ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக் குறைவும் உடல் நலக்குறைவும்(பாகம்3)

September 6, 2010 by: machamuni

ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக் குறைவும் உடல் நலக்குறைவும் வலைப்பூவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பொட்டு வைக்கும் இடம் பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் கட்டுப்பாட்டு புள்ளியான திலர்த வர்மத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட திருமதி கவிதா அவர்கள் வாழ்நாள் முழுவதும் , எல்ட்ராக்ஸின் என்ற மருந்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அவத்தையில் இருந்து விடுபட்ட விவரம் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

   

என்னிடம் வரும்போது தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் மிக அதிக அளவில்TSH(65)ம்,குறைந்த அளவில் தைராய்டு ஹார்மோன் T4(4.6) ம் இருந்தது .தற்போது கடைசியாக உள்ள பகுப்பாய்வில் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் TSH(3.143)ம்,தைராய்டு ஹார்மோன்  T4(7.3)என்ற சரியான அளவில் உள்ளது.இந்த அளவிற்கு குணம் அளிக்கும் எளிமையான நமது ஆன்மீக ரீதியான பல விஷயங்களை விட்டுவிட்டு நமது மக்கள் குப்பைகளை மூட்டை கட்டி வைத்துக் கொண்டுள்ளோம்.அவற்றை நமது மக்கள் பெரிதாக மதிப்பது அதைவிட ஆச்சரியமாக இருக்கிறது.

மேலும் தைராய்டு பற்றி அறிந்து கொள்ள கீழ்க் காணும் வலைப் பூவை பார்வையிடவும்

அப்படிப்பட்ட மேலும் ஒரு விஷயத்தை இங்கே தருகிறேன்.நமது பரம்பரையான பழக்க வழக்கங்களில் ஒன்றான தாய்மாமாவின் மடியில் உட்கார வைத்து காது குத்துவார்களே அது எந்த அளவிற்கு பலன் தரக் கூடியது என்று இங்கே தருகிறேன்.இந்தக் காது குத்தும் பழக்கத்தை எனது நண்பர் மூட நம்பிக்கை என்று விட்டு விட்டதாகக் கூறினார்.அது எனக்கு மிக வருத்தத்தை அளித்தது.நமது முன்னோர்களின் அறிவு எடுத்துக் கூறுபவர்கள் இல்லாததால் எவ்வளவு முட்டாள்தனமாக இதை நினைக்க வைத்துவிட்டது.

    இந்தப் படத்தைப் பாருங்கள் .காது குத்தும் இடம் அக்கு பஞ்சர் தத்துவத்தில்,காது அக்கு பஞ்சர் (AURICULAR THERAPHY) கண்களை வியாதியின்றி வைத்துக் கொள்ளவும்,வந்த வியாதியை சரி செய்யவும் , உதவும் கண்களுக்குள்ள புள்ளியில்தான் காது குத்தப்படுகிறது.

எனது நண்பர் இப்படிப்பட்ட அற்புதமான தமிழர் அறிவைப் புறக்கணித்து தன் பிள்ளைகள் பின்னாளில் கண் குறைபாட்டினாலும்,கண் வியாதியிலும் அவதிப்படுவதற்கு அவரே காரணமாகிவிட்டார்.இந்த அறிவில்லாத செயலை  பகுத்தறிவு என்று கூறிக் கொள்கிறார்கள்.
இதை ஒரு பாடலில்
கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ!
கூறியிருப்பதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

நமக்கு விநாயகர் வழிபாடு எப்படி செய்வது என்று தெரியும்.விநாயகர் முன்னெற்றி பகுதியில் கொட்டிக் கொண்டு காதிரண்டையும் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம்(உக்கி) போடுவோம்.இதனால் ஞானக் கடவுளான விநாயகர் படிப்பையும்,அறிவையும்,ஞானத்தையும் கொடுப்பார் என்றால் மூடத்தனம்,பகுத்தறிவு வாதத்திற்கு ஒவ்வாதது என்பர்.ஆனால் இதை விநாயகர் வழிபாடாகச் செய்தாலும்,பள்ளிக்கூடத்தில் சரியாகப் படிக்காத மாணவனுக்கு தண்டனையாக ஆசிரியர் கொடுத்தாலும் இது படிப்பையும்,அறிவையும்,ஞானத்தையும் கொடுத்தே தீரும்.
காதைப் பிடித்து நன்றாக தோப்புக்கரணம்(உக்கி) போடும்போது உடலின் அத்தனை உள் உறுப்புக்களும்(மேலே கொடுத்துள்ள காது படத்தில் REFFLEX POINTS கொடுக்கப்பட்டுள்ளது )  நன்றாக இயங்கி உடல் நலமும் பேணப்படும் என்பது உங்களுக்கு அளிக்கப்படும் ADDITIONAL BONUS.
கீழே கொடுத்துள்ள ஒளிப்படங்களைப் பாருங்கள்.அதே தோப்புக்கரணம்(உக்கி)  SUPPER BRAIN YOGA வாக உங்கள் முன்.நான் சொன்னது புரியும் என்றே நினைக்கிறேன்.


இனி அக்கு பங்சர் தத்துவங்களையும் நம் நாட்டு பழக்க வழக்கங்கள் எதை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது என்பதை இதே தலைப்பில் விவரிக்க இருக்கிறேன்.பகுத்தறிவு வாதம் என்று எப்படிப்பட்ட விஷயங்களை தொலைத்துவிட்டோம் என்று நான் வருந்துவது உங்களுக்கு புரியும் என்றே நினைக்கிறேன்.
அடுத்த மடலில் சந்திப்போம்.
நன்றி
சாமீ அழகப்பன்

8 responses to “ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக் குறைவும் உடல் நலக்குறைவும்(பாகம்3)”

 1. யாசவி says:

  இன்னமும் தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்

 2. MACHAMUNI BLOGSPOT says:

  எந்தப் பகுதி உங்களுக்கு புரியவில்லை.எது சம்பந்தமாக
  எனது விளக்கம் வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டால் அது எனக்கும் விளக்க எளிதாக இருக்கும்,மற்றவர்களும் இதைப் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்
  இப்படிக்கு
  சாமீ அழகப்பன்

 3. srinivasan says:

  அய்யா, ஸ்டிக்கர் பொட்டின் அபாயம் பற்றி விளக்கும் கட்டுரையின் பாகம்-1 மற்றும் பாகம்-2 படிக்க கிடைக்குமா? இந்த லிங்க்-ல் இருந்து அந்த பாகங்களை என்னால் பார்க்க/வாசிக்க முடியவில்லை.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சித்தர் சீனிவாசன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! ஸ்டிக்கர் பொட்டின் அபாயம் பற்றி விளக்கும் கட்டுரையின் பாகம்-1 மற்றும் பாகம்-2,பாகம் 3 ஆகியவற்றைப் பற்றிப் படிக்க இந்த இணைப்பில் சென்று பாருங்கள்.
   http://machamuni.blogspot.in/search/label/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • அய்யா,
    தங்களின் முந்தைய கட்டுரையை படித்ததில், ஓரிடத்தில், “இப்படிப்பட்ட சுரப்பிகளின் தலைவனை கட்டுப்படுத்தும் கட்டளைச் சக்கரத்தை குளுமையாக வைத்திருக்கவே குளுமையை கொடுக்கும் மஞ்சளை வெண்காரத்துடன் சேர்த்து சிவப்பாக மாற்றி உபயோகிக்க சித்தர்கள் கொடுத்துள்ளார்கள்.(சிவப்பாக மாற்றி உபயோகிக்கும் ரகசியம் பின்னொரு கட்டுரையில் காண்போம்). “.
    என்று சொல்லியுள்ளீர்கள்.
    இது பற்றி (சிவப்பாக மாற்றி உபயோகிக்கும் ரகசியம் )தாங்கள் ஏற்கனவே விளக்கி இருக்கிறீர்களா?
    எனில், தயவு செய்து தாங்கள் அந்த லிங்கை தர முடியுமா? ஏன் என்றால், நான் சமீப காலமாகத்தான் தங்களுடைய வலைப்பதிவுகளை படித்து வருகிறேன்.
    சிரமத்திற்கு மன்னிக்கவும்.
    அன்புடன்,
    சீனிவாசன்.

    • machamuni says:

     அன்பு மிக்க திரு சீனிவாசன் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     இந்த இணைப்பைப் பாருங்கள்.இதில் உங்களால் படிக்க முடியாத பகுதிகளும் இருக்கும்.ஏனெனில் பல ஞான ரகசியங்களை எழுதும் போது பட்ட வர்த்தனமாக எழுதக் கூடாது என்று எனக்கு சித்தர் ஒருவரால் அறிவுரை வழங்கப்பட்டதை அடுத்து இப்படியே விடப்பட்டுள்ளது.
     http://machamuni.blogspot.in/2010/08/4.html
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 4. அய்யா,
  முந்தைய கட்டுரைகளை என்னால் வாசிக்க முடிகிறது.
  மிக்க நன்றி.
  அன்புடன்,
  சீனிவாசன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சீனிவாசன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   http://software.nhm.in/products/writer/
   https://www.nhm.in/downloads/NHMWriterSetup1511.exe
   மேற்கண்ட இணைப்புகளில் இரண்டாவது இணைப்பு என் ஹைச் எம் தமிழ் எழுத்து எழுதியை உங்கள் கணிணியில் நிறுவிக் கொண்டு. ஆல்ட் + 2 அழுத்தினால் தமிழில் உச்சரிப்பு எழுத்து முறையில் யூனி கோட் ல் தட்டச்சு செய்யலாம்.அதாவது amma என்று தட்டச்சினால் அம்மா என்று தமிழ் எழுத்தில் வரும்.மீண்டும் ஆல்ட் + 0 அழுத்த உங்கள் விசைப்பலகை ஆங்கில முறைக்கு மாறிக் கொள்ளும்.இதை நிறுவிக் கொண்டால் எனது வலைத் தளத்தை நன்றாக வாசிக்க முடியும்.
   பதிவுகளைப் பார்த்து பயன் பெறுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 19 = 24