மச்ச முனி மூலிகையகம் (பாகம் 3)மதுமேகச் சூரணம் சர்க்கரை நோயாளர்க்காக

August 22, 2013 by: machamuni

natural

மதுமேகச் சூரணம்

(சர்க்கரை நோயாளர்க்காக)

சிறுகுறிஞ்சான்

சிறியாநங்கை

கொழுஞ்சி

நீராரை

வில்வம்

ஆவாரம்பூ

மருதாணி

வெள்ளருகு

வினைப்பூண்டு (மிளகாய்ப் பூண்டு என்றும் ரயில்வே பூண்டு என்றும் அழைப்பார்கள்)

பூவரசு இலை

மாவிலங்கப் பட்டை (மா இலிங்கம் என்பதே மாவிலங்கம் என்றாகியது )

இந்த மது மேகச் சூரணம் எமது பரம்பரை மருத்துவ முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த முறைகளில் உள்ள மருந்துக் கலவை.நாம் 1996 ஆம் ஆண்டு அரியலூரில் பணி மாறுதல் பெற்று பணியாற்றிக் கொண்டிருந்த போது எங்களது விருந்தினர் விடுதியில் திரு பழனியப்பன் அவர்கள் என்ற நண்பர் பணி புரிந்து வந்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர் ,அவர் மச்ச முனிவரின் சித்த ஞான சபை உறுப்பினராக ஆனார் .

அவர் ஒருநாள் மிகுந்த வருத்தத்தில் இருந்தார் . அவருடைய பையனுக்கு ( செல்வன் கார்த்திகேயன் ) , 4 வயதில்  இள வயதில் ஏற்படும் சர்க்கரை நோய் ( JUVENAL SUGAR )  ஏற்பட்டுள்ளது என்று சொன்னார் . அப்போதுதான் அவர் இந்த சிறிய விடயத்துக்காகவா கவலைப்பட்டீர்கள்.எல்லாம் தீரக் கூடிய வியாதிதான் என்று நாம் கூறினோம். அதற்கு திரு பழனியப்பன் அவர்கள் கூறினார் “எல்லா அல்லோபதி மருத்துவர்களும் , இந்த நோயாளரான செல்வன் கார்த்திகேயன் இனி இருக்கும் ஆயுட்காலம் முழுமைக்கும் , இந்த சர்க்கரை வியாதிக்கு ஆயுள்காலம் முழுமைக்கும் , மாத்திரைகளும் ஊசி மருந்துகளும் எடுத்தே தீர வேண்டும்  , என்று கூறிவிட்டார்கள்.நீங்கள் இதைச் சாதாரணமாகக் கூறுகிறீர்களே!!!!!” என்றார்.

நாம் அதற்கு “இந்த வியாதி முற்றும் குணமாகக் கூடியதே ”என்று கூறி, மேற்கண்ட மருந்துகள் அனைத்தையும் சேர்த்துக் கொடுத்தோம்.ஒரு வருடம் மூன்று வேளையும் சாப்பிடு முன்னர் எடுத்துக் கொண்ட அந்தப் பையனுக்கு இன்று 24 வயது , அந்த இளைஞன் இப்போது எந்தப் பிரச்சினையும் இன்றி  , எந்த வியாதியின் அறிகுறிகளும்  இன்றி நலமுடன் உள்ளார்.திரு பழனியப்பன் அவர்களின் அலை பேசி எண் 9787316016.

அல்லோபதி மருத்துவத்தால் குணப்படுத்தவே முடியாத இள வயதில் ஏற்படும் சர்க்கரை நோயையே ( JUVENAL SUGAR ) , குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற, இப்படிப்பட்ட அற்புத மருந்துக் கலவையே இந்த மது மேகச் சூரணம்.இதை எப்படிப்பட்ட சர்க்கரை நோய்க்கும் பயன்படுத்தி குணம் பெறலாம்.

இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953

32 responses to “மச்ச முனி மூலிகையகம் (பாகம் 3)மதுமேகச் சூரணம் சர்க்கரை நோயாளர்க்காக”

  1. manikandan says:

    ஆச்சரியமாக இருக்கிறது ! என்னே சொல்வது சித்த மருத்துவத்தின் பெருமையை. இது ஒரு நல்ல தகவல்

    • machamuni says:

      அன்புள்ள திரு மணிகண்டன் அவர்களே ,
      உங்களது கருத்துரைக்கு நன்றி.
      உண்மை நிகழ்வு இது.நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  2. R.Gunavathy says:

    அய்யா வணக்கம்.

    என் குழந்தைக்கு (வயது 5) கண்ணில் சிறு கட்டி வந்துள்ளது. அதற்கு என்ன வீட்டு வைத்தியம் செய்வது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு வைத்தியம் சொல்லுங்கள் அய்யா. தினமும் இரவில் பல் கடிக்கிறான். எதனால் என்று தெரியவில்லை. என்ன செய்தால் குணமாகும் என்று மருத்துவம் சொல்லுங்கள் அய்யா. (நாங்கள் தற்போது அயல்நாட்டில் வசிக்கிறோம்)

    மேலும் ஒரு வேண்டுகோள்…
    தாங்கள் நிறைய நோய்களுக்கு தீர்வு விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள்..
    சித்தா மருந்துகளையும் அறிமுகம் செய்துள்ளீர்கள்.. அதுபோல குழந்தைகளுக்கும் மருத்துவ தீர்வுகளையும். பெற்றோர்கள் செய்யக்கூடியவை, செய்ய கூடாதவைகளையும் தெளிவுபடித்தி ஒரு தொடர் எழுதினீர்களானால் எம்மை போன்ற தாய்மார்களுக்கு மிக மிக உபயோகமாக இருக்கும். குழந்தை பருவத்தில் இருந்தே அல்லோபதி மருத்துவத்தில் இருந்து அவர்களை காப்பற்றலாம்.
    இதை வேண்டுகோளாக முன்வைக்கிறேன்…

    நன்றி அய்யா

    இப்படிக்கு
    ர.குணவதி

    • machamuni says:

      அன்புள்ள திருமதி ர.குணவதி அவர்களே ,
      உங்களது கருத்துரைக்கு நன்றி.
      ///என் குழந்தைக்கு (வயது 5) கண்ணில் சிறு கட்டி வந்துள்ளது. அதற்கு என்ன வீட்டு வைத்தியம் செய்வது என்று தெரியவில்லை.///
      உங்கள் குழந்தைக்கு கண்ணைச் சுற்றி கோப்பாளக்கட்டி( நாமம் போட உபயோகிப்பார்கள் ) என்று சொல்லும் நாமக்கட்டியை பன்னீரில் உரைத்துப் கண்ணைச் சுற்றி புற வளையம் இடத் தீரும்.கண்ணுக்குள் சுத்தமான விளக்கெண்ணெய் விடலாம் .கண்ணில் அதிக சூடு உண்டாவதால் வருவதே இது.
      ///தினமும் இரவில் பல் கடிக்கிறான். எதனால் என்று தெரியவில்லை. என்ன செய்தால் குணமாகும் என்று மருத்துவம் சொல்லுங்கள் அய்யா///
      குழந்தைகள் இரவில் பல் கடிக்கிறார்கள் என்றால் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்று பொருள். இதற்கு குப்பை மேனி வேரைக் கஷாயம் (இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு டம்ளராக வற்றும் வரை காய்ச்சி ) செய்து காலை வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் கொடுக்க பூச்சிகள் செத்து வெளியேறும்.முருக்கன் விதை மாத்திரையை இரவில் கொடுக்க காலை பேதியோடு பூச்சிகள் செத்து வெளியேறும்.ஹோமியோபதியில் சினா -30 என்ற மருந்தை வாங்கி இரவில் சப்பிச் சாப்பிட கொடுக்க பூச்சிகள் செத்து வெளியேறும்.இவையனைத்து மருந்துகளில் ஏதாவதொன்றைக் கொடுத்தால் போதும் .ஆனால் ஒரு வார இடை வெளியில் மூன்று முதல் ஐந்து தடவைகள் கொடுக்க வேண்டும் , அப்படிக் கொடுத்தால்தான் , பூச்சிகளின் முட்டைகளில் இருந்து வெளிவரும் பூச்சிகளும் வெளியேறி பூச்சிகள் மேலும் உற்பத்தியாகாமல் தடுக்கப்படும்.
      ///பெற்றோர்கள் செய்யக்கூடியவை, செய்ய கூடாதவைகளையும் தெளிவுபடித்தி ஒரு தொடர் எழுதினீர்களானால் எம்மை போன்ற தாய்மார்களுக்கு மிக மிக உபயோகமாக இருக்கும். குழந்தை பருவத்தில் இருந்தே அல்லோபதி மருத்துவத்தில் இருந்து அவர்களை காப்பற்றலாம்.
      இதை வேண்டுகோளாக முன்வைக்கிறேன்…///
      செய்கிறோம்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  3. Raja says:

    அய்யா,
    என் மகள் (11 மாதங்கள்) இரவில் முச்சு விடமுடியாமல் சளியால் மிகுந்த அவதிக்குள்ளகிறாள். அவளால் தாய்ப்பாலும் இரவில் குடிக்க இயலவில்லை. ஹோமேயோபதி மருந்துகளும் வேலை செய்யவில்லை. ஆங்கில மருத்துவரிடம் காண்பித்ததற்கு நெஞ்சில் சளி இல்லை என மூக்கில் விடும் திரவத்தை பரிந்துரை செய்தார். அதுவும் 3 நாட்களுக்கு மேல் வேலைசெய்யவில்லை. இரவானால் மகள் படும் அவஸ்தையை பார்த்து மிகவும் வேதனையாக உள்ளது. தயை கூர்ந்து தக்க மருந்து கூறினால் மிக்க உதவியாக இருக்கும். மேலும் இதுபோன்று சளி/மூக்கடைப்பு காய்ச்சல் வராமல் எவ்வாறு அவர்களின் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்க முடியும் எனகூறினால் மிக உதவியாக இருக்கும்.

    நன்றியுடன்
    ராஜா

    • machamuni says:

      அன்புள்ள திரு ராஜா அவர்களே ,
      உங்களது கருத்துரைக்கு நன்றி.
      உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது.தொடர்பு கொள்ளுங்கள்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  4. R.Gunavathy says:

    அய்யா வணக்கம்,

    மிக்க நன்றி… மிக்க நன்றி…

    எனக்கு தெரிந்த தாய்மார்களுக்கும் உங்கள் மருத்துவத்தை பகிர்ந்து கொள்கிறேன் தாங்களின் அனுமதியோடு…. பூச்சி தொல்லையால் தானோ என்னவோ குழந்தை சாப்பிட மறுக்கிறான். உடலும் மெலிந்து காணப்படுகிறது… நான் அல்பெண்டசால் அல்லோபதி மருந்து கொடுத்து வந்தும் பயனில்லை. பூச்சிகள் முழுவதுமாக செத்தொழியவில்லை. எனக்கு தீர்வு கொடுத்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி அய்யா…

    இப்படிக்கு
    ர. குணவதி

    • machamuni says:

      அன்புள்ள திருமதி ர.குணவதி அவர்களே ,
      உங்களது கருத்துரைக்கு நன்றி.
      ///நான் அல்பெண்டசால் அல்லோபதி மருந்து கொடுத்து வந்தும் பயனில்லை.///
      https://www.google.co.in/?gws_rd=cr#fp=35892559ede8cd8f&q=albendazole+tablets+and+its+side+effects
      மேலேயுள்ள இணைப்பைப் பாருங்கள் அந்த இணைய தளங்களுக்குள் போய்ப் பாருங்கள்.
      தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு விஷங்களைப் புகட்டாதீர்கள். முதலில் இதனுடைய பக்க விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொண்டு , அதனால் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றால் இது போன்ற மருந்துகளைக் கொடுங்கள் . இவை குடலில் உள்ள நமக்கு தீமை செய்யும் பூச்சிகளையும் கிருமிகளையும் அழிக்காததுடன் , நமக்கு குடலில் நன்மை புரியும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். விளைவு பெரும் குடற் சீர் கேடு .இது பெரும்பாலான படித்தவர்களுக்குப் புரிவதேயில்லை.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  5. R.Gunavathy says:

    அய்யா வணக்கம்,

    தங்கள் எம்மை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி… கடவுள் அருளால் கடந்த ஒரு வருடமாகத்தான் சித்த மருத்துவத்தை பற்றி எமக்கு விழிப்பு வந்துள்ளது….அதுவும் தங்கள் வலைதளத்தை பார்த்தபிறகுதான் எனக்கு மருந்துகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. அதன் பலனை இனிதான் பெறப்போகிறோம் தங்களை போன்ற நல் உள்ளங்களால்தான்… எங்களை போன்ற மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு தாங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்…

    நன்றி அய்யா

    இப்படிக்கு
    ர.குணவதி

    • machamuni says:

      அன்புள்ள திருமதி ர.குணவதி அவர்களே ,
      உங்களது கருத்துரைக்கு நன்றி.
      உங்களது நன்றியை இறைவனுக்கு தெரிவியுங்கள்.இறைவன் எல்லா நன்மையையும் நமக்குப் புரிவான். எல்லோரும் முன்பு இறைவனிடம் ஒன்றாக இருந்தோம்.நல்லின்பத்தை அனுபவித்து வந்தோம் .அந்த இன்பம் திகட்டும் போது இறைவனிடம் நாம் துன்பத்தை வரமாக கேட்டுப் பெறுகிறோம்.எப்படி இனிப்பு சாப்பிட்டவுடன் காரம் சாப்பிட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ ??? அப்படி.இப்படி நாம் வரமாகப் பெற்றுக் கொண்டு வந்தவைகள்தான் நோய்களும்,உடற் குறைபாடுகளும் .நாம் வாங்கி வந்த வரத்தை விட விரும்புவோமா?? நாம் மேல் மனம் விட விரும்பினாலும் நம் ஆழ் மனம் விட விரும்பாது . இதையே கிராமங்களில் சொல்வார்கள் , நான் வாங்கி வந்த வரம் அவ்வளவுதான் !!!!!! என்பார்கள் . எனவேதான் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டு , சித்த மருந்துகளை சாப்பிடாமல் வியாதிகளை உடலைவிட்டு போக விடாமல் பார்த்துக் கொள்கிறோம். நம்மைப் போன்றோர் உயிர் எல்லாம் ஒன்றென உணர்ந்ததால்,மற்ற உயிர்களுக்கு செய்யும் சேவை எமக்கே செய்து கொள்ளும் சேவை . எனில் எம் உயிருக்கு நாம் செய்து கொண்ட சேவைக்கு நாம் எப்படி நன்றியை பெற்றுக் கொள்வது. தெரிய வைத்ததுவும் இறைவனே !!! தெரிந்து கொண்டதை பயனாக வைப்பதுவும் இறைவனே !!! பயனை அனுபவிக்கும் உயிராக இருப்பதுவும் இறைவனே !!! எனவே எல்லாப் புகழும் இறைவனுக்கே !!!
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

      • எஸ். எஸ். சாதிக் says:

        ஐயா, வணக்கம் பல.

        எனது பேரன் 11 மாதம் ஆகிறது. நல்ல ஆரோக்கியமாக, துறு துறு வென்று இருக்கின்றான். நன்றாக நடக்க ஆரம்பித்துள்ளான். கடந்த சில தினங்களாக இரவில் நற, நற வென்று பல்லை கடிக்கின்றான். வயிற்றில் பூச்சி இருந்தால் குழந்தைகள் பல்லை கடிப்பார்கள் என்று கேள்விபட்டு இருக்கின்றேன். இதற்கு தங்களின் மேலான ஆலோசனையை விரும்புகிறேன்.

        ஏற்கனவே நான் உங்களிடம் தொடர்பில் உள்ளவன்.

        அன்புடன்
        சாதிக்.

        • machamuni says:

          அன்புள்ள திரு சாதிக் அவர்களே ,
          உங்களது கருத்துரைக்கு நன்றி,
          மிகக் குறும்பான குழந்தைகளுக்கு தெய்வீக குணமளிக்கும் மலர் மருந்தான மிமுலஸ் என்ற மருந்தைக் கொடுத்து வந்தால் சாந்தமாகி நலம் பிறக்கும்.

          குழந்தைகள் இரவில் பல் கடிக்கிறார்கள் என்றால் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்று பொருள். இதற்கு குப்பை மேனி வேரைக் கஷாயம் (இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு டம்ளராக வற்றும் வரை காய்ச்சி ) செய்து காலை வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் கொடுக்க பூச்சிகள் செத்து வெளியேறும்.முருக்கன் விதை மாத்திரையை இரவில் கொடுக்க காலை பேதியோடு பூச்சிகள் செத்து வெளியேறும்.ஹோமியோபதியில் சினா -30 என்ற மருந்தை வாங்கி இரவில் சப்பிச் சாப்பிட கொடுக்க பூச்சிகள் செத்து வெளியேறும்.இவையனைத்து மருந்துகளில் ஏதாவதொன்றைக் கொடுத்தால் போதும் .ஆனால் ஒரு வார இடை வெளியில் மூன்று முதல் ஐந்து தடவைகள் கொடுக்க வேண்டும் , அப்படிக் கொடுத்தால்தான் , பூச்சிகளின் முட்டைகளில் இருந்து வெளிவரும் பூச்சிகளும் வெளியேறி பூச்சிகள் மேலும் உற்பத்தியாகாமல் தடுக்கப்படும்.
          மிக்க நன்றி
          என்றென்றும் பேரன்பினால்
          சாமீ அழகப்பன்

          • எஸ். எஸ். சாதிக் says:

            தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

            அன்புடன்
            சாதிக்

          • machamuni says:

            அன்புள்ள திரு சாதிக் அவர்களே ,
            உங்களது கருத்துரைக்கு நன்றி,
            மிக்க நன்றி
            என்றென்றும் பேரன்பினால்
            சாமீ அழகப்பன்

  6. vishal says:

    அன்புள்ள ஐயா வணக்கம். எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. கடந்த 7 மாதமா சதுரகிரி ஹெர்பல் திரு. கண்ணன் அவர்கள் கொடுத்த மருந்தினை சாப்பிட்டு வருகிறேன். மேலும் சர்க்கரை நோயை சரியாக்கலாம் கட்டுரை பின் பற்றி வருகிரேன். மேலும் எனக்கு, தண்ணிர் குடித்தவுடன் சிறுநீர் வருகிரது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை சிறுநீரி கழிக்கிறேன். தண்ணீர் குடிக்காமலும் இருக்க முடியவில்லை.
    மேலும் இன்னும் எத்தனை மாதத்துக்கு இந்த மருந்து சாப்பிட வேண்டும்? மற்றும் மாதா மாதம் ரத்தம் சோதனை செய்ய வேண்டுமா என்று கூறினல் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்.

    தங்கள் பதிலை எதிர் நோக்கும்
    விஷால்
    சேலம்

    • machamuni says:

      அன்புள்ள திரு விஷால் அவர்களே ,
      உங்களது கருத்துரைக்கு நன்றி
      மது மேகச் சிறப்புச் சூரணம் திரு அமீர் சுல்த்தான் அவர்களிடம் கிடைக்கும்.இது சற்று விலை அதிகம், அப்ரேக பற்பம் 30 புடமும் , அப்ரேக பற்பம் 100 புடமும் கலக்கப்பட்டது. அதை இரு மாதங்கள் உபயோகித்த பின்னர் சாதாரண மது மேகச் சூரணத்தை உபயோகியுங்கள்.சப்த தாதுக்களும் பலம் பெற்றால் நலம் விளையும்.நல்ல பலன் கிடைக்கும்.இதை இன்சுலின் ஊசி மருந்து உபயோகிப்பவர்களும் பயன்படுத்தி நல்ல பலன் பெறலாம்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  7. K.A.தியாகராஜன் says:

    மதிப்பிற்குரிய திரு அமீர் சுல்தான் அவர்களுக்கு வணக்கம்.
    தங்களிடம் மாலை அலைபேசியில் தொட்ர்பு கொண்டு போகர் பஞ்ச கல்பம் பற்றி கேட்டு அறிந்தேன். தயவுசெய்து அதன் விலையையும் சென்னையில் கிடைக்குமிடம் பற்றியும் தகவல் அளிக்கவும். தங்கள் சேவை மகத்தானது.
    தாங்கள் பல்லாண்டு வளமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.
    என்றும் அன்புடன்
    K.A.தியாகராஜன் 9025578566,9994878566 ஈரோடு.

    • machamuni says:

      அன்புள்ள திரு K.A.தியாகராஜன் அவர்களே,
      உங்களது கருத்துரைக்கு நன்றி,
      முதலில் நீங்கள் தற்போது மின்னஞ்சல் மூலம் பேசிக் கொண்டிருப்பது அமீர் சுல்தானிடம் இல்லை !!! சாமீ அழகப்பனிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.பேசியது எம்மிடம் என்பதை உணர்ந்தீர்களா???கிடைக்கும் இடம் இதுதாம் என்று ஒவ்வொரு பதிவிலும் எழுதி இருப்பது புரியவில்லையா???
      இது கூட புரியாத நீங்கள் மருந்து உபயோகம் இன்னதென்று சொல்வதை புரிந்து கொள்வீர்களா????நாங்கள் கடை கடையாய் தேடி விற்றுக் கொண்டிருப்பவர்கள் அல்ல. நீங்கள் தேடி வந்து வாங்கினால் வாங்குங்கள்??? இல்லை எனில் விட்டு விடுங்கள்.
      நீங்கள் நாட வேண்டிய நபர்
      திரு அமீர் சுல்தான்.
      அவரது மின்னஞ்சல் முகவரி
      மின்னஞ்சல் :-machamunimooligaiyagam@gmail.com
      அவரது அலைபேசி எண் :- 9597239953
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  8. K.A.தியாகராஜன் says:

    அலோபதி என்ற சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த என்னை விடுவித்தமைக்கு நன்றி

    • machamuni says:

      அன்புள்ள திரு K.A.தியாகராஜன் அவர்களே,
      உங்களது கருத்துரைக்கு நன்றி ,
      நீங்களே உங்களை விடுவித்துக் கொண்டீர்கள். பதிவுகளைப் படிக்கும் பலர் இன்னும் அப்படியே இருந்தும் நீங்கள் மாறியிருக்கிறீர்கள் என்றால் அது உங்கள் விதி???
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  9. K.A.தியாகராஜன் says:

    மதிப்பிற்குரிய திரு சாமி அழகப்பன் அவர்களுக்கு வணக்கம். உங்களின் பண்பட்ட மனதை புண்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். தங்கள் பதிவில் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரியும் அலைபேசி எண்ணும் தந்துள்ளீர்கள். தேடி வந்து வாங்கத்தான் முகவரியை கேட்டேன். ஆர்வமுடன் தான் கேட்டேன். அதற்காக இவ்வாறு கடுமையான விமர்சனம் தேவையில்லை (நீங்கள் தேடி வந்து வாங்கினால் வாங்குங்கள்??? இல்லை எனில் விட்டு விடுங்கள்.)

    • machamuni says:

      அன்புள்ள திரு K.A.தியாகராஜன் அவர்களே,
      உங்களது கருத்துரைக்கு நன்றி ,
      முதலில் நாம் ஒரு வியாபாரி அல்ல. இது சேவை நோக்கத்துடன் செய்யப்பட்டு வரும் ஒரு விடயம்.இது சம்பந்தமான அத்தனை விடயங்களையும் திரு அமீர் சுல்தான் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது ஒரு கிளை.இது போல பல விடயங்களை நாம் கையாண்டு கொண்டிருக்கும் போது,அதற்கே நேரமின்மையால் தவிக்கும் போது, இது பற்றி மீண்டும் மீண்டும் எம்மிடம் வினவினால் எமது பொன்னான நேரம் பாழாகும்.நாம் மற்ற வலைத் தளங்களைப் போல நேயர் கருத்துரைகளுக்கு பதில் வழங்காமல் இருக்கும் நபரானால் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு போய்விடுவோம். ஆனால் இது பற்றி உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் இது புரியட்டும் என்றே இதைக் குறிப்பிட்டு எழுதினோம். உங்களை வருத்தப்பட வைக்க வேண்டும் என்பது எமது நோக்கமல்ல.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  10. K.A.தியாகராஜன் says:

    இது கூட புரியாத நீங்கள் மருந்து உபயோகம் இன்னதென்று சொல்வதை புரிந்து கொள்வீர்களா??? என்று கூறியுள்ளீர்கள். நான் ஆங்கில மருத்துவ துறையில் எக்ஸ்ரே பிரிவில் 34 ஆண்டுகள் அனுபவம் பெற்றவன். உங்களின் வலைதளம் எனக்கு வெளிச்சத்தை காட்டியது என்று கூறியிருந்தும் எனனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள். மிகவும் வருத்தமாக உள்ளது.

    • machamuni says:

      அன்புள்ள திரு K.A.தியாகராஜன் அவர்களே,
      உங்களது கருத்துரைக்கு நன்றி ,
      வருந்தாதீர்கள்.நீங்கள் இதற்காக வருந்தினால் நாம் அதற்காக மன்னிக்க வேண்டுகிறோம்.ஈ எறும்பில் இருக்கும் ஈசன் எம்முள்ளும் உம்முள்ளும் இருக்கிறான்.எனவே மன்னியும்.
      ////அலோபதி என்ற சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த என்னை விடுவித்தமைக்கு நன்றி/// இப்படி நீங்கள் எழுதியுள்ளதற்கு, நாம்
      ///நீங்களே உங்களை விடுவித்துக் கொண்டீர்கள். பதிவுகளைப் படிக்கும் பலர் இன்னும் அப்படியே இருந்தும் நீங்கள் மாறியிருக்கிறீர்கள் என்றால் அது உங்கள் விதி???///
      இப்படி எழுதியிருப்பதிலிருந்து உங்களை நாம் புகழ்ந்துள்ளது புரியவில்லையா???உங்களுக்கு விதி நன்றாக இருந்ததாலேயே , உங்கள் மதி நல்ல விதத்தில் வேலை செய்து நீங்கள் அல்லோபதி பிடியில் இருந்து விடுபட்டுள்ளீர்கள் என்று கூறியிருக்கிறோம். இதைக் கவனிக்கவில்லையா??
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  11. K.A.தியாகராஜன் says:

    தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. இந்த வலைதளத்தை பற்றி எனது நண்பர்களிடமும், தினமும் நடைபயிற்ச்சிக்கு வரும் அன்பர்களிடமும் என்னால் இயன்ற வரை கூறி வருகிறேன். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க இப்பணியை மேற்கொண்டுள்ளேன். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் அதை பற்றி நான் கவலை படுவதில்லை. நான் தினமும் 7 கீ.மீ நடைபயிற்சி சிறிது உடற்பயிற்சி காலைவேளையில் செய்து வருகிறேன். எனது வயது 55 இது பற்றி தங்களின் கருத்து கூறவும்.

    • machamuni says:

      அன்புள்ள திரு K.A.தியாகராஜன் அவர்களே,
      உங்களது கருத்துரைக்கு நன்றி ,
      உடற்பயிற்சி என்பது பொதுவாக நம் மூச்சை விரயம் செய்வது.அதற்குப் பதிலாக பிரணாயாமம் , மற்றும் யோகப் பயிற்சிகளை செய்து வந்தால் உடல் வளம் பெறும்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  12. irsath says:

    அய்யா எனக்கு வயது 26 சர்க்கரை நோயால் அவதி படுகிறேன் இதனால் உடல் மெலிந்து கொண்டு செல்கிறது சிலர் கருஞ்சீரகத்தை சாப்பிடும் படி கூறினார்கள் எவ்வளவு சாப்பிடுவது எப்போது சாப்பிடுவது

    • machamuni says:

      அன்புள்ள திரு இர்ஷாத் அவர்களே,
      உங்களது கருத்துரைக்கு நன்றி,
      மது மேகச் சூரணத்தில் கருஞ்சீரகம் முதலான 51 வகையான மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது . பயன்படுத்திப் பார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  13. தீபக் says:

    திரு அமீர் சுல்த்தான் அவர்களே,
    எனக்கு தங்களது மின்னஞ்சல் பதிவில் வரும் மூலிகை மருந்துகளின்விலைபட்டியல் அனுப்பிவைக்குமாறுகேட்டுக் கொள்கிறேன்.ஏனெனில் சர்க்கரை, சிருநீரகக் கோளாறு, போன்ற நோய்களுக்கு வாங்கி கொடுக்கவிரும்புகிறேன்.இன்னும் நிறையமக்களுக்கு இதுபோன்ற நல விசயங்கள் தெரிவது இல்லை.எப்படி வாங்குவது என்பதையும் தெரியப்படுத்தவும்.
    நன்றி

    • machamuni says:

      அன்புள்ள திரு தீபக் அவர்களே,
      உங்களது கருத்துரைக்கு நன்றி,
      நீங்கள் கருத்துரையில் கேட்டுக் கொண்டிருப்பது சாமீ அழகப்பன் என்ற பரிதாபமான ஜென்மத்திடம் . நீங்கள் மேற்படி கேள்வியை கேட்க வேண்டியது.

        திரு அமீர் சுல்தான்.
        மின்னஞ்சல் :-machamunimooligaiyagam@gmail.com
        அலைபேசி எண் :- 9597239953

      நாம் பதிவிலேயே மேற்கண்ட நபரிடம் கிடைக்கும் கூறிவிட்ட பின்னரும் கருத்துரையில் எம்மிடமேயே வினவி வருவது எமது நேரத்தை விரயம் செய்கிறது .தேவைப்பட்டால் தவிர தயவு செய்து எம்மிடம் வினவுவதை தவிர்க்கவும்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  14. Rajadurai says:

    திரு அமீர் சுல்த்தான் அவர்களே,
    எனக்கு தங்களது மின்னஞ்சல் பதிவில் வரும் மூலிகை மருந்துகளின்விலைபட்டியல் அனுப்பிவைக்குமாறுகேட்டுக் கொள்கிறேன்.

    • machamuni says:

      அன்புள்ள திரு ராஜதுரை அவர்களே,
      உங்களது கருத்துரைக்கு நன்றி,
      நீங்கள் கருத்துரையில் கேட்டுக் கொண்டிருப்பது சாமீ அழகப்பனிடம் . நீங்கள் மேற்படி கேள்வியை கேட்க வேண்டியது கீழ்க்கண்டவரிடம்.

      திரு அமீர் சுல்தான்.
      மின்னஞ்சல் :-machamunimooligaiyagam@gmail.com
      அலைபேசி எண் :- 9597239953
      நாம் பதிவிலேயே மேற்கண்ட நபரிடம் கிடைக்கும் கூறிவிட்ட பின்னரும் கருத்துரையில் எம்மிடமேயே வினவி வருவது எமது நேரத்தை விரயம் செய்கிறது .தேவைப்பட்டால் தவிர தயவு செய்து எம்மிடம் வினவுவதை தவிர்க்கவும்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

59 − 53 =