தடுப்பூசிகளும் அவை பற்றிய எச்சரிக்கைப் பதிவு (பாகம் 1)

February 12, 2017 by: machamuni
 மக்களுக்கு தடுப்பூசி பற்றியும் அதன் உண்மைகள் பற்றியும் விழிப்புணர்வை ஊட்டவும், ஆங்கில மருத்துவம் பற்றிய உண்மைகள் படித்தவர்கள் மத்தியில் கூட விழிப்புணர்வே இல்லாத நிலை கவலை கொண்டதே பற்றியே நாம் இக்கட்டுரை எழுதக் காரணம்.
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிடுகிறேன்.வைரஸ்களோ, பாக்டீரியாக்களையோ அழித்தொழிப்பது என்பது இயலாத காரியம்.உலகத்தில் அழுக்கை எப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு மாற்ற முடியுமோ அது போலவே கிருமிகளும் ,அவற்றை தள்ளி வைக்க முடியுமே தவிர அழிக்க முடியாது.எனெனில் இவைகளில் கெடுதல் செய்வதாக எண்ணப்படும் கிருமிகளை (கவனிக்கவும் எண்ணப்படும் கிருமிகளே) அழிக்க உபயோகப்படுத்தும் மருந்துகள் நமக்கு நன்மை செய்வதற்காக உடலில் உள்ளகிருமிகளையும் அழித்து ஒழிக்கின்றன்.இது உடலின் சம நிலையை அழிக்கிறது.

நீரில், நிலத்தில், ஆகாயத்தில் ஏன் சூரியனுக்குள்ளேயும் என்று கிருமிகள் எங்கும் வாழ்கின்றன. கோடிக்கணக்கான கிருமிகள் இருக்கின்றன என்றும், அவற்றில் 85 லட்சம் வகை உள்ளன என்றும், அவற்றில் மனிதர்களுக்குத் தீமை செய்பவை ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவையே என்றும், இந்தப் பிரபஞ்சத்தில் ஒன்றை இன்னொன்றாக மாற்றும் அவசியமான இயற்கை நிகழ்வுக்கு (biotransformation / microbial metabolism) உதவுகின்றன .

    • எங்கும் நிறைந்திருக்கும் கிருமிகள் நம் உடம்புக்குள்ளும் இருக்குமல்லவா? ஆம். இருக்கின்றன. அதுவும் கோடிக்கணக்கில்! தொண்ணூறு ட்ரில்லியன் கிருமிகள் ஒரு மனித உடலுக்குள் இருப்பதாக ஒரு குத்துமதிப்பான கணக்கு சொல்கிறது! ஒரு உயிரணு இருந்தால் அதற்குப் உபகாரமாக பத்து கிருமிகள் இருக்கும்!
    • லட்சம், கோடி என்றால் நமக்குத் தெரியும். மில்லியன், பில்லியன், டிரில்லியன் எல்லாம் மேற்கத்திய உலகின் எண்ணிக்கை அளவுகள். ஒரு மில்லியன் எனில் பத்து லட்சம். ஒரு பில்லியன் எனில் நூறு கோடி! ஒரு டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி! அப்போ, 90 ட்ரில்லியன் என்றால்! தலை சுற்றுகிறது! எண்ணிலடங்காத கோடிக்கணக்கான கிருமிகள் நம் ஒவ்வொருவர் உடலுக்குள்ளும் இருக்கின்றன! நமது உடலே கிருமிகளால் ஆக்கப்பட்டதுதான் என்றுகூடச் சொல்லிவிடலாம். கிருமிகளின்றி அமையாது உலகு என்றார் ஹீலர் உமர். நான் சொல்கிறேன், கிருமிகளின்றி அமையாது உடல்!

கிருமித் தொழில்:-

  • இவ்வளவு கிருமிகளும் நம் உடம்புக்குள் எதற்காகக் குடியிருக்கின்றன? கிருமிகளெல்லாம் தீமைதான் செய்யுமென்றால், இந்நேரம் மனித குலமே அழிந்துபோயிருக்க வேண்டுமே! ஆனால் அப்படி ஒன்று நடக்கவில்லையே! அப்படியானால் கிருமிகள் நம் உடலில் என்னதான் செய்கின்றன?
  • இந்தப் பிரபஞ்சத்தில் செய்யும் அதே வேலையைத்தான் நம் உடலுக்குள்ளும் செய்துகொண்டுள்ளன! அதுதான் ஏற்கெனவே சொன்னேனே, ஒன்றை இன்னொன்றாக மாற்றுகின்ற வேலை. இன்னொரு வகையில் சொன்னால், கெட்டதையெல்லாம் நல்லதாக மாற்றும் வேலை! ஆமாம். அதைத்தான் அனுதினமும், கணந்தோறும் அவை செய்துகொண்டே இருக்கின்றன. நம்மால் அவற்றுக்கு நன்றி என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லமுடியாது. ஏன்? ஒவ்வொரு கிருமிக்கும்நன்றிஎன்று சொல்ல வேண்டுமானால், நாம் பல கோடி ஆண்டுகள் வாழ்பவராக இருக்க வேண்டும். அப்போதுகூட அது சாத்தியமா என்பது சந்தேகமே!
  • அப்படி என்ன நன்மைகளை அவை நமக்குச் செய்கின்றன?

கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளதல்லவா? அதில் கார்பனும் ஆக்ஸிஜனும் உள்ளன. ஆனால், நாம் உயிர்வாழத் தேவை ஆக்ஸிஜன் மட்டும்தான். கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து அந்த ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்துக் கொடுப்பது கிருமிகள்தான்! அப்படியானால், நாம் உயிர் வாழ்வதற்குக் காரணமே கிருமிகள்தான்!

பயிர்களில் பூச்சிகளை அழிக்க உபயோகப்படுத்தும் மருந்துகள், பயிர்களுக்கு நன்மை செய்வதற்காக உள்ள பூச்சிகளையும் ,கிருமிகளையும் அழித்து ,பூச்சிகளின் சமநிலையையும் கெடுத்து,பயிர்களையும் விஷமாக்கி கடைசியில் அதைச் சாப்பிடும் நம் உடலையும் நஞ்சாக்கி நம் உள்ளுறுப்புகளையும் கெடுத்து வருகின்றன. அதே போல இந்தக் கிருமிகளை அழிக்க கொடுக்கப்படும் அல்லோபதி (ஆங்கில ) மருந்துகள் நமது உடலுக்கு நலம் செய்யும் கிருமிகளையும் அழித்து ஒழிப்பதால் நம் உடல் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
இது தனியாக ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையில் நம் நாட்டு மருத்துவமான சித்த மருத்துவமும் ,அயூர் வேத மருத்துவமும் ஒதுக்கி வைக்கப்பட்டு( அதற்கு மாற்று மருத்துவம் எனப் பெயரிடப்பட்டு) அயல்நாட்டு மருத்துவமான ஆங்கில முறை மருத்துவம் என்ற ஒரு குப்பை மருத்துவத்தை ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றதாலேயே தலை சிறந்த மருத்துவம் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நிலை இன்று.
ஆங்கில மருத்துவத்திற்கு என்று ஒரு கொள்கையோ வரைமுறையோ கிடையாது.எடுத்துக்காட்டாக கிருமி நீக்கம் என்ற பெயரில் எல்லா இடத்திலும் பெனாயில் போன்ற கிருமி நீக்கம் செய்யும் நச்சுக்களை எல்லா இடங்களிலும் தெளிக்கிறார்கள்.கிருமி நீக்கம் செய்ய கத்திகள்,ஊசிகள் போன்றவற்றை கொதிக்க வைக்கிறார்கள். ( இப்போது பெனாயில்(PHENOIL) போன்றவை சுற்றுச் சூழலைக் கெடுக்கும் என்று அதே மேற்கத்திய நாடுகளில் உபயோகிக்கப்படுவதில்லை)
பின் ஏன் அந்த ஊசி போடும் போது அதன் மூலம் நோய் பரவுகிறது என்று ஒரு முறை பயன்படுத்தும் ( DISPOSABLE NEEDLES ) ஊசிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்த ஊசிகளின் மூலம் போடப்படும் மருந்துகள் கேவலம் ஊசிகளின் மூலம் பரவும் கிருமிகளையே கட்டுப்படுத்தவோ கொல்லவோ முடியாதென்றால் அது எப்படி நமக்கு நல்லது செய்யும்.
கிருமி நீக்கம் என்ற பெயரில் ஒரு பக்கம் உடல்நலத்தையும் , சுற்றுச் சூழலையும் கெடுத்து வருவது ஒரு பக்கம் . மற்றொரு பக்கம் தடுப்பூசிகள் என்ற பெயரில் உடலில் கிருமிகளை ஊட்டி வருகின்றன.
முதலில் தடுப்பூசி தத்துவத்தை உங்களுக்கு விளக்குகிறேன்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது உறங்கிக் கொண்டு இருக்கும் சக்தி.கிருமிகள் உடலின் உள்ளே நுழைய முயற்சி செய்யும் போதோ,உள்ளே நுழைந்த கிருமிகளை விரட்டவும் கொல்லவும் செய்யும் இந்தச் சக்தி உடல் நுண் எதிர்மங்களை(ANTI BODIES) உற்பத்தி செய்கின்றன.இந்த உடல் நுண் எதிர்மங்கள்(ANTI BODIES) உள்ளே நுழைந்த கிருமிகளை விரட்டவும் கொல்லவும் செய்யும்.

உடலின் காவல்காரர்களான இந்த உடல் நுண் எதிர்மங்களை (ANTI BODIES) நோய் வரக்கூடாது என்பதற்காக சும்மா தட்டி எழுப்பி வைக்கும் வேலையே தடுப்பூசிகள். அதற்காக வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் உடலில் ஏற்றப்படுகின்றன.போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகளின் மலம்(STOOL), மூத்திரம்(URIN),எச்சில்(SALAIVAA) என்று அனைத்திலும் போலியோ கிருமிகள் மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் இருக்கும்.

நம் உடலே ஒரு பெரிய மருத்துவர்.அத்தனை அறிவுள்ள உடலுக்கு கேடு வரும்படி நாம் நடந்து கொள்ளும் போது உடல் தன் அதீத சக்தியை பிரயோகிக்கிறது.அதுவே இந்த உடல் நுண் எதிர்மங்களை (ANTI BODIES) உற்பத்தி செய்தல்.இதை சும்மா, சும்மா தட்டி எழுப்பி வைக்கும் வேலைசெய்தால் கடைசியில் ஒரு கட்டத்தில் உடல் தன் அதீத நடவடிக்கையானஉடல் நுண் எதிர்மங்களின் (ANTI BODIES) உற்பத்தியே நடக்காமல் போய்விடும்.

ஏனெனில் உடலானது உடல் நுண் எதிர்மங்களின் (ANTI BODIES) உற்பத்தி செய்ய வைத்திருக்கும் பொருட்களை வைத்து நாம் போடும் தடுப்பூசிக்கான கிருமியை எதிர்க்க உடல் நுண் எதிர்மங்களை(ANTI BODIES) தயாரித்துவிடும். இதனால் நீங்கள் தடுப்பூசி போட்ட நோய் மட்டும் வராது. ஆனால் உடலானது உடல் நுண் எதிர்மங்களின் (ANTI BODIES) உற்பத்தி செய்ய வைத்திருக்கும் பொருட்களை செலவழித்துவிட்டதால் வேறு கிருமிகள் உடலின் உள்ளே நுழைந்தால் அதை எதிர்க்க  உடல் நுண் எதிர்மங்களின் (ANTI BODIES) உற்பத்தி செய்ய வைத்திருக்கும் பொருட்கள் இல்லாததால் உடலானது கிருமிகளை எதிர்க்க முடியாமல் , போய் உடல் அக்கிருமிகளுக்கு இரையாக நேரிடும்.

இது எப்படி என்றால், நீங்கள்  சோறு ஆக்குவற்காக வைத்திருக்கும் அரிசியில் , இட்லியும் சுடலாம்,தோசையும் சுடலாம், வேறு பலகாரங்களும் செய்யலாம். ஆனால் எதாவதொன்றை செய்துவிட்டால் மற்றதை செய்ய அரிசி இருக்காது அல்லவா?

இதற்காக மற்றொரு உதாரணத்தையும் சொல்லலாம் , வெறும் அசையும் இலைகளைப் பார்த்து எதிரி என்றோ , தாக்க வரும் விலங்கு என்றோ துப்பாக்கியைப் பயன்படுத்தி குண்டுகளை சுட்டு வீணாக்கிவிட்டால் , உண்மையில் எதிரியோ , தாக்க விலங்கோ  வருமாயின் நம்மிடம் குண்டுகள் இல்லாமல் போய்விடுமல்லவா? அது போலவேதான் இது.

முதலில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றார்கள்.பின்னர் BOOSTER DOSE என இரண்டாவது முறையும் கொடுங்கள் என்றார்கள்.பிறகு மூன்று முறை மூன்றாண்டு கால இடைவெளியில் கொடுங்கள் என்றார்கள்.பிறகு நான்கு முறை என்றார்கள்.இப்போது ஐந்து முறையில் வந்து நிற்கிறது.நமக்குதான் இலவசமாகக் கிடைக்கும் எதையும் விடமாட்டோமே!

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் குழந்தைக்கு இந்தக் வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகளைக் கூட,எதிர்த்து உடல் நுண் எதிர்மங்களை (ANTI BODIES)  உண்டாக்குமளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால், எந்த வியாதியைத் தடுப்பதற்குப்பதற்காக இந்த மருந்து ஏற்றப்பட்டதோ, அந்த மருந்து அந்த வியாதியைத் தடுப்பதற்குப் பதில்,அதே வியாதியை உண்டாக்கிவிடும்.
இதை அந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களே தங்கள் மருந்துக் குறிப்புகளில் இதை வெளியிட்டிருக்கின்றன. இது சாதாரணமாக உள்ள எந்த நபர்களுக்கும் தெரியாத ஒன்று.இன்னொரு முக்கிய விஷயம் இலவசமாகத் தரப்படும் எதுவும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களில் பாதுகாப்புத் தராது( அதாவது இலவசமாய்த் தரப்படும் மருந்து சேவையின் பாற்பட்டது ,அதனால் ஏற்படும் பாதிப்புகளை எந்த விதத்திலும் நஷ்ட ஈடோ, வேறு எந்த குறைபாட்டுக்கும்(ஏன் உயிர் போனாலும்) இலவச சேவையின் மூலம் சேவை செய்தவர் பொறுப்போ காரணம் ஆக மாட்டார்கள்( அது அரசு சேவையே ஆனாலும்)).
Image result for கிருமிகள்
 பதிவு பெரிதாகப் போவதால் பதிவின் நீளம் கருதி {தடுப்பூசிகளும் அவை பற்றிய எச்சரிக்கைப் பதிவு (பாகம் 2)} ல் மீண்டும் தொடரப்படுகிறது .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + = 9