சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம்( பாகம் 1 )

March 8, 2013 by: machamuni

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம்.

மூலம்  மற்றும் பவுத்திரம் உள்ள நோயாளர்கள் பலர் இப்படி சொல்லக் கேட்டிருக்கிறேன்  .  ” உலகத்தில் உள்ள வியாதிகளில் கொடும் வியாதி இது .உட்கார முடிவதில்லை.படுக்க முடிவதில்லை.தூங்க முடியவில்லை .சாப்பிட முடியவில்லை.சாப்பிட்டால் மலம் கழிக்க வேண்டுமே.மலம் கழிக்க வேண்டிய நேரத்தை நினைத்தால் சாப்பிடவே முடியவில்லை.மலம் கழிக்கும் நேரம் அவ்வளவு நரகம் போல இருக்கிறது.”

உண்மைதான்.ஆனால் இந்த வியாதியை சஸ்திர சிகிச்சையினால் (ஆப்பரேஷன் ) சிகிச்சை செய்துவிடலாம் என்று எண்ணினால் மீண்டும் மீண்டும் முளைத்து எழுந்து வந்து கொண்டே இருக்கும். ஒரு இடம் மீண்டும் ,மீண்டும் உறுத்தப்பட்டுக் கொண்டே இருந்தால் கடைசியில் புற்று நோய் ஆக மாறிவிடும்.ஆனால் இந்த வியாதியை சஸ்திர சிகிச்சையின்றி (ஆப்பரேஷன் ) மிக எளிதாக சமாளித்து குணமாக்கலாம்.

முதலில் உடனே மல வாய் எரிச்சலில் இருந்தும் மலச் சிக்கலில் இருந்தும், மலம் கழியும் போது இரத்தம் கழிதலிலும் இருந்து  விடுபட அகிம்சை இனிமா மிகச் சிறந்தது.

கீழ்க்கண்ட இணைப்பைப் பாருங்கள்.

ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் ( 7 )

முதலில் மூலம் எதனால் உண்டாகிறதென்றால்,மூலாக்கினி கிளர்ந்து எழுவதால் உண்டாகிறது.நாம் மலவாயில் மூன்று மொட்டுக்கள் உள்ளன.அவற்றில் அடைப்பு ஏற்பட்டாலோ கிருமித் தொற்று ஏற்பட்டாலோ உடனே இந்தத் தொல்லை ஏற்பட ஆரமிபிக்கிறது. மூலாக்கினி அபானனை சூடாக்கி மலத்துடன் இணையும்போது மலம் இறுகி வெளியேறும் போது, இறுகிய  மலம் கத்தி போல மல வாயை அறுக்கும் போது இரத்தப் போக்கு ஆரம்பிக்கிறது.பவுத்திரமும் இதே போன்றதுதான் .ஆனால் பவுத்திரம் இதை விட கொடியது.இதில் கொடி பவுத்திரம் என்பது பூமியில் நரகமே.மல வாயிலும்,மல வாயைச் சுற்றிலும் பல ஓட்டைகள் விழுந்து , எல்லா ஓட்டைகளிலும் இருந்து சீழ் ஒழுகும்.

எல்லாவற்றிற்கும் மிக எளிதான தீர்வு இருக்கிறது.கிருமிக் கூட்டமே மூலம்,பவுத்திரத்திற்குக் காரணம்.உடலில்  மிக அதிகமாக பெருகிய கிருமிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தால் இவை குணமாய்விடும். அதற்கு கீழ்க்கண்ட முறைகளைக் கையாண்டால் நலம் உறுதியாக கிடைக்கும்.

மேலும் இந்த மூலத்தை இப்படியே விட்டுவிட்டால் , சூடாகி விரிந்து பெருக்கும் அபான வாயு மேலேறி,தமரக வாயுவாக மாறினால் , இதயத்  தாக்காக மாறி உயிருக்கு உலை வைத்துவிடும்.எனவே இதில் மிக  கவனம் அவசியம்.மூல ரோகம் தானே என்ற அலட்சியம் வேண்டாம். மலமிருக்க முக்கி இருக்க அவசியம் நேராமல் , மலம்  வெகு எளிதாகக் கழிய வேண்டும்.மலத்தை “முக்கி இருந்தக்கால் முழுவதும் போச்சப்பா” என்பார்கள் .

மலம் தண்ணீரில் மிதக்கும் தன்மையில் இருக்க வேண்டும்.கட்டியாக இருக்கக் கூடாது.மிக மெதுவானதாக இருக்க வேண்டும் .காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடல் சக்தி நாளம் இயங்கும் நேரம்.இந்த நேரத்திற்குள் மலம் மிக எளிதாக கழிந்துவிட வேண்டும்.மல இறுக்கம் சரியாக ’’இத்ரிபல் ஜமானி’’ என்ற யூனானி மருந்து மிக நன்றாக வேலை செய்யும்.இது வேறொன்றுமல்ல நம்ம கடுக்காய் லேகியம்தான்.இதில் ஐந்து  நாட்டு  வகை கடுக்காய்கள் சேர்ந்து இருப்பதால்தான் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது.

ஒருவன் ஏமாற்றிவிட்டான் என்பதை அவன் எனக்கு கடுக்காய் கொடுத்துவிட்டான் என்பார்கள்.வேறொன்றுமல்ல கடுக்காய் சாப்பிட்டால் மல இளக்கம் வருமல்லவா, அதைத்தான் இப்படி பேதிக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்லுவார்கள்.

இந்தக் கட்டுரைக்குள் போகும் முன்னர் கீழ்க் கண்டவற்றையும் படித்துவிடுங்கள்.மூலம்,பவுத்திரம் குணமாக்கல் பற்றி ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு நாம் கொடுத்த பதில் இது .

விந்து என்பது மிக முக்கியமானது. இறைக்க , இறைக்க ஊறுவதற்கு அது கிணறல்ல!!!!விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது வைத்திய மொழி. விந்தை அதிகமாக வீணாக்க வீணாக்க, மூலாக்கினி கிளர்ந்து எழுந்து மூலச்சூட்டை உண்டாக்கி , மூலத்தையும் ,பவுத்திரத்தையும் உண்டாக்கும்.சப்த தாதுக்களும் சூடாகி நாசமடையும்.எனவே சுய இன்பம் செய்வது நல்லதல்ல.அது நம் உடலில் உள்ள டு மற்றும் ரென் (DU AND REN MERIDIAN, GOVERNING VESSELS)சிறப்பு ஆளுமைச் சக்திப் பாதைகள் குறுக்குச் சுற்றில்(SHORT CIRCUIT) இணைக்கப்படுவது போல ஆவதால் குறுக்குச் சுற்றில் இணைக்கப்பட்ட பேட்டரி (BATTERY) போல விரைவில் சக்தி இழந்து போவீர்கள். மேலும் மூலச்சூடு அதிகரிப்பதால் கண் பார்வைக் குறைவு ,கை ,கால் மூட்டுக்களில் பசையின்றிப் போய் வெட்டைச் சூடால் உடல் முழுதும் உள்ள தண்ணீர் சக்தி குன்றிப் போய்விடும் . விளைவு வெட்டை முற்றினால் கட்டை.உடல் கட்டை போலாகி மடக்க நீட்ட முடியாமல் துயருறும்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
தீய பழக்க வழக்கங்கள் என்றும் துன்பத்தைத்தான் தரும். முதலில் இன்பம் தருவது போலத் தோன்றினலும் பின்னால் துன்பத்தைத்தான் தரும். இருபத்தோரு நாட்களுக்கு மேற்பட்ட விந்து நோய் செய்யும்.அதனால் இருபது நாட்களுக்கு ஒரு முறை இன்பம் அனுபவிப்பதில் தவறில்லை என்றாலும் சுய இன்பத்தின் போது நமது சக்தி ஓட்டப் பாதைகளில் உள்ள சக்தி உடலுறவின் போது செலவாகும் சக்தியைவிட அதிகமாக விரயம் ஆகி விரைவில் உடலில் உள்ள உயிரோட்டம் என்னும் பேட்டரி டிஸ்சார்ஜ் ஆகி வியாதிகளுக்கு அதிகமான இடம் கொடுத்துவிடும்.இதனால் (சுய இன்பம் பல நாள் செய்துவிட்டு )சுய இன்பம் செய்யாதிருப்பவர்களுக்கு அது தூக்கத்தில் சிலருக்கு சொப்பன ஸ்கலிதம் , என்ற கனவில் விந்து வெளிப்படுதல் என்ற செயல்பாட்டில் வெட்டைச் சூட்டினால் வெளியேறிவிடும்.இறை வழிபாடு , தியானம் , யோகா போன்ற நல்ல பழக்க வழக்கம் உள்ள பிரம்மச்சாரிகளுக்கு விந்துவை திருப்பி அழித்து மறு சுழற்சிக்கு உடலே அனுப்பிவிடும்.
மூலாக்கினி ஞானத்துக்குதவும் அக்கினி , அதை வீணாக இப்படி ஆக்கினால் பிறந்த பயன்தான் என்ன.இறைவன் மிருகங்களுக்கு குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே உடலுறவு வேட்கையைக் கொடுத்துள்ளான்(எடுத்துக்காட்டு நாய்களுக்கு புரட்டாசி,ஐப்பசி மாதங்கள் ).மனிதனுக்கு மட்டுமே இறைவன் வருடத்தின் எல்லா நாட்களும் உடலுறவு கொள்ளும் வல்லமையைத் தந்துள்ளான்.அதை மனிதன் இப்படி சீரழித்துக் கொள்ள பயன் படுத்தினால் அது அவரவர் தவறு.
மேலே நீங்கள் சொன்ன இந்த தீய பழக்க வழக்கங்களை ஒழித்துவிட்டு கீழ்க்கண்ட மருந்துகளைச் சாப்பிட்டால் நலம் கிடைக்கும் .ஏனெனில் இந்த மருந்துக்கு இச்சா பத்தியம்.அதாவது எந்த வகையிலும் விந்து நீக்கம் கூடாது.

1)அஷ்ட சூரணம் (IMP COPS) – 50 கி
2)சுண்டை வற்றல் சூரணம் (IMP COPS) – 50 கி
3)நாக பற்பம் (IMP COPS) -10 கி
4)நத்தை பற்பம் (IMP COPS) – 10 கி
5)முத்துச் சிப்பி பற்பம் (IMP COPS) – 10 கி
6)பலகரை பற்பம் (IMP COPS) – 10 கி
இவற்றைக் ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு ஒரு உப்புக் கரண்டி(SALT SPOON) அளவு சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்னர் மூன்று வேளையும் சாப்பிட்டு வர மூல ரோகம் தணியும்.
இத்துடன் SBL கம்பெனியின் ஹோமியோ மருந்துகளில் FP TABS ( FISHER PILES TABS ) கடுமையான நிலையில் 4 மாத்திரைகளும் , சாதாரண நிலையில் 2 அல்லது மூன்று மாத்திரைகளும் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்னர் மூன்று வேளையும் சப்பி உமிழ் நீரொடு கந்து சாப்பிட்டு வர மூல ரோகம் தணியும்.

குப்பை மேனியை , பதினோரு மிளகுடன் அரைத்து எலுமிச்சைக் காயளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூல ரோகம் அழிந்தொழியும்.மூலத்தைக் கிருமிக் கூட்டம் என்று சொல்வார்கள்.எங்கே அதிக உஷ்ணமும் நீரும் ஒன்றாக இருக்கிறதோ அங்கே கிருமிகள் வளர்ந்து பெருகும் .அதைக் குப்பை மேனி அழித்தொழிக்கும்.
என்னதான் மருந்துகள் உங்களுக்கு நாம் சொன்னாலும் எமக்கு உங்கள் மேல் மரியாதை ஏற்படவில்லை.இது போன்ற உங்கள் பழக்கங்கள் வெளியே தெரிந்தாலும் தெரியாவிட்டாலும்,இது போன்ற பழக்க வழக்கங்கள் உங்கள் மீது மற்றவர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தாது.ஏனெனில் ஆண்களுக்கு விந்து சக்தியும் , பெண்களுக்கு நாதமான சிவப்பான சக்தியும்தான் ஆன்மீக பிரகாசத்தை ஏற்படுத்தும்.வீணாக்கினால் கீழ்க்கண்ட பாடலின் படிதான் நடக்கும்.

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதி கெட்டு-போன திசை
எல்லார்க்கும் கள்ளனாம் ஏழ்பிறப்பும் தீயனாம்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

ஆன முதல் என்று குறிப்பிடப்படுவது பணமல்ல .நாம் பிறக்கும் போது கொண்டு வந்திருக்கும் ஆன்மீக பலம்.அதை செலவிட உடலுறவு , விந்து நீக்கம் , செய்வினை, பில்லி சூனியம் போன்றவை வைத்து அடுத்தவரைக் கெடுக்கும் மாந்திரீக காரியங்களில் ஈடுபடுதல் ஆகியற்றை செய்வது. கொண்டு வந்த ஆன்மீக பலத்தைவிட அதிகம் செலவு செய்தால் , மானமழியும் , மதி கெடும் , போன திசை எல்லார்க்கும் நீங்கள் கள்ளனாய்த் தென்படுவீர்கள்.சும்மாவானும் ஏண்டா திருட்டு விழி விழிக்கிறாய் என்று கேட்கப்பட்டு , உதைபடுவீர்கள்.எல்லார்க்கும் கள்ளனாய் தென்படுவீர்கள்.ஏழு பிறப்புக்கு தீயவனாய் பிறப்பெடுக்க வேண்டி வரும். நல்லவர்களுக்கெல்லாம் பொல்லாதவனாக தென்படுவீர்கள்.
இதுவெல்லாம் தேவையா என்று கருதி மனத்தை அடக்கி ஆளப் பழகுங்கள்.

இப்போது சதுரகிரி ஹெர்பல்ஸ் காட்டுக்கருணைச் சூரணமான மூலச் சூரணத்திற்கு வருவோம்.

kaattuk karunai_mini

இங்கே ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் , அம்மா வழி முப்பாட்டனாரும் வைத்தியரே ,ஆனாலும் அவரது நூல்கள் ஒன்று கூட திரு கண்ணன் அவர்களுக்கு கிடைக்காமல் போனது துரதிருஷ்டமே!!!ஆனால் குல வித்தை கல்லாமல் பாகம் படும் என்பதற்கேற்ப இந்த மூலிகைக் கலவை வித்தையில் மிகத் தேர்ந்தவராக இருக்கிறார்.மூலிகைகளை இனம் காணுதலிலும் அவரது தனித் திறமை எம்முன்னால் பல முறை கண்டுள்ளேன். அவரது  சிறப்பான சேவையை கொஞ்சம் பொறுமை காத்தே பெற இயலும் என்பதை முன்பே சொல்லிக் கொள்கிறேன்.(மருந்து வர ஒரு மாதம் குறைந்த பட்சம் ஆகலாம்).அவருக்கு விவசாயம் மற்றும் வீட்டு வேலைகள் மிக அதிகம்.எனவே பொறுமை காத்து பெற்றுக் கொள்ளுங்கள்.

இதில் சேர்ந்துள்ள பொருட்கள்

1)காட்டுக் கருணை:-காட்டுக் கருணை ,காறாக்கருணை,சாதாரண கருணையான காறுங்கருணை (பிடி கருணை என்றும் அழைப்பார்கள்), என சில வகைகள் உண்டு.சித்தர்கள் பாடலில் கிழங்குகளில் கருணை அல்லாது வேறெதுவும் வேண்டேன் என்பார்கள்.

மேகமணு காதுவெகுதீ பனமாகுத்

தேகமதில் மூலமுளை சேராவே- போகாச்

சுரதோஷம் போங்கரப்பான் றோன்றும் வனத்திற்

பரவுகரு ணைக்கிழங்காற் பார்

(பதார்த்த குண  விளக்கம்)

காட்டுக் கருணைக் கிழங்கினால் வாதப் பிரமேகமும் , முளைமூலமும், சுரதோஷமும் , போகும்.இன்னும் இதனால் மிகுபசியும் ,கரப்பானும் உண்டாகும் என்பதாகும்.

மூலத்தில் ஒன்பது வகை உண்டு என்றும் கூறுவர் .எனவே நவ மூலம் என்பர் .அதே போல பவுத்திரமும் சில வகைகள் உண்டு.இரண்டையும் சேர்த்து 21 வகையாக கூறுவர். அத்தனையும்  அடியோடு அகற்றும் இந்த காட்டுக்கருணைச் சூரணமும் மற்றும் அதிலுள்ள பொருட்களும்.

 மூலநோயைப் பற்றி ஒவ்வொரு நூல்களிலும் அவரவர் கொள்கைப்படி பல வகைகளாக பிரித்திருக்கிறார்கள். சேகரப்பா 254வது பாடலில் மூலநோயை பத்து வகைகளாக தேரையர் கூறியுள்ளார்.

 

அவையாவன:

சீழ் மூலம்: மல வாயிலிருந்து வருவது; சீழ் ஒழுகுவது.

புண் மூலம்: மலவாயிலிருந்து புண்ணீரொழுகுவது.

தீ மூலம்: மலவாயிலிருந்து சூட்டுடன் எரிச்சல் கூடி கழிவது. 

நீர் மூலம் : மலவாயிலிருந்து நீர் போலும், பிசுபிசுப்புடனும் தன்னை அறியாமல் வழிவது.

முளை மூலம்: மலவாயின் அருகில் முளைபோல் உண்டாவது.

சதை மூலம்: காய்போல முளை கடுப்போடு வெளியாவது.

வெளுப்பு மூலம்: மோர்போல் வெளுத்து சிறுகச் சிறுக வெளியாவது.

காற்று மூலம்: அடிக்கடி காற்று பிவது போல் வெளியாவது.

பெருமூளை மூலம்: கீழ்க்குடல் கிழங்கின் முளைபோல் ஆடுவது.

என  மேற்கண்டபடியும் வகுத்துள்ளார்கள்.

யூகிமுனி சிந்தாமணி என்னும் நூலில் மூல நோயை இருபத்தோரு பிரிவுகளாக வகுத்துள்ளார்.

சனிப்பான மூலத்தின் பெயரேதென்னில்

சமரசமாம் நிர்மூலஞ்செண்டு மூலம்

முனிப்பான முளைமூலம் சிற்று மூலம்

மூர்க்கமாம் வறள்மூலம் ரத்த மூலம்

திணிப்பான சீழ்மூலம் ஆழிமூலம்

திணியான தமரக மாமூலத்தோடு

வனிப்பான வாதமோடு பித்த மூலம்

வகையான சேட்டுமத்தின் மூலமாமே

 

வகையாகும் தொந்தமாம் மூலத்தோடு

வளர்கின்ற வினைமூலம் மேக மூலம்

பகையாகும் பவுத்திரம் மாமூலத்தோடு

படர்கிரந்தி மூலமொடு குதயாமூலம்

புகையாகும் புறமூலம் சுருக்கு மூலம்

பொருகின்ற சவ்வாகு மூலத்தோடு

தொகையாகு மூலந்தானிருபத் தொன்றும்

சூட்சுமாமாம் இதனோடே ரூபங்காணே!!!

அவையாவனவற்றின் விளக்கம்.

1. நீர் மூளை மூலம் (நீர் மூலம்)
நீர் மூல நோயில் வயிறு வலித்தல், கீழ் வயிறு இரைச்சல், மலம் வறண்டு வெளியாகாமல் காற்று மட்டும் பிறிதல், மலவாயில் நுரையுடன்கூடிய நீர் வழிதல், மலம் வருவது போன்று தோன்றும். ஆனால் மலம் வெளிவராமல் நீர் மட்டும் கசியும் தன்மை கொண்டது.
செண்டு முளை மூலம்(செண்டு மூலம்)
செண்டு மூல நோயில் கருணை கிழங்கு முளைவிடும் போது இருக்கும் வடிவமாய் மலவாயின் பகுதியில் உண்டாகி சிவந்து, பருத்து வெளியாகும். அதை உள்ளுக்கு தள்ளினாலும் உள்ளுக்குப் போகாமல் கடினத்துடன் வறண்டு கன்றிப் போன நிறத்துடன் மிகுந்த வலியை உண்டாக்கும். வயிறு இரையும், மலம் கட்டிப்படும். மலவாயில் வலி ஏற்படும்.
3. பெருமுளை மூலம் (முளை மூலம், பெரு மூலம்)
முளை மூலம் என்னும் பெருமுளை நோயில் மஞ்சளின் முளையைப் போல் மலவாயில் தோன்றி எச்சல் உண்டாகி தடித்து அடி வயிறு கல்போலாகும். மலவாய் சுருங்கி அரிப்பு உண்டாகும். இந்த மூலநோயில் இரத்தம் வெளியாகும். வயிற்றுக்குள் காற்றுக்கூடி இரைச்சல், ஏப்பம் இவையுண்டாகும். மலம் காய்ந்து வெளியாகும்.

4. சிறுமுளை மூலம் (சிற்று மூலம்)
சிற்று மூலம் என்னும் சிறு முளை நோயில் உடலெரியும். மயக்கமுண்டாகும், வயிறு ஊதி பளபளப்பாகும். வயிற்றில் குத்தல், இரைதல், வயிறு இழுத்து பிடித்தது போல் வலித்தல் போன்றவை உண்டாகும். உடல் இளைக்கும். சிறிய முளைகள் மலவாயில் உண்டாகும். அதிலிருந்து ரத்தம் வடியும். உடல் வெளுக்கும். பசி குறையும். இது போன்ற அறிகுறிகள் சிறுமூலத்தில் உண்டாகும்.

5. வறள் முளை மூலம்(வறள் மூலம்)
வறள் மூலநோயில் உடலில் வெப்பம் மிகுந்து குடல் வறட்சியடைந்து மலம் உலர்ந்தும், இறுகியும் மலம் வெளியாகாமல் தடைப்படும். மலத்தை முக்கி வெளியாக்குகையில் அதனுடன் இரத்தமும் துளிதுளியாக விழும். உடல் வெளுக்கும், பலம் குறையும். இதுபோன்ற அறிகுறி தென்படும்.

6. குருதி முளை மூலம் (ரத்த மூலம்)
ரத்த மூல நோயில் தொப்புளில் வலி உண்டாகும். மலம் கழிக்கும்போதெல்லாம் இரத்தமானது குழாயில் இருந்து பீச்சுவதுபோல் பாயும். உடல் வெளுத்து, பலம் குறைந்து கை கால் உளைச்சல் உண்டாகும். மயக்கம், மார்பு நோய், தலை வலி, கண்கள் மஞ்சள் நிறம் அடைந்து காணப்படும்.

7. சீழ் முளை மூலம் (சீழ் மூலம்)
சீழ் மூல நோயில் மலவாயை சுற்றிலும் கடுப்பும், எச்சலும் உண்டாகும். மலம் போவதற்கு முன்பு சீழோடு நீர் வடிந்து பிறகு மலம் கழியும். அதில் இற்றுப்போன சதை துணுக்குகள் காணப்படும். உடல் வெளுத்தும், மஞ்சள் நிறமாயும், உடல் மெலிந்தும் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியாகும். இதுபோன்ற தன்மைகளை கொண்டதாக இருக்கும்.

8. ஆழி முளை மூலம் (ஆழி மூலம்)
ஆழி மூல நோயில் மலவாயில் ஆழி வடிவமாம் வள்ளிக்கிழங்கைப் போன்று பருத்து நீண்டு, ஒரே முளையாய் தோன்றும். அதை உள்ளுக்குத் தள்ளினாலும் செல்லாது. அதிலிருந்து நீரும், சீழும், இரத்தமும் வடியும். மலம் வெளியாகாது. மலம் தடைப்பட்டு தாங்க முடியாத வலி உண்டாகும். இதுபோன்ற அறிகுறிகள் ஆழிமூல நோயில் காணலாம்.

9. தமரகமுளை மூலம் (தமரக மூலம்)
தமரக முளை மூல நோயில் மலவாயிலில் முளை வெளியே தோன்றி தாமரைப் பூப் போல பெரிதாய் காணும். ரத்தம் அதிகமாய் வெளியாகும். அரிப்பும், நமைச்சலும் உண்டாகும். உடல் மெலியும், மேல் மூச்சு வாங்கும், அசதியும் உண்டாகும். தமரக வாயு மேலேறி அடிக்கடி மூச்சு முட்டல் , இதய வலி உண்டாகும்.செரியாமை, வயிறு ஊதல், நீராக கழிதல், பசியின்மை போன்ற தன்மைகள் இந்நோயில் உண்டாகும்.

10. வளிமுளை மூலம் (வாத மூலம்)
வளியெனும் காற்றாகிய (வாயு )வாத மூல நோயில் மலவாய் கோவைப்பழம் நிறத்தில் சிவந்தும் அதில் மூல முளைகள் வளர்ந்து கருத்து, மெலிந்து கடுப்பு, நமைச்சல், குத்தல் இவைகள் உண்டாகும். தலை நோகும், குடலுக்குள் வலிக்கும்.

11. அழல் முளை மூலம்  (பித்த மூலம்)
அக்கினியென்னும் ,தீயால் ( தேயு ) தோன்றும் பித்த மூலத்தில் மலவாயில் பருத்திக் கொட்டை போலும், நெல்லைப் போலும் அளவுள்ள முளைகள் தோன்றும். உடலில் பித்தம் மிகுதியாகி மலம் வறண்டு, உருண்டும், தித்தியாகவும் வெளியாகும். இரத்தமும், சீழும் வடியும். வயிற்றுவலி, மலவாய்க்கடுப்பு, தலைநோய், கோபம் உடல் பலம் குறைதல் போன்றவை உண்டாகும்.

12. ஐயமுளை மூலம்  (ஐய மூலம்)
ஐயமாகிய தண்ணீரால் (அப்பு ) தோன்றும் ,ஐயமூல நோயில் மலவாயில் வெண்மையான முளை தோன்றும். அதில் எந்நேரமும் எரிச்சல், கடுப்பு உண்டாகும். சீழும், தண்ணீரும் கலந்தாற் போல் மலம் கழியும். சிறுநீர் சூடாய் வெளியேறும். தாது நஷ்டம் உண்டாகும். உடல் வெளுக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்.

13. முக்குற்ற முளை மூலம் (தொந்த மூலம்)
வளியெனும் காற்றாகிய (வாயு )வாதமும் ,அக்கினியென்னும் ,தீயும் ( தேயுவும் ) ,ஐயமாகிய தண்ணீரும் (அப்புவும்  ) சேர்ந்து  தொந்த மூல நோய் உண்டாகிறது. இதில் மலவாய் இறுகி முளை யானது கோழிக் கொண்டையை அவ்விடத்தில் பதித்து வைத்ததுபோல் இருக்கும். நடக்க முடியாது. வயிறு முழுவதும் ஒருவித வலி உண்டாகும். உடல் வியர்க்கும். நடுக்கம், நீர் வேட்கை, கழிச்சல் உண்டாகும். உடல் இளைக்கும். இவை போன்ற அறிகுறிகள் இந்த நோயில் உண்டாகும்.

14. வினை முளை மூலம்  (வினை மூலம்)
செய்த வினைப்பயனால் வருவதால் இதற்கு இப்பெயர்.வினை மூல நோயில் உணவு செரியாமை, புளியேப்பம், அடிவயிறு குத்தல், வயிறு இரைதல், கோபம், மலம் கட்டுதல் ஆகியவை உண்டாகும். மேலும் கை, கால் உளைச்சல், கடுப்பு, உடல் காந்தல் முதலிய அறிகுறிகள் வினை மூல நோயில் உண்டாகும்.

15. மேகமுளை மூலம் (மேக மூலம்)
மேக மூளை நோய் மேக ரோக தொந்தத்தால் உண்டாகிறது.இதில் ஆண் குறியில் வெள்ளை விழும். மூல முளையிலிருந்து இரத்தம் கசியும். வயிறு இரைந்து பேதியாகும். சிறுநீர் எரிச்சலுடன் வெளியாகும். தலைவலியும், உடலில் திமிரும் உண்டாகும். சிறுநீர் இனிப்பு பொருந்தியதாக இருக்கும். இதுபோன்ற குணங்களை கொண்டிருக்கும்.

16. குழி முளை மூலம் (பவுத்திரம்)
குழி முளை மூலநோயில் எருவாயின் முளைக்கு பக்கத்தில் சிறு கட்டியைப் போல் தோன்றி உடையும். உடைந்து எளிதில் உலராது. புடம் வைத்ததுபோல் உள்ளே துளைத்துக் கொண்டு போகும். சீழும் கசியும். கை, கால்களை வீங்கும் பவுத்திரம் உண்டாகும். முளையானது சேவல் கோழியின் கொண்டையைப் போன்ற வடிவம் போல் சிவந்து காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் பவுத்திர மூல நோய்க்கு உரியவையாகும்.

17. கழல் முளை மூலம் (கிரந்தி மூலம்)
கழல்  என்றால் கால்களைக் குறிக்கும்.கால்களுக்கு இடையில்  ஆண் குறியில் புண் உண்டாகி மலவாய் வரையில் பரவி அதிலிருந்து முளைகள் உண்டாகும். சீழும் இரத்தமும், நீரும் கலந்து வடியும். எரிச்சலும், கடுப்பும் உண்டாகும். கை, கால்கள் கடுக்கும். மலம் வறண்டு கெட்டியாகும். மலவாய் வெடித்து மலமிறங்கும். இந்த அறிகுறிகள் கிரந்தி மூலநோய்க்கு உரியதாகும்.

18. அடித்தள்ளல் முளை மூலம் (குதயா மூலம்)
அடித்தள்ளல் மூலநோயில் மலவாயிலில் மூங்கில் குருத்து போல் தடித்து அடிக்குடல் வெளியாகித் தோன்றும். அதை உள்ளே தள்ளினால் போகும். சிலருக்கு மீண்டும் வெளியே வரும். சீழும் இரத்தமும் வடியும். வயிறு உப்புசம் உண்டாகும். நாவறண்டு நீர் வேட்கை உண்டாகும். தொடைகள் வலிக்கும். இவைபோன்ற அறிகுறிகள் குதமூல நோயில் உண்டாகும்.

19. வெளிமுளை மூலம்(வெளி (புற)மூலம்)
வெளிமூல நோயில் மலவாயில் சிறு பருக்களைப்போன்ற முளை வெளிப்புறமாய் தோன்றும். எண்ணெயைப் போலும், தண்ணீர் போலும் கடுப்புடன் சீழ்கசியும். அரிப்பு, எரிச்சல் ஆகியவை உண்டாகும். உடம்பில் சொறி, சிரங்கு உண்டாகும். புறமூலநோயில் இவ்வறிகுறிகள் உண்டாகும்.

20. சுருக்கு முளை மூலம் (சுருக்கு மூலம்)
சுருக்கு மூல நோயில் மலவாய் சுருங்கி தடிப்பு உண்டாகும். பெருங்குடல் வலியுடன் உப்பும், மலத்துடன் இரத்தமும், நீரும் வெளியாகும். உடல் வெப்பம் கொண்டு வெளுக்கும். உடல் சிறுக்கும். மயக்கமுண்டாகும். இதுபோன்ற அறிகுறிகள் சுருக்கு மூலத்தில் உண்டாகும்.

21. சவ்வு முளை மூலம்(சவ்வு மூலம்)
சவ்வு மூலநோயில் மலவாயிலில் முளையானது நீண்டு ஜவ்வு போல் கீழே தொங்கும். சீழும் இரத்தத்தோடு நீரும் கசியும். அடிவயிறு நொந்து எரியும். இதுபோன்ற அறிகுறிகள் சவ்வு மூல நோயில் உண்டாகும்.
இந்த 21 வகையான மூல நோய்களில் 12 வகையான நோய்கள் எளிதில் தீரக்கூடியவை.

1. நீர் மூளை, 2. பெருமுளை, 3. வறல் முளை, 4. குருதி முளை,5. வளி முளை, 6. தீமுளை, 7. மேக முளை, 8. குழி முளை,9. கழல் முளை, 10. புறமுளை, 11. சுருக்கு முளை, 12. சவ்வு முளை, இவைகள் எளிதில் தீரக்கூடியவை.

1. செண்டுமுளை, 2. சிறு முளை, 3. சீழ் முளை,4. ஆழி முளை, 5. வினை முளை, 6. ஐயமுளை,7. குதமுளை, 8. முக்குற்ற முளை, 9. தமரக முளை போன்றவை எளிதில் தீராதவையாகும்.

பதிவு பெரிதாகப் போவதால் இதன் தொடர்ச்சி சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் பாகம் 2ல் தொடரும்.

45 responses to “சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம்( பாகம் 1 )”

 1. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  அருமையான பதிவு. கொடி பவுத்திரம் படித்தாலே பயமாய் உள்ளது. நீண்ட நாட்களாக மூலம் பற்றி தெரியாமல் இருந்தேன், இது போன்ற கட்டுரைகள் அதிகம் வெளிவந்து எங்கள் அறியாமையை நீக்க விரும்பியவனாய்….

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஸஹதுல்லாஹ் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   இனிமேல் வாரம் ஒரு கட்டுரை மட்டுமே வெளியிட எண்ணியுள்ளோம்.நேரமின்மையும் , பணிச் சுமையும்தான் காரணம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. Raja says:

  மிக்க நன்றி அய்யா. ஒரே இடத்தில் அதிகநேரம் உட்கார்ந்து பணி செய்பவர்களுக்கும் மூலம் வரும் என்று படித்துள்ளேன். அவ்வாறானவர்கள் வருமுன் காப்பதற்காக “’’இத்ரிபல் ஜமானி’’ மருந்தை தினசரி எடுத்துக்கொள்ளலாமா?

  நன்றி
  ராஜா

  • machamuni says:

   அன்புள்ள திரு ராஜா அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.இத்ரிபல் ஜமானி லகு மல இளக்கிதான்.அது மட்டுமல்ல பழைய மலத்தைப் போக்குவதில் மிக வல்லது.பழைய மலம் முழுவதும் வெளியேறாமல் பொறுக்கு தட்டிப் போய் காய்ந்து போய் இருக்கும்,அத்துடன் புதிதாக சேரும் மலம் சேரும் போது அதுவும் வறண்டு போய் உடலில் மலம் கட்டி தட்டி சேர ஆரம்பிக்கும்.இத்துடன் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்து வந்தால் மூலச் சூடு அதிகரித்து , மூலம் , பவுத்திரம்,மூத்திர கிரிச்சரம், மூத்திரக் கடுப்பு, சிறு நீர்ப்ப்பையில் கல்(சிறு நீர் நீரையும் இந்த பொறுக்குத் தட்டிய பழைய மலம் சவ்வூடு பரவல் மூலம் உறிஞ்சுவதால் சிறு நீரும் வற்றி கனத்துவிடுகிறது,விளைவு சிறு நீர்ப்பையில் கல், சிறுநீர்த்தாரைத் தொற்று,சிறுநீர்த் தடை போன்ற நோய்கள் இலவச இணப்பாக தாக்கும்.)எனவே இது போன்ற சூழலைத் தவிர்ப்போம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Raja says:

    தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா. இம்மருந்து எங்கு கிடைக்கும் என தெரியபடுத்தினால் மிக்க உதவியாக இருக்கும். அத்துடன் இதன் பெயரை ஆங்கில எழுத்தில்கொடுத்தால் பேருதவியாக இருக்கும்

    நன்றி
    ராஜா

    • machamuni says:

     அன்புள்ள திரு ராஜா அவர்களே ,
     கருத்துரைக்கு மிக்க நன்றி,
     இது வெல்லாம் ஒரு கேள்வியா???IMPCOPS, அடையார் விற்பனை அங்காடிகளில் கிடைக்கும்.ஆங்கிலத்தில் சொல்ல மாட்டோம்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 3. shareef says:

  மூல நோயோடு போராடும் அனைவருக்கும்
  அருமையான மருந்து தந்த சாமி ஜி க்கு
  ஆயிரம் கோடி நன்றிகள்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷெரீஃப் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   இன்னும் மருந்துகளும்.விடயங்கள் உள்ளன.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. m.manohar says:

  நமஸ்காரம் அய்யா

  மிகவும் அருமையான பயனுள்ள பதிவு . மூலத்தை பற்றிய இவ்வளவு விவரங்கள் இதுவரை தெரியாது. மிக்க நன்றி. அய்யா குடலிறக்கதை பற்றியும் அதன் மருத்துவம் பற்றிய பதிவு கிடைக்குமா. எனக்கு அந்த தொந்தரவு இருக்கிறது. இது என் தாழ்மையான வேண்டுகோள்……என்றும் அன்புடன் மனோகர் ….திருச்சி .

  • machamuni says:

   அன்புள்ள திரு M.மனோகர் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   குடலிறக்கத்தை பற்றியும் அதன் மருத்துவம் பற்றியும் இனிமேல் பதிவு எழுதலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • ராஜ பாதமுத்து says:

    அய்யா வணக்கம்

    சென்ற வாரம் கண்ணன் அவர்களிடம் சென்று எனது கழுத்து வலிக்கு மூட்டு வலி தைலம் வாங்கி வந்து இப்போது உபயோகித்து வருகிறேன் கழுத்து வலி குறைந்து வருகிறது நன்றி
    சில சமயம் எனக்கு குடல் ஏற்றம் ( ஆங்கிலத்தில் ஹியடச் ஹெர்னிய என்று கூறுகிறார்கள்) ஏப்பத்துடன் வருகிறது அந்த சமயம் நெஞ்சு பகுதி மிகவும் வலியுடன் இருக்கும் ஒரு மணி நேரம் பின்னர் வலி படி படியாக குறைந்துவிடும்
    இதற்கு ஏதும் தீர்வு அல்லது அதற்கு மாற்று வழி கூறவும் அய்யாஆலோசனை வேண்டுகிறேன்

    நன்றியுடன்

    ராஜா பாதமுத்து
    மதுரை

    • machamuni says:

     அன்புள்ள திரு ராஜா பாதமுத்து அவர்களே ,
     கருத்துரைக்கு மிக்க நன்றி,
     கழற்சித் தைலம் குடல் ஏற்றத்திற்கு மிக நல்லது. கழற்சித் தைலம் தயாரிப்பு ,மலையப்பசாமி வைத்தியசாலை, பழனி,அல்லது தயாரிப்பு இம்ப்காப்ஸ் ஐ வாங்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாலில் சாப்பிட்டு வர குடலில் உள்ள வாய்வு கழிந்து ,மலமும் இளகலாய்க் கழியும் .இந்த மருந்து சாப்பிடாத நாட்களில் கழற்சிச் சூரணத்தை ,நாட்டுக் கோழி முட்டை வெள்ளைக் கருவுடன் கலந்து சாப்பிட்டு வர குடல் வாதம் என்னும் இந்த குடல் வாய்வு தொலையும்.நாட்டுக் கோழி முட்டை கிடைக்காவிடில் பசு வெண்ணெயிலோ அல்லது பசு நெய்யிலோ சாப்பிடலாம்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 5. uday says:

  Sir

  the impocops medicines alone is enough or do u also need to take kuupainmeni samoolam and fp tablets from homeopathy also ? Pls clear this doubt sir…In medicine stores only kuppaimeni leaves alone is available and not the samoolam is available..so advise where can we get samoolam of kuupaimeni sir…also does one salt spoon means 2-3 grams sir ? pls answer my questions sir.
  For how many days we need to eat those impcops medicnes sir ?

  I am currently learning to write in tamil..My next writing will be in tamil sir.

  U r a great honour to siddha vaidiyam sir…

  • machamuni says:

   அன்புள்ள திரு உதய் அவர்களே ,
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள்.தமிழை ஆழமாக அறிந்து உபயோகிக்க தெரியாவிட்டால் சித்த மருத்துவம் செய்ய இயலாது.சித்த மருத்துவம் அறிய , படிக்க இயலாது.தமிழும் சித்த மருத்துவமும் ஒன்றிணைந்தது.தமிழில் எழுதாதற்கு காரணமாக சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.குப்பை மேனி சமூலம் என்றால் காயாத பச்சையான குப்பை மேனியின் செடியைத்தான் குறிப்பிடுகிறோம்.அது அகடையில் கிடைக்காது.ஒரு மருந்து கிடைக்காவிடில் மற்றொன்றை முயற்சி செய்து குணப்படுத்துதல் பெறட்டும் என்ற நோக்கத்தில்தான். ஒரு உப்புக் கரண்டி என்பது இரண்டு முதல் மூன்று கிராம்கள் எடுதுக் கொள்ளலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. uday says:

  Based on my experience i am saying few things abt moolam..we should avoid maida(bsicuits bun cakes puff samosa) maida is called wheat flour..This is a serious threat.This maida is banned in some countries.

  Also one should avoid potatoes and things fried for long time in oil.

  The best thing to avoid constipation is to take 3-4 saathukudi fruit along with the white outer layer but one should follow above restrictions in food….If anyone feels tough to feel eat ssathukudi fruit alterbatively one can take put draatchiapalam or draksha or kismis around 10-12 in hot water previous day night and eat it in morning.

  This shall help releive malasikkal or constipation and hence piles can be gradaully cured..Yes also enenma specified here by machamuni sir will also be greatly helpful in reliving piles.

  all above are my own experiecnes.

  • machamuni says:

   அன்புள்ள திரு உதய் அவர்களே ,
   இயற்கை உணவுகளைச் சாப்பிட்டால்தான் மலச்சிக்கலே இல்லையே.இப்போது நாம் சாப்பிடுவதெல்லாம் துரித உணவுகளையும், பேக்கரி பொருட்களையும் ,மைதாவால் செய்த பொருட்களையும் சாப்பிடுவதால்தானே இதெல்லாம் வருகின்றன. திராட்சை சாப்பிடலாம்.ஆனால் திராட்சை பழுத்ததில் இருந்து பூச்சி மருந்துகளில் தினமும் முக்கி முக்கி எழுத்துத்தான் கடைக்கு விற்பனைக்கு வருகின்றன.அதிலுள்ள பூச்சி மருந்துகள் பல கொடுமையான விளவுகளை விளைவிக்க வல்லது.எனவே திராட்சையை நன்றாக ஓடும் தண்ணீரில் தோல் பகுதியை நன்றாகக் கழுவிய பின்னர் சாப்பிடுங்கள்.தரைக்குக் கீழே விளையும் பொருட்கள் அனைத்துமே பன்றிகளுக்கானது.அவற்றை அகந்த மூலம் என்பார்கள் .தரைக்கு மேலே விளைபவை கந்த மூலம் என்றழைக்கப்படும்.கந்தமூலங்கள் மட்டுமே நாம் சாப்பிட உகந்தவை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. Ravi says:

  மதிப்பிற்க்குரிய அய்யா,
  சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் குறித்து தாங்கள் எழுதியுள்ள இந்த தருணத்தில், அவர் அளித்துவரும் சேவை தொடர்பாக இந்த தகவலை மிக்க நன்றியுடன் தெரியப்படுத்துகிறேன். நான் நமது வலைப்பூவின் வாசகன் மற்றும் ரசிகன். நமது வலைப்பூவின் மூலம் சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்களின் சித்த மருந்து தயாரிப்புக்கள் குறித்தும் அவற்றின் பயன்கள் குறித்தும் அறிந்துகொண்டு, நான் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பயன்பாட்டிற்காக அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்களை தொடர்புகொண்டு சில மருந்துகளின் விவரங்களை விசாரித்தேன். பிறகு, அந்த மருந்துகளுக்குண்டான தொகையை அவரின் வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டு தகவல் தெரிவிக்கிறேன் எனவும் அதன் பிறகு எனக்கு தேவையான மருந்துகளை அனுப்பி வைக்குமாறும் அவரை கேட்டுக்கொண்டேன். என்ன ஆச்சர்யம்.. நான் அவர் வங்கிக்கணக்கில் தொகை செலுத்தும் முன்பே, இரண்டாம் நாளே எனக்கு தேவையான மருந்துகளை கூரியர் தபாலில் அனுப்பி வைத்துவிட்டார். இத்தனைக்கும், எனக்கும் அவருக்கும் முன் அறிமுகம் ஏதும் இல்லை. மருந்து, உரியவருக்கு உரிய நேரத்தில் பயன்படட்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அறிமுகம் இல்லாத நபர்களுக்கும் பண நோக்கம் இல்லாது சேவை நோக்கத்தோடு தொண்டாற்றும் அவரை என்ன சொல்லி பாராட்டினாலும் ஈடாகாது. பின்னிட்டு அவரின் வங்கிக்கணக்கில் மருந்துகளுக்குண்டான தொகை செலுத்திய கையோடு இப்பதிவிடுகிறேன். வாழ்க அந்த உயர்ந்த உள்ளம். அந்த நல்ல மனிதரை எமக்கு அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கு ஆயிரம் நன்றிகள். தொடரட்டும் தங்களின் சேவை..

  • machamuni says:

   அன்புள்ள திரு ரவி அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் எமக்கு சதுரகிரி யாத்திரைகளின் போது , சதுரகிரி மலையடிவாரத்தில்தான் பழக்கம் ஏற்பட்டது.அவரது நல்ல குணங்கள் எம்மை ஈர்த்ததாலேயே அவருக்கு பல விடயங்களை சொல்லிக் கொடுத்து, நமது வலைத் தள அன்பர்களுக்கு சில நல்ல மருந்துகளை கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அவருக்கு பல உதவிகள் செய்து தற்போது நல்லதொரு மூலிகைகள் நிறைந்த தோட்டத்தையும் தயாரித்து வருகிறார்.அதன் புகைப்படங்கள், மற்றும் காணொளிக் காட்சிகளையும் இனி வரும் பதிவுகளில் வெளிவரும்.இந்த தோட்டத்தில் பயிராகும் மூலிகைகள் மலை அடிவாரங்களில் இயற்கையாக வளர்ந்த நாற்றுக்களாக எடுக்கப்பட்டு இவரது தோட்டத்தில் பல இயற்கை உரங்களாலும் , இயற்கை பூச்சி விரட்டிகளாலும் வளர்க்கப்பட்டு வருகின்றன.மேலும் நமது சித்தர்களின் உயரிய கலையாகிய வர்ம தடவல் முறைகள் செய்து பல வியாதிகளை குணமாக்கும், ஒரு இயற்கை மருத்துவமனையும் கான்சாபுரத்தில் உருவாக்கும் திட்டமும் உள்ளது.இது முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையில் மட்டுமே உருவாக்கப்படுகிறது.பலரும் பயன் பெற பலரும் உதவுகிறார்கள்.அந்த பிரதி பலன் கருதாத உள்ளங்களையும் இங்கே நாம் இறைவன் சொரூபமாகவே காண்கிறோம்.அவர்களை கைகூப்பித் தொழுகிறோம்.அவர்களைத் தொழுவது இறைவனைத் தொழுவதற்குச் சமம்.மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.சிவனடியார்களுக்குச் செய்யும் தொண்டு சிவனுக்குச் செய்யும் தொண்டு.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • ஸஹதுல்லாஹ் says:

    அண்ணன் அவர்களுக்கு,
    திரு.ரவி அவர்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் எங்களை நெகிழச் செய்கிறது. தங்கள் பொது நல நோக்கு கொண்ட எண்ணங்களும் பணிகளும் சிறக்க வாழ்த்துக்கள்.

    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

    • machamuni says:

     அன்புள்ள திரு ஸஹதுல்லாஹ் அவர்களே ,
     கருத்துரைக்கு மிக்க நன்றி,
     எண்ணங்கள் எமதுமல்ல.செயலும் எமதல்ல.அனைத்துக்கும் அதிபதி இறைவனேயன்றி.எமது செயலாவது ஒன்றுமில்லை.யாதொன்றுமில்லை.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

   • c srinivasan says:

    அய்யா வணக்கம் .

    திரு சதுரகிரி கண்ணன் அவர்களின் சேவையால் பயன்பெற்று வருபவர்களில் நானும் ஒருவன். மூட்டுவலி தைலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . மேலும் பணம் வந்ததா இல்லையா என்று தெரியும் முன்னரே மருந்துகளை அனுப்பிவிடுகிறார். உயர்ந்த குணம் . வாழ்க வளமுடன் .வாழ்க வாழ்வாங்கு.

    சந்தோசம்,

    அன்புடன்

    சீனிவாசன்

    • machamuni says:

     அன்புள்ள திரு சி ஸ்ரீ நிவாசன் அவர்களே ,
     கருத்துரைக்கு மிக்க நன்றி,
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 8. venkat La says:

  அன்புள்ள திரு சாமீ அழகப்பன் அவர்களே,

  என் வாழ்வில் நடந்த சம்பவம், 5 வருடத்திற்கு முன்பு நான் நெஞ்சு எரிச்சலால் அவதிப்பட்டேன். அப்போது ஹொசூர்ல் திரு சுப்ரமணியன் என்ற மருத்துவரை சந்தித்தேன். அதற்கு முன் பல மாத்திரை மற்றும் மருத்துவம் செய்து உள்ளேன். அவை அனைத்தும் அப்பொழுதோ அல்லது அன்று மட்டுமோ தான் பயனலிக்கும்.
  திரு சுப்ரமணியன் அவர்கள் மட்டுமே மருத்துவதிருக்கு முன்பு அரை மணிநேரம் என்னிடம் பல கேள்விகள் கேட்டார். வேலையில் இருந்து மலம்களிக்கும் விதம் (. / .) வரை 100மேற்பட்ட கேள்விகள் கேட்டார். எனக்கு அப்பொழுது அது புது அனுபவம். அப்போது நான் கூட நினைத்தேன், ஒரு மாத்திரை கொடுக்க கேட்டால் ஏன் இத்தனை கேள்விகள் என்று? அது வரை நான் சந்தித்த மருத்துவர் என்றால் மருந்து எழுதி கொடுப்பார், நாம் எது கேட்டாலும் குறைந்த / பதில் அழிக்கமாட்டார். உயர்ந்தபட்சம் 2 நிமிடம் நம்முடன் செலவழிப்பார். அப்புறம் “நெக்ஸ்ட்” ஓடிவிடுவார்.
  கடைசியாக அவர் எனக்கு சில அறிவுரைகள், நான் சாப்பிடும் விதம் பற்றியும், முக்கியமாக சாப்பிடபின் நான் ஒரு செம்பு நீர் குடிப்பதை நிறுத்துமாறு கூறினார். அதுவரை புண்பட்ட வயிற்றிக்கு ஏதோ 5 ரூபாய் (10 எண்ணம்). மாத்திரை கொடுத்து. “வாச் யுவர் ஃபுட்” என்று கூறி அனுப்பினார்.
  இன்று வரை எனக்கு நெஞ்சு எரிச்சல் இல்லை. அப்படியே எப்போதாவது வந்தாலும் மாத்திரை தேவைில்லை, மாறாக எனக்கு தெரியும் நான் ஏதோ தவறாக சாப்பிட்டு உள்ளேன் என்று.
  இப்போது தங்கள் பதிவுகளை படிக்கும் போது புரிகிறது “இதுதான் மருத்துவம்” என்று. வள்ளுவர் பெருந்தகை “மருந்து” என்ற அத்தியததில் (தங்கள் பத்திவை படித்த பின் படித்தேன்) கூறியது போல உணவே மருந்து என்பதை உணர்ந்தேன்.
  தங்கள் பதிவுகளை நன்று, மிக நன்று, என்று சிறிய வார்த்தைகளில் விளக்கி விட முடியாது.
  தங்கள் எப்போதும் கூறுவது போல இது இறை பணி.
  உண்மையில் மருத்துவம் இறை பணி.
  இந்த எண்ணம் இல்லாத எந்த மருத்துவமும், மருத்துவம் ஆகாது.
  திரு கண்ணன் இடமிருந்து சில மருந்துகள் வாங்கி உபயோகித்தேன், சில நண்பர்களுக்கும் கொடுத்தேன். மிக நல்ல பலன்கள் என்று நானும், என் நண்பர்களும் அவர் குடும்பத்தாரும் கருதுகிறோம். அவர் பணியும் இறை பணியே. வணங்குகிறேன்.
  தங்களை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
  என்றும் அன்புடன்,
  வெங்கட் லா.

  • machamuni says:

   அன்புள்ள திரு வெங்கட் லா. அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   சித்த வைத்தியம் என்பது ஒரு மருத்துவ முறையோ மருந்தோ அல்ல.சித்தர் வாழ்வியல்தான் சித்த வைத்தியம். ஆனால் ஒன்றும் இது பற்றி அறியாதவர்களுக்கு இது பற்றி சொல்லி ஒரு பயனும் இல்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம்.
  மூல நோய் குறித்த தங்களது உன்னதமான பதிவு, மிகப்பெரிய விழிப்புணர்வை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் வழிகாட்டியபடியே அட்சரம் பிசகாமல் இருவருக்கு மருந்து கொடுத்ததில் அற்புதமான குணம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூறிய நன்றிகள் தங்களுக்கே உரியது. எனக்கும் மருத்துவச்சேவை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.
  உண்மையில் அந்த நோயாளிகள், அந்த நோயின் வேதனையிலிருந்து மீள்வதையும், அது குறித்து அவர்கள் அடையும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் பார்க்கும் போது மருத்துவச்சேவை அதிலும் நமது சித்த மருத்துவச்சேவை எவ்வளவு உயர்ந்தது என்பதை உணரமுடிந்தது.
  கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்பதில் எவ்வளவு தூரம்உண்மை இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.
  ஆனால் மக்கள் மருத்துவர். சாமி. அழகப்பன் அவர்களிடம் ஒரே ஒரு நாள் பழகியவரும், அடுத்த நாள் முதல் அலோபதி மருந்துகளின் தீமை குறித்தும், சித்த மருத்துவத்தின் சிறப்பு குறித்தும் பரப்புரை செய்ய ஆரம்பித்து விடுவார். அதற்கு அடுத்த நாள் மச்சமுனியில் வருகின்ற எளிமையான மூலிகை மருத்துவ முறைகளை செய்ய ஆரம்பித்துவிடுவார் என்பது மட்டும் முக்காலும் உண்மை.
  நானே இதற்கு ஒரு நல்ல உதாரணம். மச்சமுனி பல்கலைகழகத்தின் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.
  தங்களது சீரிய பணி மென்மேலும் சிறப்பாக தொடரவேண்டும் என்பதே அனைவரின் அவா. நன்றி.

  • machamuni says:

   அன்புள்ள திரு தி ஸ்ரீ அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. BOOPATHI says:

  அய்யா, 10 நாட்களாக தங்களின் கட்டுரைகளை படித்து வருகிறேன். எனக்கு இப்பொழுதுதான் இறைவன் அருள் கிடைத்துள்ளது என அறிகிறேன். நன்றி….

  • machamuni says:

   அன்புள்ள திரு பூபதி அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. M.SARAVANAN says:

  சரவணன்

  மிகவும் அருமையான பயனுள்ள பதிவு . மூலத்தை பற்றிய இவ்வளவு விவரங்கள் இதுவரை தெரியாது. மிக்க நன்றி. அய்யா சில நபர்கள் தொப்பை உள்ளவர்கள் மிகவும் கஷ்ட படுகிறார்கள் அய்யா அதற்குஏதும் தீர்வு உண்டா இல்லை அதற்கு மாற்று வழி உண்டா சற்று தெளிவாக கூறவும் அய்யா

  • machamuni says:

   அன்புள்ள திரு செந்தில் குமார் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   தொப்பை இருந்தால் மூலம் வரும்.மூலத்திற்கான மருந்துகள் எடுத்தால் தொப்பையும் குறையும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. K. PREMKUMAR says:

  அன்புள்ள அய்யா தங்கள் ஆலோசனைப்படி திரு. கண்ணன் அவர்களிடமிருந்து தாது விருத்தி லேகியம் மற்றும் மூட்டு வலி தைலம் மற்றும் impcops ஷீர பலா தைல மாத்திரை மருந்து வாங்கி உபயோகித்து வருகிறேன் மிக நல்ல பலன் கிடைத்து வருகிறது. தங்களுக்கும் திரு. கண்ணன் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த வலைத்தலம் எனக்கு திருப்பதி வெங்கடாசலபதி அருளால் காணப் பெற்றேன்.

  அன்புடன்

  கே. பிரேம் குமார்,
  கடலூர்.

  • machamuni says:

   அன்புள்ள திரு கே.பிரேம் குமார் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. RAJA PATHAMUTHUU says:

  மிக்க நன்றி,

  அய்யா தாங்கள் கீழ் கூறிய ஆலோசனைப்படி

  ( கழற்சித் தைலம் குடல் ஏற்றத்திற்கு மிக நல்லது. கழற்சித் தைலம் தயாரிப்பு ,மலையப்பசாமி வைத்தியசாலை, பழனி,அல்லது தயாரிப்பு இம்ப்காப்ஸ் ஐ வாங்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாலில் சாப்பிட்டு வர குடலில் உள்ள வாய்வு கழிந்து ,மலமும் இளகலாய்க் கழியும் .இந்த மருந்து சாப்பிடாத நாட்களில் கழற்சிச் சூரணத்தை ,நாட்டுக் கோழி முட்டை வெள்ளைக் கருவுடன் கலந்து சாப்பிட்டு வர குடல் வாதம் என்னும் இந்த குடல் வாய்வு தொலையும்.நாட்டுக் கோழி முட்டை கிடைக்காவிடில் பசு வெண்ணெயிலோ அல்லது பசு நெய்யிலோ சாப்பிடலாம்.)

  மேல் கூறியபடி மருந்து எடுத்து கோள்கிறேன்
  இதை தொடர்ந்து எடுத்து கொள்ளலாமா?????

  நன்றியுடன்

  ராஜாபாதமுத்து

  மதுரை

  • machamuni says:

   அன்புள்ள திரு ராஜா பாதமுத்து அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   இந்தத் தொந்தரவு தீரும் வரை சாப்பிடவும்.இதில் கழற்சித் தைலம் என்பது சுகபேதி மருந்து( LAXATIVES OR PURGATIVE).எனவே முதல் நாள் அதை சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்கு சென்றுவிடாதீர்கள்.முதலில் அது உங்களுக்கு அதிக மலத்தை கழியச் செய்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அலுவலகத்துக்கு செல்லவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. Hari says:

  அய்யா அவர்களுக்கு வணக்கம்.
  தங்கள் பதிவில் பல விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்.
  அய்யா,கடையில் விற்கும் சுக்கின் மேல் தோல் நீக்குவது எப்படி என தெரிவிக்க வேண்டுகிறேன்.மேலும் சுக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்குமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன்
  நன்றி

  • machamuni says:

   அன்புள்ள திரு ஹரி அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மறுபடியும் நீங்கள் உங்கள் பாணிக் கேள்விகளுடன் வந்துவிட்டீர்கள் போலிருக்கிறது.எனது வலைப்பூவிலோ , அல்லது வலைத் தளத்திலோ தேடுங்கள்.இரு முறை எழுதியது இருக்கிறது .தேடினால் கிடைக்கும்.இந்தப் பூமியில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. srinivasan kp says:

  Pranaams swamiji,
  please give me the email / contacts to know the list of medicines i can buy and use
  from your kindselves….and oblige…
  thanks and regards
  srinivasan kp
  55 – 2 , fourth cross,
  srirampuram
  bangalore 560021

  • machamuni says:

   அன்புள்ள திரு கே பி ஸ்ரீனிவாசன் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   எமது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு வாருங்கள் . எமது மின்னஞ்சல் முகவரிகள் machamuni.com@gmail.com , sralaghappan007@gmail.com , sameealagappan@gmail.com , இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. srinivasan kp says:

  Pranaams swamiji,
  please give me the email / contacts to know the list of medicines i can buy and use
  from your kindselves….and oblige…
  thanks and regards
  srinivasan kp

  • machamuni says:

   அன்புள்ள திரு கே பி ஸ்ரீனிவாசன் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   நீங்கள் இதற்கு நாட வேண்டிய இடம் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களையே!!!!அவர்களது மின்னஞ்சல் முகவரி நமது வலைத் தளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டதே.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. எஸ். எஸ். சாதிக் says:

  அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம் பல.

  கடந்த சில மாதங்களாக மூல நோயால் அவதிப்பட்டு தாங்கள் சொன்ன முறையில் (அஷ்ட சூரணம் + இதர மருந்துகள்) மருந்தை நானே தாயாரித்து சாப்பிட்டு குணம் அடைந்துள்ளேன். மிக்க நன்றி.

  எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது. அதை நிவர்த்தி செய்யும்படி மிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  1) மலம் போன பின்பு சிறிது நேரம் கடுப்பு, எரிச்சல், அரிப்பு உள்ளது. பின்னர் சில மணி நேரங்களில் சரியாகிவிடுகிறது. இது எதனால் வருகிறது. இதை எப்படி நீக்குவது.

  2) மலம் போகும்போதும், போன பின்பும் வழு, வழு என்று சளி போல் திரவம் வெளி வருகிறது. இதை எப்படி நீக்குவது.

  3) அமர்ந்து இருக்கும் போது ஏதோ ஒரு கட்டையில் அமர்ந்து இருப்பது போல் தெரிகிறது.

  நன்றி

  என்றென்றும் அன்புடன்

  சாதிக்

 18. PRASANNAN says:

  Am suffering from anal fistula for the past one year. Some ayurvedic medicines gave me temporary relief. I need Chaduragiri Kannan Ayyas medicine for the same. Some Doctors including Ayurvedic Doctors suggest for Kshara Sutra Threapy. But I dont want to go for surgery. Kindly give his number to get medicines.

  • machamuni says:

   அன்புள்ள திரு பிரசன்னன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உங்களூக்கு பவுத்திரத்திற்கு தீர்வு தேவையெனில் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுங்கள்.
   வர்மக் கலை ஆசான்
   S.கோபால கிருஷ்ணன் ஆச்சார்யா,
   4/113,-பானு நகர் ,
   தேத்திப் பாளையம் ,
   கோயம்பத்தூர்-641010
   அலை பேசி :- 88838-83303
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. dhavamani says:

  I’m 27 years old.enaku moolah thondharavu ullathu.thangalin pathipurai minimum payan ullathaga irukirathu.very thanks.I want to moolachuranam. Price evvalavu.eppadi peruvathu.pls tel me

  • machamuni says:

   அன்புள்ள திரு தவமணி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,

   முதலில் தமிழில் எழுதுங்கள்.பொதுவாக தமிழில் எழுதாதவர்கள் மேல் எமக்கு மரியாதை ஏற்படுவதில்லை.கீழுள்ள இணைப்பில் சென்று nhm எழுதியை தமிழ் மொழியைத் தேர்வு செய்து கொண்டு , உங்கள் கணினியில் நிறுவிக் கொண்டு அதில் phonetic Unicode தேர்வு செய்து கொண்டு தமிழ் எழுதலாம். அம்மா என்பதை தட்டெழுத்து செய்ய ammaa என்று தட்டெழுத தமிழில் வரும்.

   http://software.nhm.in/products/writer

   இதைக் குணப்படுத்த தண்ணீர் ஊற்றாமல் குப்பை மேனிச் சாறெடுத்து , அந்த சாற்றை சாதாரண கல்லுப்பில் (அயோடைஸ்டு உப்பு அல்ல) , ஊற்றி வெயிலில் , வைத்து அத்தனையும் உறிஞ்சியபின் . மறுபடி இதே போல் சாறூற்றி மறுபடியும் வெயிலில் வைத்து சாறு சுண்டும் வரை வைத்திருந்து , இதே போல் பத்து முறை சாறூட்டி எடுத்த கல்லுப்பை சமையலுக்கு உபயோகிக்க பல நன்மைகள் உண்டாகும் உங்கள் பிரச்சினைகளும் இதனால் சரியாகும்.
   உங்களுக்குள்ள பிரச்சினைகளையும் , தேவையான மருந்துகளையும் திரு அமீர் சுல்தானிடம் வினவுங்கள்!அவர் தீர்வு தருவார்.தேவையான மருந்துகளையும் ஆலோசனைகளையும் தருவார்.திரு அமீர் சுல்தான் அவர்கள் ,தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,
   மச்சமுனி மூலிகையகம்( MACHAMUNI HERBALS )
   S.S.I NO: 330021189121
   எண்.1/17,5வது தெரு, நாராயணசாமி தோட்டம், சின்னகொடுங்கையூர், சென்னை-118.
   Cell: 9597239953
   மின் அஞ்சல் முகவரி.
   machamunimooligaiyagam@gmail.com
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 − = 25