ஆகாச கருடன்

January 31, 2012 by: machamuni

ஆகாச கருடன்

சித்தர்களின் அபூர்வமான மூலிகைகள் பல உள்ளன அவற்றை அவ்வப்போது படங்களுடன்,உபயோகத்தையும் விளக்கி வருகிறேன்.இந்தப் பதிவில் அத்தகைய ஒரு சிறப்பான மூலிகை ஒன்றை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பன மிகச் சிறப்பு வாய்ந்தன.இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவுவன.


எடுத்துக்காட்டாக தொட்டாற் சிணுங்கிச் செடிகளை செய்வினை மற்றும் ஏவல்,பில்லி சூனியத்துக்காக மண் பொம்மை,மற்றும் மாப்பொம்மை செய்யும்போது அதன் உள்ளே வைத்துச் செய்து அதற்கான மந்திரங்களை உருவேற்றி,யாருக்குச் செய்வினை செய்ய வேண்டுமோ அவர் பெயரில் இந்த பொம்மை உருவேற்றப்படும்.பின் இந்த பொம்மைக்கு எந்த இடத்தில் ஊசி செருகப்படுகிறதோ அந்த இடம் செயலிழக்கும்.பின் அந்த பொம்மையின் இருதய ஸ்தானத்தில் ஊசி செருகப்படும் போது மாரடைப்பாலோ,வேறு காரணங்களாலோ உயிர் பிரியும்.


இவ்வளவு சக்தியுள்ள மூலிகைகளை நல்லவற்றுக்கும் பயன் படுத்தி உள்ளனர்(இதில் கெட்ட செய்கைகளுக்கு யாரும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதால் செய்வினை செய்தலில் சில சூட்சுமங்கள் மறைக்கப்பட்டுள்ளன.தயவு செய்து இது குறித்து மேலும் கேள்விகள் கேட்க வேண்டாம்).அது போல நம்மை அழகாகப் பாதுகாக்கும் ஓர் மூலிகையை இங்கே விவரிக்கிறேன்.எனது வீட்டில் உள்ள ஆகாச கருடன் படமே இது.உபயம் திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன்.தேவைப்படுபவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளவும்.

ஆகாச கருடன்

ஆகாச கருடன்

கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும்.அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.


கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும்.அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).

இந்தக் கிழங்கை நஞ்சு முறிவிற்காக கொடுப்பர்.இதற்கு கொல்லன் கோவை,பேய்ச் சீந்தில் என்றும் அழைப்பர்.தாவரப் பெயர்:- BRYONIA EPIGOEA.


அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை

கரையாத கட்டியிவை கானார்- வரையிற்

றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு

கருடன் கிழங்கதனைக் கண்டு.


கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொருக்கு மாந்தை, அற்புத விரணம், ஆகியவைகள் தீரும்.கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.


துட்டவிஷம் பாண்டுவெப்பு சூலைவா தங்கிரந்தி

குட்ட மரிப்பக்கி கோண் குடனோய்- கெட்டகண்ட

மாலைபோங் கொல்லன்கோ வைக்கிழங்கால் முத்தோஷ

வேலைப்போம் பாரில் விளம்பு.


கொல்லன் கோவைக் கிழங்கால் மஹா விஷம், தேக வெளுப்பு, சுரம், வாதசூலை, சிரங்கு, பெரு வியாதி, நமைச்சல், வக்கிர நேத்திரம், குடல் வலி, கண்டமாலை, திரி தோஷம் ஆகிய நோய்கள் தீரும்.

செய்கை:-வியதாபேதகாரி(ALTERNATIVE){வியாதியை நாளுக்கு நாள் குணமாக்கிச் சரீரத்தை ஆரோக்கிய நிலையில் கொண்டு வரும் மருந்து},

பலகாரி(TONIC){தாதுக்களுக்கு பலம் கொடுக்கும் மருந்து}.    

உபயோகிக்கும் முறை:- இந்தக் கிழங்கை அரைத்து கொட்டைப் பாக்களவு 2-3 அவுன்ஸ் வெந்நீரில் கலக்கி தினம் ஒரு வேளையாக 3 நாள் கொடுக்க நாய், நரி, சிறுத்தை, குரங்கு, பூனை, குதிரை, முதலை, வேங்கை, இவைகளின் கடி விஷங்களினால் உண்டான பற்பல தோஷங்கள் போகும்.கடி வாயிலும் இதனை அரைத்துப் பூசுதல் நன்று. இதனில் இரண்டொரு கடலைப் பிரமாணமுள்ள துண்டுக் கிழங்கை வெற்றிலையுடன் கூட்டிக் கொடுக்க தேள்,நட்டுவக்காலி இவைகளினால் உண்டான விஷமும் நெறி கட்டுதலும் போகும்.


கருடன் கிழங்கு,குப்பை மேனி, அவுரி, ஆவாரை, கீழ்காய் நெல்லி(இலைக்கு கீழ் காய் காய்ப்பதால் இவ்வாறு அழைப்பார்கள்.கீழாநெல்லி என்பதும் கீவா நெல்லி என்பதும் இதுவே),இவ்வைந்து இலைகளையும் இடித்து சாறு பிழிந்து உள்ளுக்குள் கொடுத்து,உடம்பில் துவாலையிட(உடம்பில் மேற்பூச்சாக பூச)அஷ்ட நாக விஷங்களும் போகும்.


கடும் விஷ நாகங்கள் கடித்தவருக்கு ஒரு எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி தின்னும் படி செய்ய வாந்தி பேதி ஏற்பட்டு நஞ்சு முறியும்.நோயாளரை ஒரு 24 மணி நேரத்திற்கு தூங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.


இந்த ஆகாச கருடன் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைத்து,நிழலில்காய வைத்து,தூளாக்கி துணியில் சலித்து(வஸ்திர காயம் செய்து) எடுத்துக் கொண்டு பேய்ச் சுரைக் கூட்டில் நாற்பத்தெட்டு நாட்களுக்கு குறையாமல் வைத்திருந்து, நாற்பத்து எட்டு நாட்கள் சாப்பிட குட்டம்,மண்ணுளிப்பாம்பின் நஞ்சு, தீரும்.உடல் காயசித்தியாகும்.     


இந்த ஆகாச கருடன் ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட கிழங்காதலால் இதில் உயிர்ச்சக்தி அதிகம் உள்ளது.உயிர் உடலை விட்டு ஓடும்போது முதலில் ஆகாய பூதத்தை எடுத்துக் கொண்டுதான் ஓடும்.இந்தக் கிழங்கை நாம் படுக்கும் இடத்திலோ,பூஜை செய்யும் இடத்திலோ,அமர்ந்து வேலை செய்யும் இடத்திலோ கட்டி வைத்தால் நமது தலைக்கு அது ஆகாய பூதத்தின் சக்தியை கொடுத்து வரும்.இதனால் நமது ஆயுள் பெருகும்.ஞானமும் நம்மைத் தேடி வரும்.ஏனெனில் ஆகாயம் சிதம்பரம்.சிவனாகிய சிவன் அதனால்தான் அங்கே சிவ பாகமான வலது கால் தூக்கி ஆடுகிறான்.        

திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அலைபேசி எண்கள்

+919894912594

+919943205566

 

அவரது முகவரி:-

பெ.கண்ணன்.
 
சதுரகிரி ஹெர்பல்ஸ்,
 
2/147,மங்கம்மாள் கோவில் தெரு,
 
கான்சாபுரம்,(P-O)
 
திரு வில்லிபுத்தூர் தாலுகா,
 
விருதுநகர் மாவட்டம்.

67 responses to “ஆகாச கருடன்”

 1. shareef says:

  ji super

  இந்த கிழங்கில் இரும்பு ஆணியை குத்தினால்
  செம்பாக மாறும் என்பது உண்மையா ?

  • machamuni says:

   ஆகாச கருடன் கிழங்கில் ஊசி குத்தி வைத்தால் இது செம்பாக மாறாது.கல்தாமரை என்ற சிறு பூண்டு வகைச் செடியில் குத்தி வைத்தால்தான் செம்பாக மாறும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. shareef says:

  இன்று இரவு ஜீ டிவி யில்
  நோக்கு வர்மம் பற்றிய நிகழ்ச்சியை
  பார்த்தீர்களா ஜி ?

  • machamuni says:

   பார்க்கவில்லை.லிங்க் இருந்தால் அனுப்புங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. Palamudhir Selvan says:

  Excellent and useful article.

  • machamuni says:

   தங்கள் தொடர்புக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. Mani says:

  தங்கள் புதிய தளம் அழகாகவும் எளிமையாகவும் இருக்கிறது ஜீ. எழுத்து அளவும் இதே அளவில் எழுதுங்கள். மிகவும் உபயோகமான தகவல்கள் மிக்க நன்றி ஜீ.

  • machamuni says:

   தங்கள் தொடர்புக்கு நன்றி.பாராட்டுக்கு மிக்க நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • machamuni says:

   எழுத்துரு அனைத்தும் அன்பர் விண்மனி வேர்டு பிரஸ் அவர்கள் பயன் கருதாப் பணி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. Devan says:

  அழுத்தமான பதிவு அய்யா இதைப் போன்ற பதிவுகள் வரும் காலங்களில் நிறைய எழுதுங்கள்…

  வலைத்தளம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்…

  • machamuni says:

   தங்கள் தொடர்புக்கு நன்றி.நிறைய எழுத நிறைய இடைஞ்சல்கள்.எனக்கு எதற்கு இந்த விமர்சனமும்.அதன் விளைவாக எழும் உணர்ச்சிகளும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • machamuni says:

   நன்றி தேவன் அவர்களே!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. நமசிவாயம் ராஜசேகர் says:

  அன்புள்ள குரு அவர்களுக்கு வணக்கம்,

  சில நாட்கள் என்னால் தங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, அதற்காக மனிப்பு கோருகிறேன்,
  தங்களின் பதிவுகள் இந்த மூடனின் மன நிலையில் பலமாற்றங்களை உருவாக்கியுள்ளது, குருவின் அருளாலும், இறைவன் இட்ட பிட்சையாலும் நல்ல நிலைமையில் இருக்கிறேன், என்றும் அதை மறவேன் தங்களிடம் குருகுல கல்வி பயிலும் நாட்களை எதிர்நோக்கி உள்ளேன், மேலும் பல மூலிகை பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன்.
  வலைதள வடிவமைப்பாளருக்கு எனது நன்றியை சொல்லவும்.

  குருவின் பாதம் பணியும்,
  நமசிவாயம் ராஜசேகர்

 7. Balakumar R says:

  ஐயா தங்கள் வலயதலதிற்கு மிக்க நன்றி
  இந்த ஆகச கருடன் என்னக்கு மிகவும் அவசியம் இது சுமாராக எவளவு விலை இருக்கும் என்று கூறமுடியுமா
  மீண்டும் நன்றி
  அன்புடன்,
  பாலகுமார்

  • machamuni says:

   எனக்கு திரு கண்ணன் அவர்கள்,சதுரகிரி ஹெர்பல்ஸ் நல்ல பொருளாசை அற்ற நண்பர்.பல மலைவாழ் மக்களை வைத்து சில முக்கியமான மூலிகைகளை மிகக் குறைந்த விலைகளில் கொடுத்து வருவதால்தான் அவரது பெயர் மற்றும் அலைபேசி எண்களை எனது வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளேன்.இதோ கீழேயும் கொடுத்துள்ளேன்.
   +919894912594
   +919943205566
   அவரது முகவரி:-
   பெ.கண்ணன்.
   சதுரகிரி ஹெர்பல்ஸ்,
   2/147,மங்கம்மாள் கோவில் தெரு,
   கான்சாபுரம்,(P-O)
   திரு வில்லிபுத்தூர் தாலுகா,
   விருதுநகர் மாவட்டம்.
   அவரது எண்ணுக்கு தொடர்பு கொண்டு விலை என்ன என்று கேட்டு அதைப் பெற்றுக் கொள்ளவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • senthil kumar says:

    தங்கள் பணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் பணி சிறந்த முறையில் தொடர வாழ்த்துக்கள்.
    ஐயா எனக்கு சில மருத்துவ விளக்கம் தேவைபடுகிறது. தங்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்கிறேன் .

    மீண்டும் தங்களுடைய பணிக்கு , பாராட்டுக்கள்.

    நன்றி,

    • machamuni says:

     அன்புள்ள திரு செந்தில் குமார் அவர்களே,
     உங்களது கருத்துரைக்கு நன்றி ,
     மிக நல்லது.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 8. Your internet site is really cool which is a great uplifting write-up.

 9. ravi kumar says:

  Sir,

  அவுரி நெல்லி patri konjam sollungalen

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ரவி குமார் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இது போன்ற வார்த்தைகள் எல்லாம் சித்தர்கள் பரி பாஷையில் வேறு பொருள் உண்டு.இவற்றைத் தேடி நான் அலைந்து வாழ்நாளை வீணாக்கியது போல உங்கள் வாழ்நாளை வீணாக்காதீர்கள்.உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கு விடையும் கிடைக்கும்.பதிவுகளைப் பார்த்து வாருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. venkat says:

  Dear Sir,

  I humbly request you to give sugar & teeth pain, gum pain medicine.

  Kindly very very urgent. Please help me sir.

  Again very request you to give the medicine sir.

  Becasue, i can’t tolerate about this.

  I will ready to pay necessary amount sir, please.

  with love
  venkat
  9865824794
  msv6000@yahoo.com

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வெங்கட் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   உங்களிடம் நேரில் பேசி உங்களுக்கான தீர்வு தரப்பட்டுவிட்டதால் விளக்கமான கருத்துரை தேவையில்லை என்று நினைக்கிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. venkat says:

  Dear Sir,

  My Heartiest thankful to you sir.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வெங்கட் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. venkat says:

  Dear sir,

  I am using minsara thailam. My teeth & gum pain is gone.

  No word to say to you.

  I am very thankful to you all ways.

  with love
  venkat
  9865824794

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வெங்கட் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   உங்களைப் போல பலரும் பயன் பெற மின்சார தைலம் தயாரிப்பு முறையை அடுத்து வரும் பதிவுகளில் எழுத இருக்கிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. deear sir,
  very good effort you are taken sir! Thanks for sharing&expecting more from your experiances in upcoming statuses.

  • machamuni says:

   அன்பு மிக்க பொறியாளர் திரு ஃபிஷல் கான் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   எமக்குத் தெரிந்ததை எம்மால் கூற அனுமதியளிக்கப்பட்டதை நாம் வெளியிட என்றும் தயங்கியதே இல்லை .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. Ramachandran says:

  How to make kashaayam using

  கருடன் கிழங்கு Gharudan Kilanghu = 8 parts
  சுக்கு Sukkhu = 1 part
  மிளகு milaghu = 1 Part
  திப்பிலி Thippili = 2 Part
  வாய் விளங்கம் Vaay Vilangham = 1 Part
  கருஞ்சீரகம் Karuncheeragham = 3 Parts
  தண்ணீர் விட்டான் கிழங்கு Tanneer vittan Kilaghu = 2 Part

  Hoe long we can keep this kashaayam?

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராமச்சந்திரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இந்த மருந்தை நாம் உங்களுக்குச் சொல்லவில்லையே ???யார் கூறினார்களோ அவர்களிடம் விளக்கம் பெறவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. Sridhar says:

  அய்யா கிடைத்தது ஆகாச கருடன். உங்களுக்கும் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களுக்கும் நன்றி.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • madhu says:

   இந்த ஆகச கருடன் என்னக்கு மிகவும் அவசியம் இது சுமாராக எவளவு விலை இருக்கும் என்று கூறமுடியுமா

   • machamuni says:

    அன்பு மிக்க திரு மது அவர்களே,
    கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
    நான் தகவல் தெரிவிப்பவன் மட்டுமே!!!!!விலை நிர்ணயம் செய்பவனல்ல !!!!அதற்கு அணுக வேண்டிய முகவரி ஏற்கெனவே கொடுத்துள்ளேன்.மீண்டும் ஏன் கேள்வி?????
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

 16. sir,
  please sent your mobile number, we need your help

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சரஸ்வதி மாதவன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு எமது தொடர்பு எண் அனுப்பப்பட்டுள்ளது.குறிப்பிட்ட நேரத்தில் தொடர்பு கொள்ளவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. Anand.K says:

  2ir, your work is very useful. After knowing the help of agasa karudan, I decide to buy. Thank you for your writings.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கே ஆனந்த் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. Sadhishgnanakhumaaran says:

  அய்யா, உங்கள் அரிய சேவை என்றென்றும் போற்றுதலுக்குரியது, நன்றியுடன் வணங்குகிறேன்.

  உங்களிடம் சில விளக்கங்கள் பெற விழைகிறேன், உங்கள் இணைய அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் தயவு செய்து எனக்கு கிடைத்தால் மகிழ்வடைவேன்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சதீஷ் ஞானக் குமரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   உங்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பியுள்ளேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. salai karthikeyan says:

  ayya,
  i having sufferring from hepatitice B viral it is can be curable sir,
  please give me your phone no

  salai karthikeyan
  pondicherry
  7708999977

  • machamuni says:

   அன்புள்ள திரு சாலை கார்திகேயன் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   உங்களுடன் நாம் ஏற்கெனவே பேசியுள்ளோம்.ஞாபகம் இல்லையா???உங்களுடன் தொடர்பு கொள்ளுகிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 20. Arun says:

  Dear Kannan sir,

  please send 1) மூட்டு வலித் தைலம்
  2) ஆகாச கருடன்

  my address; R.Arun,B.E.,
  No; 45, valluvarpuram
  Thiruvallur-602001.
  Thiruvaqllur District.
  mobile no;9445868794

  • machamuni says:

   அன்புள்ள திரு அருண் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   இது எமக்கு கொடுக்க வேண்டிய முகவரி அல்ல .இது சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களுக்கு தர வேண்டிய முகவரி.அவரிடம் உங்கள் பிரச்சினையைச் சொல்லிக் கேளுங்கள்.அவர் அனுப்புவார்.இனி எம்மிடம் இது போன்ற மின்னஞ்சலுடன் வராதீர்கள்.நாம் சொல்லும் விடயங்கள் இவ்வளவுதான் புரிகிறதா?????
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 21. சாதிக் says:

  ஐயா
  எனக்கு வெண்படை (வெண்புள்ளி) உதடு, இரண்டு கை விரல்கள், இரண்டு கால் பாதம் வரை உள்ளது. Pigmento என்னும் ஆயுர்வேத மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். கடந்த மூன்று மாதமாக கட்டுக்குள் இருந்தது மீண்டும் பரவ ஆரம்பிக்கிறது. நல்ல வைத்திய முறை கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வயது 55

  • machamuni says:

   அன்புள்ள திரு சாதிக் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   எனது சீடரும் ,நண்பருமான திரு ஸ்ரீதர் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.அவரிடம் இந்த வெண்புள்ளி நோய்க்கு உள் மருந்து ஒன்றும் , வெளிப் பூச்சுக்கு ஒரு மருந்து செய் முறையை விவரித்து உள்ளேன்.அவர் ஒரு சித்த மருத்துவ மருந்தாளுனர்.அவர் மிகத் திறமையானவரும் கூட.அவரது அலைபேசி எண் 9952958734.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 22. சாதிக் says:

  ஐயா,

  தாங்கள் கூறியபடி தங்கள் சீடர் திரு ஸ்ரீதர் அவர்களை தொடர்பு கொண்டு அலைபேசியில் பேசி வருகிறேன். அவரும் மருந்து விபரங்களை தெரிவித்துள்ளார்.
  தொடர்ந்து இருவரும் தொடர்பிலேயே இருக்கின்றோம்.

  மிக்க நன்றி

  சாதிக்

  • machamuni says:

   அன்புள்ள திரு சாதிக் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 23. S.Balaji says:

  Thanks for unknown secretes of Indian medicines. Wish you all the best.

  • machamuni says:

   அன்புள்ள திரு எஸ் பாலாஜி அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   தமிழில் கருத்துரை எழுதினால் நாமும் மகிழ்வோம் .அன்னைத் தமிழும் மகிழ்வாள் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Elango says:

    ஐயா ,

    தங்கள் பணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் பணி சிறந்த முறையில் தொடர வாழ்த்துக்கள்.
    ஐயா எனக்கு சில மருத்துவ விளக்கம் தேவைபடுகிறது. தங்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்கிறேன் .

    மீண்டும் தங்களுடைய பணிக்கு , பாராட்டுக்கள்.

    நன்றி,

    இளங்கோ

    • machamuni says:

     அன்புள்ள திரு இளங்கோ அவர்களே ,
     உங்களது கருத்துரைக்கு நன்றி,
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 24. மதன் says:

  ஐயா வணக்கம் என் பெயர் மதன்

  இன்று உங்கள் வலைதளத்தை படித்தேன் மிகவும் அருமை நமது மூலிகைகள் குறித்து அறிந்து கொள்வது
  மிகவும் ஆவலாக உள்ளது.

  • machamuni says:

   அன்புள்ள திரு மதன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 25. Rajavijayakumar says:

  About AKASNKIZHANKU,you are giving new message. It is very usefull for all .
  Thank you very much.

  • machamuni says:

   அன்புள்ள திரு Rajavijayakumar அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 26. Malathy says:

  Where can I buy this. I’m very curios. please reply to get a chance me

  • machamuni says:

   அன்புள்ள திரு மாலதி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அலைபேசி எண்கள்
   +919894912594
   +919943205566
   அவரது முகவரி:-
   பெ.கண்ணன்.
   சதுரகிரி ஹெர்பல்ஸ்,
   2/147,மங்கம்மாள் கோவில் தெரு,
   கான்சாபுரம்,(P-O)
   திரு வில்லிபுத்தூர் தாலுகா,
   விருதுநகர் மாவட்டம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 27. மதன் says:

  ஐயா வணக்கம்
  அரிய மூலிகைகள் குறித்து விளக்கி வருகின்றீர்கள் மிகவும் நன்றி.
  எனக்கு மாந்த்ரீகம் குறித்து சில சந்தேகங்கள் உள்ளன தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்
  மாந்த்ரீகம் என்பது உண்மையா அல்லது பணம் பறிக்கும் வித்தையா எனக்கு கூறுங்கள் ஐயா
  நனறியுடன் மதன்

  • machamuni says:

   அன்புள்ள திரு மதன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   மாந்த்ரீகம் என்பது உண்மையே ? அது பாரா சைக்காலஜி என்ற தலைப்பில் நவீன விஞ்ஞானம் ஆராய்ந்து வருகிறது .ஆனால் தற்போது உண்மையான மாந்திரீகம் கற்றவர்கள் அருகி வருகிறார்கள்.சுதந்திரத்துக்கு பல வருடங்கள் முன்னால் நமது தமிழ் நாட்டில் மோடி வைப்பது , மோடி எடுப்பது என்ற வித்தைகள் தெருவிலேயே நடந்தது வந்தது . ஆங்கிலேய ஆட்சி இவற்றை தடை செய்து அடக்கி ஒடுக்கி பலரை சிறையில் அடைத்து இந்த வித்தையை நம் நாட்டில் அருக வைத்துவிட்டது .அஷ்ட கர்மம் ஆடல் என்ற தலைப்பில் ஏற்கெனவே நாம் எழுதி உள்ள கட்டுரைகளை பாருங்கள் .
   இந்த இணைப்பை பாருங்கள் .
   http://machamuni.blogspot.in/2010/12/13_12.html
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 28. Kannan says:

  In coimbatore, where I can get your medicines?

  Kindly inform me. I don’t know tamil typing & tamil keyboard

  with regards,
  Kannan.N

  • machamuni says:

   அன்புள்ள திரு Kannan அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   ///In coimbatore, where I can get your medicines?
   Kindly inform me.///
   தொடர்பு முகவரி அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன .அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.இது போன்ற வீணான கேள்விகளுக்கு பதிலளிப்பது எமது பொன்னான நேரத்தை வீணடிக்கும் என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • Dileeban says:

   My Dear sir, Vanakkam. Sorry to say am typing this comment from my mobile phone. I don’t have tamil typing software in my mobile. One of my friend bought AGASA GARUDAN KILANGU at coimbatore. It is available at GANESH STORES NATTU MARUNTHU KADAI, Bigbazzar Street Coimbatore. The cost is 1kg Rs.100, Normally 1 Kilangu weight around 600 to 700 gms.

 29. vadivelan says:

  makkaluku nanmai seium ungaluku en manamarntha vazhthukal

  • machamuni says:

   அன்புள்ள திரு வடிவேலன்அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 30. SHANKER says:

  sir,
  just i want to know is there is any specific direction or place to tie or keep this akasa karudan

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷங்கர் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உங்கள் கருத்துரை முதலில் தமிழில் இருக்க வேண்டும்.தமிழில் எழுதாத நபர்கள் மேல் எமக்கு மரியாதை ஏற்படுவதில்லை.வீட்டில் எங்கே படுக்கிறீர்களோ அந்த அறையில் வட கிழக்கு மூலையில் கட்டி இருப்பது நன்று.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 + = 46