைக்க வேண்டும்.

மறு நாள் மீண்டும் கழுவி வைத்த பானைக்கு மாற்றி கிண்டி மீண்டும் வெயிலில் வைக்க வேண்டும் .இது போல 6 மாதங்கள் செய்ய வேண்டும்.நடுவில் சோறு முழுக்க கரைந்துவிட்டால் மீண்டும் கருங்குறுவை சோறாக்கி இதில் சேர்க்க வேண்டும் .இவ்வாறு சோறு தீர்ந்து கரைந்து போகும் போதெல்லாம் சேர்க்க வேண்டும் . இவ்வாறு செய்த கருங்குருவைக் காடி 6 மாதமானால் அமாவாசை ,  பௌர்ணமிக்கு வீணை இசைப்பதைப் போல் டொய்ங் , டொய்ங் என்று சத்தமிடும்.இதுதான் கருங்குறுவைக் காடி என அழைக்கப்படுகிறது.

இந்த குணங்கள் குறிகள் எல்லாம் அதில் இருந்தன.அவர்கள் வர்ணித்தது போலவே எல்லாம் நடந்தது.

இந்த காடி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும் என்று  கண்ணுசாமி பிள்ளையவர்கள் எழுதிய நூலில் கூறியுள்ளது.இந்த கருங்குருவைக்காடி செய்ய நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இதுவல்ல கருங்குறுவைக்காடி என்று தெரிந்த போது நொந்து போனேன்.

சுத்த கங்கை என்பதுதான் பச்சை சிங்கத்திலிருந்து கிடைப்பது.அந்த சுத்த கங்கை இதோ கீழே!!!

சுத்த கங்கை 

இதோ கீழே கருங்குறுவை  

கருங்குருவையைப் போல தோற்றம் உள்ள இந்த பொருள்தான் கருங்குறுவை . இந்தக் கருங்குறுவையை சுத்த கங்கையுடன் சேர்க்கும் போதுதான் கருங் குறுவைக்காடி கிடைக்கும் . இந்தக் கருங்குருவைக் காடிதான் பல விடயங்களை சாதிக்கும் வல்லமை உடையது .இந்தக் கருங்குறுவைக்காடியை சிவப்புத் திராட்சை ரசத்தில் சாப்பிட வேண்டும் .  இதுதான் பாவங்களைப் போக்கும் ஏசுவின் இரத்தம் என்றழைக்கப்படுகிறது .

கருங்குறுவைக் காடி

திராட்சை ரசம்

இன்னும் மற்ற சித்த ரகசியங்கள் மீண்டும் ஒரு பதிவு என் ஒரு சிறந்த ரசவாதி பாகம் 3 ,  26  – 06 – 2012 அன்று வெளி வர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .அதில் ஒளிப் படக் காட்சிகளும் இடம் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.