ஒன்றுமில்லை(மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் சேர)

February 19, 2012 by: machamuni
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

யின்-யாங் (YIN-YANG) இவற்றின் குறியீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது எதனைக் குறிக்கிறது.அழித்தலும் ஆக்கலும் எங்கே சமமாக உள்ளதோ அங்கே இயற்கை சமநிலை கெடாமல் இருக்கிறது.பல்லாயிரம் வருடங்களாக அதிகமாகாமலும் குறையாமலும்(வற்றிப் போகாமலும் )  இருக்கும் வற்றாத ஊற்றுக்கள் நிறைய மேற்குத் தொடர்ச்சி மலையில் உண்டு.அவற்றின் தண்ணீர் இது போன்றே சம நிலை கெடாத ஆயுளை நல்க வல்லவை.உயிரில் கலந்த ஞானத்தை வளப்படுத்த வல்லவை.எனெனில் அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது.எங்கு இயற்கை சமநிலை கெடாமல் இருக்கிறதோ அங்கே உயிர் அழிவதில்லை.

அகாரம்,உகாரம் ,மகாரம் (ஓம்) இவற்றில் உள்ள சிகாரமான நெருப்பை(நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும்) வைத்தே எமனை வெல்ல முடியும்.நாயை எப்படி ஓட்டுகிறோம். “சீ “ என்றுதான் ஓட்டுகிறோம்.

நமசிவய என்பதில் உள்ள ஐந்தெழுத்துக்களும் பஞ்ச பூதங்களைக் குறிக்கும்.பிருதிவி,அப்பு,தேயு(நெருப்பு),வாயு(காற்று),ஆகாயம் என்பதே அவை.இவற்றில் மூன்று பூதங்கள் பழுதுள்ளவை.அவையாவன நெருப்பு,காற்று ,ஆகாயம்.முதலில் வாசி ,வாசி என வாசிக்கும் காற்று நின்றவுடன் அடுத்து ஆகாயம் உயிருடன் சேர்ந்து ஓடிவிடும்.பிறகு காற்றில்லாவிட்டால் நெருப்பு ஏது ,நெருப்பு அணைந்துவிடும்.பிறகு மீதமுள்ள மண்ணும்,நீரும் பிணமாகக் கிடக்கும்.

பெரியவர்கள் சொல்வார்கள்,“`ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் பண்ண வேண்டும் “.ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்தான் இருக்கிறது.பழுதுள்ள மூன்றில் கடைசியாக வெளியேறும் நெருப்பைப் பிடித்தால்.பழுதுள்ள மீதமுள்ள காற்றும்,ஆகாயமும் நிற்கும்.

இதல்லாமல் காற்றைப் பிடிப்பது கடினம்.அப்படி காற்றைப் பிடித்தாலும் தேய்க்கும் பஞ்ச பூதத்தைப் பிடிக்காவிட்டால் அது காற்றையும்,ஆகாயத்தையும் தேய்த்து அழித்துவிடும்.மேலும் பஞ்ச பூதங்களில் காற்றுக்கு அணுக்கட்டமைப்பு உண்டு,ஆகாயத்துக்கு அணுக்கட்டமைப்பு(பரமாணு அல்லது ஈதர்) உண்டு,நீருக்கும் அணுக்கட்டமைப்பு உண்டு ,மண்ணுக்கும் அணுக்கட்டமைப்பு உண்டு, ஆனால் நெருப்புக்கு மட்டும் எந்த அணுக்கட்டமைப்பும் கிடையாது.

பற்ற வைத்தால் எந்த பொருளையும் பற்றி எரிய வைத்து,அந்த பொருளை எரித்து தேய்க்கும்.எனவே இது தேயு (நெருப்பு)என அழைக்கப்பட்டது.நமதுடலும் பற்றி எரிய வைக்கப்பட்ட திரி போன்று எரிந்து இரு பூதங்கள் மிஞ்சி, கடைசியில் அவையும் சாம்பலாகிறது.இதுவே காயத்திரி மந்திரத்தின் உள் ரகசியம்.விசுவாமித்திரன் கண்டுபிடித்தது இதைத்தான்.இதுதான் காயத்திரி மந்திரத்தின் ரகசியம்.இதையே பிராமணர்கள் காலையும், மாலையும் சந்தியா வந்தனம் என்ற பெயரில் பொருள் புரியாமல் உச்சரித்து மட்டும் வருகின்றனர். காயத்தை திரியாக்கி வெறும் ஒளியுடலாக மாற்ற ஓர் எளிய வழியுள்ளது. தேயுவானவான நெருப்பு எரியும் முன் எங்கிருந்து வந்ததென்பதும் தெரியாது.மீண்டும் எங்கே சென்றதென்பதும் தெரியாது.

மேற்கண்ட நெருப்பின் வழியே சென்று ஞானத்தை அடையும் வழியே எங்கள் மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் உப தேசமாகக் கொடுக்கப்படுகிறது. அதைப் பெற எங்கள் சபையில் வரும் 2012 ஆண்டு மார்ச்சு மாதம் 1 ம் தேதி ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட இருக்கிறது.அதற்கு திருமணம் முடிந்த நபர்கள் மட்டுமே தகுதியுள்ள நபர்கள்.மேலும் இதற்கு உபதேசக்கட்டணமாக அன்றைக்கு செலவாகும் பால், பழம், சர்க்கரை, மல்லிகைப்பூ, ஆகியவற்றிற்கான செலவாக ரூபாய் 50/= ம்,கட்டிட நன்கொடையாக ரூபாய் 500/= ம் செலுத்த வேண்டும்.

எங்களது கட்டிடம் கட்டும் முன்பு இந்த தொகை 500/= கிடையாது.ஆனால் தற்போது கட்டிட செலவுகள் அதிகம் ஆனதால் கட்டிட செலவுக் கடன் ரூபாய் 3,00,000 கட்ட வேண்டிய நிலையில் இருப்பதாலேயே இந்தக் கட்டணம்.எனது குருநாதர் இது போல் கட்டணம் வசூலிப்பதில் சிறிதும் விருப்பம் இல்லாதவர்.

இப்போது வேறு வழியில்லாததால்தான் இந்தக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சாகாக் கல்வியினை கற்க இது ஒன்றும் பெருந்தொகையில்லைதானே ?????

உருவாய் அருவாய் ஆடியோ பாடல்


அடுத்த பதிவில் சபைக்கட்டிட திறப்பு விழா அழைப்பிதழும், சபைக்கு வரும் வழி முறைகளும் கொடுக்கப்படும்.

14 responses to “ஒன்றுமில்லை(மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் சேர)”

 1. O Palamudhir selvan says:

  Very short message with lots of inner / hidden meaning. Thanks for the post.

  • machamuni says:

   நன்றி திரு ஒ.பழமுதிர்ச் செல்வம் அவர்களே!!!இதைவிட ஆழமான பொருள் விளக்கம் சபையில் கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • jeganath says:

    அய்யா அடுத்த உபதேசம் மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் என்று வழங்கப்படும் என்று கூறுவீர்களா ?

    • machamuni says:

     மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் நான் ஒரு கடைநிலை ஊழியனே தவிர வேறில்லை.எனது தெய்வீகமுடைய அருட் குருநாதர் திருமிகு பார்த்த சாரதி ஐயா அவர்கள்தான் உபதேச நாளையும்,உபதேசம் பெற வேண்டிய நபர்களையும் தீர்மானிப்பவர்.அவரது தொலைபேசி எண் 04564-240294.இந்த தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 2. அற்புதமான ஞான விளக்கம்… பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.in/

  • machamuni says:

   ஐயா தங்கள்.கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. Mathi says:

  அழகப்பன் அய்யா அவர்கள்.

  திருமணம் முடிந்த நபர்கள் மட்டுமே தகுதியுள்ள நபர்கள் என்று சொல்கிறீர்கள். திருமணம் ஆனவர்கள் மட்டும் ஞானம் பெற தகுதி உடையவரா? இறைவனை அடைய இறைவனை பற்றி அறிய திருமணம் ஒரு தடையா? இதற்கு விளக்கம் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  தாழ்மையுடன்
  மதிவாணன்.

  • machamuni says:

   திருமணம் முடிந்தவர்கள் மட்டுமே தகுதியுள்ள நபர்கள் என்று நான் தீர்மானிக்கவில்லை எனக்கு முன்னால் இருக்கும்,இருந்த சபை முன்னவர்கள் தீர்மானித்து அதன்படி நாங்கள் நடந்து வருகின்றோம்.அதற்கு காரணமும் இருக்கிறது.பேரின்பமான இந்தச் சுவை கண்ட திருமணமாகாத இளைஞர்கள்,பிரம்மச்சாரிகளாக வாழும் ஆன்மீக வாழக்கையை ஏற்றுக் கொண்டுவிடலாம்.அதன் விளைவாக அந்த இளைஞர்களின் உறவினர்கள்,மச்ச முனிவரின் சித்த ஞான சபையைச் சேர்ந்தவர்கள்,இளைஞர்களையெல்லாம் சாமியார்களாய் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்.மேலும் திருமணமான ஒரு நபருக்கு இருக்கும் மன முதிர்ச்சி,திருமணமாகாத இளைஞனுக்கு இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்,அது பற்றி இங்கே நாம் வாதிட வேண்டாம்.என் அனுபவத்திலேயே நானும் உங்களைப் போல நினைத்து {திருமணம் ஆனவர்கள் மட்டும் ஞானம் பெற தகுதி உடையவரா? இறைவனை அடைய இறைவனை பற்றி அறிய திருமணம் ஒரு தடையா?என நினைத்து} சபையில் முக்கியத்துவம் காரணமாக எனக்குக் கொடுக்கப்பட்ட செல்வாக்கை(வீட்டொ பவர் போல) உபயோகித்து என் திருமணமாகாத மைத்துனர் மகனுக்கு உபதேசம் கொடுக்க வலியுறுத்தி,அதை நிலை நாட்டியும் விட்டேன்.விளைவு விபரீதமாக இருந்தது.நான் அப்போது அரியலூரில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.இவர் அடுத்தடுத்த(8,9,10) உபதேசங்களையும் அடுத்தடுத்த மூன்று மாதங்களில் பெற்று,எனக்குத் தெரியாலேயே கடுமையான பயிற்சியில் இறங்கி அதே வருட முடிவில் மனச் சிதைவு நோய்க்கு ஆளானார்.பின் அவரை மீட்டெடுக்க நான் ஒரு வாரம் விடுப்பு எடுத்து வந்து இங்கேயே தங்கி,நானும் எனது குருநாதரும், எங்களிடம் உள்ள சில முக்கியமான சித்த மருந்துகளைக் கொடுத்து உடல் சூட்டினைக் குறைத்து,மனத்தைச் சரி செய்யும் மருந்துகளையும் கொடுத்துச்,சரி செய்தோம்.மேலும் புதிதான ஒரு தேங்காய் நாரில் செய்த கயிறு முறுக்கேற்ற முறுக்கேற்ற வலுவாக ஆகிறது.அது போல வலுவான மனத்திற்கு தியானம் மேலும் வலுவைக் கொடுக்கிறது. ஆனால் இற்றுப் போன கயிற்றுக்கு முறுக்கேற்றினால்,கயிறு துண்டு துண்டாகப் போய்விடும்.அது போல வலுவற்ற மனத்துக்கு தியானம் வலுவைக் கொடுப்பதற்குப் பதில் மனச் சிதைவைக் ( SCHIZOPHRENIA ) கொடுத்துவிடுவதை,என் அனுபவத்திலேயே கண்டுவிட்டேன்.எனவே பெரியவர்கள் ஏதோ ஒரு காரணத்தை வைத்தே,இந்த சட்டத்தை வைத்திருக்கிறார்கள் என்று கண்டு கொண்டேன்.எனவே அந்தச் சட்டத்தை முறிக்கவோ,தளர்த்தவோ எப்போதும் நான் முயல்வதில்லை.நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் திருமணம் செய்த பிறகு வாருங்கள்.அது ஒன்றும் அதிக கால தாமதம் இல்லை. வாழ்நாள் முழுவதும் ஞானம் என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பதைவிட,இது அவ்வளவு காலதாமதம் இல்லை.அது மட்டுமல்ல விட்ட குறை தொட்ட குறை இருந்தால் ,ஞானம் தானே வந்தடுக்கும்.உபதேசம் என்பதே தேவையில்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. jagan says:

  if we are not able to make it at this specified time then how can we make it at anyother time? i am in a situation where i will not be able to travel to the place on mar 1st week

  • machamuni says:

   இம்முறை வர இயலாவிடினும் தொடர்பில் இருங்கள்.சந்தர்ப்பம் மீண்டும் வரும் போது உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. Paramagourou says:

  அய்யா தங்களின் வலைபதிவினை சிலது படித்து இருக்கிறன் மிக்க மகிழ்ச்சி மச்சமுனி சித்தா ஞான சபை கலந்து கொள்வது எப்படி தெரியபடுத்தவும் நன்றி

  • machamuni says:

   சித்த ஞான சபை புதிய கட்டிடத் திறப்பு விழா பற்றிய பதிவில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது . பார்த்து தெரிந்து தெளிந்து கொள்ளவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. ravindran k says:

  guruji,
  i am a regular reader of machamuni.com and i am very eager to talk with you to get some clarification on my mind’s restlessness. i kindly request you to publish your cell number to talk with you plese ji
  ravindran
  neyveli

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ரவீந்திரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   எமது அலைபேசி எண்ணை திறப்பாக சொல்ல இயலாத நிலையில் இருக்கிறேன்.எனக்கு தற்போதுள்ள வேலைப் பழுவே மிக மிக அதிகம் . எம் தூங்கும் நேரம் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் மட்டுமே என்றாலும் உங்களுக்கு தனியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.வரை முறையோடு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 1