சித்தர்களின் ரசமணி ரகசியங்கள்

September 3, 2010 by: machamuni

எனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே!
இவர்களின் பரம்பரையில் வந்ததாலோ என்னவோ இந்த சித்த வைத்திய முறைகளை எனது மாமா சற்குரு அருட்திரு மிகு பார்த்த சாரதி ஐயா அவர்களின் திருக்கடாட்சத்தால் மூலிகைகள் ,மருந்துகள் பற்றிய விவரங்களும் அவைகளை முடிக்கும் விதம் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்று உண்டு.நான் எனது தாத்தாவின் ஒரு கையெழுத்துப் பிரதியைப் பார்த்து அதில் வர்மம் பற்றிய குறிப்புக்களைப் பற்றித் தெரிந்து கொண்டு,அதை கராத்தே குங்பூ போன்று அதை அடுத்தவர்களை உதைக்க பயன்படுத்தலாம் என்று எண்ணி,அதை முழுமையாக கற்றுக் கொடுங்கள் என்றுதான்,முதன்முதலில் எனது மாமா அருட்திரு மிகு பார்த்த சாரதி ஐயாவைக் கேட்டேன். ஆனால் அவரோ கைநாடி பார்க்க தெரியாமல் வர்மம் கற்றுக் கொண்டால் பயன் இல்லை என்று கூறி என்னை,வேறு பாதையில் திருப்பி கொஞ்சம் ,கொஞ்சமாக நாடி பார்க்க கற்க வைத்து,வைத்தியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்க வைத்தார்.

பின்னாளில் நான் வர்மம் பற்றி அறிந்து கொண்ட பின்( எனக்கு இரு குழந்தைகள் பிறந்த பின் நான் இனி யாரையும் கைநீட்டி அடிக்க மாட்டேன் என்று தெளிவாய்த் தெரிந்த பின்னரே கீழ்க்கண்ட விதிமுறைகளுடன் கூடிய சத்தியத்தையும் வாங்கிக் கொண்ட பின்னரே எனக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
1) உயிருக்கு ஆபத்தான சமயந் தவிர வேறு சமயங்களில் இந்த வர்மக் கலையை பிறருக்கு எதிராக பிரயோகிக்கக் கூடாது, என்றும்
2)கற்றுக்கொடுத்த குருநாதருக்கு எதிராக எந்தச் சூழ்நிலையிலும் இந்தக் கலையை பிரயோகம் செய்யக்கூடாது , என்றும் .
3) கற்றுக்கொடுத்த குருநாதரின் வாரிசுகளுக்குஎதிராக எந்தச் சூழ்நிலையிலும் இந்தக் கலையை பிரயோகம் செய்யக்கூடாது , என்றும் .
4) கற்றுக்கொடுத்த குருநாதர் உயிருடன் இருக்கும் வரை ,இதை யாருக்கும் நான் கற்றுக் கொடுக்கக் கூடாது ,என்றும்.
5)உயிருக்கு ஆபத்தான சமயத்தில் இந்த வர்மக் கலையை பிறருக்கு எதிராக பிரயோகிக்க நேர்ந்தாலும் அவர்களை அடங்கல் முறைகளைக் கொண்டு தட்டி எழுப்பிவிட வேண்டும், என்றும்.வர்மத் தாக்குதலுக்கு இயற்கையாலோ செயற்கையாலோ, ஆளாகி இருக்கும் ஒருவனை இறக்கும்படி விட்டுவிடக்கூடாதுஅவர்களையும் அடங்கல் முறைகளைக் கொண்டு தட்டி எழுப்பிவிட வேண்டும்.என்றும்.
6)வர்மம் என்றாலே கர்மம் .அவை இறைவன் போட்டு வைத்த மர்ம முடிச்சுக்கள், எனவே எந்த வர்மத்தையாவது வர்மம் கற்றவன் தாக்குதலுக்குப் பயன்படுத்தினால் அதே வர்மத்தால் அவனுக்கு மரணம் நேரும், என்றும்.
7)வர்மத்தின் நல்ல பிரயோகங்களை அவத்தைப் படுபவர்களுக்கு பொருள் வாங்காது பிரயோகம் செய்ய வேண்டும் ,என்றும்.
பால் வைத்து சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுத்தார்கள்.

நான் எதற்காக வர்மம் கற்க நினைத்தேனோ அந்த நோக்கம் பின்னாளில் , மறைந்து துன்பப்படும் நோயாளிகளுக்கான வைத்தியத்திற்கான பிரயோகமாக அது மாறியது.

சரி இப்போது ரசமணி ,ரச மணி என்று சொல்கிறார்களே அது எது,எதற்கெல்லாம் பயன் பெறும்.எப்படி செய்வது என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் எனது தாத்தாவின் ஏட்டுப்பிரதியில் இருப்பதை அப்படியே ஒளி நகலாகத் தருகிறேன்.

இந்த ஏட்டுப் பிரதி எழுத்துக்கள் புரியாது எனபதால் அதில் கொடுத்துள்ள விஷயங்களை அப்படியே தருகிறேன்.கருவூமத்தை வேரைக் கொண்டு வந்து
பெரிய துவாரம் போட்டு கால் பலம் வாலை ரசம் (ஒரு பலம் என்பது 35 கிராம்)
விட்டு (அதில் குடைந்து எடுத்த) நடு வேரைக் கொண்டு மூடி ஏழு சீலை மண் செய்து(ஒரு சீலை மண் என்பது பருத்திக் காடாத் துணியில் களிமண் பூசி அதை மேற்படி வேரின் மேல் சுற்ற வேண்டும் ,இப்படி ஏழு தடவை சுற்ற வேண்டும்) கோழிப் புடம்போட தம்பனமாகும்(தம்பனம் என்றால் ஓடாமல் ரசம் கெட்டிப்படுதல்).(கோழி உட்கார்ந்து இருந்தால்  எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு உயரம் மாட்டுச் சாண எரு அடுக்கி புடமிடுதல்).அப்படி மூணு புடமிட கட்டிப்படும்.
அதை கையில் எடுத்து முள் முருங்கையிலை இரண்டு எடுத்து,இரண்டு பணவெடை மயில் துத்தம் பொடிசெய்து இலைக்குள் வைத்து பொட்டலம் கட்டி புதுச்சட்டியில் (புது மண்சட்டி) மேலே கட்டின ரசத்தை விட்டு கொதிக்கிற தண்ணீர் விட்டு பொட்டணங்கொண்டு நாலு நாழிகை எரித்தெடுக்க ரசமணியாகும்.அதை ஆறும் முன்பு ஊசியால் குத்தி கோர்த்து எடுத்து கட்டிக்கொள்ளலாம்.

எனக்கு தங்கள் விமரிசனங்களையோ,தங்கள் கருத்துக்களையோ எனக்குத் தெரிவித்தால், நன்றி நண்பர்களே!
பின்னொரு சமயம் வேறோர் விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி
சாமீ அழகப்பன்

37 responses to “சித்தர்களின் ரசமணி ரகசியங்கள்”

 1. rasamani says:

  உங்கள் தாத்தா தவறான கருத்தினை எழுதியிருக்கிறார்
  ரசமணி உருகும் தன்மை வாய்ந்தவை, தண்ணீர் குடிக்கும் தன்மை வாய்ந்தவை , உண்மையான ரசமணி பொக்கிஷம்2 ஆசிரியர் ஷாஜஹான் வைத்திருக்கிறார்

 2. MACHAMUNI BLOGSPOT says:

  ரச மணிகளில் ஆயிரக் கணக்கான வகைகள் இருக்கின்றன.தயாரிக்கும் முறைகள் அதைவிட அதிகம்.நமக்கு இப்போது தெரிந்திருப்பவை அவற்றுள் சிலவே,உங்கள் ஆசிரியர் வைத்திருப்பது ரசமணியாகவே இருக்கலாம்.அது ஒரு முறையில் தயாரிக்கப்பட்டு இருக்கலாம்.அந்த ஒரு தயாரிப்பு முறை மட்டுமே உலகில் இருக்கிறது எண்ணாதீர்கள். நான் கொடுத்திருக்கும் செய்முறைகள்,என் தாத்தா எழுதியது அல்ல.பல தலைமுறைகளாக நாங்கள் உபயோகித்து வரும் மருத்துவ குறிப்புகள் ஏட்டுப் பிரதிகளாக உள்ளது.அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் மிகச் சரியாகவே இருந்துள்ளன.அதில் பல வகைகளில் ரசமணி கட்டும் முறைகள் கூறப்பட்டுள்ளன.ரசம் நெருப்பில் பட்டால் ஆவியாகி ஓடிவிடும் தன்மை உள்ளது.நெருப்புக்கு ஓடாத மணியே ரசமணி.இந்த முறைகளை சோதித்துப் பார்த்து பின் தவறு என்றால் சுட்டிக் காட்டவும். ஏன் என்றால் இது எங்கள் பல தலைமுறை அறிவு.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

 3. ravi says:

  மன்னிக்கவும் ஐயா உண்மையான ரசமணி யார்இடம்உள்ளது தெரிவிக்க வேண்டும்.i watch rasamani sir pls help me.

 4. சாமீ அழகப்பன் says:

  நன்றி திரு ரவி ஐயா அவர்களே,
  உண்மையான ரசமணி நிறைய பேர்களிடம் உள்ளது.
  அதனை சிறப்பான வழியில் செய்து தருவோம் என்று இந்த அதிகமான பேர்கள் நினைப்பதில்லை. ஏனென்றால் இவர்களுக்கு பணத்தின் மீது பற்றுக் கிடையாது.எனவேதான் போலிகளும்,ஏமாற்றுப் பித்தலாட்டக்காரர்களும்,தான்தான் உண்மையான ரச மணி வைத்துள்ளதாக சொல்லி பணம் பறித்துத் திரிகிறார்கள்.ஆமாம் நான்தான் உங்களுக்கு ரச மணி தயாரிக்கும் விதமே சொல்லித் தந்துவிட்டேனே, பிறகென்ன நீங்களே செய்து பார்த்துக் கொள்ளுங்களேன்.ஏன் இன்னும் வெளியிலேயே ஆளைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

 5. newlife says:

  இரசமணி- அதை எப்படிப் பயன் படுத்துவது?
  எங்கே வாங்குவது-
  எவ்வளவு செலவாகும்-
  உண்மைத் தகவல் பெற்றேன்.
  நன்றிகள்-
  1-416-995-0416

  • raj says:

   yanakkum rasamaniyin vilai & yangu kidaikkum yandru sollungal ethayaraj2@gmail.com

   • machamuni says:

    அன்பு மிக்க திரு ராஜ் அவர்களே,
    கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!!
    நிறையப் பேர்கள் ரசமணியைக் கேட்ட வண்ணம் உள்ளனர் .அவர்களுக்காகவும்,உங்களுக்காகவும் ஒரு பதிவு காத்திருக்கிறது .அந்தப் பதிவில் அது கிடைக்கும் இடமும் குறிப்பிடப்படும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

 6. maskumareshraja says:

  iya thankal udavikku nanree neeraya pear kidaitha visayathai maraithu vidukindranar thankarallipole silararl than namathu thamil visayangal kakkappadukindrathu matrum valarkkappadukindrathu adutha santhathikalikku othaviyaka ullathu melum rasamani patri kooriyathu arumai entha rasam kondu entha maniyai katta vendum ivaikalin suthimurai maraippaka vullathu unmayana suthi murai enna enna entha maniyai saranai eatri obayokam seithal megavum visesamaka irukkum enave saranai viparangal enna enna endha endha saranai eatrinal endha manien vesasam enbathai theriyapaduthavum ungal savai thodarndu namadu thamil makkalukku thevai mendum varukiren nanri maskumareshraja

 7. சாமீ அழகப்பன் says:

  கருத்துரைக்கு மிக்க நன்றி திரு maskumareshraja அவர்களே,சித்தர்கள் விஞ்ஞானம் என்பது ஒரு கடல்.அதில் நீந்துவதும் இன்பம்.சுவைப்பது இன்பம்.கேட்பது இன்பம்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

 8. Anonymous says:

  அன்புடன் ஐயா,

  முல் முருஙகை இலை எஙகு கிடைக்கும் ? எப்படி இருக்கும் ? தயவுசெஇது தெரிவிக்கவும்,உமததை இல் கரு வோமதை எப்படி இருக்கும் தயவு செஇது தெரிவிக்கவும். நன்ரி .யாறோ

 9. சாமீ அழகப்பன் says:

  கருத்துரைக்கு மிக்க நன்றி திரு அனாதி அவர்களே, முதலில் நீங்கள் உங்களை நீங்கள் உங்களை நன்கு வெளிப்படுத்திக் கொண்டு பின் சந்தேகங்களை கேளுங்கள்.உங்கள் பெயரை வெளிப்படுத்திக் கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம்.தமிழில் ஏன் இவ்வளவு பிழைகள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

 10. jkasultan says:

  Dear mr,Samy, thank you just recently i got
  your blog the informations are
  very usfull but if you can give
  the more deatials it will be more
  usfull. iam from tamilnadu,my
  father was a VATHIEAR from him
  and with his friends i learn
  little in the help of almighty god
  just recently i got you and i
  hope with your kind help i can
  learn more, thanks, k. amir sultan.

 11. R says:

  aiya, ungal rasi mani seimurai pattri padithen.enakku ithai pattri avalavaaga theriyathu endraalum ithil nambikaiyum eedupaadum ullathu. pona maatham oru jodhidarai paarka sendruirunthen, avar sollum munname enakku seivinai kolaaru irupathu enakku theriyum, aanal athai edukkum muraiyo illai athai yaar sariya edupaargal endra vibaram enakku theriyaathu. irunthaalum rasimaniyaal intha seivinai kolaarugal agalum endru padithu irukiren. antha jodhidar, enaku oru rasa mani seithu tharuvathaaga sonnaar, athai pottu kondaal intha seivinai kolaarugal poividum endrum sonnar, aanaal avar tharum mani yentha alavuku ithai seiyum endru epadi naan therinthukolvathu, nambuvathu?. enoda iyathai theerpeergalaaga
  saravanan

 12. Guru pala mathesu says:

  good post thank you sir

 13. venkat says:

  ayya vanakkam.

  enakku sugar ullathu. doctor life fulla medicine sapida sollurar. ithai kunapadutha marunthu irunthal sollungal please ayya.

 14. O.Palamudhir selvan says:

  seems to be intersting but couldn’t understand much on this topic. Thanks

  • machamuni says:

   தங்கள் தொடர்புக்கு நன்றி.பாராட்டுக்கு மிக்க நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. venkat says:

  ayya ! vanakkam.

  I need rasamani. thangalidam irunthal naan vaanga virumbukiren. atharkkuriya panam thara virumbukiren.

  thangalai eppadi thodarbu kolvathu endru sollavum.

  Thanks
  by venkat
  9865824794

  • machamuni says:

   மன்னிக்கவும் நான் ரச மணி விற்கும் வியாபாரியல்ல.ரசமணியை அனைவரும் செய்து பார்த்து உபயோகித்துக் கொள்ளவே தயாரிப்பிலிருந்து அத்தனை விடயங்களையும் விவரமாகவே வெளியிட்டுள்ளேன்.எனவே நீங்களே அதில் குறிப்பிட்டுள்ள முறைப்படி தயாரித்து அணிந்து பயன் பெறுக.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. மகேஷ்ராஜா says:

  ஐயா வணக்கம்,

  நான் மற்றொரு website ஒன்றில் கௌரிமணி செய்யும் விளக்கவுரை
  பற்றி படித்தேன். ஆனால் எனக்கு கௌரி என்ற பொருள் எங்கே கிடைக்கும் என்று
  தெரியவில்லை. நான் மதுரையில் இருக்கிறேன். மதுரை தேர்முட்டியில் கேட்டதற்கு
  இல்லை என்று கூறி விட்டார்கள். தங்களுடைய தகவல் உதவி தேவை.

  நன்றி.

  • machamuni says:

   கௌரி பாஷாணம் என்பது தாது வர்க்க பாஷாணங்கள் முப்பத்திரண்டுள் ஒரு பாஷாணமாகும்.இதற்கு கேகய பூதம், கெந்த பந்தம், ஆதி குமரி, இந்து, பரி குறுக்கம், என்று வேறு பெயர்களும் உண்டு.அரசாங்கம் இப்போது கையாண்டு வரும் கொள்கைகளால் சித்த மருந்துகள் செய்வதற்கு வேண்டிய பொருள்கள் அரிதாகவே கிடைக்கின்றன.மதுரையில் தேரடிக்குப்பக்கத்தில் கனடியர் சித்த மருந்துக் கடை உள்ளது அங்கே முயற்சித்துப் பார்க்கவும்.இல்லையெனில் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே முனியாப் பிள்ளை கடை உள்ளது.இங்கே எல்லா மருந்துகளும் கிடைக்கும்.மேலும் பாஷாண வர்க்கங்களை கையாளும் போது கடும் எச்சரிக்கை தேவை.ஒரு அனுபவத்தில் கூடிய குருவின் மேற்பார்வையில் செய்வது நல்லது.பாஷாணங்களைக் கையாளும் போது எழும் புகைகளில் நஞ்சிருக்கலாம்.அது கண்களையோ உடலையோ பாதிக்கலாம்.அப்போது குரு முறிவு மருந்துகளைக் கொடுத்து சீடனைக் காப்பாற்றுவார்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. மகேஷ்ராஜா says:

  நன்றி ஐயா,

  தாங்கள் குறிப்பிட்டுள்ள கடைகளில் முயற்சி செய்து பார்த்து விட்டு

  மீண்டும் உங்களை தொடர்பு கொள்கிறேன். தங்களின் சேவை தொடர வாழ்த்துகள்.

 18. மகேஷ்ராஜா says:

  ஐயா,
  தாங்கள் மேற்குறிப்பிட்டுள்ள இரசமணி செய்முறையில் ரசத்தை சுத்தி செய்ய

  வேண்டுமா? அல்லது ரசத்தை அப்படியே உபயோகிக்கலாமா?

  மற்றும் மண்பானையில் ஊற்ற வேண்டிய தண்ணீர் அளவு எவ்வளவு?

  தீ எரிப்பு முறை என்ன?

  தயவு செய்து தெரியப்படுத்தவும்.

  மிக்க நன்றிகளுடன்,

  மகேஷ்ராஜா.N

  • machamuni says:

   ரசத்தை சுத்தி செய்துதான் உபயோகிக்க வேண்டும்.ரசத்தின் ஏழு சட்டையும் உரித்து அதன் பின்னரே உபயோகிக்க வேண்டும்.சட்டித் தண்ணீரில் பொட்டலம் கட்டி தோலாந்தரமாகக் கட்டி (சட்டியில் தொடாமல்) பொட்டலம் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு(சட்டியின் அளவைப் பொறுத்து தண்ணீரின் அளவு மாறுபடும்) நாலு நாழிகை(4 நாழிகை*24 நிமிஷம் = 96 நிமிஷம் ) எரித்தெடுக்க வேண்டும்.தீ எரிப்பு கமலாக்கினி எரிப்பு.அதாவது தாமரைப் பூ சட்டியை சுற்றி இருப்பது போன்று நெருப்பு எரிப்பு இருக்க வேண்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. மகேஷ்ராஜா says:

  ஐயா வணக்கம்,

  தாங்கள் குறிப்பிட்டபடி மதுரையில் தேர்முட்டியில் கனடியர் கடைக்கு

  சென்று கேட்டதில், இரண்டு வகையான கௌரி உள்ளதென்று கூறினார்கள்,

  1.மஞ்சள் கௌரி பாஷாணம் 2.வெள்ளை கௌரி பாஷாணம். இந்த இரண்டில் எதை

  நான் உபயோகிப்பது.

  மேலும் கௌரியை சுத்தி செய்யும் முறையையும் எனக்கு தெளிவுபடுத்தவும்.
  (கௌரியை சுத்தி செய்ய அவுரியை உபயோகிக்கலாமா?)

  நன்றி ஐயா,
  மகேஷ்ராஜா.N

  • machamuni says:

   நீங்கள் எல்லா விடயங்களிலும் தேர வேண்டியுள்ளதால்,சித்தாவை முழு நேரமாக சிறப்பிக்கும் எனது சீடர் திரு தமிழவேள் அவர்களை தொடர்பு கொள்ளவும்.எனது வலைப்பூவில் அவரதுஅலைபேசி எண் உள்ளது.
   http://machamuni.blogspot.in/2011/10/2.html.
   அவரது வலைப்பூவின் இணைப்பு கீழே
   http://siddhahealer.blogspot.com/2011/09/blog-post_23.html
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 20. மகேஷ்ராஜா says:

  நன்றி ஐயா,

  எனக்கு தாங்கள் செய்த உதவிக்கு நன்றி.

  தாங்கள் கொடுத்த இணைப்பில் உள்ள உங்கள் சீடரிடம் நான் என்னுடைய

  சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்கிறேன்.

  நன்றி.
  மகேஷ்ராஜா.N

 21. SAMUVEL says:

  அழகப்பன் அண்ணா,
  எனது பெயர் S.SAMAJAY,வயது 16,சேலம் மாவட்டத்தில் ஏற்காடு வட்டத்தில் வசிக்கிறேன்.பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறேன்.நான் இப்போது மனோவசியச் கலை கற்று வருகிறேன்.தாங்கள் கற்ற வர்ம கலையை எனக்கு கற்று தர இயலுமா? ஆபத்தான முறைகளோ,தாக்குதல் முறைகளோ எனக்கு வேண்டாம் மருத்துவ முறைகள் கற்றுத் தந்தால் போதுமானது.பதில்களை எனது மெயில் ஐடிக்கு தெரிவிக்கவும்.
  நன்றி அண்ணா…

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சாமுவேல் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   நிறைய பேர்கள் இது பற்றிக் கேட்பதால் . அடிப்படையாக வர்மமும் , வர்ம சிகிச்சையும் கற்க விரும்புபவர்களுக்காக இரு பதிவுகளின் பின்னர் ஒரு பதிவு காத்திருக்கிறது அங்கே நீங்கள் வர்மம் கற்றுக் கொள்ளலாம் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 22. HARISH.P says:

  ஐயா பருத்திக் காடாத் துணி என்றால் என்ன ?

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பி ஹரீஷ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   தனிப்பட்ட பருத்தியால் தயாரிக்கப்பட்ட கெட்டியான் நூலால் நெய்யப்பட்ட குளோரினால் பிளீச் செய்யப்படாத ,கலர் செய்யப்படாத வெள்ளையான கெட்டியான துணியே அது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 23. Kani says:

  ஐயா,
  நாகரசம் என்றால் என்ன ?

  • machamuni says:

   அன்புள்ள திரு கனி அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   ஒவ்வொரு பொருளிலும் உள்ளவை பஞ்ச பூதக் கலவைகளே . எனவே எல்லாப் பொருள்களிலும் இருந்தும் , பாதரசத்தில் உள்ள பஞ்ச பூதக் கலவையை உருவாக்கி , ரசம் எடுக்கலாம்.அதில் நாகத்திலிருந்து எடுக்கும் ரசம் நாக ரசம் ஆகும்.இதன் செயல்பாடு அதீதமாக இருக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 24. selvam says:

  rasamani in payan ennavendru therindhu kollalama….

  • machamuni says:

   அன்புள்ள திரு செல்வம் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி ,
   மிக நல்லது. உங்களுக்கு ரசமணியின் பயன்களை தெரிய வலையில் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் .
   எடுத்துக்காட்டாக
   http://alchemyofsiddhar.blogspot.in/p/blog-page_29.html
   http://www.siththarkal.com/2010/07/blog-post_07.html
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 25. ஹரி says:

  இரசமணி- அதை எப்படிப் பயன் படுத்துவது?
  எங்கே வாங்குவது-
  எவ்வளவு செலவாகும்-
  உண்மைத் தகவல் பெற்றேன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஹரி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 66 = 72