சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 2)

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 1) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

முதலில் சர்க்கரை நோய் என்ற ஒன்று வியாதியே கிடையாது . மேலும் இந்தக் கட்டுரையை படிக்கும் முன்னர் அலோபதி மருத்துவர்கள் சர்க்கரை வியாதி பற்றி உங்களுக்கு சொல்லியிருக்கும் அத்தனை குப்பைகளையும் தூக்கி உங்கள் தலையில் இருந்து வெளியே  எறிந்துவிடுங்கள்.பின்பு கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

நாம் சகஜமாக பார்க்கும் இன்னோர் விடயம் , ”உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா??? ஏன் மெலிந்து கொண்டே போகிறீர்கள்???” என்று கேட்டால் , சர்க்கரை வியாதியுள்ளவர் சொல்லும் பதில் ” என்ன என்று தெரியவில்லை . அலோபதி மருத்துவர் கொடுக்கும் எல்லா மருந்துகளையும் , முறையோடு எடுத்து சாப்பிட்டு வருகிறேன் . இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில்தான்  வைத்திருக்கிறேன் .ஆனாலும் இதய வலி , கண்பார்வைக் குறைவு , சர்க்கரை நோயினால் உள்ளுறுப்புக்கள் பாதிப்புக்கள்,காலில் சுருக்,சுருக் என்று ஊசி வைத்து குத்துவது போன்ற வலி,கால் பெரு விரல்களில் புண், கால் பெருவிரல் நகம் செத்துப் போதல் என பல துன்பங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன .ஏன் என்றே தெரியவில்லை  ”என்பார்.இது போன்ற அத்தனை கேள்விகளுக்கும் விடை இந்தக் கட்டுரைத் தொடரில் கிடைக்கும். இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள  வழிகளால் பல வியாதிகளை குணமாக்கிக் கொள்ளலாம்.

முதலில்  சரியாக ஜீரணமாகாமல் இருப்பதே சர்க்கரை வியாதி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.எனக்கு சரியாக ஜீரணம் ஆகிறது. உடனே எனக்குப் பசிக்கிறதே ??என்று சிலர் கேட்கும் போது எனக்கு சிரிப்புத்தான் வரும். உடலில் இரத்தத்தில் சர்க்கரை குறையும் போது உடலுக்கு சர்க்கரை தேவைப் படும்போது அதை சோதனை செய்து பிட்யூட்டரி சுரப்பி டோபாமைன்களை சுரந்து பசியை உணரச் செய்து நமக்கு சாப்பாட்டை சாப்பிட வைக்கிறது . சர்க்கரை வியாதிக்காரர்கள் உடலில் நிறைய சர்க்கரை இரத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதே , பிறகேன்   சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு பசி யெடுக்கிறது. இரத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அந்தச் சர்க்கரை முழுவதும் கெட்ட சர்க்கரை எனவே அதை உடலில் உள்ள செல் அணுக்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.எனவேதான் பசி உண்டாகிறது.

ஜீரணம் என்றால் என்ன???? நாம் சாப்பிடத் தெரியாதவர்களாக உள்ளோம் .விளைவு ஜீரணக் குறைவு. ஜீரணக் குறைவின் காரணமாக , வயிறு , மற்றும் ஜீரண மண்டலம் சேர்ந்து உற்பத்தி செய்யும் சர்க்கரை தரத்தில் குறைவாகவும் ,கெட்ட சர்க்கரையாகவும் உற்பத்தி ஆகிறது . விளைவு உடல் அதை நிராகரிக்கிறது . நிராகரிக்கப்பட்ட சர்க்கரை சிறு நீரகம் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.அதைப் பார்க்கும் நாம் ஐயோ இவ்வளவு சர்க்கரை வெளியே போகிறதே என்று புலம்புகிறோம்.

கொழுப்பில் நல்ல கொழுப்பு (ஹெச் டி எல் ) , கெட்ட கொழுப்பு (எல் டி எல் ) என்றிருப்பதைப் போல நல்ல சர்க்கரை , கெட்ட சர்க்கரை என இரண்டிருக்கிறது.ஆனால் இதை சோதிக்க நம்மிடம், ஆங்கில மருத்துவத்தில்  வழிமுறைகள் இல்லை.இதனால் அவர்களுக்கு இந்த உடல் நடை முறை தெரியாததால் ஆங்கில மருத்துவர்கள் செய்யும் குழப்பங்கள், சர்க்கரை வியாதியை மிகமிக மோசமாக உடலை நாசமாக்குகிறது . அது எப்படி என்று கட்டுரைத் தொடர்ச்சிகளில் பார்க்கலாம்!!!!

ஜீரணம் என்பது கையில் ஆரம்பித்து , வாயில் நடந்து , வயிற்றில் முடிவடைகிறது .கையினால் நன்றாகப் பிசைந்து , வாயில் உள்ள உமிழ் நீரில் நன்றாக உணவு கலக்குமாறு நன்றாக மென்று , சுவை முழுவதும் காணாமல் போகும் அளவு நன்றாக அரைத்து பின் சிறிது சிறிதாக விழுங்க வேண்டும். பின் சிறிது நேரம் உலவிய பின் ஓய்வு எடுக்கலாம்(தூங்கக் கூடாது). மேலும் சாப்பிடும் போதும் சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்னாலும் , பின்னாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.

ஏனெனில் வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக்அமிலம் (H.C.L), எடுத்துக் கையில் விட்டால், கை பொத்து ஓட்டை ஆகிவிடும்.அவ்வளவு செறிவுள்ள அமிலம்தன் நம் உணவை கரைத்து செறிக்க வைக்கும் வல்லமை வாய்ந்தது.இதை தண்ணீரை அருந்துவதின் மூலம் , நாம் நீர்த்துப் போகச் செய்தால் , அது உணவைக் கரைத்து செரிக்க வைக்க சக்தியற்றதாகிறது .எனவேசாப்பிடும் போதும் சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்னாலும் , பின்னாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.

உணவை வாயில் போட்டு , வாயை மூடி நன்றாக அரைத்து எச்சிலோடு சேர்த்து உண்ணும் போது எச்சிலில் உள்ள அமலேஸ்  காற்றினில் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது .மேலும் காற்றுத் தொடர்பு இல்லாமல் மெல்லும் போது எச்சில் சுரப்பு அதிகரிக்கிறது. இதற்குப் பின்னால் பல ஞான ரகசியங்களும் உள்ளன.அதை எமது சபை உபதேசம் பெறாமல் சொல்ல இயலாது .ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி மட்டும் பேண நான் சொல்பவை மட்டுமே போதும்.

சாப்பிடும் போது பேசாதீர்கள்.வாய் நிறைய உணவைத் திணித்துக் கொண்டே இருக்காதீர்கள் .நன்றாக உண்வை எச்சிலோடு கலந்து அரைத்து ருசி அனைத்தும் மறையும் வரை அரைத்து பின் உணவை  விழுங்குங்கள் .கையால் நன்றாக பிசைந்து முடிந்த வரை நுணுகலாக்கி வாயில் போடுங்கள்.சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்க்காதீர்கள் . சாப்பிடும் போது புத்தகம் படிக்காதீர்கள். சாப்பிடும்போது சாப்பிடுவதை மட்டுமே செய்யுங்கள்.சாப்பிடுவதை ஒரு தவம் போல் செய்யுங்கள்.

இந்த இணைப்பையும் பாருங்கள்.இதனால் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.எமது விளக்கங்கள் எளிதாக உங்களுக்குப் புரியும்.

http://machamuni.blogspot.in/2011/10/45.html

அதிக உணவை உண்டால்தான் அதிக பலம் என்று எண்ணாதீர்கள் . பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பழுக்கும் நெல்லிக் கனியை மட்டுமே உண்டு யோக சாதனை புரிந்த ரிஷிகளும் ,  முனிவர்களும்  வாழ்ந்த நாடு நம் நாடு.எனவே உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு மட்டுமல்ல , நம் அனைவருக்குமே நல்லது.நம் நாட்டில் பட்டினியால் இறப்பவர்களை விட நம் உடல் தேவைக்கு அதிக உணவை  சாப்பிடுவதால் இறப்பவர்களே அதிகம்.

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்3) ல் தொடரலாம்.