சதுரகிரி ஹெர்பல்ஸ்(திரு கண்ணன் அவர்கள்) தயாரிப்புக்கள் (பாகம் 1)

December 1, 2012 by: machamuni

சதுரகிரி மஹாலிங்கம் கோயிலின் பெயரால் சதுரகிரி ஹெர்பல்ஸ் என்று பெயரிட்டு அந்த மஹாலிங்கத்தின் அருளால் திரு கண்ணன் அவர்கள்  தயாரிப்புக்கள் தன் சொந்த முயற்சியில் தானே முன்னின்று , மலை வாழ் மக்களைக் கொண்டு மூலிகைகளை சேகரித்து தானே தனது மேற்பார்வையில் சித்தர்களின் மூலிகை சேர்ப்பு முறைகளை வைத்து கீழ்க்கண்ட மூலிகைப் பொருட்களை தயாரித்து , மிகக் குறைந்த விலையில்  வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதில் எமது அம்மாவின் தாத்தா, முப்பாட்டனார் மற்றும் எட்டுத் தலைமுறை பராமரித்து வைத்துள்ள சித்த வைத்திய சுவடிகளின் உதவியால் எங்களது பாரம்பரிய வைத்திய மூலிகை சேர்ப்பு முறைகளையும் அவருக்கு  கொடுத்துள்ளேன். இவற்றால் சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள்  தயாரிப்புக்கள் மிக மேம்பட்டு விளங்குகின்றன. இவரது அனைத்து தயாரிப்புக்களும் பொது மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்பது எமது விருப்பம்.

அதற்காகவே அவரது தயாரிப்புக்கள் பற்றிய இந்தப் பதிவு .முதலில் நமது வலைப்பூ வாசகர்களுக்கு எமது கார்த்திகைத் திருநாள் அன்புப் பரிசாக அவை பற்றிய விவரங்களை அளிக்கிறேன்.இது குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்களுக்கான பதிவு ஆகும்.இதன் தொடர்ச்சி மற்ற பல வித வியாதிக்காரர்களுக்கும் , பல மருந்துகளும் , தீர்வுகளும்  இங்கே தொடரும்.

எனக்கு வரும் மின்னஞ்சல்களில் அதிகமான மின்னஞ்சல்கள் இந்த சர்க்கரை வியாதிக்காரர்களிடமிருந்துதான் வருகின்றன. சர்க்கரை வியாதி என்றால் என்ன ,அது என்ன செய்யும் என்ப்தையும் ,அது  கட்டுக்குள் வைக்க வேண்டிய விடயம் அல்ல விரட்டியடிக்க வேண்டிய விடயம்  போன்ற விளக்கங்களுடன் அடுத்தடுத்து கட்டுரைகள் வெளிவர இருக்கிறது .

1)  சர்க்கரை கொல்லிப் பொடி:- 

சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல.அது சீரண மண்டலத்தில் உள்ள குறைபாடே .உடல் ஒதுக்குவதால் உயரும் தரம் குறைந்த சர்க்கரையால் உடலை பாதிக்காமல் வைக்க வேண்டும். தரம் குறைந்த சர்க்கரையை குறைக்கவும் (சரியாக சீரணமாகாமல் உற்பத்தியான சர்க்கரையை ) , தரம் அதிகமான சர்க்கரையாக ( நன்றாக சீரணம் ஆகி  உற்பத்தியாகிற சர்க்கரை  ) தரம் உயர்த்த சீரண மண்டலத்தை சீராக்க வேண்டும் .

அத்துடன் சர்க்கரை வியாதி ஒன்றும் செய்யாது .ஆனால் பல வியாதிகளை அழையா விருந்தாளியாக அழைத்து வந்துவிடும்.எனவே சர்க்கரை வியாதியை ஆங்கில வைத்தியத்தில்  (SILENT KILLER ) அமைதியான கொலைகாரன் என்றழைப்பார்கள். சித்த வைத்தியத்தில் இந்த அமைதியான கொலைகாரனையும் கொல்ல வல்ல மருந்துகள் உள்ளன.அவை காலத்தால் (மறக்கப்பட்டு ) மறைக்கப்பட்டுள்ளதை வெளிக் கொண்டு வரவே மச்ச முனி  வரின் சித்த ஞான சபை வலைத் தளம் முயற்சி செய்து வருகிறது.

மது மேகம் என்ற சர்க்கரை வியாதி ,நீரிழிவு வியாதிக்கு ( SUGAR COMPLAINT) OR [ {HYPOGLYCEMIA OR LOW BLOOD SUGAR குறைவான சர்க்கரை }  {HYPERGLYCEMIA OR  HIGH BLOOD SUGAR அதிக சர்க்கரை }, DIABETS  {POLY DIPSIA(increased thirst,அதிக தாகம்)} {Polyphagia or hyperphagia {increased hunger(அதிக பசி)) , excessive hunger(அளவிற்கதிகமான பசி) ,  increased appetite (அளவிற்கதிகமான உணவு ) } ,  frequent urination , polyuriya or diuresis  (அதிக மூத்திரம் போதல், வெகு மூத்திரம் ,அடிக்கடி மூத்திரம் போதல்  ) ,increased thirst or psychogenic polydipsia (வளர்சிதை மாற்றத்தினால் விளையும் அதிதாகம் ) or polydipsia (சாதாரணமாக குடிக்கும் தண்ணீரளவிற்கு அதிகமான தாகம் )}{Diabetes mellitus type 2 (formerly noninsulin-dependent diabetes mellitus (NIDDM)or adult-onset diabetes இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோயாளிகள் )} , {Inborn errors of metabolism , (பிறப்பால் வளர்சிதை மாற்றத்தில்  குறைபாடுள்ள குழந்தைகள் )} இப்படி ஆங்கில வைத்தியத்தால் குறி குணங்களை வைத்து பலவாறாக பெயரிட்டு அழைக்கப்படும் பல வகையான சர்க்கரை வியாதிகளையும் கொல்லும் ஒரே ஓர் வைத்திய மூலிகைப் பொடி சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்களிடம் உள்ளது .அதில் 

அ) சர்க்கரை வில்வம் (உயரும் சர்க்கரையை தடுக்க வல்லது )

ஆ) சர்க்கரை வேம்பு (உயரும் சர்க்கரையை தடுக்க வல்லது )

இ) நீர் ஆரை (பெருகும் சிறுநீரை தடுத்து ,நீர்ச் சக்தி வெளியேறாமல் காத்து  உடல் வலுவை தக்க வைக்க வல்லது )

ஈ) நில வேம்பு (உயரும் சர்க்கரையை தடுத்து , உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  வல்லது )

உ) சிறு குறிஞ்சான்(உயரும் சர்க்கரையை தடுக்க வல்லது , இதை வாயில் போட்ட பின் சர்க்கரையை வாயில் போட்டால்,சர்க்கரையை கொன்று இனிப்பு இல்லாமல்  மண் போல உணரச் செய்யும் )

ஊ) முப்பிரண்டை உப்பு (உயரும் சர்க்கரையை தடுக்க வல்லது , எலும்பையும் ,எலும்பு மஞ்சையையும்  வலுவாக்கி,ஜீரண மண்டலத்தில் உள்ள குறைபாட்டை நீக்கி, உடலையும்  உரமாக்கும் மூலிகை உப்பு  )

எ) பிரண்டை உப்பு (வஜ்ஜிர வல்லி என்பது எலும்பை உலகத்தில் முறியாத பொருளாக்கும் மூலிகை , உயரும் சர்க்கரையை தடுக்க வல்லது , எலும்பையும் ,ஜீரண மண்டலத்தில் உள்ள குறைபாட்டை நீக்கி கல்லீரல் மண்ணீரல் போன்றவற்றில் உள்ள குறைபாட்டையும் கழிவுகளையும் நீக்க வல்லது,  எலும்பு மஞ்சையையும்  வலுவாக்க வல்லது )

ஏ) கொழுஞ்சி ( பயிர் வளர உதவும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் மூலிகை , விளை நிலத்தை அடி உரமாக பக்குவப்படுத்தும் மூலிகை , இதனால் உடலையும் சர்க்கரை வியாதியால் பாதிக்காத உடலாக ஆக்கும்)

ஐ) சீந்தில் உப்பு (உயரும் சர்க்கரையை தடுத்து, சீரண மண்டலத்தை சீராக்கி  உடலை உரமாக்கும் மூலிகை உப்பு  )

ஒ) மருதம் பட்டை (அர்ஜூனன் என்றழைக்கப்படும் இந்த மருதம் பட்டை இதயம் , இதய உறை , சிறுநீரகம் , ஈரல் , கல்லீரல்  ,பித்தப்பை  போன்ற ராஜ கருவிகளில் ஏற்படும் பிழைகளை நீக்கும், அதீத இரத்த அழுக்குகளால் இரத்த அழுத்தம் உயர்வதை தடுத்து, இரத்த அழுக்குகளை நீக்கி  இதயத்தை பலமாக்கும் )

ஓ) ஆவாரம் பூ ( ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்பார்கள் , ஆவாரை சாவாரையும் காக்கும்  எனில் இதன் பெருமை சொல்லில் அடங்காது )

ஔ)  கருஞ்சீரகம் ( கருஞ் சீரகத்தைப் பற்றி வலைப் பூவில் ஓர் பதிவே எழுதியுள்ளேன் http://machamuni.blogspot.in/2011/07/30.html )

க) ஓமம்  (வயிற்று உப்புசம் , அசீரணம் , கல்லீரல் , மண்ணீரல் பிரச்சினைகள் ஆகியவற்றை சரி செய்து சீரண மண்டலத்தை சீர்திருத்தி  உடலை ஆரோக்கியமாக மாற்றும்)

கா) வெந்தயம் (சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வந்து கல்லீரல் , மண்ணீரல் பிரச்சினைகள் ஆகியவற்றை சரி செய்து சீரண மண்டலத்தை சீர்திருத்தி  உடலை ஆரோக்கியமாக மாற்றும்)

கி) மாவிலங்கப்பட்டை (கல்லீரல் , மண்ணீரல் பிரச்சினைகள் ஆகியவற்றை சரி செய்து சீரண மண்டலத்தை சீர்திருத்தி  உடலை ஆரோக்கியமாக மாற்றும்)

கீ) பூவரசம் பட்டை (நுரையீரல்,கல்லீரல் , மண்ணீரல் பிரச்சினைகள் ஆகியவற்றை சரி செய்து சீரண மண்டலத்தை சீர்திருத்தி  உடலை ஆரோக்கியமாக மாற்றும். முன்னால் கமலை(மாடுகளை வைத்து தண்ணீர் இறைக்கும் அமைப்பு ) என்று ஒன்று உண்டு .அந்த மாடுகள் முன்னும் பின்னும் நடப்பதால் அவற்றுக்கு இளைப்பு வரும் என்பதால் கமலை இருக்கும் இடங்களில் எல்லாம் இந்தப் பூவரசு இருக்கும் .இதன் காற்றுப்பட்டாலே மாடுகளுக்கு வரும் இளைப்பு வராது.அவ்வளவு சிறப்பான மூலிகை )

கு) 100 வருட வயதான மரத்தின் முத்திய வேப்ப மரத்தின் உட் பட்டை ( 100 வருடம் மனிதன் எந்த மரத்தையும் விட்டு வைப்பதில்லை.இதனால் மாரியாத்தா குடியிருக்கும் மரம் என்று பண்டைய தமிழ் மக்கள் சொல்லி வைத்ததனால் இந்த வேப்ப மரங்கள் சில இடங்களில் காப்பாற்றி வைக்கப்பட்டுள்ளன.அந்த மரங்கள் மருந்துக்காக மட்டும் உபயோகிக்க அனுமதிக்கப்படுகின்றன.100 வருட வேப்ப மரத்தின் பட்டையும் சீரகமும் சேர்த்துப் பொடி செய்து  கொடுக்க புற்று நோயும் குணமாகும் என்று எம்மிடம் உள்ள எங்கள் பரம்பரை ஏட்டுப் பிரதிகள் சொல்கின்றன .)

கூ) சங்கங்குப்பி(உள்ளிருக்கும் ராஜ கருவிகளான மண்ணீரல் , கல்லீரல் , சிறு நீரகம் , இதயம் ஆகிய அனைத்து உள்ளுறுப்புக்களையும் சரியாக்கி உடலின் ஒருமித்த ஒட்டு மொத்த இயக்கத்தையும் சீராக்கும் )

கை )  அமுக்கராக் கிழங்கு {இந்தியன் ஜின்செங் என்றழைக்கப்படும் இளமை மூலிகை , இதன் வடமொழிப்பெயர் அசுவகெந்தா (அசுவம் என்றால் குதிரை , குதிரை  போல பலம் கொடுப்பதால் இந்தப் பெயர்)சர்க்கரை வியாதியால் இழந்த ஆண்மையை மீட்டுக் கொடுக்கும். மது மேகம் போன்ற 21 வகை மேகங்களால் வந்த உடற் தளர்ச்சியை மாற்றும்}.

கொ)  திரிபலாதி ( கடுக்காய் , தான்றிக்காய் , நெல்லி வற்றல் இவைகளின் சேர்க்கயே திரிபலாதி.உடலில் துர்நீர் , மேக நீரேற்றம் அதிகரித்து உடல் தளர்ந்து போய் உடல் தசைகள் எல்லாம் தொங்கிப் போய்விடும்.இந்தத் திரிபலாதி உடற்தசைகளை வலுவூட்டி இறுகச் செய்யும்.)

கோ ) திரி கடுகு(சுக்கு , மிளகு ,திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கையே திரிகடுகாம்.இந்தத் திரிகடுகு ஜீரண மண்டலத்தில் உள்ள குறைபாட்டை நீக்கி கல்லீரல் , மண்ணீரல் , வயிறு  போன்றவற்றில் உள்ள குறைபாட்டையும் கழிவுகளையும் நீக்க வல்லது,  வயிற்றில் இருந்து உணவை செரிக்க வைக்கும் ஜடராக்கினியை வளர்க்க வல்லது)

கௌ) பறங்கிப்பட்டைச் சூரணம் (இரத்தத்தை சுத்திகரிக்கும். கழிவு நீக்க மண்டலத்தை சர் செய்யும் .அதீத இரத்த அழுக்குகளால் இரத்த அழுத்தம் உயர்வதை தடுத்து, இரத்த அழுக்குகளை நீக்கி  இதயத்தை பலமாக்கும் . குறிப்பாக சிறு நீர்ப்புற வழியான ஆண்குறி , பெண் குறி வழியாக இனிப்பான சர்க்கரை வெளியேறுவதால் , ஏற்படும் கிருமித் தொற்றால் குறிகளில்  ஏற்படும் அரிப்பையும் , பிடுங்கலையும் , கைகால்  எரிச்சலையும் குணப்படுத்தும் .)

ங) சிலாசத்து பற்பம் ( இந்த சர்க்கரை வியாதி வந்ததில் இருந்து என்னுடைய ஆண்குறி ஒன்றுக்குப் போவற்கு மட்டுமே பயன்படுகிறது ,இந்த வியாதி என் ஆண்மையை பறித்துச் சென்றுவிட்டது என்று கூறுவோர்க்கானது. இது மது மேகத்தால் தளர்ந்து நீர்த்துப் போன சப்த தாதுக்களையும் வலுவாக்கி இழந்த ஆண்மை / பெண்மையை மீட்டுக் கொடுக்கும் )

ஙா) வெள்ளருகு(உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி , உடலில் உள்ள நம் உயிர் காக்கும் ஈரலில் உள்ள நச்சுக்களை அகற்றும். உயரும் சர்க்கரையை தடுக்க வல்லது )

ஙி) அவுரி(உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி , உடலில் உள்ள நம் உயிர் காக்கும் ஈரலில் உள்ள நச்சுக்களை அகற்றும். உயரும் சர்க்கரையை தடுக்க வல்லது )

ஙீ)வெண்தாமரை (வெண் தாமரைக் கற்பம் என்ற பெயரில் ஒரு பதிவே எழுதி உள்ளேன்.  http://machamuni.com/?p=1756 )

ஙு)சிறியாநங்கை ( சிறியா நங்கை இது பாம்பின் நஞ்சையும்  முறிக்க வல்லது. நம் உடலில் உண்டாகி பெருகும் நஞ்சால்தான் வியாதிகள் பெருகின்றன.அவற்றை இது முறித்து , உடலை நலமாக்கும்)

ஙூ ) வெண்ணாவல் பட்டை (பொதுவாகவே நாவல் பட்டை , இலை , பழம் எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தது . இனிப்பு நீரான சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. வெண்ணாவல் மரப்பட்டை இந்த மருத்துவ குணத்தில் மிக உயர்ந்தது .)

ஙை) அகில் (உடலில் உள்ள வெப்பை அகற்றி , கல்லீரலில் உள்ள வெப்பத்தையும் போக்க வல்லது . சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு உடலில் உயரும் அதிக சர்க்கரை எரிக்கப்படும் போது உண்டாகும் அதீத வெப்பத்தை தணித்து உடலை குளுமையாக வைத்திருக்கும். உடல் உஷ்ணம் உயர்ந்தால் நம் உடலில் உள்ள விந்துப்பையின் உஷ்ணமும் உயரும் என்பதால் , உடலின் உஷ்ணம் உயர்ந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தைப் பாக்கியத்தையே பாதிக்கும். அகில் (தேவதாரு ) இதனைப் போக்கும். )

ஙொ)சந்தனம்(உடலில் உள்ள வெப்பை அகற்றி , கல்லீரலில் உள்ள வெப்பத்தையும் போக்க வல்லது . சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு உடலில் உயரும் அதிக சர்க்கரை எரிக்கப்படும் போது உண்டாகும் அதீத வெப்பத்தை தணித்து உடலை குளுமையாக வைத்திருக்கும். உடல் உஷ்ணம் உயர்ந்தால் நம் உடலில் உள்ள விந்துப்பையின் உஷ்ணமும் உயரும் என்பதால் , உடலின் உஷ்ணம் உயர்ந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தைப் பாக்கியத்தையே பாதிக்கும். சந்தனம்  இதனைப் போக்கும். )

மேற்கண்ட சிவப்பு எழுத்துக்களில் இருக்கும் மூன்றும் , முறையாக வன இலாக்காவிலிருந்து ஏலம் எடுப்பவர்கள் மூலமாக  விலைக்கு கிடைத்தால் மட்டுமே சேர்க்கப்படும் , என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

ஙோ) சிவகரந்தை(சர்க்கரை வியாதியால் இழந்த ஆண்மையை மீட்டுக் கொடுக்கும். மது மேகம் போன்ற 21 வகை மேகங்களால் வந்த உடற் தளர்ச்சியை மாற்றும்)

ஙை ) சிவனார் வேம்பு(இரத்தத்தை சுத்திகரிக்கும். கழிவு நீக்க மண்டலத்தை சர் செய்யும் .அதீத இரத்த அழுக்குகளால் இரத்த அழுத்தம் உயர்வதை தடுத்து, இரத்த அழுக்குகளை நீக்கி  இதயத்தை பலமாக்கும் . குறிப்பாக சிறு நீர்ப்புற வழியான ஆண்குறி , பெண் குறி வழியாக இனிப்பான சர்க்கரை வெளியேறுவதால் , ஏற்படும் கிருமித் தொற்றால் குறிகளில்  ஏற்படும் அரிப்பையும் , பிடுங்கலையும் , கைகால்  எரிச்சலையும் குணப்படுத்தும் .)

ஙொ )வில்வம் , மகாவில்வம் (வில்வத்தின் பெருமை சொல்ல ஒரு நாள் போதாது . சப்த தாதுக்களையும் சரி செய்து , உடலில் எந்த  நோயையும்  இல்லாமல் செய்யும் கற்பம்  இது. )

ஙோ ) ஓரிதழ்த் தாமரை (சர்க்கரை வியாதியால் இழந்த ஆண்மையை மீட்டுக் கொடுக்கும். மது மேகம் போன்ற 21 வகை மேகங்களால் வந்த உடற் தளர்ச்சியை மாற்றும்.சப்த தாதுக்களையும் சரி செய்து , உடலில் எந்த  நோயையும்  இல்லாமல் செய்யும் ஆண்மை விருத்தி செய்யும் மூலிகை   இது)

மேற்கண்ட அனைத்து மூலிகைகளையும் சாப நிவர்த்தி செய்து , எடுத்து வந்து மூலிகைகளை நிழலில் உலர்த்தி , சூடாகாமல் வெந்து போகாமல் (சில தனிப்பட்ட இயந்திரங்களின் மூலம் , இயந்திர பாகங்களை தண்ணீரால் குழுமைப்படுத்தியபடி )பொடி செய்து  அதை மிகக் குறைந்த விலையில் அனைவருக்கும் அளித்து வருகிறார்.

அவரது முகவரி மற்றும் அலைபேசி எண்கள் கீழே காண்க.

+919894912594

+919626418594

அவரது முகவரி:-

திரு பெ.கண்ணன்,சதுரகிரி ஹெர்பல்ஸ்,

2/147,மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)

திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்.

இது போல சதுரகிரி ஹெர்பல்ஸ் ன் மிக நல்ல மற்ற மூலிகை மருந்துகளைசதுரகிரி ஹெர்பல்ஸ்(திரு கண்ணன் அவர்கள்) தயாரிப்புக்கள் (பாகம் 2) ல் பார்க்கலாம்.

137 responses to “சதுரகிரி ஹெர்பல்ஸ்(திரு கண்ணன் அவர்கள்) தயாரிப்புக்கள் (பாகம் 1)”

 1. Sridhar says:

  அருமையான பதிவு!! அற்புத அரிய மூலிகைகள்!! திரு.கண்ணன் அவர்கள் சேவை மிக சிறந்தது அவரது சேவையை அனைவரும் பயன்படுத்தி கொள்வோம். நன்றி அய்யா.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கட்டுரையை மீண்டும் இப்போது இன்று பிற் சேர்க்கைகள் செய்து விரிவாக்கம் செய்திருக்கிறோம்.மீண்டும் பாருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • dgbabu says:

    ayya thankal idam navaloga boopathy chendhooram vendum endru ketirunthane adhu patri enaku thagaval kodungal ayya.nandri.dgbabu.sivakasi.dgbabu_68@yahoo.co.in

    • machamuni says:

     அன்புள்ள திரு டி ஜி பாபு அவர்களே,
     நவலோக பூபதி எம் குருநாதர் திரு வெங்கடாசலபதி ஐயா அவர்களிடம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளவும்.
     இப்படிக்கு
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • dgbabu says:

      ayya venkatachalapathy avargal cell number e mail id koduthu uthavungal.navaloga boopathy peruvathu sampanthamaga cotact seyikirane ayya.nandree.dgbabu.sivakasi.
      dgbabu_68@yahoo.co.in

     • machamuni says:

      அன்புள்ள திரு ஜே மாரி முத்து அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி,
      முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள்.தமிழை ஆழமாக அறிந்து உபயோகிக்க தெரியாவிட்டால் சித்த மருத்துவம் செய்ய இயலாது.சித்த மருத்துவம் அறிய , படிக்க இயலாது.தமிழும் சித்த மருத்துவமும் ஒன்றிணைந்தது.அப்படியிருக்க நீங்கள் கேள்வியையே தமிழில் கேட்காமல் எப்படி ரசவாத வித்தை அறியப்போகிறீர்கள்.தமிழை அறியாமல் ரச வாதத்தில் ஒரு படி கூட தாண்ட முடியாது.மீண்டும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதிலளிக்க மாட்டோம்.அது வெளியிடப்படவும் மாட்டாது.

      எம் குருநாதர் திரு வெங்கடாசலம் ஐயா அவர்களின் அலைபேசி எண் +919786688300.

      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

 2. thi.sri. says:

  மதிப்பிற்குரிய அய்யா, அற்புதமான பதிவு. தாங்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொரு விஷயமும் எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டியவைகளாகவும், எனக்கு கலங்கரை விளக்கமாகவும் விளங்கி வழிகாட்டுகின்றன. நன்றி.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு தி.ஸ்ரீ . அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இயற்கை எமக்குத் தெரிவிப்பதை , எல்லோருக்கும் தெரிவிப்பதில் என்ன குறை நேர்ந்துவிடப் போகிறது.சித்தர்கள் சில விடயங்களச் சொல்லும்போது வெளியே விண்டாயானால் தலை ரெண்டாகும் என்று கூறுவார்கள் .அந்தக் கருத்தை ஆழ்ந்து பார்க்காமல் யோசித்தோம் என்றால் ஐயையோ வெளியே சொன்னால் தலை இரண்டு துண்டாக வெடித்துப் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கும் .ஆனால் ஆழ்ந்து யோசித்தோம் என்றால் உங்களுக்கு ஒரு சித்தர்கள் விடயத்தை நாம் சொன்னால் நீங்களும் நானும் சேர்ந்து அந்த சித்தர் விடயம் தெரிந்த தலைகள் இரண்டாகிவிட்டோமல்லவா???அப்போது தலை இரண்டாகும் என்று சொன்னது சரிதானே!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. மண்ணின் மன்னன் says:

  இந்த பதிவில் மூலிகைகளும் அதன் மருத்துவ பண்புகளையும் விளக்கி இருப்பது சிறப்பு. தங்கள் பதிவுகளால் எனக்கும் மூலிகைகள் மேல் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. இத்துடன் முடிந்தவரை படங்களை இணைத்தால் என் போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  மிக்க நன்றி.

  மண்ணின் மன்னன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மண்ணின் மன்னன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   வெறும் தனி மூலிகைகள் பற்றிய கட்டுரைகளும் மூலிகைகளின் கலர்ப் படங்களும் , ஏற்கெனவே வலைப் பூவில் வெளியிட்டுள்ளேன். இணைப்பு இதோ http://machamuni.blogspot.com/ அதில் என் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேட என்று ஒரு கட்டத்தில் தமிழில் நீங்கள் கேட்டால் பதிந்து வைத்துள்ள தகவல்கள் அனைத்தும் கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. Vanavil says:

  அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு. மிக்க நன்றி
  அன்புடன்.
  கோபிநாத்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கோபி நாத் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   ///அனைவரும் அவலுடன் எதிர்பார்த்த பதிவு/// என்றிருந்தது , உங்கள் கருத்துரை.ஆவலுடன் என்று திருத்தியுள்ளேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. venkat says:

  தங்களுடைய உபயோகமான, அரிய தகவல்களுக்கு
  மிக்க நன்றி! நன்றி! நன்றி!

  2வது பாகத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  அன்புடன்
  வெங்கட்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வெங்கட் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக விரைவில் இரண்டாம் பாகம் வரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. nitingeetam says:

  hi,

  i met wth an accident & my right hand dislocated..It happened 4 yrs back…….tii now i dont ve any problems…but i m afraid in future will it gve problems in my right hand…do u ve any medicines for this???

  • machamuni says:

   அன்பு மிக்க திரு நிடிங்கீதம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் மூட்டு வலித் தைலம் என்ற தைலம் கிடைக்கும் .இது மூட்டு வலிக்காக மட்டுமல்ல , மூட்டுக்கள் பூட்டு விட்டுப் போதல் (DISLOCATION) , எலும்பு முறிவு (FRACTURE ) , மூட்டுக்களில் சவ்வு கிழிந்து போதல் (LIGAMENT TEAR ), மூட்டுக்களில் மசகு இல்லாமல் சடசட எனச் சத்தத்துடன் வலி வருதல் , தசைப் பிடிப்பு (MUSCLE CRAMP), நரம்பு வலி(PAIN IN MOTOR VEINS) , நரம்பு இசிவு (INFLAMMATION IN MOTOR VEINS) , நரம்புகள் சுருண்டு கொள்ளுதல் ,சுழுக்கு மற்றும் வாதக் கோளாறுகள் (LOCO MOTOR DISORDERS ) , முதுகுத் தண்டு தட்டுக்கள் நழுவுதல் , கீழ் முதுகு வலி , பக்க வாதம் (single side and double side paralysis) போன்ற பல வியாதிகளைக் கண்டிக்கும். .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • nitingeetam says:

    ஐயா,

    மிக்க நன்றி……….

    • machamuni says:

     அன்பு மிக்க திரு நிடிங்கீதம் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 7. HARIHARAN says:

  VERY NICE SIR, FOR YOUR MANUFACTURING ITEMS

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரிகரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இவையெல்லாம் நாம் தயாரிப்பவைகள் அல்ல. எனது பரம்பரை மருந்தளிப்பு விவரங்களை வைத்து சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிக்கும் சிறப்பான மருந்துகளின் கலவைகள் இவை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. Raja says:

  மிக்க நன்றி அய்யா. எனக்கு தெரிந்த பலபேர் நிரிழிவினால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இதை தெரியபடுத்துகிறேன்

  நன்றியுடன்
  ராஜா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. eshwar.ad says:

  thanks mr kannan recived your hair pack i am using it if the results are good I wiil be asking others in BANGALORE also to use sathuragiri herbal products thank you once again for the for your sevice

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஈஸ்வர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கண்ணனுக்கு நன்றி சொல்லுங்கள்.தயாரித்தளிப்பவர் அவர்தாம்.நாம் வெறும் தெரிவிக்கும் வேலைதான் செய்கிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. வசிகரன் says:

  அருமையான பதிவு…நன்றி.
  உடலில் கொழுப்பு குறைய , இதய குழாயில் கொழுப்பு சேராமல் இருக்க, தொப்பை குறைய மருந்துகள் விவரத்தை பகிரவும்..
  After diabetes, obesity is becoming a biggest problem..
  please do share details…Thanks.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வசீகரன்அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இதே மது மேகச் சூரணமே இந்த வேலிகளுக்குப் போதுமானது.இந்த மூன்றுக்குமான மருந்தாகிய வெண் தாமரைக் கற்பம் இதில் சேர்ந்துள்ளது .வெண் தாமரைக் கற்பம் தனியாக வேண்டும் என்றாலும் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. BALATHIRUMAL says:

  AYYA VANAKKAM
  ENN VAYATHU 21,
  ENN APPA AMMA NALLA HIGHT ANAAL NAN NAN MATTUM KONJAM HIGHT KURAIVAKA ERUKIREN NAN NALLA HIGHTAAKA VALARA ETHUM SITTHAR VALIEL MARUNTHU ERUNTHAL SOLLUNGAL .

  ENN NANBARKAL KUDA KELIYAKA ETHARKU SITTHARKALEY MARUNTHU KANDUPIDIKA VILLAI ENDRU SOLLUVATHU UNMAYA ?

  NAN HIGHTAAKA VALARA VERA VALIEY ELLAYA?

  PLEASE NALLA PATHILUKKAKA KATHIRUKIREN ………..

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பாலா திருமால் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   உடல் எந்த வடிவத்தில் இருந்தாலும் ஆரோக்கியமான உடலே முக்கியம். இருந்தாலும் உங்களுக்கு ஓர் மருந்தைக் கூறுகிறேன்.எலும்புச் சட்டகம்தான் உயரத்திற்கு காரணம் .எலும்புச் சட்டகம் வளர 25 வயதிற்குள் சில பொருட்கள் உடம்பில் சேர்ந்தால் வளரும் .அதற்கு 1)பிரண்டை உப்பும் ,இயற்கை சுண்ணாம்புச் சத்துக்களான 2)சங்கு பற்பம் , 3)பவள பற்பம் , 4)சிருங்கி பற்பம் , 5) ஆமையோட்டு பற்பம் ஆகிய ஐந்து மருந்துகளை சம எடை வாங்கிச் சேர்த்து வல்லாரை நெய்யில் குழைத்து வெறும் வயிற்றில் மூன்று வேளையும் உண்ண 6 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • வல்லாரை நெய்யில் குழைத்து வெறும் வயிற்றில் மூன்று வேளையும் உண்ண 6 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

    வல்லாரை நெய் என்பது enna puriya vilai konjam vilakam tharungal ethu nattu marunthu kadayi erukkkuma ellai kanna avarkalidam kidaikuma

    • machamuni says:

     அன்பு மிக்க திரு மது என்ற பாலாத் திருமால் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     இம்காப்ஸ் தயாரிப்பில் கிடைக்கும் .அடையார் இம்ப்காப்ஸ் முகவர்களிடம் அடையாரிலேயே கடைகளில் கிடைக்கும் .
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • 1)பிரண்டை உப்பும் ,இயற்கை சுண்ணாம்புச் சத்துக்களான 2)சங்கு பற்பம் , 3)பவள பற்பம் , 4)சிருங்கி பற்பம் , 5) ஆமையோட்டு பற்பம் ஆகிய ஐந்து மருந்துகளை சம எடை வாங்கிச் சேர்த்து வல்லாரை நெய்யில் குழைத்து வெறும் வயிற்றில் மூன்று வேளையும் உண்ண 6 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

      ETHIL வெறும் வயிற்றில் ENBATHU SAPATIRKU MUNBU THNEY MARUNTHU SAPITDU EVVOLO NERAM KALITHU UNNAVU SAPIDA VENDUM, ENDRU SONNAL MARUNTHU SAPIDA UTHVI YAKA ERUKUM .

      NANDRI

     • machamuni says:

      அன்பு மிக்க திரு மது (அ) பாலாத் திருமால் அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      நாம் எழுதிய பதிவுகள் அனைத்தையும் படியுங்கள் அவற்றில் மேற்கண்ட கேள்விக்கு பதில் இருக்கிறது.வெறும் வயிற்றில் என்றாலே தண்ணீரும் குடிக்காமல் சாப்பாடும் சாப்பிடாமல் சாப்பிடும் மருந்து என்ற பொருளில் எழுதியுள்ளேன் .நாம் எழுதியதையே எழுதிக் கொண்டிருந்தால் புதியதை எப்போது எழுதுவது.அதற்கு இறை ஒப்புதல் இருந்தால் மட்டுமே எம்மால் செய்ய முடியும் என்று கருதுகிறோம்.இந்த அனாவசிய கேள்விகள் எனது நேரத்தை வீணடிப்பவையாகவே இருக்கின்றன.நீங்களும் இறையின் அம்சங்களே எனவே சந்தேகங்கள் உங்களுக்கு இல்லை, இருப்பது போல் தோன்றுகிறது . விரைவில் அவையெல்லாம் தானே அகலும். எமக்கறிவித்த இறை உங்களுக்கும் அறிவித்து உங்கள் மாயத் திரையை அகற்றட்டும் ..இது நாம் எழுத வேண்டிய விடயங்களை எழுத விடாமல் இறைவன் தடுக்கும் நாடகமோ என எண்ணத் தோன்றுகிறது.மருந்து கேட்பவர்கள் மிக நுணுக்கமாக எனது கருத்துரையை படித்த பின்னர், எனது அனைத்து பதிவுகளையும் படித்த பின்னர் கேள்வி கேளுங்கள்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

 12. venkat La says:

  திரு.சாமீ அழகப்பன், அவர்களே,
  மிகவும் பயனுள்ள பதிவுகள். தங்கள் பணி தடை இன்றி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
  எனக்கு 3 ஆண்டுக்கு முன்பு வலது தொடை எலும்பின் தலை பகுதிக்கு ரத்தம் செல்வது குறைந்து உள்ளது AVN (avascular necrosis) என்று கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது முன்பை விட பரவாயில்லை. அப்பொழுது எனக்கு சித்த வைத்தியம் பற்றி அவ்வளவு தெரியாது. நமது சித்த வைத்தியததில் நல்லம் மருத்துவம் இதற்கு இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
  மேலும் வலது கால் முட்டியில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்ததில் ஒரு சிறு இரத்த கட்டு (ஒரு கடுகு அளவு) உள்ளது. இதயும் எப்படி போக்குவது?
  தாங்கள் தயவு செய்து உதவி செய்ய வேண்டும்.
  தங்களுக்கு தொந்தரவு இல்லை என்றால் தயவுசெய்து தங்கள் அலைபேசி எண்ணை பகிரவும்.
  என் மின்னஞ்சல் முகவரி venkattex@yahoo.co.in. அலைபேசி எண் 9789083913.
  நான் எழுதியதில் ஏதும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
  உண்மையுள்ள,
  வெங்கட்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வெங்கட் லா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் மூட்டு வலித் தைலம் இதற்கு நல்ல பலன் தரும்.இது மூட்டு வலிக்காக மட்டுமல்ல , மூட்டுக்கள் பூட்டு விட்டுப் போதல் (DISLOCATION) , எலும்பு முறிவு (FRACTURE ) , மூட்டுக்களில் சவ்வு கிழிந்து போதல் (LIGAMENT TEAR ), இரத்தக் கட்டு ,மூட்டுக்களில் மசகு இல்லாமல் சடசட எனச் சத்தத்துடன் வலி வருதல் , தசைப் பிடிப்பு (MUSCLE CRAMP), நரம்பு வலி(PAIN IN MOTOR VEINS) , நரம்பு இசிவு (INFLAMMATION IN MOTOR VEINS) , நரம்புகள் சுருண்டு கொள்ளுதல் ,சுழுக்கு மற்றும் வாதக் கோளாறுகள் (LOCO MOTOR DISORDERS ) , முதுகுத் தண்டு தட்டுக்கள் நழுவுதல் , கீழ் முதுகு வலி , பக்க வாதம் (single side and double side paralysis) போன்ற பல வியாதிகளைக் கண்டிக்கும். .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. Rajeshkhanna says:

  Dear Sir,

  One of My friend is suffering from spleep less problem, kindly suggest the medicine for sleeping, now he is taking sleeping pils.

  Please do the needful. Thanks in Advance.

  Thanks and Regards,
  G, Rajeshkhanna.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜேஷ் கன்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   (இம்சோம்னியா OR IMSOMNIA ) என்ற தூக்கமின்மை வியாதிக்கு சாரஸ்வாத அரிஷ்டம் என்ற மருந்து டாபர் மருந்து தயாரிப்புக் கம்பெனியில் கிடைக்கும். இதை வாங்கி 15 மிலி அரிஷ்டத்துடன் 15 மிலி தண்ணீர் சேர்த்து இரவு தூங்கப் போகும் முன்னர் மெதுவாக சப்பிச் சாப்பிடவும் . தூக்கமின்மை தொலையும் .உங்கள் நண்பர் தூக்க மருந்துகளை உட்கொண்டிருப்பதால் அதற்கு உடல் அடிமை ஆகியிருக்கும் . எனவே முழுப் பலன் கிடைக்க நாலைந்து நாட்களாவது ஆகலாம்.எனவே பொறுமை அவசியம் .இத்துடன் J & J DECHANE MEDICINE (ஒரு ஆங்கில மருத்துவர் இந்தியாவிற்கு வந்து இந்திய மூலிகைகளை ஆராய்ச்சி செய்து பல மூலிகைக் கலவைகளை கண்டறிந்து அவை ஏழை எளிய மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற நல் நோக்கத்தில் மிக மிகக் குறைந்த எளிய விலையில் 99 வருடங்களுக்கு J & J DECHANE MEDICINE என்ற பெயரில் விற்க வேண்டும் என்ற நிபந்தனையில் இந்த மருந்துகள் இன்றும் மிக மலிவான விலையில் கிடைக்கின்றன.இவற்றில் ஊசி மருந்துகளும் அடங்கும் .பல அல்லோபதி மருத்துவர்கள் இந்த மருந்துகளில் மூட்டு வலிக்குள்ள RHEMORIN என்ற ஊசி மருந்தால் ராசியான மருத்துவர்கள் எனப் பெயர் எடுத்துள்ளார்கள். புண்ணியம் மருத்துவர் DECHANE அவர்களுக்கே .எனக்கு விவரம் தெரிய அந்த மாத்திரைகள் 1/4 பைசா விலையில் இருந்து தற்போது 25 பைசா விலையில்தான் இருக்கின்றன.பலரும் பயன் பெற இவ்விபரத்தை தெரிவிக்கிறோம்.) ல் VAITESSAN என்ற மருந்து மூலிகைகளால் செய்யப்பட்டு மாத்திரை வடிவில் கிடைக்கும் .இதைச் சேர்த்து இரவில் இரு மாத்திரைகள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கி தூக்கம் நன்றாக வர நல்ல பலன் கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. Sahadullah says:

  அண்ணன் அவர்களுக்கு,
  நேற்றே பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன்., வார்த்தைகள் கிடைக்கவில்லை உங்களின் இந்த மக்களுதவியை வாழ்த்துவதற்கு….
  இந்தப் பதிவின் கனம் மக்களுக்கு அளப்பரியது, இவைகளை வெளியிட அளவில்லா மிகப் பெரிய மனம் வேண்டும்.
  நீங்கள் எப்படி நேரம் ஒதுக்கி எழுதுகிறீர்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. நாங்கள் இவ்வளவு பேர் கேட்கும் உதவிக் கேள்விகளுக்கு உடனுக்குடன் எதிர்பார்ப்பில்லாத பரிபூரணமான பதில் தருவது, நிச்சயமாக தங்களை சான்றோர் குழுவில் தான் நாங்கள் பார்க்கிறோம். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சதயத்துல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கற்றதைக் கற்பிக்கின்றானா???? என இறைவன் பார்க்கின்றான்.கொடுத்ததெல்லாம் கொடுத்தார் , அவர் யாருக்காக கொடுத்தார்??? ஒருத்தனுக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்!!!!!நாம் கொடுக்காததை இறைவன் கொடுப்பதில்லை. இறைக்கிற ஊற்றே சுரக்கும், இடி இடிக்கிற வானம் கொடுக்கும்.இறைவன் எனக்கு இந்த சந்தர்ப்பங்களை வழங்கியதிற்காக மட்டும் சந்தோஷப்படாலாம். அதாவது கை கீழிருப்பதைவிட மேலிருப்பதற்காக மட்டுமே சந்தோஷப்படலாம். கையை மேலே வைத்த இறைவன் கீழே வைக்காமல் இருப்பதற்கு நாம் ஒன்றும் இது வரை ஒன்றும் செய்திலமே என்று வருத்தமும் படலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Sahadullah says:

    அண்ணன் அவர்களுக்கு,
    யதார்த்தம் …. யதார்த்தம் …. இதுவே.,
    இது விளங்கினால் போதும் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு என்பது நிலையற்றோடிவிடும். மேற்கூறப்பட்ட பதிவில் ஒரு விளக்கம் வேண்டுகிறேன்.
    உங்களுடைய பழைய இடுகைகளில் பார்த்த ஞாபகம். உடலிலிருந்து வெளிப்படக்கூடிய சகல விதமான நோய் அறிகுறிகள் அனைத்தும் (உதாரணத்திற்கு பல் சொத்தை ) உள்ளுறுப்புகளின் பழுதையே குறிக்கின்றன என்று. நீங்கள் கூறிய இந்த மது மேகம் நீக்கும் மருந்தில் சகல உள்ளுறுப்பு நோய்களுக்கும் (பல மருந்துக் கலவைகள்) ஒரே மருந்தாக கிடைப்பது மிக்க மகிழ்ச்சி. இப்போது எனக்கு இந்த சுகர் குறைபாடு இல்லை, இருந்தாலும் உள்ளுறுப்புகளை பலம் அல்லது நலம் பெறச் செய்ய இந்த மருந்துப் பொடியை தினமும் பயன்படுத்தலாமா…
    தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

    • machamuni says:

     அன்பு மிக்க திரு சதயத்துல்லாஹ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     ///உங்களுடைய பழைய இடுகைகளில் பார்த்த ஞாபகம். உடலிலிருந்து வெளிப்படக்கூடிய சகல விதமான நோய் அறிகுறிகள் அனைத்தும் (உதாரணத்திற்கு பல் சொத்தை )/// சிறு நீரகம் என்ற உள்ளுறுப்பின் பழுதையே குறிக்கின்றன.உண்மை . உள்ளுறுப்புகளை பலம் அல்லது நலம் பெறச் செய்ய இந்த மருந்துப் பொடியை தினமும் அளவில் குறைவாக உபயோகிக்கலாம்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 15. Vanavil says:

  கருத்துரை பிழையை திருத்தம் செய்தமைக்கு மிக்க நன்றி.

  பின்வரும் வாக்கியத்தை சரி செய்யுமாரு பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

  //இரத்தத்தை சுத்திகரிக்கும். கழிவு நீக்க மண்டலத்தை சர் செய்யும்//

  Please do not post this in comments 🙂

  நன்றி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வானவில் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   அர்த்தம் அனர்த்தம் ஆகும் வண்ணம் இருக்கவில்லை ஆனால் எதுவும் சரியே??? பல கேள்விகளில் நான் சரி செய்து பிரசுரித்துள்ளேன் .இது அர்த்தத்தை அனர்த்தம் ஆக்கியதால் பிரசுரித்தேன்.
   ///பனிவுடன்/// என்றிருக்கக் கூடாது பணிவுடன் என்றிருக்க வேண்டும். இது போல் பிழைகள் என் கட்டுரைகளில் இருக்கலாம். அதை சரி செய்யாமல்தான் உங்கள் கருத்துரையை பிரசுக்கிறேன்.நாம் கடவுளல்ல பிழைகளற்று இருக்க.ஆனால் எதுவும் சரியே நாம் சரியென்றெடுக்கும் வரை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. Raja says:

  அய்யா,
  திரு கண்ணனிடம் இருந்து இம்மருந்தை கேட்டுள்ளேன். இதை எவ்வாறு பயன்படுத்துவது,எவ்வளவு காலம் பயன்படுத்துவது, ஏதேனும் உணவு கட்டுப்பாடு உள்ளனவா, ஏற்கனவே எதுத்துகொண்டிருக்கும் ஆங்கில மருந்துகளுடன் எதையும் சேர்த்து எடுத்துகொள்ளலாம , என்பது போன்ற தகவல்கள் தந்தால் மிக்க உதவியாக இருக்கும்.

  நன்றியுடன்
  ராஜா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இது ஒரு சிறப்பான உணவு என்றே எடுத்துக் கொள்ளுங்கள் .இது உடலைச் சீராக்கும்.ஆங்கில மருந்துகள் உங்கள் உடலைக் கெடுக்கும் .அவை எப்படி கெடுக்கும் என்று பின்னர் உள்ள பதிவுகளில் தெரிவிக்கிறேன்.சும்மா இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டு ஆங்கில மருந்துகளை தவிர்த்தாலே இவை சரியாகும்.ஆங்கில மருந்துகள் கல்லீரலையும் , மண்ணீரலையும் ,வயிற்றையும் கெடுக்கும்.அதற்கு உரம் போட்ட பூச்சி மருந்துகள் தெளித்த உணவே போதும் .தவிர இது போன்று ஆங்கில மருந்துகளை வேறு உள்ளே போட்டு உடலை நீங்கள் கெடுத்துக் கொண்டு, மீண்டும் அதை சரி செய்ய வேறு அலைய வேண்டாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. Rajeshkhanna says:

  Thank you very much sir, I will be very kind of you. I will share this details with my friend. Thank you very much once again.

  Thanks and Regards,
  Rajeshkhanna

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜேஷ் கன்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   தமிழில் எழுதுங்கள் .தாய்த் தமிழை வாழ வையுங்கள்.நமக்கிடையே வேற்று மொழி ஏன் ??? நீங்கள் இதை செய்தால் உங்கள் எதிர்கால வாரிசுகள் நாம் என்ன எழுதியுள்ளோம் என புரிந்து கொள்ள வரலாற்று ஆய்வாளர்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. Vanavil says:

  Guruji,

  Do not want to miss the below post. Please write for about us “அத்தாற் பொறுத்தி” when you find some time

  //அடுத்து ஒரு மூலிகையுடன் ( அத்தாற் பொறுத்தி )வேறோர் பதிவில் பார்ப்போம்//

  மிக்க நன்றி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வானவில் எம் கோபி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   தமிழில் எழுதுங்கள் .தாய்த் தமிழை வாழ வையுங்கள்.நமக்கிடையே வேற்று மொழி ஏன் ??? நீங்கள் இதை செய்தால் உங்கள் எதிர்கால வாரிசுகள் நாம் என்ன எழுதியுள்ளோம் என புரிந்து கொள்ள வரலாற்று ஆய்வாளர்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது.பார்க்கலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. Vanavil says:

  Guruji,

  Do not want to miss the below post. Please write about “அத்தாற் பொறுத்தி” for us when you find some time

  //அடுத்து ஒரு மூலிகையுடன் ( அத்தாற் பொறுத்தி )வேறோர் பதிவில் பார்ப்போம்//

  மிக்க நன்றி

 20. செந்தில் கணேசன் says:

  வணக்கம் அய்யா ,
  மிகவும் பயனுள்ள பதிவுகள். தங்கள் பணி தடை இன்றி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
  சித்தர்கள் அருளிய பஞ்ச பட்சி சாஸ்திரம் பற்றி தங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  தங்கள் பனி சிறக்க எல்லாம் வல்ல ஆண்டவனையும் சித்த பெருமக்களையும் வேண்டிக்கொள்கிறேன்

  நன்றி .

  • machamuni says:

   அன்பு மிக்க திரு செந்தில் கணேசன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இறை இடம் கொடுத்தால் இடம் பார்க்கலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 21. Vanavil says:

  பிழையின்றி எழுத முழு முயற்சி செய்கிறேன், மிக்க நன்றி

  அன்புடன்..

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வானவில் எம் கோபி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 22. Rajeshkhanna says:

  Dear Sir,

  I wish to write in thamizh. but I can’t able to write in tamil from my office system. It has no rights to install tamil font or the procedures you have given in your website for tamil writing.

  Enakum tamizhil ezhutha mudiyamaiku varuthamai ullathu. Mannikavum.

  Nandri.
  Rajeshkhanna.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜேஷ் கன்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   முடியவில்லை என்றால் பரவாயில்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 23. Sahadullah says:

  அண்ணன் அவர்களுக்கு,
  ஒரு விடயம் பற்றி நீண்ட நாட்களாக விளக்கம் தேடி அலைகிறேன்.
  ஒரு மனிதனுக்கு வாழ்வில் அத்தியாவசியமானது ஞாபக சக்தி. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு நான் பிரமித்ததுண்டு. அது விவேகனந்தர் அவர்களைப் பற்றியது.புத்தகம் ஒன்றைப் படித்தாலோ அல்லது ஒரு விசயத்தைப் பார்த்தாலோ தான் பார்த்த, படித்த விசயங்களை ஆழமாக பதிந்து வைக்கும் கலையில் [(photographic memory) என்று சொல்கிறார்கள்], முன்னோடியாக திகழ்ந்ததாக கேள்விபட்டிருக்கிறேன்.. அந்த கலையைப் பற்றி விளக்கினால் மிக்க மகிழ்ச்சி. மற்றும் அதை எப்படி பயில்வது, அல்லது அதற்கான வழிமுறைகள் கிடைத்தால் இரட்டை மகிழ்ச்சி.
  தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சதயத்துல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   எமது சிறப்பே எமது ஞாபக சக்தியே.இதற்கு எமக்கு தசாவதானி திரு இராமையா பிள்ளை அவர்களின் ஆசீர்வாதமும் ஒரு காரணம்.அவர்களது புதல்வர் திரு பின் கவனகர் கனக சுப்புரத்தினம் அவர்கள் இதை அவரது தந்தையார் மறைவுக்குப் பின்னர் பயின்று (குலவித்தைக் கல்லாமல் பாகம் படும் என்பதற்கேற்ப ) தற்போது மற்றவர்களுக்கும் பயிற்றுவித்து வருகின்றார்.அவரது கவனக முழக்கம் என்ற மாதாந்திர நூல் ஒன்று வெளிவருகின்றது .அதைப் படித்து அவரது பயிற்சியை நேரிடையாக எடுத்துக் கொண்டால் இதில் சிறப்புறலாம். என்றாலும் இயற்கையும் நமக்கு அருள வேண்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Sahadullah says:

    அண்ணன் அவர்களுக்கு,
    மட்டற்ற நன்றிகள் …
    நண்பர் ஒருவரின் தந்தைக்கு wheezing என்னும் சுவாசக் கோளாறு இருப்பதாகக் கூறினார். அது நீங்க தூதுவளை பொடி வெந்நீரில் கலந்து சாப்பிடுவதாய் சொன்னார்கள்(1 மாதமாக பயன்படுத்துகிறார்கள் ). அலோபதியினர் கூறியதால் Inhaler பயன்படுத்துவதாகவும் கூறினார்(7 வருடமாக பயன்படுத்துகிறார்கள்). அதற்கு என்ன மருத்துவம் என்று கூறினால் மிக்க நலம்.

    தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

    • machamuni says:

     அன்பு மிக்க திரு சதயத்துல்லாஹ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     இளைப்பு என்ற wheezing என்னும் சுவாசக் கோளாறு என்பது உடலில் உள்ள கழிவுகளை நுரையீரல் வெளியேற்ற முயற்சி செய்வதே ஆகும் .இதை தடுத்து நிறுத்த நாம் அலோபதி மருந்துகளை (விஷங்களை) எடுக்க எடுக்க ,உடல் தன் நிலையை சரி செய்ய எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் நாம் முறியடிக்கிறோம் என்பதே ஆகும் .
     அவர்கள் உபயோகிப்பது சல்பூட்டமால் பஃப் (SALBUTAMOL PUF) என்று சொல்வார்கள்.அதன் பக்க விளைவுகள் மிக மிக அதிகம்.இத்துடன் டெரிஃப்லின் போன்ற இன்னும் கொடிய விஷங்களை உடலில் செலுத்தி உடலை தன் நோயிலிருந்து விடுபட வழியே கொடுக்காமல் மேலும் மேலும் விஷங்களினால் திணறடித்து, இந்த விஷங்களைப் பார்த்து உடல் பயந்து இந்த விஷங்களைச் சமாளிக்க உடல் எடுக்கும் முயற்சியில், பழைய அது எடுத்துக் கொண்டிருக்கும் வேலையான கழிவுகளை நுரையீரல் வெளியேற்றும் வேலையை ( wheezing)விட்டேவிடுகிறது.பார்த்தீர்களா wheezing நின்றுவிட்டது என்று சொல்லிச் சொல்லியே உடலையே பாழாக்கிவிடுகின்றனர். .இதனால் உடலில் விஷத்தன்மை கல்லீரலிலும் , மண்ணீரலிலும் , நுரையீரலிலும், சிறு நீரகத்திலும் தேங்கி உடலில் உள்ள உயிர்ச்சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று, இரத்தம் முழுதும் விஷமித்த பின் இதயம் ஒரு நாள் நின்ற பின்னால் ,நாங்கள் என்ன செய்ய முடியும் இதயத் தாக்குதல் (HEART ATTACK ) வந்துவிட்டது .ஒன்றும் செய்வதற்கில்லை என்பார்கள் .நமக்கும் இது பற்றி ஏதும் தெரியாதல்லவா???அமைதியாக நமக்கு இறைவன் விதித்தது அவ்வளவுதான் !?!?!?!?!?!?!?! என்று வந்துவிடுவோம்.இந்த இணைப்பிற்குள் போய் எல்லாத் தளங்களையும் பாருங்கள்.
     https://www.google.co.in/search?q=SALBUTAMAL+PUF&oq=SALBUTAMAL+PUF&aqs=chrome.0.57&sugexp=chrome,mod=4&sourceid=chrome&ie=UTF-8#hl=en&sugexp=les%3Bernk_timediscounta&gs_nf=3&gs_rn=0&gs_ri=serp&pq=salbutamal%20puf&cp=35&gs_id=2c&xhr=t&q=SALBUTAMAL%20PUF%20AND%20ITS%20SIDE%20EFFECTS&pf=p&tbo=d&sclient=psy-ab&oq=SALBUTAMAL+PUF+AND+ITS+SIDE+EFFECTS&gs_l=&pbx=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&fp=b51560305f669902&bpcl=39650382&biw=1024&bih=618
     மூட்டை மூட்டையாக விஷங்களைக் புகையாக்கி ரத்தத்திலும் நுரையீரலிலும் கொட்டிக் கொண்டு!!!! கடுகளவு அமுதம் உண்டால் எல்லாம் சரியாகிவிடுமா????? என்று கேட்டால் இதற்கு நான் எப்படி பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • Sahadullah says:

      அண்ணன் அவர்களுக்கு,
      நீங்கள் கூறியது மிகச் சரி. என்ன செய்வது, மக்களுக்கு அல்லோபதியினர் மருந்தாகத் தருவது விஷங்கள் என்று விஷயம் கேள்விப்பட்டு அறிந்த பின்னும்(உண்மையில் அறியாமையில் தான் உள்ளனர்) மீண்டும் விட்டில் பூச்சி போல் நெருப்பிலே விழுந்து மாய்கிறார்கள். இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.

      தங்களன்புள்ள,
      ஸஹதுல்லாஹ்

     • machamuni says:

      அன்பு மிக்க திரு சதயத்துல்லா அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

     • Sahadullah says:

      அண்ணன் அவர்களுக்கு,
      நான் அதிகம் கேள்விகள் கேட்கிறேன் என்று நினைக்கிறேன். தங்கள் நேரத்தை விரயம் செய்யாதவாறு இருந்தால் நலம்.
      நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் அது சாதாரண தேங்காய் எண்ணை முதல் சகல உணவு மற்றுமுள்ள பொருட்களில் கலப்படம் இருப்பது ஒரு பக்கம், முக்கியமாக அவைகள் பயிரிடப் படும்போதோ அல்லது processing மற்றும் package செய்யப்படும் போதோ முழுக்க முழுக்க கேடுமிக்க செயற்கை வேதிப்பொருட்களால் நிரப்புகிறார்கள். இவைகளையெல்லாம் அறியும் போது சாப்பிடக் கூட முடியாது போல் தெரிகிறது. இவைகளை தங்கள் வாழ்வில் எப்படி சமாளிக்கிறீர்கள். தெரிந்தால் நாங்களும் அம்முறையை பின்பற்றுவோம்.
      மற்றும் என் நண்பரின் தந்தை அவர்களுக்கு இளைப்பு நோய் நீங்க மருந்துகள் கேட்டிருந்தேன், அதற்கு அருமையான நீண்ட பதில் அளித்திருந்தீர்கள் , நானும் நீங்கள் கூறியது போல் அந்த நோய்க்கான மருந்தின் (விஷம்) பின் விளைவுகள் பற்றி கூகிள் செய்து படித்தேன், நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று பணம் சம்பாதிக்கிறார்கள் இந்த அலோபதியினர். மற்றும் அந்நோய்க்கு மருத்துவ வழிகள் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.
      தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

      தங்களன்புள்ள,
      ஸஹதுல்லாஹ்

     • machamuni says:

      அன்பு மிக்க திரு சதயத்துல்லா அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      ஆல கால நஞ்சை மிடரில் அடக்கிய சிவனே உயிருடனிருக்க இந்த நஞ்செல்லாம் என்ன செய்யும்.அவற்றுக்கும் வழி இருக்கிறது .நீங்கள் எழுத விட்டால்தானே எழுத!!!!!.கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்து விட்டேன்.முடிவுக்கே வராமல் 70 பின்னூட்டங்கள் , பதில் எழுதிய நேரத்தில் ஐந்து பதிவுகள் வந்திருக்கும். எம் நேரத்தை மின் வெட்டும் , பின்னூட்டமும் எடுத்துக் கொள்கின்றன. கொஞ்சம் இடைவெளி கொடுத்தீர்களானால் மேலும் என்னால் ஏதாவது செய்ய முடியும்.இது நாம் எழுத வேண்டிய விடயங்களை எழுத விடாமல் இறைவன் தடுக்கும் நாடகமோ என எண்ணத் தோன்றுகிறது.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

   • Sahadullah says:

    அண்ணன் அவர்களுக்கு,
    //// அவரது கவனக முழக்கம் என்ற மாதாந்திர நூல் ஒன்று வெளிவருகின்றது .அதைப் படித்து அவரது பயிற்சியை நேரடையாக எடுத்துக் கொண்டால் இதில் சிறப்புறலாம்.////
    இந்தச் சிறுவனுக்கு நீங்கள் சொன்ன விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. //நேரடியாக // என்று சொன்னதால் திரு பின் கவனகர் கனக சுப்புரத்தினம் அவர்களை சந்திக்க வேண்டுமா (அந்த அர்த்தம் இல்லையென்று நினைக்கிறேன்). இல்லையெனில் அந்த புத்தகம் பற்றி கூகிள் பண்ணிப் பார்த்தேன். சரியான தேடல் பதில்கள் வரவில்லை. அந்த புத்தகம் வாங்குவதற்கு, தொடர்பு முகவரி அல்லது தொலைபேசி எண்கள் கிடைத்தால் மிக்க நலம்.
    தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

    • machamuni says:

     அன்பு மிக்க திரு சதயத்துல்லாஹ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அந்த் பு்த்தகத்தின் ஒளிநகல் அனுப்பி வைக்கிறேன். பார்க்கவும்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • Sahadullah says:

      அண்ணன் அவர்களுக்கு,
      மட்டற்ற நன்றிகள்….
      தங்கள் மேலான ஒளி நகல்களுக்காக காத்திருக்கிறேன்…

      தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

      தங்களன்புள்ள,
      ஸஹதுல்லாஹ்

     • machamuni says:

      அன்பு மிக்க திரு சதயத்துல்லா அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      விரைவில் அனுப்புகிறேன்.கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்து விட்டேன்.முடிவுக்கே வராமல் 66 பின்னூட்டங்கள் , பதில் எழுதிய நேரத்தில் ஐந்து பதிவுகள் வந்திருக்கும். எம் நேரத்தை மின் வெட்டும் , பின்னூட்டமும் எடுத்துக் கொள்கின்றன. கொஞ்சம் இடைவெளி கொடுத்தீர்களானால் மேலும் என்னால் ஏதாவது செய்ய முடியும்.இது நாம் எழுத வேண்டிய விடயங்களை எழுத விடாமல் இறைவன் தடுக்கும் நாடகமோ என எண்ணத் தோன்றுகிறது.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

 24. Hari says:

  அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு வணக்கம்.
  நீண்ட நாட்களாக பதில் எழுத நேரமில்லாத காரணத்திற்கு மன்னிப்பு கோருகிறேன்.
  திரு வசீகரன்அவர்களின் ///உடலில் கொழுப்பு குறைய , இதய குழாயில் கொழுப்பு
  சேராமல் இருக்க, தொப்பை குறைய /// என்ற கேள்விக்கு தங்களின்
  ///இதே மது மேகச் சூரணமே இந்த வேலிகளுக்குப் போதுமானது//// என்ற பதிலின்படி
  சர்க்கரை இல்லாதவர்களும் குறிப்பாக 40 வயதைகடந்து விட்டால் உடம்பை
  சரியாக பாதுகாக்க வேண்டுமென்ற விருப்பமுள்ளவர்கள் இந்த மருந்தை
  உபயோகப்படுத்தலாம் .நோய் வருமுன் வேலி போல் உடம்பை காப்பாற்றலாம்
  என்பது சரிதானே ஐயா ?மேலும் இதன் இரண்டாம் பாகத்தினை காண மிக்க
  ஆவலாக இருக்கிறேன்.
  என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   ஆம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 25. Hari says:

  அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு வணக்கம்.
  முப்பிரண்டை,நீலி ,சிவனார்வேம்பு போன்ற கற்ப(க)ங்கள் சேர்ந்து இருப்பதால்
  பத்தியம் இருக்க வேண்டுமா ?பத்தியமாக இருந்தால் சிறப்பான பலன் கிடைக்குமா
  என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.
  என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   தேவையில்லை.ஏன் என்று விளங்குவதற்கு பஞ்ச பூத மருந்து சேர்க்கை செய்முறை தெரிந்து இருக்க வேண்டியது அவசியம். உடனே அது எப்படி என்று கேள்வி கேட்காதீர்கள் .சமயம் வரும் போது விளக்கப்படும்.பத்தியம் என்பது வியாதிக்குத்தானே தவிர மருந்துக்கில்லை.மீண்டும் கேள்விகளை ஆரம்பிக்காதீர்கள் இதற்கும் சமயம் வரும் போது விளக்கப்படும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 26. venkat La says:

  அன்பு மிக்க திரு ராஜேஷ் கண்ணன் அவர்களே,,
  தமிழில் எழுத இந்த சுட்டி பயன்படும். http://www.quillpad.in
  வாழ்க என்உயிர் தமிழ். வளர்க என்உயிர் தமிழ்
  என்றும் அன்புடன்
  வெங்கட்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வெங்கட் லா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 27. venkat La says:

  திரு.சாமீ அழகப்பன், அவர்களே,
  திரு கண்ணன் அவர்களை தொடர்புகொண்டு கால்வலி தைலம் கேட்டுளேன்.
  உண்மையில் திரு கண்ணன் அவர்கள் மிகவும் பணிவுடன் இந்த பணியை இறை பணியாக எண்ணி செய்துக்கொண்டு உள்ளார். அவர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். மூலிகைகளை சேகரிக்க காடுகளில் செல்லும்போது எந்த ஒரு தடங்கலும் வராமல் இருக்க இறைவன் கருணை அவர்க்கும் அவர் தோழர்களுக்கும் கிட்டவும் வாழ்த்துகிறேன்.
  உண்மையுள்ள
  வெங்கட்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வெங்கட் லா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 28. Rajeshkhanna says:

  திரு வெங்கட் அவர்களுக்கும், திரு சாமி அழகப்பன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

  ராஜேஷ் கண்ணா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜேஷ் கண்ணா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 29. மதிப்பிற்குரிய அய்யா, எண்ணற்ற கேள்விகளுக்கு, அள்ள அள்ளக் குறையாத அறிவூற்றாய், விடைகளை அள்ளித் தரும் தங்களை சிரமப்படுத்த வந்துள்ள என்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
  எனக்கு சில விஷயங்களுக்கு விடை தேவைப்படுகிறது.
  1. கொசுவை ஒழிக்க அல்லது கொசுக்கடியிலிருந்து தப்பிக்க, களிம்பு வடிவில் பூசிக்கொள்ள, நல்லதொரு மூலிகை மருந்தைக் கூறவும்.
  2. காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள்,
  3. இயற்கை உணவைப் பின்பற்ற முன்வருவோருக்கு வழிக்காட்டும் வகையில், ஒரு முழு நாளுக்கேற்ற இயற்கை உணவு முறையை முன்மொழிய வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன்,
  4. நல்ல சத்துமாவு என்பது எப்படி இருக்க வேண்டும்?.
  நன்றி!
  thisri.blogspot.in

  • machamuni says:

   அன்பு மிக்க திரு தி ஸ்ரீ அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இனி வரும் பதிவுகளில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் .கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்து விட்டேன்.முடிவுக்கே வராமல் 77 பின்னூட்டங்கள் , பதில் எழுதிய நேரத்தில் ஐந்து பதிவுகள் வந்திருக்கும். எம் நேரத்தை மின் வெட்டும் , பின்னூட்டமும் எடுத்துக் கொள்கின்றன. கொஞ்சம் இடைவெளி இருந்தால் மேலும் பதிவுகள் வெளிவரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 30. muku says:

  Dear sir,
  your posts are really very useful to many peoples.
  thanks
  muku

  • machamuni says:

   அன்பு மிக்க திரு முகு அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 31. kumar says:

  ஐயா வணக்கம் ,

  நான் கடந்த ஒரு வருடமாக ஏப்பம் பிரச்சினையால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் .எது சாப்பிட்டாலும் தொடர்ந்து பல மணி நேரத்திற்கு ஏப்பம் வந்த வண்ணம் இருக்கிறது .அந்த வாயுவானது மேலே ஏறிவந்து நெஞ்சு பகுதியில் ஒருவிதமான கனத்தை கொடுக்கிறது .பிறகு நெட்டை எடுப்பது போல நெஞ்சை விரித்து செய்தால் சற்று கனம் குறைவதுபோல் தெரிகிறது .ஆங்கில மருத்துவத்தில் gastric என சொல்லி நிறைய மாத்திரைகள் எடுக்க சொல்கிறார்கள் .எனக்கு அதில் அவ்வளவாக உடன்பாடில்லை .எனக்கு ஏற்கனவே இதயம் வீக்கமாக இருப்பதாக ஆங்கில மருத்துவர் டெஸ்ட் எடுத்துப்பார்த்து சொல்லியிருகிறார்கள் .அதனால் BP அதிகமாக இருப்பதாக சொல்லி அதற்கும் மாத்திரைகள் எடுக்க சொல்லியிருக்கிறார்கள் .ஆகவே தயவுகூர்ந்து இவைகளை தீர்ப்பதற்கு உரிய மருந்துகளை சொல்லி உதவிட வேண்டுகிறேன் .

  மிக்க நன்றியுடன்

  குமார்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு குமார் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கடையில் அஷ்ட சூரணம் என்ற IMPCOPS தயாரிப்பை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் .ஒவ்வோர் வேளை சாப்பாட்டிலும் முதல் கவளத்தை(அது சோறாக இருந்தாலும் , இட்லி , தோசை , சப்பாத்தி ,புட்டு ,இடியாப்பம்) ஒரு தேக்கரண்டி அஷ்ட சூரணத்தை , தாடி மாடி கிருதம் (SKM PHARMA) அல்லது நெய்யுடன் கூட்டி சுவைத்து,எச்சிலுடன் நன்றாக சப்பி சாப்பிட்டபின் சாப்பாட்டை சாப்பிடுங்கள்.சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ,முன்னாலும் ,பின்னாலும் சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்காதீர்கள். சாப்பாட்டை வாயில் போட்டு நன்றாக வாயை மூடி மென்று சாப்பாடு கூழாகி சுவையற்றுப் போன பின் விழுங்குங்கள்.தினமும் சாப்பிட்ட பின்னர் அரை மணி நேரம் கழித்து ஓமத்தீநீர் (SKM PHARMA) 10 மிலி எடுத்து 100 மிலி வெந்நீரில் சாப்பிட மூன்று நாட்களில் இந்தத் தொல்லை அகலும் .ஆனாலும் நீங்கள் இனிமேலும் இந்தப் பிரச்சினை வராமலிருக்கவும் ,(இந்த அறிகுறிகள் மது மேகத்தின் அறிகுறிகள் ) இதை தொடர்ந்து உப்யோகித்து வாருங்கள்.நலம் பயக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • kumar says:

    அன்புமிக்க சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி,
    உடனடியாக தாங்கள் சொன்ன மருந்துகளை வாங்கி உபயோகிக்கிறேன் .ஓமத்தீநீர் என்பது கடைகளில் கிடைக்கும் சாதாரண ஓமவாட்டர்தானா என்பதை மட்டும் தெளிவு படுத்துங்கள் .

    மிக்க நன்றியுடன்

    குமார் .

    • machamuni says:

     அன்பு மிக்க திரு குமார் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     ஓமத்தீநீர் (SKM PHARMA) தயாரிப்பை மட்டும் வாங்குங்கள் என்று சொன்ன பின்னர் கடையில் விற்கும் சாதாரண ஓமத் தீநீரா என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது.மருந்து கேட்பவர்கள் மிக நுணுக்கமாக எனது கருத்துரையை படித்த பின்னர் கேள்வி கேளுங்கள்.இந்த அனாவசிய கேள்விகள் எனது நேரத்தை வீணடிப்பவையாகவே இருக்கின்றன.இது நாம் எழுத வேண்டிய விடயங்களை எழுத விடாமல் இறைவன் தடுக்கும் நாடகமோ என எண்ணத் தோன்றுகிறது.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 32. eshwar.ad says:

  vendhayam patri neengal ezhuthiyathu 100 kku 100 unmai enudaya sakarai alavu 298 naan kadantha 6 maathamaaga vendhayam podi kaalaiyil 1 spoon eravu 1 spoon saapituvarugireyan tharsamayam ennudaya sarkarai alavu ( blood sugar ) is 88 naan pala english maathiraigalai ubayogithum palan illai aanaal aachariyam vendhyam enadhu sugar lalavai ithanai kuraikum endru naan ninaithu kooda paarkavillai .ayya ungal puniyathaal tamil ulagirkku ithai theriya paduthi neengal punyam thedikondeergal ungal pani thodara ennudaya vaazhthukal nandri ayya FROM ESHWAR BANGALORE

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஈஸ்வர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • nitingeetam says:

   வணக்கம் ஈஸ்வர்,

   இந்த வெந்தய பொடி எங்கு கிடைக்கும்…….அதை எப்படி உபயோக படுத்துவது என்பதை தெரிவிக்கவும்………

   • machamuni says:

    அன்பு மிக்க திரு நிடிங்கீதம் அவர்களே,
    கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
    திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணனை தொடர்பு கொள்ளுங்கள் . கிடைக்கும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

 33. nitingeetam says:

  ஐயா வணக்கம்,

  என்னுடைய தகப்பனார் /தாய் இருவரும் டயாபடிஸ்…..இவர்களுக்கு இந்த சர்க்கரை கொல்லி பொடி கொடுக்கலாமா???ஆங்கில மருந்துடன் இதை சாப்பிடலாமா???இவர்களுடைய உடல் உறுப்புக்கள்(in future) பாதிக்காமல் இருக்க ஓரு அறிவுரை சொல்லவும்……

  மேலும் ,கண்ணன் அவர்களின் பேங்க் டிடைல்ஸ் (for money transfer)இங்கு தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்…….
  நன்றி…

  • machamuni says:

   அன்பு மிக்க திரு நிடிங்கீதம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   ஆங்கில மருந்துகள் அறிவற்ற மருந்துகள் .சித்த மருந்துகள் அறிவுள்ள மருந்துகள் .சித்த மருந்துகள் சர்க்கரை அளவை சரியான அளவில் வைக்கும். ஆங்கில மருந்துகளுக்கு அறிவு என்பதே இல்லாமல் சர்க்கரை அளவை குறைக்க மட்டுமே தெரிவதால்,சித்த மருந்துகள் சரியான அளவில் வைத்திருக்கும் சர்க்கரை அளவிலிருந்து மிகக் குறைவான அளவிற்கு கொண்டு சென்றுவிடும்.இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகக் குறைந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா???? எனவே அறிவுள்ள சித்த மருந்துகளை மட்டும் எடுங்கள். மேலும் ஆங்கில மருந்துகள் மேலும்கடும் பக்க விளைவுகளை வேறு ஏற்படுத்தும் . எனவே ஆங்கில மருந்துகளை அறவே தவிர்க்கவும்.இன்னும் மேல் விளக்கங்கள் வரும் கட்டுரைகளில் எழுத இருக்கிறேன்.பாருங்கள். திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் வங்கிக் கணக்கு விவரங்கள் அவருக்கு மட்டுமே தெரியும். எனவே தயவு செய்து அவரிடம் கேளுங்கள்.எனது வலைத் தளத்தின் மூலம் அவரிடம் எத்தனை பேர் தொடர்பு கொள்கிறார்கள் என்ற விவரம் கூட நான் கேட்டுக் கொள்வதில்லை .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • nitingeetam says:

    ஐயா,

    மிக்க நன்றி!!!
    நான் கண்ணன் அவர்களை தொடர்புகொண்டு வாங்கி கொள்கிறேன்…

    • machamuni says:

     அன்பு மிக்க திரு நிடிங்கீதம் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 34. Rajapandian says:

  Dear Samy Alagappan,
  I’m Sathurakiri Kannan’s own brother, very long day i’ve to read your medicine details. It is very useful for our life. Keep it up.
  By
  Rajapandian.P
  Sub-Inspector of Police
  Kodaikanal

  • machamuni says:

   அன்பு மிக்க திரு p.ராஜபாண்டியன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   திரு கண்ணன் தன்னலம் கருதாத ஒரு உழைப்பாளி.அவர் உழைப்பால் பலர் நலம் பெறுகின்றனர்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 35. Sridhar says:

  அன்புமிக்க அய்யா, வணக்கம்!

  நான் கடந்த ஒரு மாத காலமாக வறட்டு இருமலால் அவதிபடுகிறேன். பல மருந்துகளை பயன்படுத்தியும் (அலோபதி/ஹோமியோபதி) பலனில்லை. தயை கூர்ந்து ஏதேனும் மருந்து கூறுங்கள்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கடையில் ஏலாதிச் சூரணம் (சித்தா) ,அல்லது ஏலாதிச் சூரணம் (ஆயுர்வேதம்) , அல்லது சிதோபலாதிச் சூரணம் வாங்கி வந்து ஒரு உப்புக் கரண்டி அளவு இருமல் இருக்கும் போதெல்லாம் சுவைத்து விழுங்கி வர வறட்டு இருமல் பறந்தோடும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • ஸஹதுல்லாஹ் says:

    அண்ணன் அவர்களுக்கு,
    இந்த மருந்தை வறட்டு இருமல் அல்லாது, சளி இருமலுக்கும் உட்கொள்ளலாமா.

    என் நோய்களுக்காகவே ஒரு பெரிய லிஸ்ட் போட்டு மருந்துக் குறிப்புகள் தங்களிடம் இருந்து பெற்றுள்ளேன். என்னுடைய உடலில் நோய் அறிகுறிகள் பல என்னை வெறுப்படையச் செய்கின்றன. 29 வயதில் இத்தனை பலவீனங்கள், என்னாலே நம்ப முடியவில்லை. மற்ற துயர் படுபவரை பார்த்து நாம் எவ்வளவோ பரவாஇல்லை என்று தேற்றிக் கொள்கிறேன். இறைவன் அருளிய பெரும் கிருபை, தங்களை எனக்கு காண்பித்தது .

    2005 ஆம் ஆண்டு திடீர் என்று ஒரு நாள் நான் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது, பிரச்னை அதிகமாக நான் ஆலோபதியினரிடம் காண்பித்து ECG எல்லாம் எடுத்துப் பார்த்து ஒன்றுமில்லை என்றார்கள். சில நாட்கள் வந்து போவதுமாய் இருந்த அப்பிரச்சனை சமீப காலங்களாக அடிக்கடி வருவதில்லை. ஆனால் சிறிது தூரம் நடந்தாலோ அல்லது மாடிப் படிகள் ஏறினாலோ மூச்சு வாங்குகிறது, வயதானவர்கள் போல்.

    இப்பொழுது கூட அந்த மூச்சுப் பிரச்னை வந்து விட்டது, முழுமையான மூச்சு இழுத்து விட முடியவில்லை. அதனால் தான் இதற்கு ஒரு முடிவு கட்டும் நோக்குடன் தங்களுக்கு இந்தப் பின்னூட்டம். மருந்துகள் தரின் மிக்க நலம். பின்னூட்டங்கள் குவித்து இடர்கள் தருவதற்கு மன்னிக்கவும்.

    தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

    • machamuni says:

     அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     ///இந்த மருந்தை வறட்டு இருமல் அல்லாது, சளி இருமலுக்கும் உட்கொள்ளலாமா///
     உட்கொள்ளலாம் .

     இத்தனை நோய்களுடன் ஒரு மனிதரா???? முதலில் தைரியம் கொள்ளுங்கள் .பயமே உயிர் போக்கும் எமன் . பயமில்லாதவன் உயிர் என்றோ ஒரு நாள்தான் போகும் . பயந்தவன் உயிர் தினம் தினம் போகும்.மேலும் பயம் ஏற்பட்டவுடன் நம் பீனியல் சுரப்பி தன் சுரப்பை நிறுத்திவிடும் .உலகத்தில் உள்ள அத்தனை வியாதிகளையும் வெல்ல வல்ல அந்த சுரப்பு நீர், சுரப்பதை நிறுத்திவிட்டால், என்ன உலகத்தில் உள்ள எல்லா நோய்களும் வர வாய்ப்பாகிவிடும்.

     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • ஸஹதுல்லாஹ் says:

      அண்ணன் அவர்களுக்கு,
      தங்கள் மேலான பதிலுக்கு மட்டற்ற நன்றிகள்.
      நிச்சயமாக நீங்கள் சொன்னது போல் தைரியத்துடன் இருக்க முயற்சி செய்கிறேன்.

      நேற்றெல்லாம் மிகவும் சிரமப்பட்டு விட்டேன் , இந்த மூச்சு விடுதல் பிரச்சனையால். இப்பொழுது கூட திரும்பி வருவது போல் அறிகுறி தெரிகிறது. இதற்கு மருந்து சொன்னீர்களானால் உடனடியாக சென்று மருத்துவத்தை ஆரம்பித்து விடுவேன்.

      தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

      தங்களன்புள்ள,
      ஸஹதுல்லாஹ்

     • machamuni says:

      அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      முதலில் உங்களுக்கு மலம் எளிதாகக் கழிகிறதா என்று கூறுங்கள் .அது சரியாக இருந்தால்தான் இதை சரி செய்ய இயலும் , ஏனெனில் நுரையீரலும் , பெருங்குடலும் காற்றால் இயங்கும் உறுப்புக்கள் .ஒன்றில் பழுது இருந்தால் அடுத்ததும் பழுதாகும் . எனவே இதை சரி செய்த பின்னர்தான் உங்கள் துயர் குறையும்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

 36. Sridhar says:

  ஏலாதி சூரணத்தை விழுங்கி வந்தேன் இருமல் குறைந்து விட்டது. நன்றி அய்யா. சிறிது காலமாக தங்கள் பதிவுகளை காண வில்லையே தங்கள் பதிவுகளை காண காத்திருக்கிறோம் அய்யா.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   ஏலாதிச் சூரணம் , சுவைத்து விழுங்கி வர வேண்டும்.எச்சிலோடு சேராத எந்த மருந்தும் முழுப் பலன் தராது.நேரமின்மையும் , மின்வெட்டும் எமது பதிவு தயாரிக்கும் வேகத்தைக் குறைத்துவிட்டது.பதிவு இன்று ஒன்று வெளிவர இருக்கிறது .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Sahadullah says:

    அண்ணன் அவர்களுக்கு,
    தொடர்ந்து பின்னூட்டம் இடுவதின் பிரச்சனை அறிந்தேன், தங்களின் பதிவுகளை தாமதப் படுத்துகிறது என்று. மிகவும் வருத்தம். இருந்தும் மிகவும் அவசரமான தேவை என்பதால் இந்தப் பின்னூட்டம். நீண்ட காலமாக எனக்கு உடற் சூடு அதிகம் இருப்பதாக என்னை சாதாரண நேரத்தில் தொட்டுப் பார்ப்பவர்கள் கூறுவார்கள். சில நாட்களாக நீர் கடுப்பும் உள்ளது. எவ்வளவு தண்ணீர் குடித்தும் அது குறைய நேரம் பிடிக்கும். என் உடற் சூட்டை நடுநிலை பெறச் செய்ய மருந்தொன்று கூறினால் நலம். அது மட்டுமின்றி எனக்கு காலைக் கடன் தினசரி அதிகாலை வருவதில்லை. நேரங் கேட்ட நேரமாய் பத்து மணி சுமாருக்கு செல்வதே வழக்கமாய் உள்ளது. இதற்கும் சேர்த்து தங்கள் மேலான பதில் கிடைத்தால் மிக்க நலம்.
    தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

    • machamuni says:

     அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     ///தொடர்ந்து பின்னூட்டம் இடுவதின் பிரச்சனை அறிந்தேன், தங்களின் பதிவுகளை தாமதப் படுத்துகிறது என்று. மிகவும் வருத்தம்///பின்னூட்டம் இடுங்கள் அது நல்லதே.ஆனாலும் சென்ற பதிவின் பின்னூட்டங்கள் இது வரை இல்லாத பெரு வெள்ளம் (95) எனவேதான் பதிவுகள் மிகத் தாமதமாகிவிட்டன.இருந்தாலும் உங்கள் கேள்விகளை எப்போதும் போல் கேளுங்கள்.
     காலை 5 மணி முதல் பெருங்குடல் சக்தி நாளம் இயங்கும் நேரம் .அப்போது காலைக் கடன் தினசரி இருந்தாக வேண்டும் . அப்படி இல்லை என்றால் பெருங்குடலில் அதிக சூடுள்ளது என்று பொருள்.இதனால் கண்களை சுற்றி கரு வளையம் தோன்றும் .இதற்கு வெறும் தண்ணீரில் இனிமா எடுப்பது மிக நல்லது . அல்லது பாதாம் பிசின் அல்லது கடல் பாசி என்று சொல்வார்கள்.இதை கொஞ்சம் எடுத்து முதல் நாள் தண்ணீரில் ஊற வைத்தால் மறு நாள் பெரிதாக உப்பிவிடும் . இதை நன்னாரி சர்பத்தில் கலந்து அருந்த உடலில், பெருங்குடலில் உள்ள தேவையற்ற சூடு தணிந்து உடல் வளம் பெறும் , முகம் பொலிவு பெறும்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • Sahadullah says:

      அண்ணன் அவர்களுக்கு,
      // இதற்கு வெறும் தண்ணீரில் இனிமா எடுப்பது மிக நல்லது . // இனிமா என்றால் வயிற்றை சுத்தம் செய்வது என்று கேள்விப்பட்டதாக ஞாபகம். சரியாகத் தெரியவில்லை. தண்ணீர் கொண்டு அதை எப்படிச் செய்வது என்று தெரியவில்லை. அதிகாலை வெறும் வயிற்றில் நிரம்ப தண்ணீர் குடிக்கச் சொல்வார்கள், அது தானா என்று தயை கூர்ந்து விளக்கினால் மிக்க நலம். மற்றும் இந்த முறையை எத்தனை நாட்கள் (நிரந்தரமாக பின்பற்றலாமா) செய்ய வேண்டும். மேலும் முந்தைய பின்னூட்டத்தில் நண்பரின் தந்தைக்கு இளைப்பு(wheezing) நோய் நீங்க மருந்துகள் கேட்டிருந்தேன், அதற்கும் விளக்கம் கிடைத்தால் என் பதிலை எதிர்பார்த்திருக்கும் அவர் மிக்க மகிழ்ச்சி அடைவார்.
      இறையருள் என்றும் உங்களைச் சூழ்ந்திருக்க எனது பிரார்த்தனைகள்.
      தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

      தங்களன்புள்ள,
      ஸஹதுல்லாஹ்

     • machamuni says:

      அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      ஆன்மீகம் உடல் சார்ந்ததா ??? உயிர் சார்ந்ததா??? பாகம் 7 ல் இந்த எனிமா எடுப்பது பற்றி விளக்க இருக்கிறேன். அது வரை பொறுக்கவும்.ஆஸ்துமா சம்பந்தமான கேள்விக்கு அலைபேசி எண்ணுக்கு வாருங்கள்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

 37. Sahadullah says:

  அண்ணன் அவர்களுக்கு,

  மட்டற்ற நன்றிகள்.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 38. Tarun Pandian says:

  Respected sir,
  I live in Gurgaon with my mother and father.My mother is 43 years old and is suffering from
  spondylolisthesis. At l3-l4 one of her spinal bone has slightly
  shifted outside.Doctors said that it is grade 1 so no need for surgery and much cant be done in allopathy ,but if it goes to 2nd or 3rd grade surgery will be required.Due this
  she has pain in right neck to shoulder blade,in waist region and pain
  in both leg but more in right leg and knee. Please tell us some medicine so that the slightly shifted spinal bone can go back to the original place and her sciatica pain subsides.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு தருண் பாண்டியன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் கிடைக்கும் மூட்டு வலித் தைலம் இந்தப் பிரச்சினைகளை சரி செய்யும்.மேலும் வலியுள்ள எந்த இடத்திலும் தேய்த்து தடவி வர சுகம் கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 39. முத்துவிஜயன் says:

  ///இதே மது மேகச் சூரணமே இந்த வேலிகளுக்குப் போதுமானது//// இது புரியவில்லையே ஐயா,தயவுகூர்ந்து தெளிவுபடுத்தவும்.
  மேலும் என் மகன் (1வயது) நீண்ட நாளாக சளி தொந்தரவினால் அவதிப்படுகிறான்.தயவு செய்து அத்ற்க்கு நல்ல மருநதொன்றை உபயொகிக்கும் முறையொடு கூறவும். துளசியினை இதற்க்கு தரக்கூடாதென்றும் அது வயிற்றுக் கடுப்பினை உருவாக்கும் எனவும் கூறுகின்றனர்.தயவுகூர்ந்து தெளிவுபடுத்தவும்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு முத்து விஜயன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   புரியாத விடயங்களை தெளிவுபடுத்துவது எம் வேலையல்ல. புரியாத விடயம் புரியவில்லை என்றால் அது உங்களுக்குத் தேவையில்லை என்று பொருள். புரியாத விடயங்கள் உங்களுக்குத் தேவை என்றால் எம் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு காரணத்தோடு வாருங்கள்.உங்களுக்கு விதி இருந்தால் விளக்கப்படும் .
   ///மேலும் என் மகன் (1வயது) நீண்ட நாளாக சளி தொந்தரவினால் அவதிப்படுகிறான்.தயவு செய்து அத்ற்க்கு நல்ல மருநதொன்றை உபயொகிக்கும் முறையொடு கூறவும். துளசியினை இதற்கு தரக்கூடாதென்றும் அது வயிற்றுக் கடுப்பினை உருவாக்கும் எனவும் கூறுகின்றனர்.தயவுகூர்ந்து தெளிவுபடுத்தவும்/// [இதாவது வயிற்றுக் கடுப்பினை மட்டும் ஏற்படுத்தும் என்று ஒரு முட்டாள் கூறியிருக்கிறான். ஆனால் ஆங்கில வைத்திய மருந்துகள் என்னென்ன கேடுகள் உண்டாக்கும் என்று உங்களுக்கு படித்த படிக்காத ஒரு முட்டாள்களும் கூறவில்லையல்லவா??? ]
   இரண்டாம் விடயம் உங்களுக்குத் தேவை என்றால் முதல் விடயம் தேவையில்லை என்று பொருள். எது தேவையோ அதை மட்டும் கேளுங்கள் .ஏதோ கேட்க வேண்டும் என்று கேட்காதீர்கள். எத்தனையோ ஆங்கிலேய மருத்துவர்களிடம் மருந்து வாங்கிக் குழந்தைக்கு கொடுத்தீர்களே . குணமாகவில்லையே என்று அந்த ஆங்கில மருத்துவரைக் கேள்வி கேட்டீர்களா??? யாருக்கோ சொன்ன புரியாத விடயத்தை கேட்கும் நீங்கள் அந்த ஆங்கில மருத்துவரைக் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்.அப்படி இல்லை என்றால் நாம் பதில் கூற யோசிக்கலாம்.துளசியைக் கொடுத்தால் வயிற்றுக் கடுப்பு வரும் என்று யாரோ கூறியதைக் கேட்ட நீங்கள்,ஆங்கில மருந்துகளில் கண்ட மருந்தையும் கொடுக்க ஏன் மின் வலையை(INTER NET) உபயோகிக்கவில்லை.எந்த யோசனையும் செய்யாமல் , எந்த கேள்வியும் கேட்காமல் நீங்கள் உங்கள் குழந்தையை பாழாக்க கொடுத்த ( மருந்து என்ற பெயரில் கொடுத்த விஷங்களின்) பட்டியலை வலையில் தேடினீர்களா??? இத்தனைக்கும் பின்னால் , ஏதாவது உப்புப் பெறாத இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்டால், என்ன பதில் கூறலாம் என்று நாம் யோசிப்போம்??????
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 40. Muthuvijayan says:

  ஐயா! திரு.வசீகரன் அவர்கள் கேள்விக்கு
  //இதே மது மேகச் சூரணமே இந்த வேலிகளுக்குப் போதுமானது.//. என்ற விளக்கம் புரியவில்லை! தயவுகூர்ந்து தெளிவு படுத்தவும்.

  என் மகன் (1வயது) கடந்த 3 மாதமாக சளி நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றான்.அனைத்து அலோபதி மருந்துகளும் கொடுத்தும் இன்னமும் சரியாகவில்லை.தயவுகூர்ந்து மருந்தொன்று கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு முத்து விஜயன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி
   இது ஏற்கெனவே நீங்கள் கேட்ட கேள்விதான்.சித்த வைத்தியம் பற்றி தெரியாத எவனோ சொன்னதையெல்லாம் எம்மிடம் கருத்துரையில் கொண்டு வராதீர்கள் .சித்த வைத்தியத்தின் பெயரை இப்படித்தான் பலர் விபரம் தெரியாமல் கெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.அது எமக்கு விருப்பமில்லாதது!!!!!!!!!!!அதனால்தான் பதில் கூறாமல் வைத்திருந்தோம். கட்டாயமாக பதிலை இப்படி பெற்றுவிட்டீர்கள்.உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் கேளுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 41. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,

  Reply link வரவில்லை, அதனால் தனியாக எடுத்து இடுகிறேன்.
  //////முதலில் உங்களுக்கு மலம் எளிதாகக் கழிகிறதா என்று கூறுங்கள் .அது சரியாக இருந்தால்தான் இதை சரி செய்ய இயலும் , ஏனெனில் நுரையீரலும் , பெருங்குடலும் காற்றால் இயங்கும் உறுப்புக்கள் .ஒன்றில் பழுது இருந்தால் அடுத்ததும் பழுதாகும் . எனவே இதை சரி செய்த பின்னர்தான் உங்கள் துயர் குறையும்.///////

  நீங்கள் பதில் அளித்த நேரம் பார்த்தேன். ஒரு பக்கம் வருத்தம் இருந்தது, உங்கள் தூங்கும் நேரம் என்னைப் போன்றவர்களால் விடுபட்டுப்போனது. மறுபக்கம் உங்கள் சேவை மனப்பான்மையை நினைத்து ஆச்சர்யத்தில் மூழ்கி விட்டேன். இறைவனின் அருள் உங்களை சூழ்ந்திருக்க எனது பிரார்த்தனைகள்.

  நீங்கள் சொன்னபடி இன்றுவரை உடல் மற்றும் பெருங்குடல் குளிர்ச்சிக்கான நன்னாரியும் பாதாம் பிசினும் எடுத்து வருகிறேன். இதுவரை பதினோரு மணி சுமாருக்கு தான் மலம் வெளிப்படுகிறது. இந்த நேரம் தாங்கள் கூறியபடி நிச்சயமாக மாறும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது, இந்தப் பிரச்சனை சரியாவதற்காய் காத்திருக்கிறேன்.

  என் மூக்கில் சிறு புள்ளியாய் இருந்த மரு (கருப்பு நிறத்தில் உள்ளது ), இப்போது பெரிதாக வளர்ந்து விட்டது, நீங்கள் பருவிற்கு கூறிய குங்குமாதி லேபம் இதற்கு இடலாமா அல்லது வேறு மருந்துகள் இட வேண்டுமா.

  தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மலமிளக்கிகளில் சிறந்தது இஃப்திரிபல் ஜமானி என்ற யூனானி மருந்து இம்ப்காப்ஸ் அடையார் , தயாரிப்புக்களில் கிடைக்கும் ,அல்லது ஹம்தத் தயாரிப்பை வாங்கி இரவு ஒரு ஸ்பூன் சாப்பிட காலையில் மலம் தாராளமாகப் போகும் .அத்துடன் உங்கள் துயரங்களும் போகும்.
   மூக்கில் உள்ள பருவிற்கு நவச்சாரம் சுண்ணாம்பு சேர்த்து பரு முளைத்திருக்கும் சேர்மான இடத்தில் மட்டும் தடவ பரு கழன்று விழும்.பரு இருந்த இடம் சிறிது இரு நாட்களுக்கு புண்ணாக தெரியும் .அப்போது மஞ்சளைப் போட ஆறும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • ஸஹதுல்லாஹ் says:

    அண்ணன் அவர்களுக்கு,

    மட்டற்ற நன்றிகள்…

    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

    • machamuni says:

     அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 42. muku says:

  அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு வணக்கம்,

  நான் உங்கள் கருத்துரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். மிகமிக அருமை.

  மக்களுக்கு கிடைப்பதற்கு அரிய பயனுள்ள தகவல்கள் மற்றும் மருத்துவ குறிப்புகள்.

  தற்போது ஒரு விண்ணப்பத்துடன் வருகிறேன். எனது மனைவிக்கு 35 வயதாகிறது.

  கடந்த 2 மாதமாக தினமும் காலை எழுந்தவுடன் இடது குதிகால் மட்டும் தரையில் கூட

  ஊன்ற முடியாமல் வலிக்கிறது. அதுவும் கடந்த ஒரு மாதமாக மிக கடுமையான வலி.

  மற்றும் பகல் நேரங்களில் அவ்வபோது வலி தெரிகிறது. இதற்கு நல்ல மருந்தொன்றை

  கூறி உதவிட வேண்டுகிறேன் .

  மிக்க நன்றியுடன்

  முகு .

  • machamuni says:

   அன்பு மிக்க திரு முகு அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   முதலில் தக்காளியை(யூரிக் அமிலம் அதிகம் உள்ள பொருள் இது) உங்கள் வீட்டு உணவில் அறவே தவிருங்கள். துர் நீரான யூரிக் அமிலம் குதிகாலில் உள்ள ஏழு எலும்புகளுக்குள் போய் உறைந்து கொள்வதே இந்தப் பிரச்சைனைக்கு காரணம்.பழுத்த எருக்கிலையை எடுத்து வரவும். செங்கல்லை மிதமான சூடாக்கி அதன் மேல் அந்த பழுத்த எருக்கிலையைப் போட்டு வலியுள்ள குதிகாலால் ஓரிரு முறை மிதித்து வரவும்.இவ்வாறு மூன்று நாள் செய்யவும்.வலி தீரும். பின் மஞ்சிஷ்டாதி க்வாத சூரணம் (ஆயுர்வேத மருந்து IMP COPS ) கடையில் கிடைக்கும்.இதில் ஒரு கிராம் அளவு எடுத்து 100 மிலி தண்ணீரில் போட்டு சூடாக்கி வெறும் வயிற்றில் அருந்தி வர குதிகால் வலி என்றும் குதிகால் வாதம் என்றும் குதிகால் சூசிகா வாதம் என்றும் அழைக்கப்படும் வியாதி போயே போய்விடும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • anbu says:

    அய்யா எனக்கும் இந்த தொந்தரவு உள்ளது. நாட்டு தக்காலிக்கு பதிலாக பெங்களூர் தக்காளி பயன் படுத்தலாமா ?

    • machamuni says:

     அன்பு மிக்க திரு அன்பு அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
     முதலில் தக்காளியை(யூரிக் அமிலம் அதிகம் உள்ள பொருள் இது) உங்கள் வீட்டு உணவில் அறவே தவிருங்கள். துர் நீரான யூரிக் அமிலம் குதிகாலில் உள்ள ஏழு எலும்புகளுக்குள் போய் உறைந்து கொள்வதே இந்தப் பிரச்சைனைக்கு காரணம் என்று கூறிவிட்டாலே எல்லாத் தக்காளிகளும் அதிலேயே அடக்கம் .இதில் நாடென்ன , பெங்களூரென்ன எல்லாம் ஒன்றுதான்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 43. muku says:

  அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு

  மிக்க நன்றிகள் பல பல. உடனடி சிகிச்சை மேற்கொள்கிறேன் .

  அன்பு கலந்த நன்றியுடன்

  முகு .

  • machamuni says:

   அன்பு மிக்க திரு முகு அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 44. arjun says:

  vanakkam sir,
  how ru sir. its very pleasure to read ur articles and ur social responsibility.i really like to mmet u sir.
  vazgha valamudan.
  thank u

  • machamuni says:

   அன்பு மிக்க திரு அர்ஜுன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கேள்விகள் கேட்காத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ் .நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.மேலும் எம்மைச் சந்திக்க அவசியம் வேண்டி இருந்தால் பார்க்கலாம்.அது யாருக்காவது உயிர் போகுமளவிற்கு உடல் நிலை மோசமாக இருக்குமானால் பார்க்கலாம்.சும்மா சந்திப்பது என்பது எமது அரிய நேரத்தை வீணாக்கும்.ஏற்கெனவே இரு வாரங்களாக எனது பதிவே வெளி வரவில்லை.இடையில் நிறைய நோயாளர் சந்திப்பு .எமது அலுவலக வேலை வேறு.சொந்தக்காரர்களின் திருமணம் போன்ற விசேஷங்கள் வேறு. எனவே அவசியம் என்று பட்டால் மட்டுமே நேரில் சந்திக்க முயற்சி செய்யுங்கள்.எமக்கு அவசியம் என்று பட்டால் மட்டுமே நாமும் அதை அனுமதிப்போம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 45. balajikannan says:

  அன்பு அய்யா திரு.சாமீ அழகப்பன் அவர்களுக்கு வ்ணக்கம்.நான் தங்கள் ஆலோசனைப்படி சர்க்கரை கொல்லிப்பொடியை திரு.கண்ணன் அவ்ர்களிடம் இருந்து தருவித்து 18/01/2013 முதல் காலை வெறும் வயிற்றில் 1 டம்ளர் காய்ச்சிய பாலுடன் 1ஸ்பூன் பொடி கலந்து குடித்துவருகிறென்.அது போல் இரவு உணவுக்குப்பின் 30 நிமிடம் கழித்து 1 டம்ளர் பாலுடன் 1 ஸ்பூன் பொடி கலந்து சாப்பிடுகிறேன். இத்ற்க்கு முன் கடந்த ஆறு மாத காலமாக (சர்க்கரை வியாதி என்று ஹாஸ்ப்பிட்டலில் சொன்னதில் இருந்து) தினமும் இரண்டு வேளையும் மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.காலையில் சாப்பிட்டதும் ஒரு செட் மாத்திரை ,மதியம் 1 மணி ஆகி விட்டால் உடம்பெல்லாம் வெடவெடவென்று நடுங்கும். சாப்பாடு சாப்பிட்டவுடன் நடுக்கம் குறையும். மாலை 7 மணி ஆகி விட்டால் மீண்டும் உடல் நடுங்கும்,சாப்பிட்டபின் சரியாகும்.பிற்கு ஒரு செட் மாத்திரை சாப்பிட்டு படுப்பேன். கடந்த ஆறு மாதத்திலேயே வாழ்க்கையே வெறுத்துவிட்டது.கடவுளாய் பார்த்து த்ங்கள் தளத்தை எனக்கு காண்பித்து கொடுத்தது.இப்போது கண்ணன் அவர்கள் சர்க்கரை கொல்லி பொடியை சாப்பிட ஆரம்பித்த 5 நாள் மட்டும் மாத்திரை சாப்பிட்டேன்.பிறகு நிறுத்திவிட்டேன். இப்போது உடல் நடுக்கம் இல்லை,மயக்கம் இல்லை. சுறுசுறுப்பாக ஒரு 20 வயது குறைந்து விட்டதை போல் உணர்கிறேன். . இந்த மருந்து பற்றிய விபரங்களை தெரியப்படுத்திய தங்களுக்கும் மருந்து தயாரித்து அனுப்பிய திரு கண்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன். சர்க்கரை வியாதியால் நிறைய பணமும் செலவழித்து உடலையும் சீரழித்துக்கொள்ளும் அன்பர்கள் அனைவரும் இம் மருந்தை வாங்கி பயன் பெற்று நீடூடி வாழ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.வீட்டில் இப்போது ஜீனி சர்க்கரை உபயோகிப்பதே இல்லை,பனங் கருப்பட்டி மட்டும் தான். நன்றி அய்யா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பாலாஜி கண்ணன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவேயல்லாமல் வெறொன்றறியேன் பராபரமே!!!!!!இத்துடன் சர்க்கரை நோயை குணமாக்கலாம் தொடர்களையும் படித்து அதில் உள்ள விடயங்களையும் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் நிரந்தரமாக குணமாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 46. பல் சொத்தை வியாதி இதற்கு நல்ல மருந்தொன்றை

  கூறி உதவிட வேண்டுகிறேன் .

  மிக்க நன்றியுடன்
  K BALA

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மது என்ற பாலாத்திருமால் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்களிடம் சதுரகிரி ஹெர்பல்ஸ் பல் பொடி கிடைக்கும் , அதை வாங்கி தேய்த்து வாருங்கள்.உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைவினாலும் ,சீனியினால்(வெள்ளைச் சர்க்கரை) செய்த இனிப்புக்களை அதிகம் உண்பதனாலும்தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இயற்கையான சுண்ணாம்புச் சத்துள்ள தேங்காயை பச்சையாக வெறும் வயிற்றில் , காலையில் சில்லுகளாக வாயில் போட்டு,அத்துடன் கருப்பட்டியும் சேர்த்து மென்று தின்று வர பற்களும் சுத்தமாகி வலுப்பெறும்.பல் பிரச்சைனைகள் தீரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 47. n.s . venkhatraman says:

  அன்புள்ள அய்யா,

  தங்களுடைய வலைபதிவுகள் அனைத்தும் படிக்கும் பேறு
  எனக்கு சமீபத்தில் தான் கிடைத்தது. தங்கள் மனித நேயத்திற்கு நன்றிகள்.

  என் மனைவி வெரிகோஸ் வெயின் (varicose vein) பிரச்சினையால்
  அவதி பட்டுகொண்டிருக்கிறார்கள்.

  தயவுசெய்து தக்க தீர்வு, அளிக்கும்படி தாழ்மையுடன்
  கேட்டுக்கொள்ளுகிறேன்.

  அன்புடன்

  வெங்கட்ராமன்

  • machamuni says:

   அன்புள்ள திரு என்.எஸ். வெங்கட்ராமன் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   இது பற்றி ஒரு பதிவே எழுத இருக்கிறோம்.அப்போது இது பற்றி உங்களுக்கு முழு விவரம் அளிக்கிறோம்.இப்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலை பேசி எண்ணை அனுப்பி உள்ளோம்.தொடர்பு கொள்ளவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • என்.எஸ். வெங்கட்ராமன் says:

    அன்புள்ள அய்யா

    தங்களுடைய உடனடி பதிலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    வெரிகோஸ் வெயினுக்கு தனி பதிவு பற்றிய தங்கள்
    எண்ணத்தை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    தங்களுக்கு மிகுந்த புண்ணியம்

    அன்புடன்

    வெங்கட்ராமன்

    • machamuni says:

     அன்புள்ள திரு என்.எஸ். வெங்கட்ராமன் அவர்களே
     கருத்துரைக்கு மிக்க நன்றி,
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 48. naveen says:

  அன்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

  தங்களது பதிவுகள் மிக்க பயனுள்ளவையாக இருக்கின்றன.

  எனது தந்தை (65 வயது) காலில் வெரிகோஸ் வெயினால் புண் வந்து ஆறாமல் அவதிப்படுகிறார். காலில் வீக்கமும் உள்ளது.

  தயவு செய்து நல்ல மருத்துவம் இருந்தால் கூறவும்.

  மிக்க நன்றி.

  • machamuni says:

   அன்புள்ள திரு தர்மராஜ் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இதற்கு குப்பை மேனியும் சின்ன வெங்காயம் சீரகம் சேர்த்தரைத்து உள்ளுக்கு 48 நாள்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நன்று. பத்தியம் உப்பை முருங்கை இலையுடன் சேர்த்து வறுத்தால் கருப்பாகும் , இந்த உப்பை உபயோகிக்கவும்.புளிக்குப் பதிலாக குடம்புளி உபயோகிக்கவும். மேல் விவரங்களுக்கு கீழேயுள்ள அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
   திரு அமீர் சுல்தான் அவர்கள் ,தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,
   மச்சமுனி மூலிகையகம்( MACHAMUNI HERBALS )
   S.S.I NO: 330021189121
   எண்.1/17,5வது தெரு, நாராயணசாமி தோட்டம், சின்னகொடுங்கையூர், சென்னை-118.
   Cell: 9597239953
   மின் அஞ்சல் முகவரி.
   machamunimooligaiyagam@gmail.com
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 56 = 58