ஒரு பழம் பெரும் புத்தகம் {கடுக்காய் பிரபாவ போதினி (பாகம் 2)}

May 30, 2016 by: machamuni

ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 2)download

 இது ஒரு மீள்பதிவு .இந்தப் பதிவு ஏற்கெனவே மச்சமுனி வலைப்பூவில் வெளியான கட்டுரையே இது.

 http://machamuni.blogspot.in/search/label/ஒரு%20பழம்%20பெரும்%20புத்தகம்?updated-max=2011-03-13T16:33:00%2B05:30&max-results=20&start=7&by-date=false

நமது வலத் தள அன்பர்களின் வேண்டு கோளுக்கிணங்கி மீள்பதிவாக வெளியிடப்படுகிறது.நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எம்மை அங்கேயே தங்க நிர்பந்திப்பதாலும் , பத்தியத்துடன் கற்பங்கள் எடுப்பதால் உடலின் அசதி காரணமாகவும் , எமக்கு நேரமின்மை காரணமாகிறது . சரி அது இறை விருப்பம் என்றெண்ணி எழுதுவதைக் குறைத்துக் கொண்டோம் .பதிவுகளின் எண்ணிக்கையும் மிக குறைந்துவிட்டது .

ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 1) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும். அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும். 

வாதமாய்ப் படைத்து,பித்த வன்னியாய்க் காத்து,சிலேத்துமமாய்த் துடைத்து என்பார்கள்.

விளக்கம்;- வாதம் என்பது பிறந்தது முதல், 20 வயது வரை வாதம் ஆன காற்றின் சக்தியால் உடல் வளர்க்கப்படுகிறது. பின் 20 வயதிலிருந்து 45 வயது வரை பித்தமான(வன்னி) நெருப்பு சக்தியால் காக்கப்பட்ட உடல் பின் 45 வயதிலிருந்து ஆயுள் அந்திம காலம் முடியும் வரை சிலேற்பனமான நீர் சக்தியால் (சளி தொண்டையில் அடைத்து ஒரு விக்கலுடன் உயிர் பிரிகிறது) உடல் சக்தியெல்லாம் துடைத்து அழிக்கப்பட்டு உயிர் பிரிகிறது.

காலையில் இஞ்சி,கடும்பகல் சுக்கு

மாலையில் கடுக்காய் மண்டலம்-உண்டிடில்

கோலை ஊன்றிக் குறுகி நடந்தவர்

கோலை விட்டு குலாவி நடப்பரே.

இதில் காலையில் இஞ்சி,மதியம் சுக்கு,மாலையில் கடுக்காய் என்று பொருள் எடுக்கக் கூடாது. காலைப் பருவமாகிய பிறந்தது முதல், 20 வயது வரை வாதம் ஆன காற்றின் சக்தி அதிகமாக இருப்பதால்இந்தப் பருவத்தில், வாதக் கதிப்பினால் வரும் வியாதிகளைக் களைய இந்தப் பருவத்தில் இஞ்சியை வருடம் ஒருமுறை ஒரு மண்டலம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போலவே  20 வயதிலிருந்து 45 வயது வரை பித்தமான (வன்னி) நெருப்பு சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில், பித்தக் கதிப்பினால் வரும் வியாதிகளுக்கு சுக்கை சுத்தி செய்து வருடம் ஒருமுறை ஒரு மண்டலம்  மருந்தாகத் தர குணமாகும்.

45 வயதிலிருந்து ஆயுள் அந்திம காலம் முடியும் வரை சிலேற்பனமான நீர் சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில், சிலேற்பன கதிப்பினால் வரும் வியாதிகளுக்கு கடுக்காயை சுத்தி செய்து கீழ்க் குறிப்பிட்ட முறைகளின் படி சாப்பிட்டு வரஉடல் சக்தி காக்கப்பட்டு, சிலேற்பனக் கதிப்பு துடைத்து அழிக்கப்பட்டு உயிர் பிரியாமல் காக்கப்படுகிறது. இதனால் இது காயகற்பத்தில் தலையாயதாகவும் செயல்படுகிறது. கடுக்காய்க் கற்பம் எனப் போற்றப்படுகிறது. 

இதன் தொடர்ச்சி ஒரு பழம் பெரும் புத்தகம், (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 3)என்ற பதிவில் தொடரும்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி

என்றென்றும் பேரன்பினால்

சாமீ அழகப்பன்

2 responses to “ஒரு பழம் பெரும் புத்தகம் {கடுக்காய் பிரபாவ போதினி (பாகம் 2)}”

 1. k.krishakumar says:

  ஜயா உங்கள் இணைய பக்கத்தை நான் இப்போதுதான் முதன் முதலாக பார்தேன்.ஜயா தங்கள் இணைய பதிவுகளை எனது வாட்ஸ்அப் நம்பரில் அனுப்பவும்.Whatsapp group இருந்தால் இந்த நம்பரை இணைக்கவும் My number 8681835718

  • machamuni says:

   அன்புள்ள திரு கிருஷ்ண குமார் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   தேவையெனில் நீங்கள்தான் வந்து படித்துச் செல்ல வேண்டும். அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியை பீட் பர்னர் இல் (FEED BURNER) உள்ளீடு செய்தால் உங்களுக்கு தாமாகவே பதிவுகள் வந்து சேரும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − = 10