பூனை மீசை(ஒரு அற்புத சிறு நீரக சீரமைப்பு மூலிகை)
பூனை மீசை(ஒரு அற்புத சிறு நீரக சீரமைப்பு மூலிகை)
இந்த பூனை மீசை ஒரு அற்புதமான மூலிகை . இது சிறு நீரக செயலிளப்புக்கு அருமருந்தாக திகழ்கிறது .சிறு நீரக செயலிளப்புக்கு நெருஞ்சில் , யானை
நெருஞ்சில் , செப்பு நெருஞ்சில் , கூரைப்பூ என்னும் சிறு கண் பீழை போன்ற பல மூலிகைகள் சிறு நீரக சீரமைப்பு சூரணத்தில்சேர்க்கப்பட்டுஅத்துடன் இன்னும் பல மூலிகைகளும் சித்த மருந்துகளும் சேர்க்கப்பட்டு வந்தாலும் தற்போது இந்த பூனை மீசை என்ற ஒரு அற்புதமான மூலிகையுடன் சேர்க்கப்பட்டு நமது மச்ச முனி வலைத் தள அன்பர்களுக்காக வருகிறது .
நமது மச்ச முனி மூலிகையக தயாரிப்பான சிறு நீரக சீரமைப்புச் சூரணத்தில் கலக்க , இந்த பூனைமீசையை மலேசியாவில் உள்ள மலேசியன் பயோ டைவேர்சிட்டியால் (மலேசிய அரசுத்துறை ) தயாரிக்கப்பட்டு , சந்தைப்படுத்தப்படுகிறது . திரு முத்துக்குமார் என்ற நமது வலைத்தள அன்பரால் இலவசமாக திரு அமீர் சுல்த்தான் அவர்களுக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளது . திரு முத்துக்குமார் அவர்களுக்கு நமது வலைத்தள அன்பர்கள் சார்பில் பெரும் நெஞ்சார்ந்த நன்றிகள் .
இந்த பூனை மீசை என்ற ஒரு அற்புதமான மூலிகை கலந்த சிறுநீரக சீரமைப்பு சூரணத்துக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி
திரு அமீர் சுல்தான்.
மின்னஞ்சல் :-
machamunimooligaiyagam@gmail.com
அலைபேசி எண் :- 9597239953
மச்சமுனி ஐயா அவர்களுக்கு,
“brain dead” என்றால் என்ன? மூளை சாவு ஏற்பட்ட பின்பும் உடல் இயக்கம் இருப்பது எப்படி? என் நண்பனுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு மூளை சாவு ஏற்பட்டு விட்டது. ஆனால் அவன் காலை லேசாக சுரண்டி பார்க்கும் போது காலில் அசைவு ஏற்பட்டது. ஆனால் மருத்துவர்கள் அவன் உயிரோடுதான் இருக்கிறான் என்று ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர். அவனை பிழைக்க வைக்க முடியாதா?
Dear Premanand,
You can try for accupanchur
Regards
Sekar
அன்புள்ள திரு சேகர் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
திரு பிரேமானந்த் அவர்களுக்கு உங்கள் கருத்துரை பயன்படட்டும்.யாம் இந்த குத்தூசி மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளோம் என்றும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
திரு மச்சமுனி ஐயா,
திரு. சேகர் அவர்களுக்கும், மச்சமுனி ஐயா அவர்களுக்கும் நன்றி.
என் நண்பர் இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்,
அன்புள்ள திரு பிரேமானந்த் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
நாம் பொதுவாக மரணத்தை வருத்தத்துடன் எதிர் கொள்கிறோம்.ஆனால் உண்மையில் மரணம் அது போலல்ல.நாம் இறைவனோடு இன்பம் அனுபவித்துக் கொண்டு இருந்தோம்.அந்த இன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க திகட்டிப்போய் எப்படி இனிப்பு சாப்பிட்ட பின்னர் காரம் சாப்பிட எண்ணுகிறோமோ அதே போல் துன்பங்களை அனுபவிக்கவே நாம் பிறவி எடுக்கிறோம்.துன்பங்களை இறைவனிடம் நாம் வரமாகப் பெற்று வருகிறோம்.இதையே நம் கிராமங்களில் நான் வாங்கி வந்த வரம் அவ்வளவுதான் என்பார்கள் . நாம் எப்படிப்பட்ட துன்பங்களை அனுபவிக்க இந்தப் பூவுலகிற்கு வந்தோமோ,அதற்கேற்றாற் போல் வினைகளுக்கேற்ற உடலை எடுக்க இங்கே வந்து அதற்கேற்றாற் போலுள்ள தாயின் , நாதத்தாலும் தந்தையின் விந்தாலும் நாம் அனுபவிக்க இருக்கும் வினைகளுக்கேற்ற உடலை எடுக்கிறோம் .நாம் அனுபவிக்க விரும்பி வந்த வினைகளை அனுபவித்து முடித்த பின்னர் இந்த நைந்து போன உடலைத் துறந்து உயிர் வேறு புதிய உடலை எடுக்க பறந்து போகிறது . நாம் பழைய கிழிந்து போன சட்டையை கழற்றிவிட்டு புதுச் சட்டை போட்டால் எவ்வளவு சந்தோஷத்துடன் அதை சுற்றிச் சுற்றிப் பார்த்து மகிழ்கிறோம்.அதே போல நம் உடலும் புது உடல் எடுக்கப் போகிறது.நம் உயிருக்குச் சட்டை உடல். உடலுக்கு சட்டை நாம் போடும் உடைகள் .உடலுக்கு புதுச் சட்டை போடும் போதே மகிழும் நாம் உயிர் தன் சட்டையான உடலை மாற்றும்போது வருந்துகிறோம்.கீழே கொடுத்துள்ள இணைப்பைப் பாருங்கள் .
வருந்தாதீர்கள்.கீழே கொடுத்துள்ள இணைப்புக்களையும் பாருங்கள் .
http://www.youtube.com/watch?v=JrL1mocPquQ
http://www.youtube.com/watch?v=6Wc9psmFsGA
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஒரு சில காணொளிகள் மூலம் வாழ்க்கை-மரணம்-மறுபிறப்பு பற்றி புரியவைத்து விட்டீர்கள் அய்யா
அன்புள்ள திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Sir,
My father suffering Kidney failure( Heart ,diabetic), Now he is under dialysis.This medicine will help him to improve his kidney issue?.
Thanks,
Senthil.
அன்புள்ள திரு செந்தில் வேலன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
முதலில் தமிழில் எழுதுங்கள் .நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள்.
ராஜ கருவிகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் எம்மிடம் கேள்வி கேட்டு வந்திருக்கிறீர்கள் .நீங்கள் கேட்க வேண்டியது சிறு நீரக சீரமமைப்புச் சூரணம் கீழ்க்கண்டவரிடம் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்.இரத்தத்தை சுத்திகரிப்பு செய்வதை உடனே நிறுத்திவிடாமல் , அதையும் தொடருங்கள்.இரத்தத்தை சுத்திகரிக்கும் இடைவெளி அதிகரிக்கும் . பின்னர் இறைவன் அருளால் அவர் முழு நலமடைந்தால் தெரிவியுங்கள் .
திரு அமீர் சுல்தான்.
மின்னஞ்சல் :-machamunimooligaiyagam@gmail.com
அலைபேசி எண் :- 9597239953
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள ஐயா, வணக்கம்.
எனது சித்திக்கு (வயது 36) இருமல் மற்றும் தும்மல் வரும்போது 2-3 சொட்டுக்கள் சிறுநீர் வந்து விடுகிறது. மிகவும் கவலைப்படுகிறார். இதனை குணப்படுத்த என்ன செய்வது என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.
தயவு செய்து தாங்கள் ஆலோசனை கூறவும்.
நன்றி.
அன்புடன்
வெங்கட்
அன்புள்ள திரு வெங்கட் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
இருமும் போது சிறு நீர்ப்பை வாய் சரியாக மூடும் அளவிற்கு வல்லமையாய் இல்லாததால் வரும் தொல்லையே இது. சிறு நீரக சீரமைப்புச் சூரணம் இந்தக் குறைபாட்டைச் சரி செய்யும்.விவரங்களுக்கு அமீர் சுல்த்தானை தொடர்பு கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear sir,
first I am sorry for writing in English… i don’t have other choice….and my problem is…
I have problem of sun allergy…If i go out in sun even in morning time by 11 o clock, by skin gets itching and irritation .. its troubling me a lot…itching occurs only in the body parts were i can’t cover by wearing clothes like hand, neck and ears .. please give me a remedy for this..
Regrads,
Hari
அன்புள்ள திரு ஹரி அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
குங்குமாதி லேபம் (இம்ப்காப்ஸ்) வாங்கி உடலில் துணி போர்த்தப்படாத இடங்களில் வெளியே தடவி வாருங்கள். துத்தி விதைச் சூரணம் சேர்க்கப்பட்ட தோல் நோய் நிவாரணியை உள்ளுக்கு சாப்பிட மிக்க நலம் விழையும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புடையீர், வணக்கம். தங்களின் மேலான பதிலுக்கு மிக்க நன்றி!
தாங்கள் கூறினது போல் திரு. அமீர் சுல்தான் அவர்களை தொடர்பு கொண்டேன். உடனே பணம் அனுப்பி விட்டேன். இன்று மருந்து அனுப்புவதாக கூறியுள்ளார்.
தங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
அன்புடன்
வெங்கட்
அன்புள்ள திரு வெங்கட் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Thank you sir..
அன்புள்ள திரு ஹரி அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புடையீர்,
வணக்கம் ஐயா!
எனது நெருங்கிய உறவினர் இரண்டு முறை திடீரென மயங்கி (இரு சக்கர வாகனத்தில் போகும் போது) விழுந்து விட்டார். மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், அவருக்கு உப்பு அதிகமாக உள்ளது என்றும், 4 தடவை (வாரம் ஒரு முறை) சிறுநீரகம் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
மிகவும் கவலையாக உள்ளது. டயாலிசிஸ் தான் ஒரே வழியா? அல்லது சித்த மருத்துவத்தில் குணமாக்க முடியுமா?
தயவு கூர்ந்து வழி கூறவும். தங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கும்
வெங்கட்
அன்புள்ள திரு வெங்கட் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
கீழேயுள்ள இணைப்பைப் பாருங்கள்.
http://machamuni.com/?p=3040
நன்றியுடன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்