சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள் ( பாகம் 7) ஓர் அரிய மூலிகை ( முடவாட்டுக்கால் )

July 6, 2013 by: machamuni

கற்ப மூலிகைகளென்று சொல்லும் போது அதற்குள்ள  ஒரு முக்கியத்துவத்தை இங்கே  குறிப்பிட விரும்புகிறோம்.அதாவது கழிவுகளின் பெருக்கமே அனைத்து நோய்களும் .நோய்களின் தொகுப்பு மரணம் .எனவே கழிவுகளை அகற்றினால் நோய்கள் அனைத்துமே அகலும். எனவே ஒரு குறிப்பிட்ட வியாதியை இந்த கற்ப மூலிகைகள் கண்டிக்கும் என்றால் அந்தக் குறிப்பிட்ட வியாதியுடன் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதால் உடலில் உள்ள மற்ற வியாதிகளையும் கண்டிக்கும் என்று பொருள்.

இப்போது சென்ற பதிவில் பார்த்தது போல ஒரு கற்ப மூலிகையைப் பற்றிப் பார்க்கலாம்.இது முடவாட்டுக்கால் என்ற காய கல்ப மூலிகையைப் பற்றியது.

mudavaattukkaal1_mini

mudavaattukkaal2_mini

mudavaattukkaal3_mini

முடவாட்டுக்கால்

mudavaattukkaal4_mini

இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி சேர்க்காமல் , மிளகு ,சீரகம் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து சூப்பாக வைத்துக் குடிக்க முழங்கால் வலி , கீழ் முதுகு வலி, கை மூட்டு வலி,கழுத்து வலிகள் இவைகள் தீரும். தினமும் இந்த சூப்பை பருகி வர உடலில் உள்ள எல்லா தொல்லைகளும் படிப்படியாகத் தீரும்.

இது ஒரு காளான் வகையைச் சேர்ந்தது .எனவே இதற்கு இலைகள் கிடையாது . இது கொல்லி மலையிலும் , கஞ்ச மலையிலும் , சதுரகிரி மலையில் சில இடங்களிலும் கிடைக்கிறது . இதை மேற்குறிப்பிட்ட  காலாங்கி நாதர் கொல்லி மலை ரகசியம் மரணம் மாற்றும் மூலிகைகள்  நூலில் குறிப்பிட்ட முறையில் பூரச்செந்தூரம் செய்து 48 நாட்கள் சாப்பிட தேகம் மரணத்தால் அழியாது காயம் சித்தியாகும்.

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தற்போதைய புதுப்பிக்கப்பட்ட முகவரி மற்றும் அலைபேசி எண் மற்றும் அவரது தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கீழே காண்க.

+919943205566

+914563282222

அவரது முகவரி:-

திரு பெ.கண்ணன்,சதுரகிரி ஹெர்பல்ஸ்,

2/159, மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)

திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்

மின்னஞ்சல் முகவரி

herbalkannan@gmail.com

19 responses to “சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள் ( பாகம் 7) ஓர் அரிய மூலிகை ( முடவாட்டுக்கால் )”

 1. வேதநாயகம் says:

  அற்புதமான பதிவு ஐயா . நன்றி

  • machamuni says:

   அன்புள்ள திரு வேத நாயகம் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. ம. சரவணன் says:

  பயனுள்ள பதிவுக்கு நன்றி ஐயா,

  இப்படிக்கு
  உண்மையுள்ள
  ம. சரவணன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ம. சரவணன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. அன்புள்ள சாமிஜி,

  அருமையான பதிவு.

  ஒருமுறை கொல்லிமலை சென்றிருந்தபோது இந்த சூப் சாப்பிட்டேன். ஆட்டுக்கால் சூப் போல மிகவும் அருமையாக இருந்தது.

  மூட்டுவலிக்கு அருமையான சுவையான வைத்தியம். கிழங்கும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சூப் சாப்பிடவே இன்னும் ஒருமுறை கொல்லிமலை போய் வரலாம். அவ்வளவு சுவையாக தயாரித்து விற்கிறார்கள் அன்குள்ள கடைகளில்.

  அன்புடன்,

  சி. சீனிவாசன்.

  • machamuni says:

   அன்புள்ள திரு சி. சீனிவாசன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. Vikneswaran says:

  அய்யா வணக்கம்,
  மேற்கண்ட நூலை பல வருடமாக தேடுகிறேன். தயவுசெய்து இது எங்கே கிடைக்கும் என்று தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
  நன்றி.

  • machamuni says:

   அன்புள்ள திரு விக்னேஷ்வரன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   எம்மிடம் பழைய நூல்கள் பல உள்ளன பல நூல்கள் இப்போது கிடைப்பதில்லை.ஆனால் இந்த நூல் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கலாம்.
   காலாங்கிநாதர் கொல்லிமலை ரகசியம் என்னும் மரணம் மாற்றும் மூலிகைகள்
   ஆசிரியர் என், பாலகுருசாமி , (சித்த வைத்தியர் ), கோட்டாத்தூர்.
   ஸ்ரீதேவி புத்தக நிலையம்,1,ஆண்டியப்பன் தெரு , சூளை , சென்னை-3,
   M.பூபதி , 219, அல்லிக்குளம் புதிய வளாகம், மூர் மார்க்கெட் சென்னை-3
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Leon says:

    Now a new version is available,many old contents are removed from the book,I had a new version.

    • machamuni says:

     அன்புள்ள திரு லியோன் அவர்களே ,
     உங்களது கருத்துரைக்கு நன்றி.
     இந்தப் புத்தகத்தின் பக்கங்கள் கிடைத்தற்கரியவை அதனால்தான் இந்தப் புத்தகங்களின் பக்கங்களை நாம் ஸ்கேன் பண்ணி பிரசுரித்துள்ளோம்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 5. hari says:

  வணக்கம்.அய்யா
  முடவாட்டுக்கால் பற்றியும்,அதன் படத்தையும் இதுவரை யாரும்
  வெளியிட்டதில்லை.இதில் சூப் செய்து சாப்பிடுவார்கள் என்று
  கேள்வி ப்பட்டிருக்கிறோம்.
  மிக்க நன்றி

  • machamuni says:

   அன்புள்ள திரு ஹரி அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   இன்னும் பல ரகசிய மூலிகைகள் இனி வெளியாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. kaleel ahamed says:

  காண கிடைக்காத பல அரிய படங்களை ஆதாரபூர்வமக வெளியிட்டு(முதலில் வெளியிட மனம் வேண்டும்)
  அரிய சேவை செய்யும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • machamuni says:

   அன்புள்ள திரு கலீல் அஹ்மத் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   இன்னும் பல ரகசிய மூலிகைகள் படங்களுடன் இனி வெளியாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. senthilkumar says:

  அய்யா வணக்கம்,

  எனது மனைவியின் தங்கை சில வருடங்களாக ஒட்டுகுடல் பிரச்சனையின் காரணமாக அவ்வப்போது வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆங்கில மருத்துவர்கள் ஆப்ரேசன் செய்துதான் குணப்படுத்த முடியும் என்கிறார்கள். நான் தங்களது ஆலோசனையை கேட்க விரும்புகிறேன்.

  • machamuni says:

   அன்புள்ள திரு செந்தில் குமார் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   ஒட்டுக் குடல் பிரச்சினையில் குடல் முழுவதுமாக அடைப்பு ஏற்பட்டுவிட்டால் சஸ்திர சிகிச்சை ( ஆப்ரேசன் ) தவிர வேறு வழியில்லை.ஒட்டுக் குடல் பிரச்சினைக்கு முக்கிய காரணம் குடல் இயக்கம் தடைப்படுவதும் (IRRITABLE BOWEL SYNDROME ) , குடலின் நைப்புத் தன்மை குறைவது ( REDUCTION LUBRICATION CAPACITY ) ,ஒட்டும் பசைத்தன்மையுள்ள மாவுப் பதார்த்தங்களை அதிகம் உணவாக உபயோகிப்பதும்தான். புரோட்டா , தோசை , இட்டிலி போன்ற புளிக்க வைத்த மாவுப் பதார்த்தங்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.வாய்வுப் பதார்த்தங்களையும் அறவே தவிர்க்க வேண்டும்.இயற்கையான பழ வகைகளை மூன்று வேளையும் உணவுக்குப் பதிலாக உபயோகித்தல் நனறு. பாலுடன் விளக்கெண்ணெய் மூன்று வேளையும் உட்கொள்ளுவது குடலின் நைப்புத்தன்மையை அதிகரிக்க மிக நல்லது.சோறு சாப்பிடும் போதோ அல்லது மற்ற எந்த உணவு உட்கொள்ளும் போதோ முதல் கவளம் அஷ்ட சூர்ணத்துடன் நெய்யோ அல்லது தாடி மாடி கிருத்தத்துடனோ சாப்பிட இந்த பிரச்சினையிலிருந்து விடுபடலாம். இது குடலின் நைப்புத் தன்மை குறைவதை ( REDUCTION LUBRICATION CAPACITY ) மாற்றும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. palani says:

  சிறந்த பதிவுகள் அருமையான விளக்கங்கள் அரிய உங்கள் பனி சிறக்க என்னுடைய நல் வாழ்த்துக்கள்.

  • machamuni says:

   அன்புள்ள திரு பழனி அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. முருகேசன்.கு says:

  முதலில் நன்றி.
  தங்களின் ஞானத்தை சுயநலமற்று மற்றவர்களுக்கு உபயோகமாக உள்ள பதிவுகள் மூலம் தெரிவிப்பதற்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 3