நம் சித்தர்களின் மரபு வழி மருத்துவமான பிராண சிகிச்சை மற்றும் உடல் தொடா சிகிச்சை ( ரெய்கி ) பாகம் 2

January 23, 2016 by: machamuni

தாமதமாக வெகு நாட்களுக்குப் பின் ஒரு கட்டுரை வெளியாகிறது .கடும் வேலைப் பழு மற்றும் நிறைய ஆராய்ச்சி முயற்சிகளின் காரணமாக தாமதம் நேரிட்டது . நமது மச்ச முனி மூலிகையகம் தற்போது பல நோய்களை வெல்லும் பயிற்சிகளையும் , நமது வாசகர்களை மேலும் ஒரு உயர் நிலைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஒரு மைல் கல்லாக மாறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.எதிர் காலத்தில் மச்ச முனி மூலிகையகம் ஒரு சேவை மனப்பான்மை உள்ள ஒரு மாற்று முறை மருத்துவ முறை பல்நோக்கு மருத்துவ வளாகமாக உருவாகும் என்று உறுதி பட கூறுகிறோம்.

சித்தர்களின் பிராண சிகிச்சை முறை என்பது போகர் மற்றும் லாவோட்சு தாமோ , போதி தர்மர் என்றழைக்கப்படும் பல்லவ மன்னன் நம் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு சென்று சீனா , மற்றும் திபெத்திய லாமாக்களுக்கு கற்றுக் கொடுத்த அந்த ரகசிய முறைகள் நம் தமிழ்ச் சித்தர்களின் முறையே ஆகும்.அதில் பல பிரிவுகள் உண்டு.

அதில் ஒன்றுதான் ரெய்கி  ( REI- KI ) என்னும் சிகிச்சை முறை . நம் பிராணசக்தியை கூட்டிக் கொண்டு நமக்கு நோய் வராமல் தடுத்துக் கொண்டு, நம் பிராண சக்தியினை , நாம் மற்றவர்கள் உடலில் செலுத்தி மற்றவர் நோய்களை குணப்படுத்துவதுதான் இந்த சிகிச்சை முறை.

இதில் முதலில் நமது ஏழு சக்கரங்களும் திறக்கப்படும். நமது முதுகுத் தண்டில் உள்ள சக்கரங்கள் அனைத்தும் வலஞ் சுழியாகச் சுற்றினால் பிரபஞ்ச  சக்தி நம் உடலில் உள் வாங்கப்படும் . இடஞ் சுழியாகச் சுற்றினால் நம் உடலில் உள்ள பிரபஞ்ச சக்தி கொஞ்சம் , கொஞ்சமாக வெளியேறி உடல் இறப்பை நோக்கி விரையும்.இந்த சக்கரங்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களின் கூட்டால் உருவாக்கப்பட்டது.

நமது மூச்சு என்பது ஒரு நிமிடத்துக்கு 15 வீதம் ஒரு நாழிகைக்கு 360 மூச்சு வீதம் (வட்டத்துக்கு 360 பாகைகள் என்பது உங்களுக்குத் தெரிந்ததே இந்த ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள் .அந்த இருபத்து நான்கு நிமிடங்களில் நவகிரகங்களின் பாய்ச்சல் ஒரு சுற்று முடிந்துவிடும் ) ஒரு நாளில் 21,600 மூச்சுக்கள் ஓடுகிறது .இப்படி 21,600 மூச்சுக்கள் மட்டும் ஓடினால் நமது ஆயுள் 120 ஆண்டுகள் ஆகிறது .

ஆனால் இப்படி எப்போதும் 15 மூச்சுக்கள் ஓடுவதில்லை.அதாவது உணர்ச்சிகளின் பால் மனம் ஈடுபடும்போது (கோபம் , காமம் , சந்தோசப்படும்போது, அழும்போதும், அச்சப்படும்போதும்,தூங்கும் போதும்) மூச்சுக்கள் அதிகரித்து 64 மூச்சுக்களாக ஓடுகிறது.

நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம்வெகுளி உவகையென்று அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப.               (தொல்காப்பியம்) 

இப்படி மூச்சுக்கள் அதிகரித்து ஓடுவதால் உயிர்களின் வாழ்நாள் குறைந்து விரைவில் இறந்து போகின்றன.

சங்கிரண்டு தாரை ஒன்று  சன்னபின்னலாகையால்

மங்கி மாளுதே உலகில் மானுடங்கள் எத்தனை

சங்கிரண்டையுந் தவிர்ந்து தாரையூத வல்லீரேல்

கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.

                                                                                              -சிவவாக்கியர்-

இந்த மூச்சுக்களின் எண்ணிக்கையை வைத்தே யுகங்களின் கணிதம் உள்ளது .

 கிருத யுகம் என்பது 21,600 X 80 =  17,  28, 000

திரேதா யுகம் 21,600 X 60 =  12 , 96 , 000

துவார பர யுகம் 21,600 X 40 =  8, 64, 000

ஒரு யுகம் என்பதற்கு 21,600 X 20 = 4, 32, 000 என்பது கலியுக வருடங்கள்

சதுர் யுகங்களின் ஆண்டு 21,600 X 200  = 4 3, 20 , 000

இப்படி ஒரு நாளில் ஓடும் மூச்சுக்களான 21 , 600 மூச்சுக்கள் கீழ்க்கண்டவாறு சக்கரங்களால் பிரித்து உபயோகிக்கப்படுகின்றன.

மூலாதாரம் 600 மூச்சும் ,  சுவாதிஷ்டானம் 1000 மூச்சும், மணிப்பூரகம்1000 மூச்சும், அநாகதம்1000 மூச்சும், விசுக்தி 6000 மூச்சும், ஆக்ஞை6000, சஹஸ்ரஹாரம் 6000

இதில் தலையில் உள்ள சக்கரங்களே அதிக மூச்சுக்களை உபயோகிக்கின்றன.அதீத சிந்தனை கவலை போன்ற பல காரணங்களால் மேலே உள்ள சக்கரங்கள் அதிக மூச்சுக்களை உபயோகிக்கும்போது கீழுள்ள சக்கரங்களில் மூச்சுக்களால் வினியோகிக்கப்படும் பிராண சக்தி கிடைக்காதபோது அந்த சக்கரங்கள் வலுவிழந்துவிடுகின்றன. விளைவாக அந்தந்த சக்கரங்கள் பார்த்துக் கொள்ளும் உறுப்புக்களில்  ( எடுத்துக்காட்டாக மூலாதாரம் பிறப்புறுப்பு மண்டலம் , சிறு நீர்மண்டலங்களைப் பார்த்துக் கொள்ளும் )  பழுது ஏற்படும்.இதற்கு அந்த உறுப்புக்களை மாற்றிக் கொண்டிருக்கிறது அல்லோபதி மருத்துவம், இதனால் பயனில்லை என்பதை உணராமலேயே செய்து கொண்டிருக்கிறது.

எனவே இந்த பிரபஞ்ச சக்தி , மூச்சு , பிராண சக்தி மற்றும் சக்கரங்கள் பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொண்டு நம் உடற்பிணிகளைக் களைந்து கொள்வதுடன் மற்றவர்களுக்கு ஏற்படும் பிணியையும் போக்க நம் மச்ச முனி மூலிகையகத்தில் பல மேன்மையான ஆன்மீகவியலாளர்களை வைத்து கற்றுத் தரப்படும். அதற்கு அணுக வேண்டிய முகவரி.

திரு அமீர் சுல்தான் அவர்கள் ,தலைவர்  மற்றும் நிர்வாக இயக்குனர்
மச்சமுனி மூலிகையகம்
( MACHAMUNI HERBALS )
SMALL .SCALE.INDUSTRIES NO: 330021189121 ,
COTTAGE INDUSTRIES REG NO:- 1646
எண்.1/17,5வது தெரு, நாராயணசாமி தோட்டம், சின்னகொடுங்கையூர், சென்னை-118.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953

நமது மச்ச முனி மூலிகையகத்தில் இந்த உடல் தொடா சிகிச்சை முறை கற்பிக்கப்பட்டது . அப்போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

IMG_20151101_111935

IMG_20151101_151957

IMG_20151101_152002

 

IMG_20151101_151944

 

பயிற்சியில் பங்கு கொண்ட , அவரவர்கள் கைப்பட எழுதிய கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

img065

 

img062

img063

img061

img060

img066

img064

 

12 responses to “நம் சித்தர்களின் மரபு வழி மருத்துவமான பிராண சிகிச்சை மற்றும் உடல் தொடா சிகிச்சை ( ரெய்கி ) பாகம் 2”

 1. Rajan says:

  ஐயா, மூச்சு தொடர்பாக ஒரு கேள்வி எனக்குள். விளக்கம் தந்தால் மகிழ்வேன். ஒரு நாளைக்கு 21600 மூச்சுகள். அதிகம் விட்டால் உடலுக்கு கேடு என்றால், நாம் உடற்பயிற்சி செய்யும் போது அதிக அளவில் மூச்சு விடுகிறோம். இது எவ்வாறு நமக்கு நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அது தவறா?

  • machamuni says:

   அன்புள்ள திரு ராஜன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   ஆம்
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. sivasami.k. says:

  Thanks to god.

 3. janarthan says:

  எல்லாம் பிரபஞ்சத்தின் ரகசியம் ஐயா
  ஜனார்த்தன்

 4. Rajan says:

  தங்கள் பதிலுக்கு நன்றி. வேகமாக மூச்சு விட்டு உடல் பயிற்சி செய்வது தவறு என்று உணர்கிறேன். யோகாசனங்களில் செய்வது போல ஒரே சீராக உடல் இயக்கத் தொடர்புடன் ஆழமாக மூச்சு சென்று வர உடல் பயிற்சி செய்வது சிறந்தது என்று அறிகிறேன். இதை பயில்வதன் மூலமாக உடல் சோர்வு குறைவதை உணர்ந்தேன். நன்றி.

 5. hari says:

  அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கம்,
  பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது.அய்யா ,
  ஒரு சிறிய உதவி –
  என் அண்ணனுக்கு மூலம் இருந்து ,அதற்கு கருணை லேகியமும் +
  நத்தை பர்பமும் (இம்ப்கால் )ஒரு வாரம் சாப்பிட்டார் மூலம் சரியாகி விட்டது ஆனால் அதன் பிறகு கடந்த 3 மாதமாக எப்போதுமே மலம் (semi solid)இளகி செல்கிறது .அவர் வயது 43
  வெளிக்கடைகளில் சாப்பிடும் பழக்கமுள்ள அவருக்கு அமீபியாசிஸ்
  இருக்கலாம் என என் நண்பர் சொன்னார்
  இது வரை 3ஆங்கில மருத்துவரை பார்த்தும் குணமாகவில்லை.
  இது சரியாக என்ன மருந்து எடுத்துக்’கொள்ள வேண்டும் என தெரிவிக்க வேண்டுகிறேன்
  மிக்க நன்றி
  அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்புள்ள திரு ஹரி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   ஹோட்டல் , மெஸ் , ஹாஸ்டல் ஆகிய பொது இடங்களில் சாப்பிடும் அன்பர்களுக்கு இந்த அமீபியாசிஸ் என்ற கிருமித் தொற்று ஏற்படும். மூலம் என்பதே கிருமிக் கூட்டம் என்பார் அகத்தியர் . இதற்கு முருக்கன் விதை மாத்திரை என்ற அழகான மருந்து உள்ளது.இதை 14 நாட்களுக்கு ஒரு முறை காலை 5 மணிக்கு 6 முறை சிறிய வயதினருக்கு ஒரு மாத்திரையும் பெரியவர்களுக்கு 2 முதல் 3 மாத்திர்டையும் நோயின் தன்மையைப் பொருத்துக் கொடுத்து வர இந்தப் பிரச்சினை தீரும்.அமீபாக்கள் 21 நாட்களுக்கு ஒரு முறை இனப் பெருக்கம் செய்யும் என்பதாலும், அதன் முட்டைகளை, முட்டைகளாக இருக்கும் போது இந்த மருந்து ஒன்றும் செய்ய முடியாது என்பதாலும் இதை 14 நாட்களுக்கு ஒரு முறையாக 5 முதல் 12 தடவைகள் சாப்பிட்டால்தான் அறவே அழிக்க இயலும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. muralikrishna says:

  my thanks for your writing again. i need your phone no to discuss about panchapakshi sastra . my knowledge in computer is very less so it is in english pardon me.

  • machamuni says:

   அன்புள்ள திரு முரளி கிருஷ்ணா அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உண்மையான பஞ்ச பட்சி சாஸ்திரத்தை இப்படி பட்டவர்த்தனமாக போதிக்க இயலாது . மன்னிக்கவும் . இவை எல்லாம் 12 ஆண்டு காலம் சிஷ்யனாக இருந்து குரு முகாந்திரமாக கற்க வேண்டியவை. இப்படி கேட்டு சொல்லக் கூடாது .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. hari says:

  அன்புள்ள அய்யா
  தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி .இம்ப்கால் -ல் வாங்கலாமா அய்யா
  அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்புள்ள திரு ஹரி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   ஆம்
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. Mathi S Senapathi says:

  Glad i landed in your page. very interesting content. I am involved in learning about Siddhars for last six years. I spoke with quiet a few practitioners. I have a feeling everyone is focusing lots of efforts and time in bringing this practices to forefront.

  I am interested in helping. Please let me know, if can do something for your efforts.

  May earth and heavens bring all blessing and treasure to you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 − 24 =