மச்ச முனிவரின் சித்த ஞான சபை புதிய கட்டிட திறப்பு விழா அழைப்பிதழ்

February 23, 2012 by: machamuni

அன்பார்ந்த மெய்யன்பர்களே,

உலகம் உய்ய நம் சித்தர் பெருமக்கள் வழி வழியாய் வந்த சில மெய்க் குருமார்களின் மூலமாக உண்மையான ஞானப் பொருள் விளக்கங்கள் அங்கங்கே தரப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

அப்படி மச்ச முனிவரின் குரு சிஷ்ய பரம்பரையின் எட்டாம் பேரராகிய உயர்திரு ஆன்மீக வள்ளல் சர.கோ.பார்த்தசாரதி ஐயா அவர்கள் 01-03-2012 அன்று எங்களது பகல் நிகழ்ச்சிக்குப் பின் இரவு 10 மணி சுமாருக்கு சபை தொடங்கி அதில் பெரிய ஞானக் கோவையில் சில சித்தர் பாடல்களுக்கு விளக்கம் தந்த பின்,அதில் உள்ள சிவானந்த போதம் என்ற நூலில் உள்ள சிஷ்யன் கேள்வி கேட்க குரு சொல்வது போல் ரூபமாயுள்ள அறிவு மன உரையாடல்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு,முடிவில் உபதேசம் அளிக்கப்படும்.அந்த உபதேசம் முடிய அதி காலை 3.30 ஆகிவிடும்.

எனது இணைய தளத்தில் நமது மச்ச முனிவரின் சித்த ஞான சபை புதிய கட்டிடத்திற்கு நன்கொடை கேட்டு சபை புதுப்பித்தலில் உங்கள் பங்களிப்பை சேர்க்க ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.அது இந்த ஆலயம் கட்டும் புண்ணியம் எல்லோருக்கும் போய்ச் சேரட்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது.இந்தப் பக்கம் சபை திறப்பு விழாவின் பின்னர் நீக்கப்பட இருக்கிறது.பலர் புண்ணியம் தேடி பணத்தை வாரி இறைக்கக் காத்திருக்கும் போது, பல சிவன் அடியார்கள்  சிவனுக்காகவும் ,சிவனடியார்களுக்காகவும் உயிரையும் ஈந்த இந்தத் தமிழ் நாட்டில் பொருளுக்காக மேலும் நான் கேட்டுக் கொண்டே இருக்க விழையவில்லை.

பொருளில்லார்க்கு இவ்வுலக மட்டும் இல்லை.அருளில்லார்க்கு எவ்வுலகும் இல்லை.அருள் பெருக!!!!ஞானம் சிறக்க!!!!வாழ்க சித்தர் புகழ்!!! சித்தர் அடிவணங்கும் அன்பன் சாமீ அழகப்பன்!!!!!

11 responses to “மச்ச முனிவரின் சித்த ஞான சபை புதிய கட்டிட திறப்பு விழா அழைப்பிதழ்”

 1. திறப்புவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்..

  http://anubhudhi.blogspot.in/

  • machamuni says:

   திறப்பு விழாவிற்கு வாழ்த்துடன் நில்லாமல் வருகை தாருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. shareef says:

  விழா சிறக்க எல்லாம் வல்ல
  இறைவனை வேண்டுகிறேன் ஜி

  • machamuni says:

   உயர்திரு.மஹ்தூமி பாவா.அவர்கள் குர்-ஆன் கூறும் ஞான விடயங்களை தெளிவாக உண்மைப் பொருளுடன் விளக்க வல்லவர்.வந்து அவர் ஆன்மீக உரையை கேட்டுப் பயன் பெறுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. Palamudhir Selvan says:

  we would like to contribute for the building when we meet in person. Hope this helps you.
  Thanks.

  • machamuni says:

   நீங்கள் மட்டுமல்ல அனைவரும் உதவவே இந்த அறிவிப்பு வெளியிட்டிருக்கிறேன்.இப்போதைக்கு உங்கள் உதவி எங்களின் தேவை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. Revathi says:

  Sir,

  Nangalum ungasabaiku varalama

  • machamuni says:

   யார் வேண்டுமானாலும் வரலாம்.சாதி,மதம்,இனம் ஏதும் தடையில்லை.நீங்களும் தாராளமாக வரலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. Mathi says:

  வாழ்த்துக்கள். மெய்ஞ்ஞான சபை வளர்ந்து எல்லா மக்களுக்கும் மெய்ப்பொருள் விளக்கம் பெற்று அனைவரும் இறைத்தன்மை பெற இறை அருளும் குரு அருளும் துணை இருக்குமாக.

  நன்றி

 6. siththarkal nesan says:

  குருவருள் கிடைக்க வாழ்த்துக்கள்…ஐயா

 7. siththarkal nesan says:

  சித்தர் இடைகாடார் பற்றி சொல்லுங்கள் (வீலக்கமாக) இவரய் தெரீந்துக்கொள்ளக் கடமைபட்டுஇருக்கிறேன் ஐயா உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

74 + = 78