சுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்புகிறார்கள்

August 7, 2010 by: machamuni
தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு,வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்போன் ;சிறியதொரு கடுகு போல் உள்ளம் கொண்டார்; தெருவார்க்கும் உதவாத சிறிய உள்ளம்,
தன்னலடா என் சிற்றூர் என்போனுள்ளம் கடுகுக்கு நேர் மூத்த துவரையுள்ளம்;தென்னையுள்ளம் ஒன்றுண்டு,அது தன்னாட்டு சுதந்தரத்தால் பிறர் நாட்டு உரிமை கோடல்;
தூய உள்ளம்,பெரிய உள்ளம் அன்பு உள்ளம்,தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் அங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே!

“உவப்பின் நடுவிலே,
ஓர் க

சப்பான சேதியுண்டு கேட்பீர்” என்றாள்!

பொதுத்தொண்டு செய்தோமா

?
“மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த
மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;
அதுபோலத் தானேடி! அதனாலென்ன?
அறிவிப்பாய் இளமானே” என்றான் அன்பன்;
அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.
வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு

?

இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.
தன்னலத்தால் என்ன நடக்கும்
“தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
எப்போது தமிழினுக்குக் கையாலான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்தி 

நினைத் தோமா? இல்லை
அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?”
நன்றி பாரதி தாசன்


மேன்மை மிகு இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் கதாபாத்திரங்களில் , கதாபாத்திரங்கள் அனைத்தும்,உயர்ந்த அறிவும்,பொது நல நோக்கு பேசும், பாரதி தாசன் கவிதைகளையும், கீட்ஸ்ன் கவிதைகள் மட்டுமல்ல ஒரு உயர்ந்த மன நிலையில் சமுதாயம் பற்றிய வேறு கண்ணோட்டத்தில் பேசும்.அது இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் குரலே!மேன்மை மிகு இயக்குனர் பாலச்சந்தர் அவ்ர்களுக்கும் இந்த வீடியோ வெளியீட்டு உரிமையாளருக்கும் நன்றி.


சித்தர்கள் பலமருத்துவ, வான சாத்திரம்,கர்ம காண்டம்,ஜோதிட நூல், சரநூல் சாத்திரம்,நாடி சாஸ்திரம் இப்படி ஆயிரக் கணக்கான நூல்களை படைத்து இன்று வரை வழி காட்டியும் வருகின்றனர்.இது போல நாமும் கொஞ்சம் சுயநலமின்றி பொது நல நோக்கில் செயல்பட்டால் 
நன்று. 
கீழே கண்டுள்ள கட்டுரையும் மனதால் உறங்கும் மக்களைத் தட்டி எழுப்பும் முயற்சியில்,இதே நோக்கிலும்,பார்வையிலும் எழுதப்பட்டுள்ளது. 

நன்றி ;-புதிய தலைமுறை
நம் சுயநலம் கண்டே சித்தர்கள் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.எனவே மேலே உள்ள விஷயங்களை படித்த பின் நம் எண்ணம் சற்றே மாறினால் சித்தர்கள்மிகவும் மகிழ்வார்கள். அவர்கள் ஆசி நமக்குண்டு.
எனது சீடரான தமிழவேள்(அக்கு புஞ்சர்,சித்தா,மற்றும் இறை வழி மருத்துவம்)அவர்களின் வலைப் பூ முகவரி இது.விரும்புபவர்கள் பார்வையிடலாம்.
http://siddhahealer.blogspot.com/

2 responses to “சுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்புகிறார்கள்”

 1. Sridhar says:

  அருமை அருமையான பதிவு அய்யா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

88 − = 87