சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 15 )

November 11, 2015 by: machamuni

நம் மச்ச முனிவரின் சித்த ஞான சபையின் வலைத்தள வாசக அன்பர்களுக்கு பேரன்புடைய சித்தர்களின் இறையருள் மிகக் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

stomach

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 15 )

சர்க்கரை நோய் என்பது ஒரு நோயே அல்ல . அது நம் உடலின் சீரண சக்தியில் சிறு செயல் குறைபாடே தவிர ( DIS-ORDER ) வேறில்லை. இதனை சீரண சக்தியை சரி செய்வதன் மூலம் சரி செய்து விடலாம்.சரி சீரண சக்தியை எப்படி சரி செய்வது . நம் உடலின் சீரண உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுத்தல் (விரதம் இருத்தல் )நல்லது . அது உடலில் சேரும் விஷத்தன்மையையும் கழிவுகளையும் நீக்க உதவும்.அது நம் சீரண சக்தியை அதிகரிக்கும்.

இது போக நம் உடலில் விஷத்தன்மையைக் கூட்டும் வழிகளையும் நீக்க வேண்டும் .அதாவது எந்த விஷத்தன்மை மிக்க உணவுகளையும் தினந்தோறும் உணவாக சேர்க்காமல் தவிர்க்க வேண்டும் . மிக முக்கியமாக ஒரு விஷமாக நாம் தினம் குடிக்கும் பாலில் உள்ள விஷயங்களை (விஷங்களை) இப்போது விவரிக்கிறோம்.

நம் நாட்டு மாட்டு பாலில் மட்டுமே சர்க்கரை நோயை உண்டாக்கக் கூடிய நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை (கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது). நாட்டு மாடுகள் மிகவும் நல்ல சத்து உடைய A2 புரதம் உடையவை. கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோயை உண்டாக்கக் கூடிய மற்றும் ஹார்மோன்-மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ள மூலக் கூறுகள் உள்ளன. பால் மிக அதிகமாக கொடுக்கும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபணுவிலேயே அதிகமாக உள்ளது. கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது. இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும்-செயல்பாடும், வீர/வீரிய குறைவும், பெண்போன்ற செயல்படும் ஏற்படுகிறது. பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சி பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது. இதன் காரணமாக தாம்பத்திய பிரச்சனைகளை விதைத்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது. ஆரம்பத்தில் நாட்டு மாடுகள் சரிவிகிதத்தில் கலப்பு செய்யப்பட்டபோது நாட்டு மாட்டு மரபு ஆதிக்கம் செலுத்தியது. இன்று பல அடுக்குகள் கடந்து வெளிநாட்டு மாடுகளின் ( பன்றிகளின் ) மரபணு ஆதிக்கம் செலுத்துகிறது. தற்கால குடும்ப சீரழிவுக்கு நாம் கண்டு கொள்ளாமல் விட்ட ஒரு மிகப் பெரிய ஓட்டைதான் நாட்டு மாட்டுகளை நாம்  இழந்தது.

kongA

nattumadugal

மேலும் நாட்டு மாடுகள் தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும்-கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடையதாக மாறுகிறது. இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம். கலப்பின பசுக்களின் பால் தாமச/ரஜோ குணத்தை தரும். மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல. இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் A2 பால் என பிரித்து விற்க துவங்கியுள்ளன.

நம்மாழ்வார் இந்த வெளி நாட்டு மாடுகளை மாட்டு வடிவில் உள்ள பன்றிகள் என்பார். நம் நாட்டு மாடுகளின் சாணம் வட்டவட்டமாக கெட்டியாக இருக்கும் , கலப்பின மாட்டுச் சாணம் களிமண் கூழ் போல கழிசலாகக் கழியும் . நம் நாட்டு மாட்டுச் சாணத்தைக் கரைத்துத் தெளித்தால்தான் கிருமிகள் அழியும் , இந்த கலப்பின மாட்டுச் சாணத்தில் இது போன்ற நல்ல தன்மைகள் ஏதும் இல்லை. இதைவிடக் கொடுமை சாணிப் பவுடர் என்னும் விஷமான ஒன்றைக் கரைத்து ( கோயமுத்தூர் பக்கம் இது அதிகம் )வாசலில் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் .இது கொடும் விஷத்தன்மை உள்ளது .இதை உபயோகித்தால் உடலில் சிறிது சிறிதாக விஷம் ஏறி கொடும் நோய்களுக்கு காரணம் ஆகிறது .இதை தயவு செய்து யாரும் அதிகம் உபயோகிக்காதீர்கள்.

pv10

 நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் நம் தமிழ் நாட்டையே கட்டமைத்தார்கள். திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து  வாசலில் படுத்திருந்தார்கள். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்த நாம், இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாட்டு மாடுகள் இருந்த வரை நம் பொருளாதார சுயசார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம்.

வெட்சி நிரை கவர்தல் , மீட்டல் கரந்தையாம் என புறத்திணை பன்னிரண்டில் விவரிப்பார்கள் . அதாவது எதிரிகளின் பசுக்களை கவர்ந்து செல்லுதல் வெட்சித் திணை என்பார்கள் . எதிரிகள் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டல் கரந்தைத் திணையாகும் .அதாவது  பசுக்கள் மிக்க செல்வம் மிகுந்ததாகக் கருதப்பட்டது . எனவே அவற்றை கவர்தலும், மீட்டு வருவதும் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. எதிரியின் பசுக்கள் பழகாதவை எனவே அவற்றை கவரும் போது முட்டாமல் இருக்க அவற்றை மயக்கும் வண்ணம் வெட்சிப் பூவை சூடி கவர்ந்து வருவர். அது மட்டுமல்ல பசுக்களின் வெட்சிப் பூவால் ஏற்பட்ட மயக்கத்தை மாற்ற பசுக்களை மீட்கச் செல்பவர்கள் கரந்தைப் பூச் சூடுவார்கள் . கரந்தைப் பூவின் வாசனை பட்டதும் , மயக்கத்தில் இருந்த பசுக்கள் மீண்டு எஜமானர்களைத் தேடி ஓடி வரும்.

ஜெர்சி இன மாடுகளில் வேர்வை நாளங்களும் திமில்களும் இல்லாததால, அதோட வெப்பம் பால், சிறுநீர் மூலமாத்தான் வெளியேறுது.மேலும் இம்மாடுகளின் கன்றுகள் 6 முதல் 8 மாதத்திற்குள் பருவமடைகின்றன.

அதுமட்டுமில்லாமல் அயல்நாட்டு இன மாடுகளோட சாணம், சிறுநீர் மண்ணுக்கும் ,மக்களுக்கும் எந்த நன்மையையும் கொடுக்கிறதில்ல. இதுவே நம்ம நாட்டு மாடுகள்ல வேர்வை நாளமும், திமிலும் இருக்கிறது மட்டுமில்லாம, சிறுநீர், சாணத்திலிருந்து இயற்கை உரம், பஞ்ச கவ்யம்  போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

நம் நாட்டு மாட்டு பஞ்ச கவ்யத்தை உள்ளுக்கு சாப்பிட கேன்சர் முதலான பெரு வியாதிகளும் குணமாகும்.குஜராத்தில் உள்ள ஒரு கோசாலையில் , ஒரு வெளி நாட்டுக்காரருக்கு இருந்த கேன்சர் நோயை, இந்த பஞ்ச கவ்யம் ஆறு மாதங்கள் சாப்பிட அவரது கேன்சர் நோய் சரியாகி குணமாகிவிட்டது. பின்னர் தற்போது அவர் அந்த கோசாலையிலேயே பசுக்களுக்கு பணிவிடை செய்து வருகிறார்.

ஒவ்வொரு மாமாங்கமும் (12 வருடங்களுக்கு ஒரு முறை) நடக்கும் கும்ப கோணம் மகாமகத்தன்று அந்தக் குளத்தில் குளித்து புண்ணியம் பெற முதலில் குளிக்கும் முன்னர் பஞ்ச கவ்யம் அருந்தித்தான் குளிக்க வேண்டும்.அப்படிக் குளித்தால்தான் முழுப் பலனும் கிடைக்கும்.

நம் நாட்டுப் பசு மாட்டின் கோமியம் (மூத்திரம் வீட்டை சுத்தம் செய்யும் கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டது).வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை போக்கி அங்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் படி செய்கிறது . அதனால் அதனை காமதேனு எனப் போற்றி அதில் முப்பத்து முக்கோடி தேவர்களும் ,மும்மூர்த்தியான மூவர்களும் லக்குமியும் வாசம் செய்வதாக வணங்கி வருகிறோம்.

TN_142114000000
tamil-cow

564381_10200451188674858_533907317_n

foreign cow

புளியங்கொட்டை, பருத்திக் கொட்டைப்பால் என்று தான் நாம் கேள்விப் பட்டிருப்போம், ஆனால் ரசாயனக்கலப்பில் செய்யப்பட்டப் போலிப்பாலைப் பற்றி கேல்விப் பட்டிருக்கிறோமா என்று தெரியவில்லை. யூரியா, தாவர எண்ணெய் , சோடியம் ஹைட்ராக்சைடு, ஃபார்மேலின், ஹைட்ரெஜன் பெராக்ஸைட் போன்ற ரசாயனங்களை கலந்து, கலக்கி அத்தகைய பாலை தயாரிக்கின்றன. அது பார்ப்பதற்கு பாலைப்போலவே உள்ளது. பாலைக்கெட்டியாக்க ஜவ்வரசியைக் கலக்கிறர்கள். அதேபோல மாவா என்கின்ற கெட்டிப்பாலும் சாக்குப்பொடி, ஃபார்மேலின் முதலியவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இது பால்கோவா செய்யப் பயன்படுத்தப் படுகிறது. அத்தகைய கொடியோர் தமிழகத்திலும் இருக்கிறார்கள்.கீழுள்ள காணொளி மற்றும் இணைப்புக்களைப் பாருங்கள்.

http://www.dinamalar.com/News_detail.asp?Id=107418

http://timesofindia.indiatimes.com/city/varanasi/Health-authorities-find-detergent-in-milk/articleshow/6394212.cms

http://findarticles.com/p/news-articles/times-of-india-the/mi_8012/is_20101023/samples-milk-products-collected-kanpur/ai_n55854151/

இது போக போலிப் பால் , போலி முட்டை, போலி வெள்ளைப் பூண்டு , விஷத்தன்மை உள்ள பட்டாசுகள் (பொட்டாசியம் சேர்ந்தவை),விஷத்தன்மை உள்ள பொருட்களால் செய்த பொம்மைகள் போன்ற  மற்றும் பல போலிப் பொருட்கள் சீனாவில் இருந்து நம் இந்தியாவை சீர்குலைக்க வந்து கொண்டிருக்கின்றன.

https://en.wikipedia.org/wiki/2008_Chinese_milk_scandal

இப்போது புரிகிறதா, ஏன் இந்த தலைமுறையில் மட்டும் இத்தனை அதிக சர்க்கரை நோயாளர்கள் ?என்பது.இது போக மைதாவில் செய்த புரோட்டா, மற்றும் பேக்கரி பொருட்களும் மற்றொரு காரணம்? ஆண்டாள் பாசுரத்தில் சொன்ன செய்யாதன செய்யோம் ! என்ற வாக்கியத்தை சிரமேற்கொண்டு செய்யக் கூடாதவைகளை செய்யாதீர்கள்.நலமே விழையும்.

உரம் போடாத பூச்சி மருந்து வைக்காத தேங்காய்கள் அமிர்தத்துக்கு ஒப்பானவை.பாலுக்குப் பதில் தேங்காய்ப் பாலை உபயோகியுங்கள் . தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக நல்ல சத்துக்கள் தேங்காய்ப் பாலில் உள்ளன.மேலும் தேங்காய்ப் பால் எடுக்கும் போது தேங்காயைத் துருவி அப்படியே பிழிந்து எடுக்க வேண்டும் அதை இயந்திர அரைப்பானில்(மிக்ஸியில்) போட்டு எடுக்கக் கூடாது . கொதிக்க வைக்கவோ சூடாக்கவோ கூடாது . அதை உரையூற்றி வைத்து தயிராகவும் , மோராகவும் உபயோகிக்கலாம்.எனவே நம் நாட்டில் நமது கையால் விளைவிக்கப்பட்ட பொருட்களை உபயோகித்து நலம் பெற வாழ்த்துகிறோம்.

5 responses to “சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 15 )”

 1. விஜயகுமார் says:

  தாங்கள் கூறுவது மிகவும் சரியே.புதுமைகள் செய்கின்றோம் என்ற பெயரில் நமக்கு நாமே புதைக்குழி தோண்டிக்கொண்டோம்.

 2. போத்தி says:

  விரிவான கட்டுரை. சர்க்கரை நோய் இல்லாதவர்களும் படிக்க வேண்டிய கட்டுரை.

 3. அன்புள்ள சாமிஜி,
  பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.
  தங்கள் தொண்டு தொடர எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும்.
  அன்புடன்,
  செ. சீனிவாசன்

 4. இளங்கோவன் says:

  ஐயா,
  தங்களது இந்த பதிவு தற்காலத்திற்கு மிகவும் அவசியமானதாகும். தங்களது பணி தொடர இறைவனை வேண்டுகிறேன். தங்களது அனைத்து பதிவுகளையும் தேதிவாரியாக படிப்பது எப்படி என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
  நன்றி

 5. திருச்செல்வி.வி says:

  ஐயா வணக்கம்,

  உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இருக்கிறது . உங்களுடைய இந்த சேவைக்கு மிக்க நன்றி ஐயா. உங்களுடைய அலைபேசி எண்ணெய் எனக்கு தெரியப்படுத்துங்கள் ஐயா. .

  நன்றி ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =