சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 3)

April 3, 2013 by: machamuni

இந்தப் பாகத்தை படிப்பதற்கு முன் சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 2 )ஐ படித்துவிட்டு இந்தப் பதிவைத் தொடரவும்.

இப்போது கற்றாழையின் சக்தியை ஒரு சில காணொளிக்காட்சிகளைக் கொண்டு விளக்க இருக்கிறோம்.கற்றாழை ஒரு அற்புத மூலிகை. இதன் சக்தியையும் புகழையும் ஒரு மாதம்  முழுவதும் புகழ்ந்தாலும் புகழ்ந்து முடியாது.

Alavamvera

சோற்றுக் கற்றாழைப் பாயசம் செய்வதை ஒரு காணொளிக்காட்சியாக எடுத்து பதிவில் இணைத்துள்ளேன்.என் பணிப்பழுவின் காரணமாக என்னால் வர்ணனை செய்ய இயலாதலால் , என் சிறிய பெண் அதில் வர்ணனை செய்துள்ளார்கள்.அது சற்று முன் பின் இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=i9BOwEZ_tf0[/tube]

சோற்றுக் கற்றாழை பாயசம் சுவைத்து சாப்பிட்டு ஆரோக்கியத்தை பேணிக்காத்துக் கொள்ளுங்கள்.

நெருப்பு என்பது மிகக் கொடியது. பஞ்ச பூதங்களுள் ஓர் பூதமான இது எந்தப் பொருளைப் போட்டாலும் எரித்து தனதாக்கி சாம்பலாக்கும் சக்தி படைத்தது.அப்படிப்பட்ட நெருப்பு பூதத்தை எதிர்த்து நிற்கும் சக்தி படைத்தது இந்த சோற்றுக் கற்றாழை.வெறும் சோற்றுக் கற்றாழைச் சோற்றை கையில் வைத்துக் கட்டி அதன் மேல் பெட்ரோலை நனைத்து எடுத்த துணியை சுற்றி பற்ற எரியும் தீப்பந்தமாக கையை காட்டியுள்ளேன். கீழ்க் கண்ட காணொளிக்காட்சியைக் காணுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=Lc19QxGdj00[/tube]

மேலும் சோற்றுக் கற்றாழையின் சிறு அளவு சோற்றைக் கையில் வைத்து அதன் மேல் சூடத்தை வைத்து ஏற்றிக் காண்பித்துள்ள காணொளிக்காட்சியையும் காணுங்கள்.இதை பல தந்திரக் காட்சியாளர்கள் காண்பித்து,பாருங்கள் எமக்கு அக்கினி ஸ்தம்பனமாயிற்று பார்த்தீர்களா?? நாம் பஞ்ச பூதம் வசியம் பெற்ற பெரிய யோகி என்பர்.

[tube]http://www.youtube.com/watch?v=hDoMfgqIVIg[/tube]

சென்ற பதிவுக்குப்பின் வெகு தாமதத்தின் பின்னர் இந்தப் பதிவு வெளியாகி இருக்கிறது .வலைத்தள அன்பர்கள் தாமதத்திற்கு பொறுத்தருள்க.

இந்த பதிவில் வெளியானது போக, மேலும்  சில கற்றாழையின் பெருமை பேசும் காணொளிக் காட்சிகள் அடுத்த பதிவில் வெளியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பதிவு பெரிதாய்ப் போவதால் மற்றவற்றை சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 4)ல் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

24 responses to “சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 3)”

 1. karuppiah kannan says:

  Arumayana Pakirvukal..
  Vaazhthy varaveearkerean.

  • machamuni says:

   அன்புள்ள திரு கருப்பையா கண்ணன் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. dgbabu says:

  ayya thakal sevai thodaratum valthgal
  i need navaloga boopathy from u ayya can u prepare some small quantity and send it to me what is u r terms ayya await to heat u pls mail me dgbabu_68atyahoo dot co dot in

  • machamuni says:

   அன்புள்ள திரு டி ஜி பாபு அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள்.தமிழை ஆழமாக அறிந்து உபயோகிக்க தெரியாவிட்டால் சித்த மருத்துவம் செய்ய இயலாது.சித்த மருத்துவம் அறிய , படிக்க இயலாது.தமிழும் சித்த மருத்துவமும் ஒன்றிணைந்தது.எம்மிடம் வரும் போது
   ///send it to me what is u r terms ayya await to heat u pls mail me///
   நிபந்தனைகளுடனோ நிபந்தனைகள் பற்றிக் கேட்டுக் கொண்டோ வந்தால் பதில் வராது.அன்பில் நிபந்தனை வந்தால் அது வியாபாரம் ஆகிவிடும்.நாம் வியாபாரி இல்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. dgbabu says:

  ayya siriya vinappam thakal sotrukatrali patri ya padam thavaru neengal velitu ulla picture agave americanna enum yanai katrali vagai yai sarnthathu thiruthikolalama ayya ,thavaru ethanum irunthal manikavm ayya .dgbabu.sivakasi.

  • machamuni says:

   அன்புள்ள திரு டி ஜி பாபு அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள்.தமிழை ஆழமாக அறிந்து உபயோகிக்க தெரியாவிட்டால் சித்த மருத்துவம் செய்ய இயலாது.சித்த மருத்துவம் அறிய , படிக்க இயலாது.தமிழும் சித்த மருத்துவமும் ஒன்றிணைந்தது.நாம் ஏற்கெனவே போன பதிவில்{ சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 2)}சொல்ல விட்டுப் போனதை விரிவாக்கம் செய்துள்ளேன்.படங்களில் இருந்த தவறையும் திருத்தி உள்ளேன். படியுங்கள்.

   ///சோற்றுக் கற்றாழையில் பல வகைகள் உள்ளன .சிறு கற்றாழை , செங்கற்றாழை , நறுங் கற்றாழை ,யானைக் கற்றாழை ,யானைக் கற்றாழை என பல பெயரிட்டு அழைத்தாலும் இந்த சோறுள்ள வகைக் கற்றாழைகள் அனைத்தும் ஒரே மருந்துத் தன்மை உள்ளதே.அவற்றின் மருந்துத் தன்மைகளில் சிறு சிறு மாறுபாடுகள் இருக்கலாம்.நார்க் கற்றாழை என்ற வகை இவைகளில் இருந்து மாறுபட்டது.நார்க் கற்றாழை சதை சோற்றுக் கற்றாழை சதை போன்று மருந்துக்குப் பயன்படாது.///
   தவறேதும் இல்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  அற்புதம். வேறு வார்த்தைகள் இல்லை.

  //// வெறும் சோற்றுக் கற்றாழைச் சோற்றை கையில் வைத்துக் கட்டி அதன் மேல் பெட்ரோலை நனைத்து எடுத்த துணியை சுற்றி பற்ற எரியும் தீப்பந்தமாக கையை காட்டியுள்ளேன். கீழ்க் கண்ட காணொளிக்காட்சியைக் காணுங்கள்./////

  அந்த இரண்டாவது காணொளிக் காட்சி வேலை செய்யவில்லை.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்புள்ள திரு சதயத்துல்லாஹ் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   தவ்றுதான் .இப்போது திருத்தப்பட்டுள்ளது.இப்போது வேலை செய்யும். பாருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. shareef says:

  //நெருப்பு பூதத்தை எதிர்த்து நிற்கும் சக்தி படைத்தது இந்த சோற்றுக் கற்றாழை//

  நெருப்பினால் ஏற்படும் காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம்
  அப்படிதானே சாமி ஜி

  நன்றி ஜி

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷெரீஃப் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   ஆம்.இதை எண்ணெயாக, தேங்காயெண்ணெயில் காய்ச்சி மேற்பிரயோகமாக உபயோகிக்க வேண்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. R. Chandran, Lucknow (U.P.) says:

  அய்யா மிகவும் அருமை. தொடரட்டும் தங்கள் சேவை

  • machamuni says:

   அன்புள்ள திரு ஆர் சந்திரன் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. Aanand k says:

  அன்புள்ள அய்யா,
  வீடியோ பதிவு அருமை. இதே போன்று தாம்பூலம் போடுவது பற்றி வீடியோ பதிவு வெளியிட்டால் நன்று.
  வெற்றிலையை ஒவ்வொன்றாக எடுத்து(வெற்றிலை பற்றிய பழ மொழிகள்(1)வெல மேல வெல வச்சுக் கொடுத்தாலும் இல மேல இல வச்சு வெற்றிலை போடக்கூடாது,(2)ஆனை மேல அம்பாரியில் போனாலும் குப்புற விழுந்த வெற்றிலையை குனிஞ்சு எடுக்கணும்) சுண்ணாம்பு தடவி நடு நரம்பு, வெற்றிலை நுனி,வெற்றிலைக் காம்பு இவற்றை நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்(இவற்றை நீக்காவிட்டால் வயிற்றுப் புண்ணான அல்சர் உண்டாகும்.)

  முதலில் சிறு துண்டு சாதிக்காய், மொட்டு நீக்கிய கிராம்பு, சாதிப் பத்திரி, ஒரு ஏலக்காய், கொட்டைப் பாக்கு அல்லது சுருள் பாக்கு இவைகளை வைத்து,சுண்ணாம்பு தடவிய வெற்றிலைகளை வாயில் போட்டு நன்கு மென்று
  என்று தாம்பூலம் போடுவது பற்றி குறிபிட்டுளீர்கள் . இதை வீடியோ பதிவாக தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
  நன்றி.

  • machamuni says:

   அன்புள்ள திரு கே ஆனந்த் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   முன்பு எம்மிடம் புகைப்படக் கருவி இல்லாததால் பல காணொளிக்காட்சிகளை எம்மால் தர இயலாது போய்விட்டது.இப்போது திரு கஜேந்திரராஜ் அவர்களின் கொடையால் ஒரு நல்ல புகைப்படக் கருவி எமக்கு கிடைத்தது.இப்போது தரப்பட்டுக் கொண்டிருக்கும் அத்தனை காணொளிக் காட்சிகளும் அந்த புகைப்படக் கருவியின் உதவியினாலேயே எடுக்கப்படுகின்றன.திரு கஜேந்திரராஜ் அவர்களுக்கு நமது மச்ச முனிவரின் வலைத்தளமும் ,அதன் வாசகர்களும் நன்றிக் கடன் பட்டுள்ளார்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. mohan says:

  katralai payasam youtube address pilay poltherigirathu

  • machamuni says:

   அன்புள்ள திரு மோகன் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   காணொளி முகவரியில் ஏதும் பிழை இல்லையே!!!!ஏன் தங்களுக்கு இந்தக் குழப்பம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. mohan says:

  விபரீதமான செயல் போல் இருக்கிறது. சற்று தாங்கள் பார்க்கவும்.
  ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
  நான் மோகன்.

  • machamuni says:

   அன்புள்ள திரு மோகன் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   எதை விபரீதம் என்கிறீர்கள்.பல விடயங்களை தெரிந்து வைத்துதாம் இதை செய்கிறோம்.பயம் வேண்டாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. M.SARAVANAN says:

  அய்யா மிகவும் அருமை உங்கள் பதிவுகள்.அய்யா இந்த கோடைகாலத்தை சமாளிக்க தண்ணீர் எவ்வளவு அருந்தினாலும் தாகம் அடங்குவதில்லை என்ன செய்வது கோடைகாலத்தில் என்ன பழங்கள் சாப்பிடுவது உங்களின் கருத்துகள் என்ன அய்யா

  • machamuni says:

   அன்புள்ள திரு எம் சரவணன் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   பழங்கள் தாராளமாகச் சாப்பிடலாம். கோடையைச் சமாளிக்க ஒரு பதிவு விரைவில் வெளிவரும்.அதிக பதிவுகள் காத்திருக்கின்றன.விரைவில் வெளிவரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. SIVA KUMAR says:

  அய்யா ,

  சோற்றுக் கற்றாழையில் பல வகை உண்டு. அதில் எந்த வகை கற்றாழையில் பாயசம் செய்து சாப்பிடுவது நல்லது .

  சிவக்குமார்

  • machamuni says:

   அன்புள்ள சிவக்குமார் அவர்களே,
   ///சோற்றுக் கற்றாழையில் பல வகைகள் உள்ளன .சிறு கற்றாழை , செங்கற்றாழை , நறுங் கற்றாழை ,யானைக் கற்றாழை ,கற்றாழை வகைகளான ( ALOE FAMILY ) ஆகியன பல பெயரிட்டு அழைத்தாலும் இந்த சோறுள்ள வகைக் கற்றாழைகள் அனைத்தும் ஒரே மருந்துத் தன்மை உள்ளதே.அவற்றின் மருந்துத் தன்மைகளில் சிறு சிறு மாறுபாடுகள் இருக்கலாம்.இவை அனைத்தும் உண்ண உகந்ததே .நார்க் கற்றாழை என்ற வகை இவைகளில் இருந்து மாறுபட்டது.நார்க் கற்றாழை சதை சோற்றுக் கற்றாழை சதை போன்று மருந்துக்குப் பயன்படாது.///
   இதை ஏற்கெனவே பதிவில் விரிவாக்கம் செய்து வெளியிட்டுவிட்டேனே கவனிக்கவில்லையா???மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான கேள்விகளைத் தவிருங்கள்.அது எமக்கு நேர விரயம் .உங்களுக்கு அடுத்த பதிவும் தாமதம் ஆகும்.
   ஏனெனில் ஒரு கருத்துரையாவது பதிலளிக்க மிச்சம் இருந்தாலும்,அதற்கு பதில் அளிக்காமல் நாம் பதிவு எழுத மாட்டோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. hari says:

  உங்கள் அனைத்து பதிவுகளும் மிக நன்றாக உள்ளது ..! நான் இருக்கும் இடத்தில் மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி கிடைகிறது! இதை பற்றி எதாவது நல்ல விஷயம் இருந்தால் கட்டுரையாக எழுதுவீர்கlaa ?

  • machamuni says:

   அன்புள்ள ஹரி அவர்களுக்கு,
   மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி பற்றி ஏற்கெனவே மச்ச முனி வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன்.
   http://machamuni.blogspot.in/2011/12/51-2.html
   இப்போதைக்கு இதை படியுங்கள்.பின்னால் இதையும் விரிவாக்கம் செய்து வெளியிடுகிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =